பதில்: வசனம் அவர்களுக்கு தெரியுமா? தெரியதா? என்பதை நீங்களே நிதானித்துக்கொள்ளுங்கள்.
வெளி 21:14ல் பன்னிரெண்டு அஸ்திபாரக் கற்களிருந்தன. அவைகள் மேல் ஆட்டுக்குட்டியானவரின் (இயேசுகிறிஸ்துவின்) பன்னிரெண்டு அப்போஸ்தலர்களின் நாமங்கள் பதிந்திருந்தன என்று வாசிக்கிறோம். வெளிப்படுத்தலில் பன்னிரெண்டு அஸ்திபாரக் கற்கள் என்று கூறப்படுவது புதிய ஏற்பாட்டு சபையின் அஸ்திபார உபதேசங்கள் யாவும் பன்னிரெண்டு சீஷர்களால் உபதேசிக்கப்பட்டவை அல்லது கைக்கொள்ளப்பட்டவை எபி 6:1,2ல் அதை காணலாம். அப் 2:42லும் காணலாம்.
இயேசுகிறிஸ்துவால் நேரிடையாக தெரிந்தெடுக்கப்பட்டவர்கள்தான் அப்போஸ்தலர்கள் என்று அழைக்கப்பட தகுதிபெற்றவர்கள். மற்றவர்கள் யாவரும் சீஷர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். பர்னபா போன்றவரை அன்றைய சபையினர் அப்போஸ்தலன் என்று பேச்சு வழியில் கூறினார்கள். அப்போஸ்தலோஸ் என்ற கிரேக்க பாஷையின் வார்த்தைக்கு அனுப்பப்பட்டவன் என்று அர்த்தம் அப்போஸ்தலன் என்றால் பொது அர்த்தம் அனுப்பப்பட்டவன் என்பதாகும். யாரால் அனுப்பப்பட்டவன் இயேசுகிறிஸ்துவால் அனுப்பப்பட்டவன். பொதுவாக எல்லா ஊழியர்களும் மிஷனரிகளும் இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகளை கேட்டு இயேசுவை ஏற்றுக்கொண்டு இயேசுவை இரட்சகர் என்று அறிவிக்க சபை மக்களால் அவர்கள் இயேசுவின் நாமத்தில் அனுப்பப்பட்டவர்கள் அல்லது மிஷனரி ஸ்தாபனத்தால் அனுப்பப்பட்டவர்கள் ஆகும். ஆனால் அப்போஸ்தலன் என்பதற்கு பொதுவாக அனுப்பப்பட்டவர் என்ற அர்த்தம் இருந்தாலும், இயேசுகிறிஸ்துவால் நேரிடையாக தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் மட்டும்தான் அப்போஸ்தலர் என்று அழைக்கப்பட அங்கீகாரம் பெற்றவர்களாகும்.
 தற்கொலை செய்துகொண்ட 12 அப்போஸ்தலர்களில் ஒருவனாகிய யூதாஸ்காரியூத்துக்கு பதிலாக இரண்டு பெயர்களை இரண்டு சீட்டுகளில் எழுதி சீட்டு குலுக்கி போட்டு மத்தியாஸ் என்பவனை அப்போஸ்தலனாக 11 சீஷர்கள் தெரிந்தெடுத்தனர். தெரிந்தெடுக்கப்பட்ட மத்தியாஸ் இயேசுகிறிஸ்துவால் தெரிந்ததெடுக்கப்பட்டவன் அல்ல. அதனால்தான் அவன் பெயர் வேதத்தில் வேறு எங்கும் எழுதப்படவில்லை. தேவன் அந்த தெரிந்தெடுப்பை விரும்பவில்லை.
உதாரணமாக சொத்து பிரிக்க பிரச்சனை வந்தால், இரண்டு பிள்ளைகள் ஒரே மாதிரி மதிப்பெண்களை வாங்கியிருந்தால் முதல் பரிசு யாருக்கு என்பதை முடிவெடுக்க இருவர் பெயரை எழுதி குலுக்கு சீட்டுபோட்டு, சீட்டு யார் பெயரில் விழுந்ததோ அவருக்கு முதல் பரிசை கொடுப்பார்கள். சீட்டுபோடுதல் உக்கிரகத்தை தணிக்கும் என்று நீதிமொழிகளில் வாசிக்கலாம். ஆனால் அப்போஸ்தல ஊழியத்துக்கு அப்படி குலுக்கு சீட்டுபோட்டு ஒரு ஆளை தெரிந்தெடுக்கக் கூடாது. அதனால்தான் குலுக்கு சீட்டில் பெயர் வந்த மத்தியாஸ் என்பவன் எந்த அற்புதங்களும் செய்ததாகவோ? நிருபங்கள் எழுதியதாகவோ நாம் வேதத்தில் காண்பதில்லை.
இயேசுகிறிஸ்துவின் சபைமக்களை கொன்றவனாகிய சவுல் என்பவனை இயேசுகிறிஸ்து தனது சீஷனாகவும், அப்போஸ்தலனாகவும் தெரிந்துக்கொண்டார். அதனால் பவுலும் தன்னை அப்போஸ்தலனாக கர்த்தர் தெரிந்துக்கொண்டார் என்று நிருபங்களில் குறிப்பிட்டு எழுதுகிறார். சவுல் என்ற பவுல் இயேசுகிறிஸ்துவை நேருக்குநேர் கண்டவர் இல்லை. ஆகவே இயேசுகிறிஸ்து தன்னை பவுலுக்கு நேருக்குநேர் வெளிப்படுத்தவும் தான் பிறந்தது, வளர்ந்தது, ஊழியம் செய்தது, அற்புதங்களை நிகழ்த்தியது, தான் நடத்திய திருவிருந்து நிகழ்ச்சிகளையும், சிலுவையின் மரணத்தையும் நேரில் காண்பதுபோல் பவுலுக்கு காண்பிக்க, ஆவியில் பவுலை அழைத்து சென்று மேலே குறிப்பிட்ட அத்தனை நிகழ்வுகளையும் காண்பித்து, தன்னையும் பவுலுக்கு வெளிப்படுத்த பவுலை அரேபியா பாலைவனத்துக்கு அழைத்து சென்று மூன்று வருடங்கள் அங்கு தங்கவைத்து தன்னைப்பற்றிய முழுகாட்சிகளையும் காட்டி பவுலை அப்போஸ்தல ஊழியத்துக்கு தகுதியாக்கினார்.
|