பரிசுத்த ஆவியானவர் யார்?
  (Selected)

இன்றைய நாட்களில் நம்மிடையே பரிசுத்த ஆவியானவரைப்பற்றி தவறான போதனைகள் மற்றும் புரிந்துக்கொள்ளல்கள் பரவலாக நிறைய இருக்கின்றன. மேலும் ஆவியானவரைப்பற்றி சில கேள்விகள் மூலம் நம் முழுமையாக தெரிந்துக்கொள்ளலாம்.


பரிசுத்தஆவியானவராக இருக்கின்றார்?:

யோவான் 14:16-18 நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன். அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்கு தந்தருளுவார்.

உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது. அவர் உங்களுடனே வாசம் பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால் நீங்கள் அவரை அறிவீர்கள்.

நான் உங்களைத் திக்கற்றவர்களாகவிடேன் உங்களிடத்தில் வருவேன். அப்போஸ்தலர்களுக்கு பரிசுத்த ஆவியானவரை வாக்குத்தத்தம் செய்தது இயேசுகிறிஸ்துதான். பரிசுத்த ஆவியானவர் காற்று அல்ல, அவர் ஒரு ஆளுமை தன்மையுடைய நபராக இருக்கின்றார். அவர் சக்தி, வல்லமை என்பதை காட்டிலும் அதிகமாக இருக்கின்றார்.

தியானிக்க அல்லது ஆராய்ச்சிக்காக குறிப்புகள்:
1. பரிசுத்த ஆவியானவர் ஆவியாக இருக்கிறார்.
2. அவர் ஒரு நபராக இருக்கின்றார்.
3. பரிசுத்த ஆவியானவர் தெய்வீகமானவராக இருக்கின்றார்.


I) பரிசுத்த ஆவியானவர் ஒரு ஆவியாக இருக்கின்றார்:

வேதத்தில் Ruach என்ற எபிரேய வார்த்தைக்கு ஆவி, காற்று, சுவாசம் மற்றும் தேவனுடைய ஆவி என்றெல்லாம் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. கிரேக்க மொழியில் Pneuma என்ற வார்த்தைக்கு புதிய ஏற்பாட்டில் மனிதனுடைய ஆவி (1கொரி 2:11, நீதி 20:27). தேவன் (யோ 4:24), தூதர்கள் (எபி 1:13-14) என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. தெய்வீக ஜீவிகளை குறிப்பிடுகையில் ஆவி என்று பயன்படுத்தப்பட்டுள்ளது.

வேதத்தில் Ruach மற்றும் Pneuma என்ற எபிரேய கிரேக்க வார்த்தைகள் காற்று, சுவாசம் என்று பொருள்படுகிறது. இவ்வார்த்தை உயிருள்ள ஜீவிகளின் குறிப்பாக கடவுள் மற்றும் மனிதன் ஆகியோரில் உள்ள காணப்படாத உண்மை நிலையைக்குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆவி என்பது, தேவன் நமக்குள் வைத்துள்ள அவரது இயல்பான உள்ளான பொறியாக இருக்கலாம். (சக 12:1, பிர 12:7, யாக் 2:26, ரோ 8:15, 1கொரி 4:21, கலா 6:1).


II) பரிசுத்த ஆவியானவர் ஒரு நபராக இருக்கின்றார்:

ஒரு நபராக பரிசுத்த ஆவியானவர் இருக்கின்றார் எனில், ஒரு நபரின் பண்புகள், செயல்பாடுகளையும், அவர் உடையவராக இருப்பினும், இன்று பரிசுத்த ஆவியானவரை ஏன் தவறாக பயன்படுத்துகின்றார்கள் என்பதற்கு பதில் கண்டுபிடிப்போம்.


அ) நபரின் பண்புகள்:

1).நியாயந்தீர்க்க முடியும் - அப் 15:29. "அவசியமான இவைகளையல்லாமல் பாரமான வேறொன்றையும் உங்கள்மேல் சுமத்தாமலிருப்பது பரிசுத்த ஆவிக்கும் எங்களுக்கும் நலமாகக் கண்டது"

2).சிந்திக்க முடியும் - ரோம 8:27 "இருதயங்களை ஆராய்ந்து பார்க்கிறவர் ஆவியின் சிந்தை இன்னதென்று அறிவார்"


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM