கர்த்தருக்குள் அன்பான ஜாமக்காரன் வாசகர்கள் யாவருக்கும் உயிருள்ள தேவனின் சமாதானம் பெருகுவதாக.
மார்ச் மாதம் தேர்வு எழுதும் 10, 11, 12 பிள்ளைகளுக்காக ஜெபிக்க ஏராளமானவர்கள் கடிதம் எழுதினார்கள். பலருக்கு தொலைபேசி வழியாகவே ஜெபித்தேன்.
நம் பிள்ளைகள் அனைவரும் மே மாதம் விடுமுறை நாட்களில் ஆங்காங்கு நடைபெறும்
விடுமுறை வேதாகம பள்ளிகளில் (VBS) சேர்த்துவிடுங்கள். விடுமுறை நாட்களில் பிள்ளைகள் படிப்பதற்கென்று மிஷனரிகளின் வரலாற்று புத்தகங்களையும், இரத்தசாட்சிகளின் வரலாறுகளையும் வாங்கி வாசிக்க சொல்லி பெற்றோர்கள் கட்டாயப்படுத்துங்கள். வீட்டிலுள்ள பெரியவர்கள் அல்லது பெற்றோர்கள் அவர்கள் வாசித்ததை திரும்பகூறச்சொல்லி நீங்கள் அவர்களிடம் கதைகேட்பதைப்போல் கேளுங்கள். அப்படி செய்தால் பிள்ளைகள் மனதில் படித்தது பதியவும், அவர்கள் வளரும்போது அவர்களின் ஆவிக்குரிய ஜீவியத்துக்கு உதவியாகவும் இருக்கும். வாலிபப்பிள்ளைகளுக்கென்று ஆவிக்குரிய கூட்டங்கள் ஆங்காங்கு நடைபெறுகிறது. அவைகளை விசாரித்து அறிந்து பிள்ளைகளை அக்கூட்டங்களுக்கு அனுப்பிவிட்டு பெற்றோர் கூட்டத்தில் கலந்துக் கொள்ளபோயிருக்கும் பிள்ளைகள்
மனந்திரும்புதலின் அனுபவம் பெறவேண்டும் என்று ஜெபியுங்கள்.
 11ம் வகுப்பு படிப்பிலிருந்து - கல்லூரி படிப்புவரை வாலிபப்பிள்ளைகளின் சோதனைக்காலம் தொடங்குகிறது. ஆகவே மனம் திரும்பிய அனுபவத்தோடு 11ம் வகுப்பு அல்லது கல்லூரிக்கு பிள்ளைகள் சென்றால் எந்த சோதனையிலும் விழாமல் காக்கப்படுவார்கள். அவர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ளமுடியும்.
|