சபைமக்களும், சபை பாஸ்டர்களும், சண்டையிட்ட பாஸ்டர்களும், ஜெபத்தில் அன்று பேசிய அந்நியபாஷைக்கு என்ன அர்த்தம். இதை மட்டும் சபை மக்கள் யோசித்தால் தெளிவு பெறுவார்கள். கலாத்தியரில் எழுதிய ஆவியின் கனிகள், ஆவியின் சுபாவங்கள் எங்கே? அவர்களுக்குள் இருந்த ஆவி! என்ன ஆவி? இனியாவது பரிசுத்த ஆவியானவரின் நிறைவை சத்தத்தில் காண்பிக்கவேண்டாம். அந்நியபாஷையில் காண்பிக்கவேண்டாம். கனியில் (சுபாவத்தில்) காண்பியுங்கள். இனியாவது போலியான அந்நியபாஷையை பேசவேண்டாம்.
 பாஸ்டர்.சுந்தரம் அவர்கள் உயிரோடு இருந்திருந்தால் கண்ணீர்விட்டு கதறியிருப்பார். நம்மை ரட்சித்த இயேசுகிறிஸ்து கண்ணீர் விடுகிறார். வெள்ளை துணியில் சிறு கருப்பு புள்ளியும் மிக தெளிவாக தெரியும். அந்த ACA சபை மக்கள் சாட்சியாக இருங்கள்.
CSI சபைகள்தான் செத்துப்போன சபை என்றார்கள். இப்படிப்பட்ட பெந்தேகோஸ்தே சபைகளின் இப்படிப்பட்ட சண்டையில் செத்துப்போன பிணம் பாஷை பேசுவதாகத்தான் மற்றவர்கள் நினைப்பார்கள். |