நம் கிறிஸ்தவ வேதத்தில் வாசிக்கும் தீர்க்கதரிசனங்கள் தானியேல் முதல் யோவான் வரை கூறப்பட்ட தீர்க்கதரிசனங்களை நாம் அறிவோம். இவைகள் யாவும் பரிசுத்த ஆவியானவரால் அறிவிக்கப்பட்ட தீர்க்கதரிசனமாகும்.
 வேதத்தில் ஆவியானவரால் கூறப்பட்ட தீர்க்கதரிசனம் எல்லாம் மனிதர்களை, ராஜாக்களை எச்சரிப்பதற்காகவும், குற்றங்களை சுட்டிக்காட்டவும் உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனங்களாகும். ஒன்றாவது ஆறுதல் கூற உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனமல்ல என்பதை கவனிக்கவும்.
இன்றைய கள்ள ஊழியர்கள், பாஸ்டர்கள் யாவரும் குறிப்பாக நாலுமாவடி, ஆலன்பால், தினகர குடும்பங்கள், சகோ.தினகரன் பயிற்சிவித்து கெடுத்த தீர்க்கதரிசன ஊழியர்களில் யாராவது கூட்டங்களில் குற்றம் செய்தவரின் பெயரை குறிப்பிட்டு சொல்லி தீர்க்கதரிசனமாக உரைத்தவர்கள் இவர்களில் யாராவது ஒருவரை காட்டமுடியுமா?. எயிட்ஸ் வியாதி சுகமானது என்று பெயரை குறிப்பிட்டு கூட்டத்தில் பகிரங்கமாக கூறிய அந்த தீர்க்கதரிசனமும் பொய்யானது. அவனுக்கு எயிட்ஸ் சுகமாகவில்லை. சர்க்கரை வியாதி சுகமாகவில்லை. ஆனால் இவர்களுக்கு ஏன் மக்களின் குற்றங்களை சுட்டிக்காட்டும் தைரியம் இல்லாதுபோயிற்று?. இவர்களை நாம் ஏன் கள்ளதீர்க்கதரிசிகள் என்று ஏன் பகிரங்கமாக கூறக்கூடாது?
தீர்க்கதரிசனம் என்றால் கர்த்தரின் வார்த்தை. தீர்க்கதரிசி என்றால் கர்த்தரின் வார்த்தையை உரைக்கிறவன் என்று அர்த்தம். இதை விசுவாசிகள் குறிப்பிட்ட ஊழியர்களுக்கு மூளையில் உரைப்பதுபோல் கூறுங்கள். திருந்துவார்களா என்று பார்க்கலாம். |