 அப்போஸ்தலரின் சரித்திரத்தில் 6ம் அதிகாரத்தில் விதவைகள் விவகாரம் மற்றும் உள்ள சமூக பிரச்சனைகளையும் நியாயம் செய்ய அல்லது விசாரிக்க அன்றைய சபை மக்கள் 12 அப்போஸ்தலர்களையும் எருசலேமுக்கு வரவழைத்து பேசினார்கள். அதற்கு அப்போஸ்தலர்கள் நாங்கள் ஜெபம் பண்ணுவதிலும் தேவ வசனத்தைப் போதிக்கிறதிலும் ஊழியத்திலும் இடைவெளியில்லாமல் தரித்திருப்போம் அதுதான் எங்கள் ஊழியம். ஆகவே இப்படிப்பட்ட சமூக சேவைக்கு சபை பிரச்சனைகளை விசாரணை நடத்த எங்களை அழைக்காதீர்கள் என்று கூறி அவர்களே சபைக்குள் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டவர்களை தெரிந்தெடுத்து அவர்கள்மேல் கைகளை வைத்து சபை பொறுப்பாளர்களாக நியமித்தார்கள். (அப் 6:3).
ஆனால் சகோ.தினகரன் அவர்களோ காருண்யா கல்லூரி, இஞ்சினியரிங் காலேஜ், காருண்யா யுனிவர்சிட்டி என்று நல்ல வருமானமுள்ள தொழில் ஆரம்பித்து தொழிலதிபராக மாறிப்போனர். தேவனில் ஊழிய அழைப்பிலிருந்தும் அவர் விலகினார். காருண்யா கல்லூரி மகனுக்காக ஆரம்பிக்கப்பட்ட தொழில். அதனால்தான் மகன்.பால்தினகரன் அவர்களை வேதாகம கல்லூரி அனுப்பாமல் பிஸினஸ் மேனேஜ்மென்ட் (MBA) பட்டபடிப்பை படிக்க வைத்தார்.
சகோ.தினகரனின் அன்றைய ஊழிய நண்பர்களாகிய நாங்கள் நான்குபேர் காருண்யா ஆரம்பிக்க வேண்டாம் என்று எவ்வளவோ திட்டமாக சகோ.தினகரனுக்கு எடுத்துக் கூறினோம். தேவன் நம்மை ஊழியத்துக்கு மட்டுமே அழைத்திருக்கிறார். கல்லூரியை ஆரம்பித்து பணம் சம்பாதிக்க அல்ல என்றோம். அவரோ கேட்கவில்லை.
காருண்யா கல்லூரி ஏழைகளுக்காக மட்டும் ஆரம்பிக்கப்பட்ட கல்லூரி என்று மேடைக்கு மேடை துணிந்து பொய் கூறினார். கல்லூரியில் எத்தனை லட்சம் வாங்குகிறார்கள் என்று இப்போதுதான் எல்லாரும் புரிந்துகொண்டார்கள்.
தேவனின் கோபம் அவர்மேல் மூண்டது. எச்சரிப்பாக கர்த்தர் தன் இரண்டாம் ஆயுதத்தை கையில் எடுத்தார்.
அதனால் சகோதரன் தினகரன் அவர்கள் மிகவும் நேசித்த அன்பு மகள்.ஏஞ்சலை கார் விபத்தில் அடிப்பட்டு அகோர மரணத்தில் மரிக்க அனுமதித்தார்.
பாஸ்டர்.சுந்தரம்
மரித்த பாஸ்டர்.சுந்தரம் அவர்களும் சகோ.தினகரன் வீட்டுக்கு நேரில் சென்று மகளின் மரணம் தம்பி! உன்னை எச்சரிப்பதற்காகத்தான் கர்த்தரால் நிகழ்த்தப்பட்டது. நீ ஊழியம் மட்டும் செய்.
கர்த்தர் உனக்கு கொடுத்தது போன்ற ஆறுதல் அளிக்கும் பிரசங்க தாலந்தை வேறு யாரும் பெறவில்லை.
அந்த ஊழியத்தைமட்டும் நிறைவேற்று என்று துணிந்து கூறிவிட்டு வந்துவிட்டார்.
பாஸ்டர்.சுந்தரம் அவர்கள் சகோ.தினகரன் வீட்டுக்கு எச்சரிக்கவும், ஆறுதல் கூறவும் போகபோவதாக அவர் புறப்படுவதற்கு 3 நாட்களுக்கு முன் நான் நேரில் சந்தித்தபோது கூறினார்.
பாஸ்டர்.சுந்தரம் அவர்கள் அந்த நாட்களில் சில விவரங்களைக் குறித்து எனக்கு கைப்பட எழுதிய கடிதம் இப்போதும் என்னிடம் உண்டு. |