நான் கண்டதும் - கேட்டதும்
நல்ல செய்தி

சகோ.மோகன் சி.லாசரஸ் (நாலுமாவடி) அவர்களின் நிகழ்ச்சி ஒன்றை 16.12.2012 இரவு சத்தியம் டிவியில் காண நேர்ந்தது. அது வாலிப பிள்ளைகளுக்கான நிகழ்ச்சி. அதில் காட்டப்பட்ட சின்னத்திரையில் சினிமாவில் காட்டப்பட்டது. கல்லூரியில் படிக்க டொனேஷன் வாங்கும் இன்ஜினியரிங் காலேஜ் முதலாளியைப் பற்றிய கதை ஆகும். ஒரு ஏழை தகப்பன் தன் மகளுக்காக டொனேஷன் கொடுக்க வீட்டை அடமானம் வைத்து வட்டிக்கு கடன் வாங்கியதால் இந்த கல்லூரியில் படிக்கும் அந்த ஏழை சிறுமி கிறிஸ்மஸ் கொண்டாட முடியாத மனவேதனையை அந்த சினிமாவில் காட்டினார்கள். இந்த விவரம் அந்த அந்த கல்லூரி முதலாளி மகள் மூலமாக அறிவுறுத்தப்பட்டு அந்த முதலாளி மனந்திரும்பி டொனேஷன் பணத்தை திரும்ப கொடுத்து அவர்கள் அனைவரும் கிறிஸ்துவின் சந்தோஷத்தில் பங்குக்கொண்ட சம்பவமும் அந்த சினிமாவில் நல்ல விதத்தில் சித்தரித்திருந்தது.

அதன்பின் பிரசங்கம் செய்த மோகன் சி.லாசரஸ் அவர்கள் சிறு வாலிப பிள்ளைகளை தங்கள் பெற்றோரின் வருமான விவரத்தை தங்கள் பெற்றோரிடம் கேட்க சொல்கிறார். அவரவர்களின் பெற்றோர் நியாயமான முறையில் பணம் சம்பாதிக்கிறார்களா? அவர்களுக்கு பணம் எப்படி வருகிறது? லஞ்சம் மூலமாகவா? என்பதையெல்லாம் விசாரித்து பெற்றோரை பிள்ளைகளை திருத்தும்படி கேட்டுக்கொள்கிறார். அந்த சின்னதிரைகதை கூறும் நற்போதனையும், சகோதரன் மோகன் சி.லாசரஸ் கூறிய நியாயமான அப்படிப்பட்ட ஆலோசனை அந்த டிவியில் பிரயோஜனமுள்ளதாக கண்டேன். அப்படியே, ஏழைகளுக்கென்று கர்த்தர் காருண்யா கல்லூரியை கட்ட சொன்னார் என்று பொய் சொல்லி லட்சக்கணக்கான டொனேஷன் ஏழைகளிடத்திலிருந்து வாங்கி கல்லூரி நடத்தும் தொழிலதிபர் சகோ.பால்தினகரன் அவர்களையும் இந்த டிவி சினிமா கல்லூரி முதலாளியுடன் ஒப்பிட்டு பார்த்தேன்.


பொய் செய்தி: இயேசுவை கேட்டேன்:

16.12.2012 சகோ.ஆனந்தஸ்ரா டிவி செய்தியை பார்த்தேன். அவர் பேசியதாவது: இயேசு பிறப்பின்போது சாஸ்திரிகள் கண்ட நட்சத்திரத்தைக்குறித்து உலகில் பலர் பலவாராக கூறுகிறார்கள். பலர் வால் நட்சத்திரம் என்கிறார்கள்!. உண்மை என்ன என்று அறிய நானே இயேசுவிடம் கேட்டேன். அப்போது அவர் என்னிடம் சொன்னார்: அது வால் நட்சத்திரம் அல்ல. அது ஒரு புதுமையான விசேஷ நட்சத்திரம் என்றார். இதன்மூலம் அவர் அன்று செய்த பிரசங்கத்தில் மக்களுக்கு கூற விரும்பவதென்னவென்றால் எனக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் மிக நெருக்கம் அதிகம்-சாதாரண விஷயமானால்கூட அவரிடம் கேட்டால் உடனே சொல்லிவிடுவார் என்பதாகும். நட்சத்திரம் விஷயம் அத்தனை முக்கியமான ஆவிக்குரிய விஷயமா? வேதமே அது வால் நட்சத்திரம் என்று கூறவில்லையே!. இவர் ஏன் இத்தனை பாடுபட்டு அதை இயேசுகிறிஸ்துவிடம் விசாரிக்கிறார்.

நாங்கள் எங்களையே பிரசங்கி(ப்பதில்லை) 2 கொரி 4:5.

(பிசாசின் ஊழியக்காரர்) நீதியுடன் வேஷத்தை தரித்துக்கொள்வார். 2 கொரி 11:15

ஒரு மனுஷன் சர்வசாதாரணமாக ஒருவனிடம் டைம் என்ன ஆச்சு என்று கேட்பதுபோல், இவர்களுக்கு இயேசுகிறிஸ்து அவ்வளவு மதிப்பு குறைந்த தெருவில் போகும் சாதாரண மனுஷனாக இயேசுவை மாற்றிவிட்டார்கள்.


மிகைப்படுத்திய சாட்சி - இமயம் டிவியில் 4.5.2013 காலை

சகோ.மோகன் சி.லாசரஸ் செய்தியில் சகோ.ஜாஷ்வா என்பவரின் (ஆஸ்ட்ரேலியா) சாட்சி:
எனக்கு தேவையான தொகை 2000$ டாலர் அன்று காலை எனக்கு வந்த தபாலில் ஆழு மணிஆர்டர் மூலமாக கிடைத்தது. யார் அனுப்பினார்கள், என்னை எப்படி தெரியும், எங்களுக்கு ஒன்றும் தெரியாது. தேவன் அற்புதம் செய்தார். கேள்வி என்ன? ஒருவர் மணிஆர்டர் அனுப்பினால் அனுப்பியவரின் பெயர் விலாசம் குறிப்பிடாமல் உலகில் எங்கும் யாரும் அனுப்ப முடியாது என்பது நம் எல்லாருக்கும் தெரியும். ஆனால் இந்த அற்புதத்தில் சாட்சி கூறியவர் யார் அனுப்பியது, எங்கிருந்து வந்தது என்பது அதியசயமாக இருந்தது. நம்பமுடிகிறதா?. இவர்கள் ஆண்டவருக்கு தங்கள் சாட்சிமூலம் உதவுபவர்கள்.

ஆண்டவர்தான் நமக்கு உதவவேண்டும். நம் உதவி ஆண்டவருக்கு தேவை இல்லை.


Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM