விமர்சனமும் - மறுப்பும்

2013 ஏப்ரல் ஜாமக்காரனில் நீங்கள் எழுதிய திருத்துவம் என்ற தலைப்பின் ஆய்வுக்கட்டுரை மிக நன்று.

ஆட்சேபிக்கிறேன்:

அதாவது திருத்துவம் என்ற இரண்டாவது பகுதியில் கடைசி பத்தியில் நீதி 8:30 நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்து, எப்போதும் அவருடைய சமூகத்தில் களிகூர்ந்தேன் என்ற வேத பகுதியை இயேசுக்கு ஒப்பிட்டுள்ளதை ஆட்சேபிக்கிறேன். எப்படியெனில் நீதிமொழிகள் 8ம் அதிகாரத்தில் ஞானமே மையப்பொருள், நீதி 8ம் அதிகாரமானதை மனிதர்களாகிய நம் ஞானமானது தன்னைக் குறித்து பேசும் பகுதியாகும்.

நீதி 8:29,30 சமுத்திர ஜலம் தன் கரையைவிட்டு மீறாதபடிக்கு அதற்கு எல்லையை கட்டளையிட்டு பூமியின் அஸ்திபாரங்களை நிலைப்படுத்துகையிலும் அவர் அருகே செல்லப்பிள்ளையாயிருந்தேன் என்ற வசனங்கள் தேவன் இந்த பூமியை அஸ்திபாரப்படுத்துகையில் "இயேசு" அவர் அருகில் செல்லப்பிள்ளையாயிருப்பதுபோலவும் சிருஷ்டிப்பில் சம்பந்தம் இல்லாததைப்போல் புரிந்துக்கொள்ளப்படுகிறார்.

யோபு 1,2,3 வசனங்களில் அவர் (இயேசு) ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று, உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. எபி 1:2 கடைசி பகுதியில் இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார் என்ற வசனங்கள் அவர் சிருஷ்கர் என்பதை விளக்குகிறது. சிருஷ்டிப்பின் வேளையை மூவருமே செய்திருக்கிறார்கள் என்பதே திரித்துவம். இப்படியிருக்க நீதி 8:24,26 ஆகிய வசனங்களில் நான் ஜனிக்கப்பட்டேன் என்று வருவதால் இயேசு பிதாவினால் ஜனிக்கப்பட்டார் என்று பொருள் சொல்வதா?. ஆகவே இந்த குறிப்பிட்ட கருத்துக்களை ஆட்சேபிக்கிறேன்.

Pastor.S.Francis Mahendran
Good Shepherd Church of Truth, Tharamangalam, Salem.


"பூரண சற்குணராக இருங்கள்" என்ற பத்திரிக்கை ஆசிரியரின் மறுப்பு:
2013 ஏப்ரல் இது தவறான தகவல்:

பத்திரிக்கை ஆசிரியரான (Bro.D.V.Gnanapragasam) என்னைக்குறித்து ஒரு தவறான தகவல் ஜாமக்காரன் 2013 பிப்ரவரி மாத பத்திரிக்கையில் வெளியானது.

ஜாமக்காரன்:
கேள்வி:
பூரணசற்குணராக இருங்கள் என்ற பத்திரிக்கையிலிருந்து ஒரு செய்தியை வெளியிட்டிருந்தீர்களே அதன் ஆசிரியர். யெகோவா சாட்சிகள் சபையை சேர்ந்தவர் என்பது உங்களுக்கு தெரியாதா?.

பதில்:நானும் கேள்விப்பட்டேன். ஆனால் அந்த குறிப்பிட்ட செய்தி பலருக்கும் பிரயோஜனமாக இருந்ததே.... நல்ல ஆவிக்குரிய செய்திகள் வாசகர்கள் ஜீவியத்துக்கு பிரயோஜனமாக இருக்குமானால் அதை ஜாமக்காரனில் வெளியிட நான் தயங்குவதில்லை. நலமானதை மட்டும் பற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள்.. என்ற வசனத்தின்படி ஜாமக்காரனில் வெளியிட்டேன் என்று எழுதியுள்ளார். யார் மூலமாகவோ கேள்விப்பட்ட ஒரு விஷயத்தை கேள்விப்பட்டு என்னை நான் யெகோவா சாட்சிகள் சபையை சேர்ந்தவன் என ஜாமக்காரன் ஆசிரியர் கூறியுள்ளார். இது தவறான தகவல்!. நான் பிறந்தது முதல் CSI சபை பிரிவில்தான் இருக்கிறேன். தற்போது திருநெல்வேலி மகாராசா நகர் CSI சபையில் உறுப்பினராக இருக்கிறேன். ......தவறான தகவலை அளித்த வாசகரை ஊக்கப்படுத்தும் விதமாக,தகவல் சரிதானா என்று சோதித்தரியாமல் தகவலை ஜாமக்காரனில் வெளியிட்டது நிச்சயம் கண்டிக்கத்தக்கது. உலக பிரகாரமான CSI சபையில் நான் உறுப்பினானாக இருந்தாலும் அந்த CSI சபையின் எல்லா கோட்பாடுகளிலும் எனக்கு உடன்பாடு கிடையாது. ஆகிலும் CSI மட்டுமல்லாமல் சபை மற்றொல்லா சபைகளிலும்கூட ஏதாவது ஒருவிதத்தில் கோட்பாடுகள் குழப்பங்கள் உண்டென்பதாலும் நான் ஒரு சபையைவிட்டு மற்றொரு சபைக்கு மாறி சபை பிரிவினையை ஊக்குவிக்கக்கூடாது என்பதாலும் நான் இப்போதும் CSI சபையிலேயே தொடர்ந்து நீடித்துவருகிறேன்.

குறிப்பு: குறிப்பிட்ட இந்த பத்திரிக்கை ஆசிரியரைக்குறித்து எனக்கு தவறான தகவலை அனுப்பின ஜாமக்காரன் வாசகர்கள் தயவுசெய்து இனியாவது சரியாக விசாரித்து விவரங்கள் அறிந்து தகவல்கள் அனுப்பவும். இது தவறான தகவலாக இருந்தால் அவமானம் ஜாமக்காரனுக்குத்தான் என்பதை வாசகர்கள் மறக்கவேண்டாம்.


Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM