அப்படியானால் கிறிஸ்துவுக்கு சம்பந்தம் இல்லாமலே இவர்கள் யாவரும் கூட்டங்களிலும், TVயிலும் பல பெயர்களை ஜெபநேரத்தில் அழைக்கிறார்களே!, பல வியாதியின் பெயரை கூறினார்களே! எந்த ஆவியில் இதை செய்தார்கள்?. யோசித்து பாருங்கள்!. இயேசுகிறிஸ்துவே நான் அவர்களுக்கு உதவவில்லை என்கிறார். பின் யார்? இவர்களுக்கு உதவியிருப்பார்? பிசாசுதானே!. ஆம் பிசாசை தவிர வேறு யார் இவர்களுக்கு உதவ முடியும்?.
கை நீட்டினால் விழுகிறார்கள், விரல் நீட்டினால் விழுகிறார்கள், ஊதினால் விழுகிறார்கள்? இப்படிப்பட்ட மேஜிக் வேலைகளை கர்த்தர் ஒருநாளும் செய்யமாட்டார்!.
இந்த ஊழியர்கள் ஜெபத்தில் கூறுவது எல்லாம் தோராய தீர்க்கதரிசனங்கள். தோராய பெயர்கள் ஆகும். மனுஷ ஆவியுடன் - பிசாசின் ஆவியும் இணைந்து இப்படி செயல்படும்.
 இந்த நாஸ்டர்டம்ஸ் கிறிஸ்தவன் அல்ல. ஆனால் அவன் கூறியது மிக தெளிவாக நடந்ததே!. பரிசுத்த ஆவியை பெற்றேன் என்று கூறும் இந்த பொய் தீர்க்கதரிசிகளால் ஏன் தெளிவாக தீர்க்கதரிசனம் உரைக்க முடியவில்லை - இவர்கள்தான் போலி ஊழியர்கள்.
|