வாசகர் கடிதம்
2:
அந்நியபாஷை துதி ஆராதனை
பெண் விஷயத்தில் கையும் களவுமாக அகப்பட்ட நித்தியானந்தா போலி சாதுவின் கூட்டத்தில் பாடல் பாடுவதும், எம்பி குதிப்பதும், சிலர் வெறியுடன் கத்துவதும், கைதட்டி உடலை நடுங்கவைப்பதும், கூக்குரலிடுவதும், உளறுவதும், பரவசநிலை என்று கூறுகிறார். அதே அடையாளம், அதேநிலை
அசம்பளீஸ் ஆப் காட் வாலிபர் ஆராதனையிலும், பாஸ்டர்.ஆல்வின் தாமஸ் ஆராதனையிலும் காண்கிறேன்.
நித்தியானந்தா போலி சாமியார் இந்த பரவசநிலைக்கு
குண்டலினி என்கிறார். குண்டலினி என்பது மூலாதாரத்தில் தூக்கநிலையில் ஏற்படும்
ஒரு சக்தி தவநிஷ்டையில் கைதட்டி பாடும், இறைவேண்டல் என்பதாகும். இவற்றின்மூலம் சூழ்நிலை மறந்து, மனது ஒருநிலைப்பட்டு
பரவசநிலையில் ஆகும்போது குண்டலினி உன்னிலிருந்து எழும்புகிறது. உடனே உடலில் ஒரு சக்தியும் பரவசநிலையின் உச்சமும் உண்டாகிறது. ஒரு எல்லைக்குமேல்போகும்போது நடத்துகிறவர் ஸ்டாப் என்று கூறியவுடன் எல்லாம் அமைதியாகிறது. இதேதான் எல்லா பெந்தேகோஸ்தே சபைகளிலும் காண்கிறோம். சிலோன் பெந்தேகோஸ்தே சபையிலும் டிரம் அடித்து பாஸ்டர் ஸ்டாப் என்றவுடன் எல்லா கத்தல், கதறல், கைதட்டி நடுங்குதல் யாவும் நிற்கிறது. எனக்கு தெரிந்த ஒரு பையன் சபையில் கீபோர்ட், டிரம் எல்லாம் வாசிப்பான். துதிஆராதனை நடத்துவான் கைதட்டி குதித்து பாட்டுபாடி ஜனங்களை உற்சாகப்படுத்துவான். அந்த நேரங்கள் தனக்குள் பெரும் ஆறுதலை தந்தது என்றும், அந்த
பரவசநிலையை பரிசுத்த ஆவியானவர் செயல் என்றுதான் நம்பியிருந்தேன். ஒரு நாள் POP பாடல்பாட அழைக்கப்பட்டேன் என்ன ஆச்சரியம்.
இதே பரவசம், இதே உற்சாகம், இதே
ஆறுதல் POP பாடல் இசையிலும் அடைந்தேன். அப்போதுதான் நாம் சபையில் பாஷை பேசுவது, கைதட்டுவது, நடுங்குவது, பாடிக்கொண்டே குதிப்பது, கத்துவது, துதிப்பது இவை யாவும்
ஆவியானவர் கிரியை அல்ல. வெறும் சரீர பரவசம்தான் என்பதை உணர்ந்தேன் என்று அந்த வாலிபன் சாட்சி கொடுத்தான்.
- நாகர்கோவில்.
|