3).சித்தம் அல்லது விருப்பம் - 1 கொரி 12:11, எபி 2:4 "அந்த ஒரே ஆவியானவர் நடப்பித்து, தமது சித்தத்தின்படியே வரங்களை அவனவனுக்குப் பகிர்ந்துக்கொடுத்தார்'

4).அறிவு - 1கொரி 2:11 "தேவனுடைய ஆவியேயன்றி ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான்"

5).உணர்வுகள் - அன்பு, துக்கம், சந்தோஷம். ரோம 15:32 "ஆவியானவரின் அன்பின் நிமித்தம்" எபே 4:30 - "பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தாதிருங்கள்", 1தெச 1:6- பரிசுத்த ஆவியின் சந்தோஷத்தோடே" இப்படிப்பட்ட பண்புகள் பரிசுத்த ஆவியானவருக்கும் உண்டு.


ஆ) நபரின் செயல்பாடுகள்:

1).போதித்து நினைப்பூட்டுவார் - யோ 14:26 "பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்"

2).சாட்சி கொடுத்தார்: - யோ 15:26 "சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது அவர் என்னைக்குறித்து சாட்சி கொடுப்பார்".

3).சத்தியத்திற்குள் நடத்துவார் - யோ 16:13 "சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்".

4).பேசுவார் - யோ 16:13 "அவர் தம்முடைய சுயமாய் பேசாமல்"

5).கேள்விப்படுவார் - யோ 16:13 "தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி"

6).அறிவிப்பார் - யோ 16:13 "வரப்போகிறவர் காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்"

7).தடை செய்பவர் - அப் 16:16 "ஆசியாவிலே வசனத்தை சொல்லாதபடிக்கு பரிசுத்த ஆவியினாலே தடைப்பண்ணப்பட்டு"

8).உயிர்பிப்பார் - ரோ 8:11 "உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்"

9).வெளிப்படுத்துவார் - 1 கொரி 2:10 "நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்"

10).ஆராய்வார் - 1 கொரி 2:10 "ஆவியானவர் எல்லாவற்றையும் தேவனுடைய ஆழங்களையும் ஆராய்ந்திருக்கிறார்"

11).வாக்குத்தத்தம் செய்வார் - கலா 3:14 "ஆவியைக்குறித்து சொல்லப்பட்ட வாக்குத்தத்தத்தை நாம் விசுவாசத்தினாலே பெறும்படியாகவும் இப்படியாயிற்று"

12).ஐக்கியம் கொள்வார் - 2 கொரி 13:14 "பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும்"

13).பிரார்த்தனை செய்வார் - ரோம 8:26,27 "ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார்"

14).அழைப்பார் - வெளி 22:17 "ஆவியும், மணவாட்டியும் வா என்கிறார்கள்"

15).நடத்துவார் - லூக் 4:1, ரோம 8:14 "எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ"


இ). பரிசுத்த ஆவியானவர் நம்மை அறிவார், நம்மை தங்குகிறார்
இவைகள் ஆவியானவரைப்பற்றி விரங்கள் ஆகும்.

1).ஆவியை அவித்துப்போடக்கூடும். 1 தெச 5:19 "ஆவியை அவித்துப்போடாதிருங்கள்"

2).பொய் சொன்னார்கள் - அப் 5:3 "பரிசுத்த ஆவியினிடத்தில் பொய் சொல்லும்படி சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன?"

3).துக்கப்படுத்தவேண்டாம் - எபே 4:30 "தேவனுடைய பரிசுத்தஆவியை துக்கப்படுத்தாதிருங்கள்"

4).தூஷிக்கக்கூடாது - மத் 12:31, 32 "ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை"


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM
Friend Link: Timberland 6 Inch Boots Herren Nike Air Max 2016 Nike ELASTICO Finale III Street TF Adidas Messi 16.3 IC MBT Lami Damen TIMBERLAND CHUKKA BOOTS Adidas Superstar 2 Shoes Friend Link: NIKE ROSHE TWO FLYKNIT SHOES AIR JORDAN 23 Adidas Originals NMD Adidas Yeezy Boost 550 Adidas Tubular Schuhe Adidas Springblade Schuhe ADIDAS D ROSE 7 MEN Friend Link: Adidas Originals Pride Pack Adidas Originals Stan Smith W Adidas Originals ZX 500 Adidas Climacool Boat Lace NIKE AIR FORCE 1 07 HIGH MBT BARIDI WOMEN AIR JORDAN 2 MEN