|
 |
|
|
 |
Most Rev.Justin Portal Welby |
உலக பிராட்டஸ்ட்ன்ட் ஆங்கிலிக்கன் சபைகள் அனைத்துக்கும் தலைவராக
Most Rev.Justin Portal Welby அவர்கள் இங்கிலாந்து கான்ட்ரபரி கத்தீட்ரல் ஆலயத்தில் ஆர்ச் பிஷப்பாக பொறுப்பெடுத்து உள்ளார்.
ஆர்ச் பிஷப் அவர்களை ஜாமக்காரன் சார்பில் வாழ்த்துகிறோம்.
கோயமுத்தூர், மதுரை, வடக்குகேரளா ஆகிய CSI திருமண்டலங்களுக்கு
புதிய பிஷப் தெரிந்தெடுக்க ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருக்கிறது. தேவபயம் உள்ள, நவீன உபதேசம் இல்லாத நல்ல நிர்வாக தாலந்துள்ள ஆயர் ஒருவர் தெரிந்தெடுக்கப்பட ஜெபிப்போம்.
|
|
 திரியோகத்தைக்குறித்து சகோ.புஷ்பராஜ் அவர்களுடைய தவறான போதகத்தை நாம் எதிர்க்கவேண்டும்.
 ஜாமக்காரன் ஆசிரியர் அவர்களுக்கு, நான் எழுதும் இக்கடிதம் உங்கள்
நித்திய ஜீவனைப் பற்றினது. கடிதத்தை முழுமையாக பொருமையுடன் வாசிக்கவும்.
...... நீங்கள் நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ளக்கூடாது என்பதற்காகவே சாத்தான்
3 பேரை - அதில் ஆள்தத்துவமில்லாத பரிசுத்த ஆவியை, தவறான மொழிபெயர்ப்புள்ள பைபிளில் திரியோகத்தில் 3வது ஆள்போல் காண்பித்து உங்களை ஏமாற்றி உள்ளான். தேவக்குடும்பம்
பிதா - குமாரன் - பரிசுத்த ஆவி ஆகிய மூவருக்குள் அடங்கியது என்ற போதகம்
சாத்தானுடையதாகும். நமது ஆண்டவரின் உபதேசங்களை நீங்கள் ஆராய்ந்தீர்களென்றால் திரித்துவம் சாத்தானுடையது என்பதை உணருவீர்கள். அப் 10:19ல்
ஆவியானவர் என்று குறிப்பிடுவது இயேசுகிறிஸ்துவையே ஆகும். பரிசுத்த ஆவியை அல்ல. அது தவறான மொழிபெயர்ப்பு.
சாத்தானுடைய போதனையான திரித்துவத்தை நீங்கள் நம்பாமல் இருக்க உங்களுக்காக ஜெபிக்கிறோம்.
- இப்படிக்கு கிறிஸ்துவுக்குள் சகோதரன்.Dr.S.Samuel.
குறிப்பு: சகோ.சாமுவேல் அவர்கள் மேலே எழுதின கடிதங்களுக்கு பதில் எதுவும் நான் எழுதவில்லை. இவர்கள் அனுப்பும் புத்தகங்களை அப்படியே குப்பை தொட்டியில் கட்டுக்கட்டாக எறிந்துவிடுவேன். வாசகர்களாகிய நீங்களும்
எகோவா சாட்சிகள் என்று அழைக்கப்படுகிற இவர்களோடு எந்த வாக்குவாதத்துக்கு போகவேண்டாம், பதிலும் கூறவேண்டாம். உங்களை மூளைச்சலவை செய்துவிடுவார்கள். இவர்கள் நாங்களும்
கிறிஸ்தவர்கள்தான் என்று பொய் கூறிக்கொண்டு உங்கள் வீடுகளுக்கு
இரண்டு போராக வருவார்கள். நம் வேதத்தில் கூறிகிறபடி 2 யோ 8,9,10 இவர்களை
வீட்டுக்குள் சேர்க்காதபடி பார்த்துக்கொள்ளுங்கள். இவர்களுக்கு
வாழ்த்துதல்கூட சொல்லக்கூடாது என்று சீஷர்கள் காலத்திலேயே நமக்காக வேதத்தில் எழுதி நம்மை எச்சரித்துள்ளார்கள். நாம் இவர்களை திருத்த முடியாது. இவர்களிடம் பேச்சு வைத்துக்கொண்டவர்கள் இவர்களின் கள்ள உபதேசத்திலிருந்து தப்பவும் முடியாது. ஜாக்கிரதை.
|
|
பிஷப் மற்றும் மூப்பர்களின் தகுதி: |
|
தமிழ்நாட்டு 3 பிஷப்மார்களின் பெயரில் ஏமாற்று வழக்கு |
பல கோடி ரூபாய்கள் ஊழல் புரிந்ததாக தமிழ்நாட்டு திருநெல்வேலி, தூத்துக்குடி,
CSI டையோசிஸ்ஸின் இந்நாள்-முன்னாள் பிஷப்புகளான Rev.J.J.CHRISTDOSS (TIRUNELVELI),
BISHOP.JAD.JEBACHANDRAN (TUTICORIN) ஓய்வு பெற்ற திருநெல்வேலி பிஷப்பான
Rt.Rev.JAYAPAUL DAVID ஆகியவர்களுடன் ஓய்வுபெற்ற DISTRICT JUDGE-ம், சினாட் உறுப்பினருமான
Mr.RETINARAJ அவர்கள் மேலும் TRESURER ஆக பணியாற்றிய Mr.SELVIN JAYARAJ,
Mr.SAMUEL SELVARAJ ஆகியவர்கள் மேலும் திருநெல்வேலி போலீஸ் குறிப்பிட்ட இவர்கள் யாவரும் பண ஊழல் செய்தவர்கள் என்று குற்றச்சாட்டு பதிவுசெய்திருக்கிறது.
|
 |
 |
 |
Rev.J.J.CHRISTDOSS
(TIRUNELVELI) |
Rt.Rev.JAD.JEBACHANDRAN
(TUTICORIN) |
ஓய்வு பெற்ற Bishop.
Rt.Rev.JAYAPAUL DAVID |
பிஷப்.Rt.Rev.J.J.கிறிஸ்துதாஸ் அவர்களின் பதில்: |
இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலாக தற்போதைய திருநெல்வேலி பிஷப்
Rt.Rev.J.J.CHRISTUDOSS அவர்கள் கூறியதாவது: நாங்கள் எல்லா கணக்குகளையும் எந்த தவறும் இன்றி சரியாக வைத்துள்ளோம். அனைத்து ஆவணங்களும் சரியாகவே இருக்கிறது. அதில் எந்த பண கையாடலும் நடக்கவில்லை. மேலும் ஒவ்வொரு வருடமும் எங்கள் கணக்குகளை (வரவு-செலவுகளை) மத்திய அரசாங்கத்துக்கு
CSI TRUST மூலமாக சமர்பித்துள்ளோம். இந்த நடப்பு ஆண்டு கணக்குகள்கூட முறையாக நாங்கள் சமர்பித்துவிட்டோம் என்று
பிஷப்.கிறிஸ்துதாஸ் அவர்கள் அறிவித்தார்.
|
|
செத்துப்போனவர்கள் சுமார் 9 பேர்களை நான் என் ஜெபத்தில் உயிரோடு எழுப்பியிருக்கிறேன். இப்படி ஒரு
விளம்பர நோட்டிஸ் சில ஆண்டுகளுக்குமுன்பு என் கையில் கொடுக்கப்பட்டது. இது சாதாரண
அற்புதம் அல்லவே, வேதத்தில்தான் நாம் வாசித்திருக்கிறோம். ஆனால் இன்றைய உலகத்தில் நாம் கேள்விப்பட்டதில்லையே!. சகோ.போங்கே ஜெர்மனி அவர்கள் கூட்டத்தில் கார் விபத்தில் இறந்துப்போன ஒருவர் இறந்துப்போனார் என்று ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பரிசோதித்து மார்சரிக்கு (பிணகிடங்குக்கு) கொண்டுபோக எழுதிகொடுத்த ஆஸ்பத்திரி சீட் அந்த சாட்சி வீடியோவில் கண்டேன். டாக்டர் சர்டிபிகேட் கண்டதால் அந்த நபர்
போங்கே கூட்டத்தில் சுகம் பெற்றார் என்பதை நானும் நம்பினேன். கர்த்தரை துதித்தேன். பிறகு சில மாதங்கள் கழித்து மற்றொரு நபர் அப்படி மரித்துதானே உயிரோடு எழுந்தன. பத்திரிக்கையில் வெளியிட்டிருந்தனர். அதைக்குறித்து
அமெரிக்கன் போஸ்ட் என்ற பத்திரிக்கையில் டாக்டர் பேட்டி கொடுத்திருந்தார். இந்த மரணம் உண்மையான மரணமல்ல, டாக்டர்கள் செத்துவிட்டார் என்று சர்ட்டிபிகட் கொடுத்திருக்கலாம். காரணம்
ஸ்டேத் வைத்துபார்க்கும்போதும், பல்ஸ் பிடித்து பார்க்கும்போதும்
நாடிதுடிப்பு, இருதய துடிப்பு நின்று போனதால் அப்படி நிதானித்து இருக்கலாம். அந்த நபர்களோடு
மூளைசாவு உண்டாகவில்லை. ஆகவே மறுபடியும், நாடிதுடிப்பு உண்டாக சாத்தியதைகள் உண்டு என்று விளக்கினார்.
நம் தமிழ்நாட்டில் சகோ.ஆனந்தஸ்ரா, சகோ.ஜவஹர் சாமுவேல் மரித்துப்போன
சகோ.ரபீந்திரநாத் இவர்களின் சாட்சிகளில் இப்படி செத்துப்போனவர் தங்கள் ஜெபத்துக்குபின் உயிரோடு எழுந்ததை தங்கள் பிரசங்கத்திலும், பத்திரிக்கையிலும் வெளியிட்டதை வாசகர்கள் எனக்கு போட்டோ காப்பி எடுத்து அனுப்பினார்கள். அதில் ஒரு நபரைக்குறித்து சகோ.ஆனந்தஸ்ரா (திருச்சி) அவர்கள் எழுதியிருந்தார். அவர்
வெல்லூர் கூட்டத்தில் பேசியிருக்கிறார். மரித்தவர் வெல்லூர்
சத்துவாச்சாரி என்ற இடத்தில் உள்ளவர் மரித்தது CMC வெல்லூர் ஆஸ்பத்திரியில், உயிரோடு எழுப்பியதற்கு சாட்சி பிஷப்.டிரினிட்டி பாஸ்கர் அவர்களாவார். இப்படி இவர் குறிப்பிட்டதும் நமக்குதான்
CMC டாக்டர்கள், நர்ஸ்மார் பல ஆவிக்குரிய நண்பர்கள் வெல்லூரில் உண்டே, உடனே விசாரிக்க சொன்னேன். சத்துவாச்சாரியில் அப்படி ஒரு அற்புதம் நடக்கவில்லை, நடந்திருந்தால் உடனே அதே
CMC கொண்டு போய் சிகிச்சை கொடுத்திருப்பார்களே, அதுவும் இல்லை என்று உறுதியானது. பிஷப்.டிரினிட்டி பாஸ்கர் அவர்களை விசாரித்தார்கள். அவருக்கு வந்ததே கோபம்! நான் அவர் கூட்டத்துக்கு தலைமை தாங்கினேன். மற்றபடி எந்த அற்புதமும் எனக்கு தெரியாது. அவர் ஏன் அநாவசியமாக
என் பெயரை இதில் நுழைத்தார் என்று கோபப்பட, நம் CMC ஆஸ்பத்திரி நண்பர்கள் சகோ.ஆனந்தஸ்ரா அவர்களை தொடர்புகொண்டு விசாரிக்க அற்புதம் நடந்தது உண்மை. வெல்லூரில் மட்டுமல்ல மற்ற அநேக இடங்களில் 9 பேர்களை உயிரோடு எழுப்பியுள்ளேன் என்றாராம். தயவுசெய்து உயிரோடு எழுந்தவர்களின் விலாசம் கொடுங்கள் என்று கேட்டபோதுதான் மேலே குறிப்பிட்ட அத்தனை ஊழியர்களும் இதுவரை
விலாசம் கொடுக்கவில்லை. இப்படிப்பட்ட சாட்சிகளுக்கு
பொய்சாட்சி என்றும் மக்களை இவர்கள் ஏமாற்றினார்கள் என்றும் ஏன் கூறக்கூடாது? இவர்களால் தேவ நாமம் புற ஜாதி மக்களிடத்தில் தூஷிக்கப்படுகிறதே!.
|
|
என் வெளிநாட்டு நாட்டு ஊழியங்கள்: (இத்தாலி-பிரான்ஸ்-ஜெர்மனி) |
அரேபியா நாட்டு ஊழியம் - குவைத் |
|
FMPB மிஷனரி சபைகள் CNI வசம் தாரை வார்த்தல் |
இந்தியாவில் தெற்கு குஜராத் மாநிலத்தில் வாழும் ஆதிவாசிகள் மத்தியில்
FMPB மிஷனரிகள் பல வருடங்கள் அரும்பாடுபட்டு தங்கள் வசதிகளை இழந்து குறைந்த வருமானத்தில் காடுகாடாய், கிராமகிராமங்களாய் சுற்றி திரிந்து சுவிசேஷம் அறிவித்ததால் இன்று ஆயிரக்கணக்கான மக்கள் இயேசுவே தெய்வம் என்று தங்கள் விக்கிரக ஆராதனையைவிட்டு
ஞானஸ்நானம் பெற்றார்கள். கிறிஸ்தவ சபை விசுவாசிகளாக மாறினார்கள். அவர்கள் ஆரம்பத்தில் மரத்தடியில் அல்லது திறந்தவெளியில் விசுவாசிகளாக கூடி ஆராதித்த இடங்களை நான் அறிவேன்.
நம் FMPB மிஷனரிகளின் அயராத முயற்சியால் இப்போது பல இடங்களில் சபை கட்டிடங்களை கட்டி ஆலயமாக்கி ஆராதனை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அந்த ஆதிவாசிகளிலேயே விசுவாசத்தில் தேறினவர்களையே (ஸ்வார்த்திக்) மேய்ப்பனாக்கி (பாஸ்டராக்கி) சபை ஆராதனைகளை மிகச் சிறப்பாக நடத்தினார்கள்.
இந்தியாவிலேயே மிக அதிகமான ஆத்தும அறுவடைக்கு சிறப்பு பெயர் பெற்றது.
