இடுப்பில் வெடிகுண்டு கட்டிவந்து வெடிக்கச் செய்தவள் ஒரு கருப்பு பெண் ஆவாள். அவளும் துண்டுதுண்டாக வெடியில் சிக்கி சிதறிப்போனாள். பிரதமர்.ராஜீவ்காந்தியும் பலியானர். சதியில் சம்பந்தப்பட்டவர்கள் சிறைவாசம், தூக்கு தண்டனை அனுபவிக்கும்படி ஆகும்.
இன்னும் நிறைய தீர்க்கதரிசனம் எழுதியிருக்கிறார். திரு.லால் பகதூர் சாஸ்திரி, திரு.மன்மோகன் சிங் ஆகியவர்களைப்பற்றியும் தெளிவாக 500 வருடங்களுக்கு முன்பே எழுதி வைத்துள்ளார்.
 இது பரிசுத்த ஆவியானவரின் தீர்க்கதரிசனம் அல்ல என்பதை வாசகர்கள் கவனிக்கவேண்டும். இது பிசாசின் ஆவியால் உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனமாகும்.
 இப்படி உரைக்கும் பிசாசின் தீர்க்கதரிசனத்துக்கு Femiliar Spirit என்று பெயர். அதாவது முழு விவரமும் பிசாசுக்கு சொல்ல தெரியாது. ஆனால் ஒரு எல்லைவரை பிசாசுக்கு கர்த்தர் கொடுத்த சக்தியினால் தீர்க்கதரிசனம் கூறமுடியும். அற்புதங்களையும் செய்யமுடியும். அதற்குமேல் ஒன்றும் கூற தெரியாது. அப்படியே இந்த அற்புதங்களை செய்யும் பிசாசுக்கு அற்புதம் மட்டும் செய்யும் தனி கூட்டம் உண்டு. ஜனங்களுக்கு வசனத்தின்படி ஜீவிக்க ஆலோசனை கூறாமல், பாவத்தைக்குறித்த எச்சரிப்பை இவர்கள் கூறாமல் வெறும் அற்புதத்தைமட்டும் செய்வதுதான் பிசாசின் தந்திரம். அப்படிப்பட்ட அற்புதம் இப்போதும் நடக்கிறது. ஆனால் அந்த அற்புதங்கள் தற்காலிகமாக இருக்கும். நிரந்தரமாக இருக்காது. ஜனங்களை வஞ்சிப்பதற்காக அப்படிப்பட்ட அற்புதத்தை பிசாசின் கூட்டங்கள் செய்யும்.
இப்போது மேடைகளில் நடக்கும் சுகமளிக்கும் கூட்டங்கள் யாவும் அப்படிப்பட்டதே. இந்த பொய் ஊழியர்கள் கூட்டத்தில் உள்ளவர்களின் யாருடைய பாவங்களையும், குற்றங்களையும் சுட்டிக்காட்டமாட்டார்கள். அவர்களின் குறைகளையும், தவறுகளையும் சுட்டிக்காட்டி எச்சரிக்கமாட்டார்கள்!. அப்படி செய்தால் அடுத்த நாள் ஆட்கள் கூட்டத்துக்கு வரமாட்டார்கள் என்பதை இந்த ஊழியர்கள் நன்றாக அறிவார்கள். இவர்களுக்கு உதவுவதற்காக பிசாசு தன் குழுக்களில் பலரை இவர்களுக்கு உதவியாக கூட்டத்தில் அற்புதங்களை நிகழ்த்த வேண்டி அனுப்புவான். வெளி 16:14. அற்புதங்களை செய்கிற பிசாசுகளின் ஆவிகள்.... உலகத்துக்குள் புறப்பட்டுப்போனது.
ஆகவே சபை விசுவாசிகள் இப்படிப்பட்ட அற்புத ஊழிய கூட்டங்கள், தீர்க்கதரிசன கூட்டங்கள், அக்கினி அபிஷேக கூட்டங்களுக்கு செல்வதைக்குறித்து எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வசனத்துக்கு நீங்கள் கீழ்ப்படிந்தாலே சுகம் தானே கிடைக்கும். சங் 107:20.
 1 தெச 9:2,3 அந்த அக்கிரமக்காரனின் வருகை சகல அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும் விளங்கும் என்று குறிபிடப்பட்டுள்ளது. இங்கு பொய்யான அற்புதம் என்று குறிப்பிட்டிருப்பதை கவனியுங்கள்.
அற்புதம் போலவே இருக்கும். ஆனால் அது நிரந்தரம் அல்ல. உங்களுக்கு அற்புதம் கிடைக்கும். ஆனால் உங்களிடம் சாட்சியுள்ள ஜீவியம் இருக்காது. தேவ பயம் இருக்காது. பாவத்தை தொடர்ந்து செய்வீர்கள்.
ஆனால் கர்த்தரின் தொடுதலாக இருந்தால் அது உங்களை பரிசுத்தத்தில் நடத்தும். சாட்சியுள்ள ஜீவியத்துக்கும் வழி நடத்தும். |