ஆகவே திருமணமானப்பிறகு கணவன்-மனைவி ஒன்றுபோல் சிந்தித்து பணம் பெறுபவர்களின் சுபாவம், வாக்குசுத்தம், வாக்கு மாறாமை இவைகளைக்குறித்த குணத்தை சரியாக அறியாமல் ஒருகாலும் நகைகளையோ - பண உதவியையோ அவர்களுக்கு செய்ய முயலக்கூடாது. அது குடும்பம் முழுவதுவதற்கும் சந்ததி சந்ததியாக பகையையும் வெறுப்பையும் உண்டாக்கிவிடும்.

பல கிறிஸ்தவ குடும்பங்களில் மனைவியானவள் கணவன் ஒத்துக்கொள்ளமாட்டார் என்பதால் கணவனுக்கு தெரியாமல் திருட்டுதனமாக தன் நகைகளை கழற்றி தன் சகோதரிகளுக்கோ, சகோதரர்களின் தேவைகளுக்கோ கொடுத்துவிட்டு வாங்கியவர்கள் வியாபாரத்தில் நஷ்டம் அடைந்தாலோ அல்லது எதிர்பார்த்த லாபம் கிடைக்காததாலோ வாங்கிய நகைகள், அல்லது பணம் திருப்பி கொடுக்க அவர்களால் இயலாமல்போனதால் பல பெண்கள் மாய்மாலமான செயல்களில் இறங்கிவிடுகிறார்கள். கணவனை ஏமாற்ற, மாமியாரை ஏமாற்ற இமிட்டேஷன் நகைகளை (ரோல்ட் கோல்டு) நகைகளை தாங்கள் வாங்கி அணிந்து காலமெல்லாம் பயத்தோடே வாழ்கிறார்கள். சில குடும்பத்தில் பொய் நகைப்பற்றிய உண்மை தெரிந்தவுடன் மனைவியை தாய் வீட்டுக்கே திருப்பி அனுப்பப்பட்ட பெண்கள் ஏராளம். பணம் அல்லது நகை திரும்ப கொண்டு வந்தாலே அந்த பெண்கள் கணவன் வீட்டில் வந்து திரும்ப வாழ்க்கை நடத்தமுடியும். என்ன பரிதாபம்!. நல்ல விஷயத்துக்குதான் இவர்கள் உதவினார்கள். ஆபத்தான நேரத்தில்தான் இவர்கள் உதவினார்கள்!. ஆனால் வாங்கியவர்களின் அலட்சியம் பல குடும்பங்களை பிரித்துவிடுகிறது.

அதனால்தான் வேதம் கூறுகிறது. உன் ஆபத்து காலத்தில் (அதாவது பண தேவை சமயத்தில்) உன் சகோதரனுடைய (சகோதரியினுடைய) வீட்டுக்கு போகாதே. நீதி 27:10 என்று வேதம் எச்சரிக்கிறது.

மேலும் எரேமியா 9:4ல் எந்த சகோதரனையும் நம்பாதிருங்கள் என்று எச்சரிக்கிறது.

நம் வேதம் இரண்டு விதமாகவும் போதிக்கிறது. ஒரு இடத்தில் உதவி செய் என்கிறது. மற்றொரு இடத்தில் உதவி செய்யாதே! என்கிறது. இரண்டையும் நாம்தான் ஆராய்ந்து பார்க்கவேண்டும். அதனால்தான் உதவி தேவைப்படுபவர்களின் தரத்தை அவர்கள் உங்களுக்கு கொடுத்த வாக்கில் உண்மையுள்ளவர்களாக இருப்பார்களா! என்பதை நன்கு அறிந்து வேதம் கூறுவதைப்போல் செய்யத்தக்கவர்களுக்கு செய்யுங்கள் நீதி 3:27 என்று எச்சரிக்கிறது.

சிலர் பணம், நகை கொடுத்து கடனுக்கு உத்திரவாத ஜாமீன் கையெழுத்து இட்டு மாட்டிக்கொள்ளவதைப்போல் வீட்டு பத்திரத்தையே அடமானம் வைத்து அதற்கு தன் முழு சம்மதத்தையும் அளித்து கையெழுத்திட்டு பலர் தன் சொந்த இரத்த பந்தங்களுக்கு சொந்த குடும்பத்தினருக்கு எதிராக இன்று நீதிமன்றம் சென்று லட்ச லட்சமாய் வக்கீலுக்கு பணம் கொடுத்து நீதிமன்றபடி ஏறி இறங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

பணம் எல்லா தீமைக்கும் பகைமைக்கும், பிரிவினைக்கும் காரணமாக இருக்கிறது.

சில கடைகளில் பெயர் பலகையில் கடன் அன்பை முறிக்கும் என்று எழுதியிருப்பதை கவனித்திருப்பீர்கள். ஆகவே இதை வாசிக்கும் ஜாமக்காரன் வாசகர்கள் இப்படிப்பட்ட விஷயங்களில் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்பதற்காக இந்த விஷயங்களை இங்கு குறிப்பிட்டேன்.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM