நெய்வேலியில் உள்ள
ஆற்காடு லூத்தரன் சபையில் என் கூட்டங்கள் மிகவும் ஆசீர்வாதமாக நடந்துமுடிந்தது. இந்த சபையின் போதகர்.Rev.Michael அவர்கள்; கூட்டத்தை மிகவும் சிறப்பாக நடத்தினர். கூட்ட ஏற்பாடுகளை ஆவிக்குரிய கூட்ட பொறுப்பாளர்கள் சிறப்பான முறையில் கூட்டங்களை ஏற்பாடு செய்திருந்தனர்.
பாண்டிசேரி, விருத்தாசலம், பண்டிருட்டி, வடலூர், கடலூர் இன்னும் பல்வேறு இடங்களிலிருந்து ஏராளமானவர்கள் கூட்டத்தில் கலந்துக்கொண்டனர். சனிக்கிழமை நடந்த ஆவிக்குரிய தனிப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்துக்கொண்டு தெளிவுபெற்றார்கள. கூட்டத்தில் பேசிய செய்திக்குபின் குடும்பங்களோடு பேசின தனி ஆலோசனைக்குபின் பலர் வெளிஊர்களில் உள்ள பல வருடங்களாக ஒப்புரவுகாமல் இருந்தவர்களோடெல்லாம் அவர்கள் ஒப்புரவானதாக செய்தி கேள்விப்பட்டு தேவனை துதித்தேன். சபையில் பலர் ஒருவருக்கொருவர் மன்னிப்பு கேட்டு ஒப்புரவானார்கள். ராஜாதி ராஜன் இயேசுகிறிஸ்துவுக்கே மகிமை உண்டாவதாக.
|