வீட்டு சிறையில் எங்கள் பாஸ்டர் வைக்கப்பட்டிருக்கிறார் என்று மற்றொரு செய்தி வெளியானது. செக்களில் பாஸ்டர்.சாம்சுந்தரத்தின் கையெழுத்தை கட்டாயப்படுத்தி பெற்றுவிட்டார்கள் என்று விதவிதமான வதந்திகள் தீயாக தமிழ்நாடு முழுவதும் பரவின. இதற்கு முக்கிய காரணம், பாஸ்டர்.காலேபின் அனுபவ குறைவாகும். பாஸ்டர் உடல்நலம் சரியில்லை. சபை மக்கள் பாஸ்டரை கண்ணால் பார்க்க ஆசைப்படுகிறார்கள். பார்க்க அனுமதிக்காது போனதால்தானே விதவிதமான வதந்திகள் பரவி தினசரி செய்திதாள்களில் வெளியானது. சாப்பாட்டில் மெதுவாக சாகடிக்கும் விஷம் கலக்கப்பட்டிருக்கிறது என்று போலீஸ்சுக்கு புகார் எழுதி கொடுத்திருக்கிறார்கள். காலேப் மனைவி கெத்சி சபையில் நடந்து கொண்டவிதமும், பேசிய கோப வார்த்தைகளும் சபை மக்களை கோபத்தின் எல்லைக்கே கொண்டு போய்விட்டது. போலீஸ் உயிர் அதிகாரிகளோடு சபைக்கு வந்தது. உயர் போலீஸ் அதிகாரிகளைக்கூட, விசாரணை செய்ய பாஸ்டர்.சாம்சுந்தரத்தை பார்க்க அனுமதிக்க மறுத்தது. இவைகள் யாவும் சாட்சி கெட்ட பிரச்சனைகளின் உச்சக்கட்டமாகும். ஒரு வழியாக கடைசி முயற்சியாக பாஸ்டர்.காலேபை உள்ளே வைத்து வெளியே வரமுடியாதபடி பூட்டிவிட்டார்கள். ஒரு வழியாக பாஸ்டர்.சாம்சுந்தரம் அவர்கள் ஞாயிறு ஆராதனையில் காட்சியளித்தார். அவர் பேசினார் உயிரோடு இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தினார்கள். சபை மேடையில் வீல்சேரில் அமர்ந்தபடி பேசினார். கொந்தளிப்பு அடங்கியது. வதந்திகள் பொய்யாகின.
 அடுத்த வதந்தி சுமார் 2000 கோடி காணிக்கை வருமானம் உள்ள ஒரு சபையின் பணம் காலேபினால் கொள்ளையடிக்கப்படுமோ என்றும் சந்தேகப்பட்டனர். அந்த ஒரே காரணத்தால்தான் சபை சொத்துக்களை, பணத்தை வெளிஆட்கள் அனுபவிப்பதைவிட சொந்த பேரன் அனுபவிக்கட்டுமே என்ற உள்நோக்கம் இதில் உண்டு என்றாலும், இது தமிழ்நாட்டில் உள்ள குடும்ப கட்சிகளைப்போல், சொந்த பிள்ளைகளும், பேரன்மார்களும், உறவினர்களும் அல்லது வளர்ப்பு மகன்களும் அரசாங்க பணத்தை, சொத்தை கொள்ளையடிப்பதைப்போல் ACA சபையில் செய்யமுடியாது. ஸ்தாபகரும், தலைமை பாஸ்டருமான மறைந்த சுந்தரம் அவர்கள் மிக ஞானத்துடன் சபை சொத்துக்களை, சபையையும், சபை பணத்தையும் TRUSTஆக பதிவு செய்யாமல் SOCIETIES சட்டத்தில் பதிவு செய்ததால் அவரவர் இஷ்டத்துக்கு பணத்தையோ, சபை நிலத்தையோ, அதை சார்ந்த வீட்டையோ யாரும் குறப்பாக பாஸ்டர்.காலேப்கூட உரிமை கொண்டாடமுடியாது. விற்க அடமானம் வைக்கமுடியாது. உயிரோடு இருக்கும்வரை பணத்தை அனுபவிக்கலாம். அதற்கும் அரசாங்கத்துக்கு கணக்கு காட்டவேண்டும். சொசைட்டி சட்டம் அப்படி கூறுகிறது.
 எப்படியோ பாஸ்டர்.சாம்சுந்தரம் நேரில் வந்து பேசியபின் சபைக்குள் அமைதி உண்டானது. ஆனால் பிப்ரவரி மாதம் ஆராதனை நடத்தவிடாமல் மேடையில் நடந்த சண்டையை சபை வாலிபர்கள், புது விசுவாசிகள் சபை மக்கள் கண்டபோது சண்டை போட்டவர்களையும், சண்டையிட காரணமான காலேபையும், மேடையில் காலேப் மனைவி கெத்சியா பேசிய வார்த்தைகளையும் கேட்டவர்கள் என்ன நினைப்பார்கள்?. இதில் ஆவியின் நிறைவு, அந்நியபாஷையும் காணப்பட்டன. ஆனால் ஆவியின் கனியில்லாத ஆவியின் சுபாவம் இல்லாத பொய்யான நிறைவுதான் அங்கு காணப்பட்டது.
|