குஜராத் மாநில காடுகளாகும். அதனால் அந்த மாநிலத்தை சுவிசேஷத்துக்கு
இந்தியாவின் திறந்த வாசல் என்றார்கள். இப்படி பாடுபட்டு சம்பாதித்த ஆயிரக்கணக்கான சபைகளில் முதல் பகுதி சபைகளை ஏற்கனவே (CNI
- Church of North India) சபைக்கு ஒப்படைத்தார்கள். அப்போதே FMPB ஜெபக்குழு விசுவாசிகளிடையே
CNIக்கு ஒப்படைப்பதில் பெரும்பாலோனேர்கள் ஆதரவளிக்கவில்லை. ஆனால் FMPB மிஷனரி ஸ்தாபனம் சபை ஒப்படைப்பதை ஒரு கொள்கையாக அறிவித்தபின் சற்றே அமைதியானார்கள். இப்போது ஏற்பட்டுள்ள
தெற்கு குஜராத் FMPB மிஷனரி சபைகளின் இணைப்புக்கு என்ன? விதமாக எதிரொலி எழும்பபோகிறதோ? அந்த ஆதிவாசி சபைகளை விசுவாசிகளை கர்த்தர் காப்பாராக என்று ஜெபிப்போம்.
|
|
ஜாமக்காரன் வாசகர்களுக்கு ஓர் அறிவிப்பு |
|
ஜாமக்காரன் வாசகர்களுக்கு ஓர் அறிவிப்பு: |
E-Mo அனுப்புகிறவர்களுக்கு உடனடியாக ரசீது அனுப்பி வைக்கப்படுகிறது. ஆன்-லைனில் காணிக்கை அனுப்புகிறவர்களுக்கு பதில் அனுப்ப கஷ்டமாக இருக்கிறது. அனுப்பியவரின் பெயர், பேங்க் பாஸ் புக்கில் காணப்படாததால் யார் அதை அனுப்பினார்கள். எதற்காக அனுப்பினார்கள் என்பதை அறிந்துக்கொள்ள முடிவதில்லை. ஆகவே தயவுசெய்து காணிக்கை அனுப்பியவர்கள் உங்கள் முழு விலாசத்துடன் காணிக்கை எந்த பேங்க் மூலமாக அனுப்பினீர்கள் என்றும், தொகை எவ்வளவு என்பதையும், எந்த மாதத்தில் எந்த தேதியில் அனுப்பினீர்கள் என்பதையும், கடிதம்மூலம் அல்லது இ-மெயில் மூலம் அறிவித்தால் எங்களுக்கு கணக்கு வைக்க மிகவும் உதவியாக இருக்கும்.
புதிய வாசகர்கள் சிலர் நாங்கள் E-Moவில் பணம் அனுப்பியும் எங்களுக்கு ஜாமக்காரன் அனுப்பவில்லை என்று அறிவிக்கிறார்கள். நீங்கள் அனுப்பும்
E-Moவில் புதிய ஜாமக்காரன் வாசகராக இதை அனுப்புகிறோம் என்பதை நீங்கள் குறிப்பிடமுடியாது. ஆகவே ஜாமக்காரன் எங்களுக்கு தேவை என்று உங்கள் முழுவிலாசத்தை குறிப்பிட்டு எங்களுக்கு கடிதம் எழுதினால்போதும் உடனே ஜாமக்காரன் அனுப்பி வைக்கப்படும். ஜாமக்காரனுக்கு மாத சந்தா எதுவும் கிடையாது. ஜாமக்காரன் ஒரு மாதம் தமிழிலும், மறுமாதம் மலையாள பாஷையிலும் அனுப்பப்படுகிறது. இந்த விவரங்களை மற்றவர்களுக்கும் அறிவியுங்கள். நன்றி.
|
|
பட்டிமன்ற புகழ் சாலமன் பாப்பையா - சரியான கிறிஸ்தவரல்ல: |
சாலமன் பாப்பையா அவர்கள் ஒரு கிறிஸ்தவர், மோகன் சி.லாசரஸ் அவர்களால் பயன்படுத்தப்பட்டவர் என்பதை நாம் அறிவோம்.
சாலமன் பாப்பையா கூறியது: நான் ஒரு கிறிஸ்தவனாக இருக்கிறதாலமட்டும் நான் மோட்சத்துக்கு போகமுடியும்னு சொன்னா? தேவாரம், திருவாசகம், பிரபந்தம் பாடிய
இந்துமத பெரிய மனிதர்கள் எல்லாம் போகமுடியாத (அந்த கிறிஸ்தவ வேதம் போதிக்கும்) அந்த மோட்சத்துக்கு நான் மட்டும்போய் என்ன செய்ய போகிறேன்?.
