ஜெபத்தில் தேவனோடு உறவாடுகிறோம் என்ற சிந்தையேயில்லாமல் பெற்றோரின் கட்டாயத்துக்காக கைகூப்பி வெறுமனே நிற்கிறார்கள். எவ்வளவு
ஆபத்தான நவீன காலகட்டத்தில் வாழ்கிறோம் என்று பார்த்தீர்களா?. இப்படிப்பட்ட பிள்ளைகளின் பிற்கால வாழ்க்கை என்னமாய் இருக்கபோகிறதோ தெரியவில்லை?.
 ஆகவே
பெற்றோர்கள் முதலில் மனந்திரும்புதலின் அனுபவம் பெற்று பிள்ளைகளுக்காக ஜெபியுங்கள்.
 விடுமுறை காலங்களில் சபை விசுவாசிகள் மிஷனரி பணிதளங்களுக்கு சென்று வாருங்கள். அப்போது உங்களுக்கு ஆத்மபாரம் உண்டாகும். மிஷனரி பணிதளத்தின் தேவைகளை அவரவர்களின் சபைகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்.
 ஒருவேளை நீங்கள் பெந்தேகோஸ்தே சபை அங்கத்தினராக இருந்தால் உங்களுக்கு மிஷனரி பாரம் உண்டாக உங்கள் சபை உங்களை ஊக்குவிக்காது. உங்கள் சபை உபதேசம் அப்படிதான் இருக்கும். அதனால் சத்தம்போட்டு துதிக்க பெந்தேகோஸ்தே சபைக்கு போங்கள். ஆத்தும ஆதாயம், மிஷனரி பணி இவைகளுக்காக
CSI போன்ற சபைகளிலுள்ள மனந்திரும்பின அனுபவம் உள்ள மிஷனரி ஜெபகுழுவினரோடு தொடர்பு வைத்துக்கொள்ளுங்கள். மிஷனரி ஊழியங்களில் நீங்கள் பங்குக்கொள்ள இந்த ஆலோசனை உதவும். பெந்தேகோஸ்தே சபையில் உள்ள ஜாமக்காரன் வாசகர்களுக்கு மட்டும் இந்த ஆலோசனை கூற பாரப்படுகிறேன்.
 உங்கள் பிள்ளைகள் எழுதிய தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறவும், கர்த்தர் பிள்ளைகளை ஆசீர்வதித்து அதன் மூலமாக உங்களுக்கு சமாதானம் உண்டாகவேண்டும் என்றும் நான் ஜெபிக்கிறேன். நீங்களும் ஜெபியுங்கள்.
|