செல்லாமல் வீட்டிலேயே பாவ காரியங்களில் ஈடுபடமுடிகிறது. சரீர உறவுகொள்ளாமல் மனதளவில் பாவத்தை ரசித்து, ருசித்து தன்னைத்தானே பாவத்தை அனுபவிக்க பிசாசு வாலிபப்பிள்ளைகளுக்கு பல நவீன வழிகளை ஆயத்தப்படுத்தி வைத்திருக்கிறான்.
 மிக முக்கியமாக நவீனகருவிகளான
லேப்டாப், டேபளட், மொபைல், கம்பியூட்டர் ஆகியவற்றின் வழியாக பாவம் செய்ய நவீன வழிகளை திட்டம் செய்து வைத்திருக்கிறான். அவைகளில் எதிலும் நம் பிள்ளைகள் அகப்படாமல் இருக்க, பாவத்தை சரீரதொடு உணர்ச்சியின்மூலமாக அல்லாமல் முதலில்
சிந்தனையில் பிள்ளைகளை கறைப்படுத்தி அதன்பிறகு சரீரத்தை கறைப்படுத்த பிசாசு முயலுவான். பிசாசின் தந்திரங்களை நாம் அறிவோமே என்று வேதம் நமக்கு ஞாபகமூட்டுகிறது. அதாவது அவன் எப்படி எப்படியெல்லாம், எந்தெந்த ரூபத்தில் நம் பிள்ளைகளை கெடுக்க வருவான் என்பதை நாம் ஜெபித்து யோசித்து பிள்ளைகளை ஜாக்கிரதையாக வளர்த்துங்கள். நீங்கள் அவர்களை டிவியை பார்க்கவிடாமல் தடுத்தாலும் அமைதியுள்ள பிள்ளைகளைப்போல் வீட்டு அறைக்குள்ளேயே மொபைல் வழியாக எதை பார்க்கக்கூடாது என்று தடுத்தீர்களோ அத்தனையும் மொபைலில் பார்ப்பார்கள். இதற்கு பிள்ளைகளின் நண்பர்கள் பல விதத்தில் உதவுவார்கள். பார்க்காதே என்று தடுத்தால் அவர்கள் தங்கள்
கோபத்தை நேரிடையாக உங்களிடம் காட்டாமல் அவர்களின் பல செயல்கள்மூலம் அவர்கள் கோப செயல்களை வெளிப்படும். அதை அறியும்போது மிகவும் நீங்கள் வேதனைப்படுவீர்கள்.
 ஆகவே
வாலிப பிராயத்தில் உன் சிருஷ்கரை நினை. பிர 12ல் ஞானி எவ்வளவு அர்த்தத்துடன் எழுதியுள்ளான். வாலிபப் பருவத்திலேயே நம் பிள்ளைகள் மனந்திரும்புதலின் அனுபவத்தை பெற்றுவிட்டால் பெற்றோரின் பெரும்பாரம் குறையும். பிள்ளைகளைப்பற்றிய பயம் உங்களைவிட்டு நீங்கும். ஆகவே இந்த விடுமுறை நாட்களிலேயே பிள்ளைகள் மனம்திரும்பும் வழிகளை கண்டுபிடித்து ஏற்பாடு செய்யுங்கள்.
 வரும் நாட்கள் நம் வாலிபப்பிள்ளைகளுக்கு ஆபத்தான நாட்களாகும். வாலிப பிள்ளைகளுக்கு அதிவேக மோட்டார் சைக்கிள் வாங்கி தரவேண்டாம். நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் செல்ல அனுமதிக்கவும் வேண்டாம். வாகனவேகம் வாலிபர்களுக்கு இன்பம் - அதுவே அவர்கள் வாழ்க்கைக்கு பேராபத்தாக மாறும். பிள்ளைகள் பெற்றவர்கள் பெரும்பாலானோர் பிள்ளைகளின் கீழ்படியாத செயல்களைக்கண்டு கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு காலத்தில் பிள்ளைகள் வேண்டும் என்று கெஞ்சி ஜெபித்தவர்கள் - இப்போது ஏன் பெற்றோம் என்று நிம்மதியிழந்து தவிக்கிறார்கள்.
 குறிப்பாக வெளிநாடுகளில் வாழும் பெற்றோர், பள்ளி விடுதியில், கல்லூரி விடுதியில் படிக்கும் தங்கள் பிள்ளைகளைக்குறித்து அழாத நாளேயில்லை. பெற்றோரின் நேரடி பார்வையில் வளர்க்கப்படாத பிள்ளைகள் ஒருவேளை அவர்கள் பாவம் செய்யாமல்போனாலும்
கடவுளை மறந்து ஜீவிக்கும் நிலை இப்போது உருவாகியுள்ளது.
 வீட்டில் பெற்றவர்கள் ஜெபத்தில் பிள்ளைகளுக்காக கண்ணீர்வடிக்கிறார்கள். அதே ஜெபவேளையில் அந்தவீட்டு பிள்ளைகள் ஜெபத்தில் கண்களைமூடாமல் சிரித்துக்கொண்டு ஒருவரோடொருவர்
தமாஷ் செய்து விளையாடுகின்றனர். பிள்ளைகளுக்கு தேவபயம் இல்லை.
|