அப்படிப்பட்ட கிறிஸ்தவ மோட்சம் எனக்கு தேவையா? இந்த கேள்விதான் என் அறியாமையை
மூட மத நம்பிக்கையையும் அடிச்சு நொறுக்கிடுச்சு. - 20.6.2011
|
|
உலகில் அதிக ஏழைகள் வாழும் நாடு இந்தியா! |
உலகில் அதிக ஏழைகள் வாழும் நாடு இந்தியா என்று உலக வங்கியின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. உலக நாடுகளிலுள்ள ஏழைகளைப்பற்றிய அறிக்கை ஒன்றை உலக வங்கி வெளியிட்டுள்ளது. உலக நாடுகளில் மொத்தம் 1.2 பில்லியன் ஏழைகள் வாழ்வதாகவும், அவர்களில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் இந்தியாவில் உள்ளனர் என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது. 2030ம் ஆண்டுக்குள் உலக நாடுகளில் ஏழ்மையை ஒழிக்கும் திட்டத்திற்காக உலகவங்கி நடத்திய ஆய்வின்மூலம், உலகில் ஏழ்மை அதிகமாக உள்ள நாடுகள் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியா, ஆசியகண்டம் மற்றும் பசிபிக் பெருங்கடலை சுற்றியுள்ள ஆசியநாடுகளில் பலர் நாளொன்றுக்கு ரூ.65க்கும் குறைந்த வருமானத்தில் வாழ்ந்துவருவதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
|
|
சுபமுகூர்த்த நாள்: ஆந்திராவில் 3 நாளில் 2 லட்சம் திருமணம் |
செய்திதாள் 2013 பிப் 13- திருநெல்வேலி பதிப்பு:  தமிழ்நாட்டில்
ஆடி மாதத்தில் திருமணம் மற்றும் நல்ல காரியங்கள் எதுவும் செய்யமாட்டார்கள். ஆனால் அதற்கு முந்தையை ஆனி மாதத்தில் திருமணங்கள், திறப்புவிழா ஆகியவை அதிகமாக நடக்கும். அதுபோல ஆந்திராவில் தெலுங்கு பஞ்சாங்கப்படி மகாமாசம் முகூர்த்தநாள் 2013 பிப்ரவரி மாதம் 15ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்பிறகு எந்த நல்ல காரியங்களும் செய்யமுடியாது. ஆகவே கடந்த 3 நாட்களில் 2013 பிப்ரவரி 12,13,14 நாட்களில் மட்டும்
3 லட்சம் தம்பதிகளுக்கு திருமணம் நடந்துள்ளது. அடுத்துவரும் மே மாதம் 2வது வாரம்வரை எந்த
திருமணமும், பால்காய்ச்சலும் செய்யக் கூடாது என்ற ஐதீகத்தால் அவசர அவசரமாக 15ம் தேதிக்குள் 3 லட்சம் திருமணம் நடத்தி முடித்துள்ளார்கள்.
|
இயேசுகிறிஸ்துவை காணவில்லை - இயேசுகிறிஸ்து மட்டும் வரமாட்டார்: |
இது விக்கிரகத்தை ஆராதனைக்கும் புறஜாதிகள் இந்த மூடநம்பிக்கையை பரம்பரையாக வைக்கொண்டு வருகிறார்கள். ஆனால் நம் கிறிஸ்தவர்களும்கூட
முகூர்த்த நாள் பார்த்து திருமணம் நடத்துவதைகுறித்து நாம் என்ன சொல்வோம்! முகூர்த்த நாட்களில் நம் ஆலயங்களில் குறிப்பாக
திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய ஊர்களில் உள்ள பிரபல
CSI ஆலயங்களில் முகூர்த்த நாட்களில் காலையிலிருந்து இரவு வரை பெண்ணும், மாப்பிள்ளையும் ஜோடிஜோடியாய் கூட்டங்கூட்டமாய் ஜோடி ஜோடியாய் தம்பதிகள் ஆலயத்தின்முன் தங்கள் குடும்பத்தினரோடு நிற்பதை காணலாமே!. காலையிலிருந்து ஒன்றன்பின் ஒன்றாய் பெண்ணும், மாப்பிளையும் தங்கள் குடும்பத்தோடு ஆலயத்தில் சென்று தாலி கட்டி வெளிவரும் காட்சியை பார்க்கலாமே!. இதைக்குறித்து நானும் கடந்த 47 வருடங்களாக ஒவ்வொரு கன்வென்ஷனிலும் பிரசங்கித்துவிட்டேன். ஆனால் இந்த குறிப்பிட்ட விஷயத்தில் வசனத்துக்கு கீழ்ப்படிவோர் மிக சொற்பம்தான்.
 கடவுள் வேண்டாம் - ஆனால் முகூர்த்தநாள் வேண்டும், வாசகர்களாகிய நீங்கள் முகூர்த்த நாளில் நடத்தும் உங்கள் புதுவீடு, கடை, தொழில் திறப்புவிழா, திருமண வைபவம் ஆகியவற்றிக்கு நானும் வருவேன் (உங்களை நேசிப்பதால்), பிஷப்பும் வருவார், ஆனால் நமது ஆண்டவர் இயேசுகிறிஸ்து மட்டும் வரமாட்டார். தம்பதிகள் கர்த்தரால் ஆசீர்வதிக்கபடமாட்டார்கள்!. இப்படிப்பட்ட முகூர்த்த வைபவங்களில் பலரை கண்டேன். ஆனால் இயேசுகிறிஸ்துவைமட்டும் காணவில்லை. வேதம் கர்த்தரை நம்பி நன்மையை செய் என்று கூறுகிறது. நாளை, மாதத்தை, முகூர்த்தநாளை நம்பி அல்ல என்பதை அறியவேண்டும்.
 யோசியுங்கள். உங்கள் செய்கைகளுக்குகேற்ற பலனை நீங்கள் அனுபவிப்பீர்கள். முகூர்த்த நாள் பார்க்கும் கிறிஸ்தவர்கள் மனம்மாற ஜெபிப்போம்.
 நல்லநாள் - நல்லநேரம் பார்க்காத முதல்வர்: இது தமிழ்நாட்டில் நடந்தது அல்ல.
கர்நாடகாவில் ஏப்ரல் மாதம் நடந்த எலக்ஷனில் முதல்வராக தெரிந்தெடுக்கப்பட்ட
திரு.சித்தராமையா அவர்கள் பெங்களுரில் நடந்த பதவி ஏற்பு விழாவை சரியான
ராகுகாலத்தில் விழா தொடங்கி எமகண்டத்தில் முதல்வர் பதவி ஏற்றார் என்ற செய்தி, நாள் பார்க்கும் கிறிஸ்தவர்களுக்கு நல்ல முன்மாதிரியாகும். முகூர்த்தம் இல்லாத நாளில் எமகண்டத்தில் முதல்வர் பதவி ஏற்ற கர்நாடகா முதல்வரை பாராட்டுகிறோம்.
 உபா 18:10,12
நாள் பார்க்கிறவன்.... உங்களுக்குள்ளே இருக்கவேண்டாம்.. இப்படிப்பட்டவைகளை செய்பவன் எவனும்
கர்த்தருக்கு அருவருப்பானவன்.
 உபா 18:9.
புறஜாதிகள் (புற மதத்தினர்) செய்யும் அருவருப்புகளின்படி செய்ய நீங்கள் யாரும் கற்றுக்கொள்ளவேண்டாம்.
|
|
|
 |
|
|
|