CSI நூற்றாண்டு விழா

கன்னியாகுமரி CSI டையோசிஸ் குப்பத்துறை CSI ஆலயத்தின் நூற்றாண்டு விழா விமரிசையாக நடந்தேறியது. CSI மாடரேட்டரும், கன்னியகுமரி டையோசிஸ் பிஷப் அவர்களுமான Rt.Rev.Dr.G.தேவகடாட்சம் அவர்கள் நூற்றாண்டு விழா ஆராதனையை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து நடந்த 3 நாட்கள் கன்வென்ஷனில் நான் சிறப்பு செய்தியளித்தேன். போதக சேகரத்து போதகர்.Rev.A.சுந்தர்ராஜ் அவர்கள் தலைமை வகிக்க சபை ஆயர் Rev.J.வின்சென்ட் ராபர்ட் அவர்கள் முன்னிலை வகித்து கூட்ட ஏற்பாடுகளை சிறப்பாக நடத்தினார். கூட்டங்களில் கர்த்ததருடைய நாமம் மகிமைப்பட்டது.

மதுரை - ராமநாதபுரம் CSI டையோசிஸ்

மதுரை (Kalavasal) All Saints CSI Church ம் சத்தியவசனம் வானொலி & TV ஊழிய ஸ்தாபனமும் இணைந்து நடத்திய கூட்டங்கள் 2014 நவம்பர் மாதம் மதுரை சத்தியவசன ஸ்தாபனத்தினர் சத்தியவசன பங்காளர்களுக்காக மதுரையில் சிறப்பான கூட்டம் ஏற்பாடு செய்திருந்தனர்.

மதுரை காளவாசல் All Saints சபையினரும் தங்களுக்கும் ஒரு கன்வென்ஷன் நடத்த வேண்டும் என்ற ஆவலில் சபை Rev.V.Johnson அவர்களுடன் சபை கமிட்டியினர் இந்த சிறப்பு கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். மதுரை டையோசிஸ் பிஷப் அவர்கள் ஆலயத்தின் நூற்றாண்டு விழா ஆராதனையை தொடங்கி வைத்தார். கூட்டங்களில் கர்த்தருடைய நாமம் மகிமைப்பட்டது.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM