மதுரை - ராமநாதபுரம் CSI டையோசிஸ்
சிவகாசி இராக்லாந்து CSI கூட்டங்கள்

2011 நவம்பர் மாதம் சிவகாசி CSI ஆலயத்தில் நடந்த கூட்டங்கள் ஆசீர்வாதமாக அமைந்தன. புறமதஸ்தவர்களிலிருந்து இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொண்ட பல குடும்பங்கள் இக்கூட்டத்தில் பங்கு கொண்டனர். இராக்லாந்து CSI ஆலய ஆயர்.Rev.T.தனபாலன் தங்கையா அவர்கள் கூட்ட எற்பாடுகளை மிகவும் ஜெப ஆயத்தத்துடன் ஏற்பாடு செய்திருந்தார்.

இராக்கலாந்து CSI ஆலய கிளை சபையான கிரகத்தாயம்மாள் நகர் என்ற இடத்தில் ஒரு சிற்றலாயம் கட்டி அங்கு ஆராதனை தொடங்கியுள்ளனர். RSSன் பல எதிர்ப்புகளுக்கிடையில் இந்த ஆலயம் கட்டப்பட்டது. இதில் முதல் உபவாச ஜெபகூட்டம் நடத்தினர். நான் அதில் சிறப்பு செய்தியளித்தேன். சிவகாசியிலிருந்தும் விசேஷ வாகனங்கள் ஏற்பாடு செய்து இக்கூட்டத்தில் பங்கு கொண்டு மக்கள் ஆசீர்வாதம் பெற்றனர்.

திருச்சி - தஞ்சாவூர் CSI டையோசிஸ்

திருச்சியில் உள்ள இம்மானுவேல் CSI ஆலயத்தில் நடந்த என் கூட்டங்கள் மிகவும் ஆசீர்வாதமாக நடைப்பெற்றது. இந்த ஆலய கன்வென்ஷனுக்கு 3வது முறையாக அழைக்கப்பட்டேன். Rev.K.சந்திரமோகன் அவர்களுடன் சபை கமிட்டியினர் இக்கூட்டங்களை மிகவும் ஜெபத்தோடு ஏற்பாடு செய்திருந்தனர். கர்த்தருடைய நாமம் மகிமைப்பட்டது. இக்கூட்டங்கள் திருச்சி BHEL இம்மானுவேல் நகரில் அமைந்துள்ள CSI ஆலயத்தில் நடத்தப்பட்டது. இந்த சபையினர் நூற்றுக்கணக்கான மிஷனரிகளை தாங்குகிறார்கள் என்பது தனி சிறப்பும் ஆசீர்வாதமுமாகும். மற்ற சபையினருக்கு நல்ல முன்மாதிரியுமாகும். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM
Friend Link: Timberland 6 Inch Boots Herren Nike Air Max 2016 Nike ELASTICO Finale III Street TF Adidas Messi 16.3 IC MBT Lami Damen TIMBERLAND CHUKKA BOOTS Adidas Superstar 2 Shoes Friend Link: NIKE ROSHE TWO FLYKNIT SHOES AIR JORDAN 23 Adidas Originals NMD Adidas Yeezy Boost 550 Adidas Tubular Schuhe Adidas Springblade Schuhe ADIDAS D ROSE 7 MEN Friend Link: Adidas Originals Pride Pack Adidas Originals Stan Smith W Adidas Originals ZX 500 Adidas Climacool Boat Lace NIKE AIR FORCE 1 07 HIGH MBT BARIDI WOMEN AIR JORDAN 2 MEN