நானும், பாஸ்டர்.சுந்தரம் அவர்களும்
கடிதம் எழுதிய மூன்றாவது நாள் ஜாமக்காரனில் அக்கடித விவரத்தை வெளியிட்டுவிட வேண்டாம் என்ற கடிதம் எனக்கு வந்தது. ஆனால் அக்கடிதத்தின் கையெழுத்து பாஸ்டர்.சுந்தரம் அவர்களுடையதல்ல என்பது எனக்கு தெரியும்.
என் வாசகரும், ASA சபை அங்கத்தினருமான சகோ.ராஜபூஷனம் என்பவருக்கு இவ்விவரங்கள் அனைத்தும் தெரியும்.
சகோ.தினகரன் அவர்களை காருண்யா கல்லூரியை ஆரம்பிக்க கர்த்தர் அழைக்கவில்லை. கவலைப்படுபவர்களுக்கு, வேதனையுற்றவர்களுக்கு, நம்பிக்கையற்றவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் மிக உன்னத பிரசங்க தாலந்தை கர்த்தர் சகோ.தினகரனுக்கு அருளியிருந்தார். ஆனால் கர்த்தரின் அந்த நல்ல திட்டத்தை அவரே தகர்த்து விட்டார்.
இரு எஜமான்களுக்கு வேலை செய்ய சகோ.தினகரன் தீர்மானித்ததால் முக்கிய எஜமானனான இயேசுகிறிஸ்து அவரை விட்டு விலகினார். அதனால் பல பொய் தரிசனங்களை கூறவேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது.
 அப்போஸ்தலன் என்பவர் உலக வேலைகளில் சிக்கிக்கொள்ளமாட்டான். உலக பிரகாரமான வேலையை அப்போஸ்தலன் செய்யக்கூடாது. ஆகவே சகோ.தினகரன் அவர்களை அப்போஸ்தலன் என்று அழைப்பது நூற்றுக்குநூறு தவறு ஆகும். அப்படியே வேறு எந்த ஊழியக்காரன் தன்னை அப்போஸ்தலன் என்று அழைத்தாலும் அதுவும் வேத வசனத்துக்கு முரணானதாகும். ஜாக்கிரதை!.
|