|
 |
|
TUTICORIN DIOCESE CSI CHURCH - SHANMUGAPURAM MEETING |
தூத்துக்குடி ஷண்முகபுரம்
CSI ஆலய கன்வென்ஷன் Rev.TMS.Tamilselvan அவர்களின் தலைமையில் மிகச்சிறப்பாக நடந்தேறியது. கர்த்தர் ஒவ்வொரு நாளும் மக்களோடு வசனத்தின்மூலம் பேசினார். கூட்டம் ஆசீர்வாதமாக அமைந்தது.
|
SOUTH KERALA DIOCESE CSI CHURCH - ANCODU MEETING |
தெற்கு கேரளா டையோசிஸ் Ancodu என்ற சிறு கிராமத்தில் நடந்த இக்கூட்டங்கள் சிறப்பாக நடந்தேறியது. 100வது ஆண்டு சபை நாள் கன்வென்ஷனாக இது சிறப்பாக நடந்தேறியது.
Rev.Sudhakaran அவர்கள் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார். கர்த்தருடைய நாமம் மகிமைப்பட்டது. சுற்றிலும் புறமதஸ்த்தினர் என் செய்தியை கேட்டதால் அவர்களும் புரிந்துக்கொள்ளும் வகையில் என் செய்தி அமைந்தது. கூட்டம் ஆசீர்வாதமாக அமைந்தது.
|
COIMBATORE CSI DIOCESE -
GANDHIPURAM CHRIST CHURCH |
கோயமுத்தூர் காந்திபுரம் கிறிஸ்துநாதர் ஆலயத்தில் நடந்த இந்த ஆவிக்குரிய கூட்டத்தில் கர்த்தருடைய வார்த்தையை பகிர்ந்துக்கொள்ள
Rev.S.Prince Calvin அவர்கள் இந்த சபைக்கு என்னை அழைத்து கூட்டம் நடத்தினார். 4வது முறையாக இந்த சபையில் பேசினேன். சபை மக்கள் நிறையபேர் என் ஊழியத்துக்காக ஜெபிப்பவர்களும், தாங்குகிறவர்களுமாக இருப்பது எனக்கு சந்தோஷம். அருகே உள்ள
இரத்தனபுரி CSI சபை மக்களும் கோவை அரசு மருத்துவமனை எதிரில் உள்ள
கிறிஸ்துநாதர் ஆலயமக்களில் பலரும் இக்கூட்டத்தில் கலந்துக்கொண்டனர். சில வருடங்களுக்குமுன்
Rev.அன்புராஜ் அவர்கள் இதே காந்திபுரம் கிறிஸ்துநாதர் ஆலயத்தில் ஆயராக இருந்தபோது டையோசிஸ்ஸிலிருந்து இப்போது நீக்கப்பட்ட முன்னாள் பிஷப்.துரை அவர்கள் அந்த ஆயரை மிரட்டி டாக்டர்.புஷ்பராஜ் அவர்களின் கூட்டத்தை நீங்கள் நடத்தக்கூடாது என்று கட்டளையிட்டதும், அதனால் சபை மக்கள் வேதனையுடன் எனக்கு கடிதங்கள் எழுதி தங்கள் வருத்தம் அறிவித்ததும் இவை யாவும் இம்முறை என் நினைவில் வந்தது. இன்று அந்த பிஷப்.துரை அவர்களின் நிலையும் அவர்களோடு டையோசிஸ்ஸின் மக்கள் காணிக்கைகளை அபகரித்தவர்களின் நிலையும், அவர்களைப்பற்றி நீதிமன்றம் அறிவிப்புகள் ஆகிய இவ்விபரம் அறிந்த யாவருக்கும் இது நல்ல பாடமாக அமைந்தது. இனி டையோசிஸ்களில் புதிதாக பிஷப்பாக பொறுப்பெடுப்பவர்களுக்கும் மற்ற நிர்வாகிகளுக்கும் இவைகள் ஒரு பாடமாக அமைந்தால் நல்லது. ஆனால் இப்போதுள்ள திருமண்டல நிலையை காணும்போது இனி புதிதாக டையோசிஸ் பொறுப்பெடுப்பவர்கள் முன்பைவிட மோசமாக நடந்துக்கொள்வர்களோ என்ற அச்சம் மனதின் உள்ளில் வருகிறது. காரணம், பிஷப்பாக நிற்கும் சில
ஆயர்களின் கடந்தகால வரலாறுகளை நினைக்கும்போதும் அவர்களைப்பற்றிய குற்றச்சாட்டுகளை அறியும்போதும் அந்த அச்சம் ஏற்படுகிறது.
பழைய மொந்தையில் புதிய கள்ளு என்ற பழமொழிபடி அன்று தவறுக்கு துணைப்போனவர்கள் பலர் டையோசிஸ் பொறுப்பில்
மறுபடியும் வரமுயல்வதும் அதன் அடையாளமாக இப்போது அவர்களின் கை ஓங்கிவந்து பின் அது மங்கிப்போனது. இப்படி பல விஷயங்கள் கேள்விப்படும்போது பிஷப் தெரிந்தெடுப்பைக்குறித்த என் சந்தேகத்தை உறுதியாக்குகிறது.
 வேதம் கூறுவதாவது: 1 தீமோ 3:2,10 (பிஷப்)
குற்றஞ்சாட்டப்படாதவனும் ஒரே மனைவியை உடைய புருஷனும்...... முன்னதாக அவன் சோதிக்கப்பட்டவனாக இருக்கவேண்டும் என்றெல்லாம் பல ஆலோசனைகள் எழுதப்பட்டுள்ளது. ஆகவே இனிமேலாவது நம் டையோசிஸ்ஸில் பிஷப்பாக தெரிந்தெடுக்கப்படுபவர்கள் வசனத்தின்படி தெரிந்தெடுக்கப்பட்டால் நம் முழு கோயமுத்தூர் டையோசிஸ்ஸிலுள்ள அனைத்து
CSI சபைகளுக்கும் நன்மையை பயக்கும். நம் கோயமுத்தூர் டையோசிஸ்ஸிக்காக தொடர்ந்து ஜெபிப்போம்.
|
TUTICORIN CSI DIOCESE -
PUDUKKOTTAI CSI CHURCH |
தூத்துக்குடி CSI திருமண்டலத்தில் உள்ள புதுக்கோட்டை
CSI ஆலயத்தின் 6வது நற்செய்திப் பெருவிழா மிகவும் சிறப்பாக நடந்தது.
Rev.Edwin Jebaraj அவர்கள் தலைமைதாங்கி கூட்டங்களை சிறப்பித்தார். சபை ஊழியர் திரு.நெல்சன் அவர்கள் இணைந்து கூட்ட ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார். தூத்துக்குடி, சாயர்புரம், மூக்குபீறி, நாசரேத், திருநெல்வேலி ஆகிய இடங்களிலிருந்து பலர் இக்கூட்டங்களில் பங்குக்கொண்டார்கள். கூட்டம் மிகவும் ஆசீர்வாதமாக அமைந்தது. கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக.
|
NORTH KERALA CSI DIOCESE -
MEPPADI CONVENTION |
மேப்பாடி (வயநாடு) CSI ஆவிக்குரிய கூட்டங்கள் பரிசுத்த வாரம் என்று அழைக்கப்படும் இயேசுகிறிஸ்துவின் பாடு, மரணங்களைக்குறித்தும் - உயிர்த்தெழுதலைக்குறித்தும் தியானிக்கும் நாட்களில் நடந்தது. சுல்தான்பத்தேரி, வயநாடு, கள்ளிக்கோட்டை ஆகிய ஊர்களிலிருந்து மக்கள் வந்து இக்கூட்டங்களில் பங்குக்கொண்டார்கள்.
Rev.Sherin George அவர்கள் இக்கூட்டங்கள் ஜெபத்தோடு ஏற்பாடு செய்திருந்தார்கள. கூட்டம் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
|
KARNATAKA CSI DIOCESE -
EAST PARADE CHURCH |
பெங்களுர் EAST PARADE
CSI CHURCH - மலையாள CSI சபையில் நான்காவது முறையாக கர்த்தரின் வசனத்தை பகிர்ந்துக்கொள்ள கர்த்தர் எனக்கு கிருபை செய்தார். கர்நாடகா டையோசிஸ்
CSI ஆயர் Rev.Sujit David அவர்களும், மத்திய கேரளா டையோசிஸ் சேர்ந்த ஆயர்
Rev.George Jacob அவர்களும் ஆராதனை நடத்தினர். நான் கர்த்தரின் செய்தியை பகிர்ந்துக்கொண்டேன். அதன் கூட்டம் முடிந்தவுடன் ஜாமக்காரன் மலையாள வாசகர்களையும் அவர்களின் இரண்டாம் தலைமுறை குடும்பத்தினரையும் நேரில் பார்த்ததில் சந்தோஷம். கர்த்தரின் நாமம் மகிமைப்படுவதாக.
|
TUTICORIN VILLAGE MINISTRY |
தூத்துக்குடி அருகேயுள்ள கிராம கூட்டங்களில்
ஏசுவின் வாசல் என்ற பெயரில் ஊழியம் செய்யும் சகோ.N.செல்வின் அவர்கள் சில கிராமங்களில் சபைகளும் ஸ்தாபித்திருக்கிறார். இவரும் இவருடைய குழுவும் இணைந்து
திருமறைத் தியானக்கருத்தரங்கு என்ற பெயரில் ஒருநாள் தியான முகாம் தூத்துக்குடி
St.Patrich School மண்டபத்தில் நடத்தினார். அதில் நான் பங்குகொண்டு வேதத்தை எப்படி வாசிப்பது, தியானிப்பது போன்ற விஷயங்களைக் பகிர்ந்துக்கொண்டு கூட்டத்தினர் கேட்ட கேள்விகளுக்கு வேத வசனம் மூலமாக பதில் அளித்தேன். எல்லாரும் மிகவும் ஆத்மதிருப்தி அடைந்தனர். தேவ நாமம் மகிமைப்பட்டது.
|
CSI KANYAKUMARI DIOCESE - ETHAVILAI (MEKAMANDAPAM) CONVENTION |
CSI கன்னியாகுமரி டையேசிஸ்ஸிலுள்ள மேக்காமண்டபம் அருகே
ஈத்தவிளை என்ற இடத்தில் உள்ள CSI ஆலயத்தில் 3 நாள் கூட்டம் நடந்தது. இந்த சபையின் குருவானவர்
Rev.Ponnaiyan அவர்கள் தலைமையில் மிக ஆசீர்வாதமாக நடந்தேறியது. இந்த சபைக்கு மூன்று உதவி குருமார்கள் உண்டு. இக்கூட்டங்களில் ஏராளமான சபை மக்கள் கலந்து கொண்டார்கள். இந்த கூட்டங்கள் அந்த பகுதி மக்களுக்கு மிகவும் ஆசீர்வாதமாக அமைந்தது. கர்த்தரின் நாமம் மகிமைப்படுவதாக.
|
|
 |
|
|
|