பலருடைய கையில் முன்னேற்பாட்டுடன் கட்டுக்கட்டாக தங்கள் விலாசம் அச்சடித்த விசிட்டிங் கார்டுகளை கைகளில் வைத்துக்கொண்டு அங்கு வந்திருந்த ஒவ்வொரு உலக நாட்டு ஊழிய தலைவர்களிடம் சென்று அவர்களிடம் தங்களை அறிமுகப்படுத்தி நான் நன்றாக பிரசங்கம் செய்வேன். எனக்கு சுகம் அளிக்கும் வல்லமையை கர்த்தர் கொடுத்திருக்கிறார், தீர்க்கதரிசன வரமும் எனக்கு உண்டு என்றெல்லாம் தங்களைக்குறித்து அவர்களை விவரித்துகூறி தயராக தன் கையில் கொண்டுவந்த தங்கள் ஊழியத்தில் எடுத்த போட்டோ ஆல்பத்தை காட்டி தன் பிரசங்கத்தில் இத்தனை பிசாசுகள் ஓடின என்று கூறி அதற்கு ஆதாரமாக கீழே விழுந்து கிடக்கும் பெண்களின் புகைப்படத்தை காட்டி என்னை உங்கள் நாட்டுக்கு அழைத்தால் உங்கள் நாட்டில் உங்கள் சபையில் பல பிசாசுகளை விரட்டுவேன். நல்ல ஊழியம் செய்வேன் என்றெல்லாம் கூறிக்கொண்டிருந்தார்கள். அதில் ஒருவர் ஒரு புகைப்படத்தை ஒரு வெள்ளைக்காரரிடம் கொடுத்து இதில் காணப்படும் இத்தனை பிள்ளைகளும் நான் வளர்த்தும் அனாதை பிள்ளைகள் ஆகும். எங்களுக்கு பண உதவி தேவை, இவர்களுக்கு ஒரு ஆலயம் கட்டவேண்டும் என்று கெஞ்சி கூறுவதை கண்டு நாங்கள் சிரித்தோம். அவர்களில் ஒருவர் ஒரு ஓலை குடிசையை காட்டி இதுதான் எங்கள் வீடு. இதுதான் எங்கள் ஆலயம் உதவி செய்தால் அனாதை பிள்ளைகள் மழையில் நனையாமல் வாழ நல்ல கட்டிடம் கட்டுவோம் என்று ஒவ்வொருவரிடமும் இதே தரித்திர பாட்டை பாடி முடித்தார்கள். அந்த வெள்ளையர் ஒருவரிடம் அந்த ஊழியர்கள் கொடுத்த புகைப்படத்தை நாங்கள் காண நேர்ந்தது. அதில் குறிப்பிட்ட ஒரு ஊழியரை நான் நன்கு அறிவேன். அவர் கொடுத்த போட்டோவில் வேறு ஒரு ஊழியரின் அனாதை இல்லத்தின் போர்டு இருப்பதை கண்டேன். அந்த போர்டு பக்கத்தில் இவர் நின்று போட்டோ எடுத்து இதுதான் என் அனாதை விடுதி, இதுதான் என் ஆலயம் என்று கூறியிருக்கிறார். வெளிநாட்டு ஸ்தாபன பண உதவிக்காக இப்படிப்பட்ட ஊழியர்கள் பொய்களை அள்ளிவிட்டு வெளிநாட்டு ஸ்தாபன விலாசம் தேடி அலைவது எத்தனை அவமானம். உலக ஊழியர்கள் நம் இந்திய ஊழியர்களைப்பற்றி என்ன நினைப்பார்கள். அப்படி ஒரு உதவி கிடைத்தாலும் இவர்கள் உண்மையாக அந்த பணத்தை செலவழிப்பார்களா? கர்த்தர் அப்படிப்பட்ட ஊழியத்தை ஆசீர்வதிப்பாரா? வெளிநாட்டில் பண உதவி பெற எத்தனை ஊழியர்கள் பொய்யான போட்டோக்களை எடுத்து காண்பிக்கிறார்கள். இவர்களுக்கு பிலிப்புவின் வனாந்திர ஊழிய பிரசங்கம் ஒரு உணர்வை உண்டாக்கட்டும்.

வட இந்திய ஊழியங்கள்:

வரும் மாதங்களில் மிக அதிகமான ஊழியங்கள் வடகிழக்கு இந்திய மாநிலங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அப்பகுதியில் வாழும் ஜாமக்காரன் வாசகர்களின் குடும்பங்களை நேரில் பார்க்கவும், ஆவிக்குரிய விஷயங்களையும், வேத ரகசியங்களையும் மனம்விட்டு பேசவும் நல்ல வாய்ப்பை கர்த்தர் ஏற்பாடு செய்துள்ளார் என்று நம்புகிறேன்.

வட இந்திய கிராம ஊழியத்தையும், வட இந்தியாவில் உள்ள மிஷனரி குடும்பங்களையும் நேரில் சந்தித்து உரையாட இது நல்ல சந்தர்ப்பம் ஆகும். இதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இப்போதே உங்கள் கேள்விகளை, வேத சந்தேகங்களை ஆயத்தப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள். குடும்ப பிரச்சனைகளைக் குறித்தும் என்னிடம் பேசி அறிந்துக்கொள்ளலாம். அவைகளைக்குறித்து ஆலோசனை பெறவும் கர்த்தர் கிருபை செய்வாராக. இதற்குமுன் இந்தியாவின் மேற்கு பகுதிக்கும், பம்பாய், மஹாராஷ்ட்ரா, மத்தியபிரதேசம் ஆகிய இடங்களுக்குதான் அதிகமான நாட்களை சபைகளுக்கும் ஜெபகுழுக்களுக்கும் ஒதுக்கிவைத்தேன். இம்முறை ஏறைக்குறைய 23 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் வடகிழக்கு சட்டீஸ்கர், ஆந்திராவின் வடக்குபாகம் ஆகிய இடங்களுக்கு என் பயண ஏற்பாடுகளை செய்துள்ளேன்.

இந்த ஜுன் மாத (2014) ஜாமக்காரன் உங்கள் கைகளில் கிடைக்கும்போது நான் நேபாளம் பக்கத்தில், இந்திய எல்லை பகுதியான கோரக்பூர் பகுதியியல் ஊழியம் செய்துகொண்டிருப்பேன். இந்த ஊழிய செலவினங்களை சந்தித்து ஏற்பாடு செய்து ஆங்காங்குள்ள எல்லா வாசகர்களுக்கும், திருச்சபை ஆயர்களுக்கும் நன்றி கூறுகிறேன்.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM