. அகத்தியம் (எஸ் 4:8) |
- கட்டாயம், அவசியம் |
. அகரதமான (ஏசா 14:15) |
- ஆழமான |
. அசங்கியம் (எஸ்றா 9:11) |
- அருவருப்பு, தூய்மையின்மை |
. அசம்பி (1 சாமு 21:5) |
- பயணிகள் தோட்பை (அகராதி குறிப்பு) |
. அஸ்திராயுதம் (எரே 50:25,51:20) |
- அதிகபட்ச கோபத்தில் பிரயோகிக்கும் ஒரு கொடுமையான ஆயுதம். |
. அஞ்சிக்கை (ஓசி 3:5) |
- அச்சம், பயம் |
. அசூசம் (புலம்பல்) |
- தீட்டு |
. அசுப்பு (யோபு 9:23, எரோ 4:20) |
- சடுதியாக, திடீரென வருதல் |
. அபரஞ்சி பூஷணம் (நீதி 25:12) |
- புடமிடப்பட்ட பொன் |
. அழுங்கு (லேவி 11:30) |
- எறும்பு தின்னும் ஒருவித விலங்கு |
. அழிம்பு (எரே 6:7) |
- கொள்ளையும், சூறையாடுதலும் |
. ஆரோகணம் (சங் 120-134) |
- இசையில் மேலேறும் ஓர் சுருதி |
. இதமியம் (நியா 18:20) |
- மகிழ்ச்சியோடு உடன்படுதல் |
. ஈசல் போடுதல் |
- விசிலடித்தல் (விசிலடித்து நையாண்டி செய்தல்) |
. இளக்கரிப்பு (ஏசா 42:4) |
- சோர்ந்து போதல் |
. உக்கல் (ஆப 3:16) |
- உறுத்துப் போதல் |
. உசாவு துணை (யோபு 26:3) |
- உற்ற துணைவன் |
. உம்பிளிக்கை (எஸ்றா 9:12) |
- மானியமாக கொடுக்கப்பட்ட பொருள். ஆனால் இவ்விடத்தின அர்த்தம் (நித்திய சுதந்திரம்) |
. உறுமால் (அப் 19:12) |
- கைக்குட்டை துணி |
. ஒற்தலாம் (மத் 23:23,லூக் 11:42) |
- ஒரு தானிய வகை. (புதினா) |
. கடாட்சம் (உன் 8:10) |
- அருட்பார்வை, கருணை பெறுதல் |
. ஏகோபித்து (நியா 20:1) |
- ஒருமித்து |