வாசகர் கடிதம்

வாசகர் கடிதம் 1: தலைக்கு டை அடிப்பது

ஜாமக்காரன் 2013 ஏப்ரல் மாத பத்திரிக்கையில் தலைக்கு டை அடிப்பது பற்றி உங்கள் பதில் மற்றவர்களை தவறான வழிக்கு கொண்டு செல்லும். உங்கள் பதில் உங்களை நியாயப்படுத்த உதவும். வெளிப்புற அலங்காரத்தால் ஸ்திரீகளை அலங்கரிக்கவேண்டாம் என்று பவுல் சொல்லியிருக்கும்போது (1 தீமோ 2:9) ஆண்கள் டை அடித்துக்கொள்வது சரியா?

முதிர் வயதானவர்களின் மகிமை அவர்கள் நரை ஆகும் நீதி 20:29 என்பதை மறந்துபோக வேண்டாம்.


வாசகர் கடிதம் 2: தசமபாகம்

தசமபாகம் ஒரு நீதிமன்ற வழக்கு என்ற பகுதி என்னை கவர்ந்தது. வேத வசன உண்மையை இன்றைக்கு வயிற்று ஊழியர்கள் போதிப்பதே இல்லை. அவர்கள் பொய்மையே பேசுகிறார்கள்.


வாசகர் கடிதம் 3:

தலைக்கு டை அடிப்பதை குறித்த கேள்விக்கான - பதில் தேவையற்றது. இளமை உணர்வு உண்டாகிறது என்ற உங்கள் வாதம் ஏற்புடையதல்ல. அது Self Deceptive feeling - அதாவது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் ஒரு உணர்வு. வாசகர்களின் டை அடிக்கும் சபலத்திற்கு திசை திருப்புவதாக இருக்கிறது. ஆகவே உங்கள் டை கருத்து என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.





















Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM