இதுவரை ஏஞ்சல் டிவி மூலமாக சகோ.சாதுசெல்வராஜ், சகோ.மோகன் சி.லாசரஸ், சகோ.வின்சென்ட் செல்வகுமார் ஆகியவர்களின் அபத்தமான தரிசனங்களையும், வெளிப்பாடுகளைப்பற்றியும், இவர்களின் 12 மணி நேர உபவாசத்தில் காணப்பட்ட பிசாசு பிடித்தவர்களின் நடுக்கம், உளறுதல், கைகளை வேகமாக தட்டுதல், உரத்த சப்தமிட்டு ஊளையிடுதல், ஜெபத்தில் ஓ போட சொல்வது, உரத்த சத்தத்தில் சாவு வீட்டில் அழுவதைபோல் கதறுதல் இப்படிப்பட்ட காட்சிகளைக் குறித்து அவைகள் யாவும் பிசாசின் கிரியைகள் என்று பெரும்பாலானவர்கள் விளங்கிக்கொண்டதை அறிந்து தேவனைத் துதிக்கிறேன். இப்போது இந்த
மூவரணியின் ஆவி சிறுபிள்ளைகளுக்குள் புகுந்துள்ளது. சிறு பிள்ளைகள் மூலமாக
கர்த்தர் தரிசனம் காண்பிக்கிறார் என்கிறார்கள். 3 வயது பிள்ளைகள் மூலமாகவும்,
கர்த்தரின் தீர்க்கதரிசனம் வெளிப்படுகிறது. இதை கர்த்தர் இவர்களுக்கு தனிப்பட்ட முறையில் அறிவித்திருக்கிறார் என்று ஏஞ்சல்
TVயில் இவர்கள் கூறுகிறார்கள்.
ஒவ்வொரு பெற்றோர்களும், தங்கள் பிள்ளைகளை அற்பமாக எண்ணாமல் ஒவ்வொருநாள் காலையும், நீ ஏதாவது
தரிசனம் கண்டாயா, சொப்பனம் கண்டாயா,
உன் தரிசனத்தில் தூதர்கள் வந்தார்களா? இயேசு வந்தாரா? அவர்கள் என்ன சொன்னார்கள்? என்று பெற்றோர்கள் தங்கள் சிறுபிள்ளைகளிடம் கேட்கவேண்டுமாம். அதற்கு சாட்சியாக பல சிறுவர்களை, சிறுமிகளை
ஏஞ்சல் டிவியில் பேட்டி எடுத்து அவர்களை நடிக்க வைத்து அவர்கள்
தரிசனம் கண்டதாக கூறுவதாகவும் இவர்கள் எழுதி கொடுத்ததை அந்த சிறுமிகள் மனப்பாடம் செய்து விவரிப்பதை அப்படியே டிவியில் திரும்பதிரும்ப காட்டுகிறார்கள். இதை பார்ப்பவர்கள் அப்படியே அந்த பொய்யை நம்பிவிடுகிறார்கள். மேலும் இந்த மூவரணி கூறுவதற்கு பெற்றோர்கள் கீழ்ப்படிந்து காலையில் சின்ன பிள்ளைகள் தூங்கி எழுந்தவுடன் அவர்களிடம் இன்று நீங்கள்
தரிசனம் கண்டீர்களா? தூதனைப் பார்த்தீர்களா? இயேசு அப்பாவை பார்த்தீர்களா?
சிங்காசனத்தை பார்த்தீர்களா, தங்க வீதியை பார்த்தீர்களா? என்று கேட்டால் அந்த பிள்ளைகள் எதையாவது உளறாமல் என்ன செய்வார்கள்? இது நம் கிறிஸ்தவ சிறுபிள்ளைகளை நிம்மதியாக தூங்கவிடாமல் தூங்குவதற்குமுன்னே பெற்றோர்கள் அந்த சிறுவர்களிடம் பல தரிசன பொய்களை அவர்களுக்கு கதைகளாக கூறி அதன் மூலம் அவர்களை சொப்பனம் பார்க்க மனோதத்துவ ரீதியாக அவர்களை சொப்பனம் காண தயார் செய்துவிடுகிறார்கள். அந்த பிள்ளைகளை சிறுவயதிலேயே மனரீதியாக பயமுறுத்தி அவர்களை
மன நோயாளிகளாக்கவும், பைத்தியகாரர்களாக்கவும் செய்யும் பிசாசின் பயங்கர திட்டமாகும்.
இது சிரியா நாட்டின் மீது சிரியா நாட்டு அதிபரே நச்சு நிறைந்த ரசயான குண்டை தன் சொந்த ஜனங்கள் மீதுபோட்டு அவர்களை வியாதியஸ்தராக்கி கொல்வதற்கு சமமாகும். விசுவாசிகள் இவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். அந்த சிறுவர் நிகழ்ச்சிகளை நம் பிள்ளைகள் பார்க்க அனுமதிக்கவேண்டாம் என்று எச்சரிக்கிறேன்.
உலக முடிவுக்கு முன் இப்படிப்பட்ட டிவி ஊழியர்களும், அந்திகிறிஸ்துவுக்கு இரகசிய உளவாளிகளாகவும் அவனுக்கு உதவுபவர்களாகவும் மாறி அவன் திட்டத்துக்கு துணைப்போகிறவர்களாக
இருப்பார்கள்! வாசகர்களாகிய உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்காகவும் ஜெபிக்கிறேன்.
|