 இம்மாத ஜாமக்காரனில் இலங்கை தமிழர்களின் யுத்தம் முடிந்து 4 வருடங்களுக்குபின் தற்போதைய நிலை என்ன? இந்திய அரசாங்கம் அவர்களுக்காக என்ன செய்யவேண்டும்? கடந்த காலங்களில் இலங்கையில் நடந்த இனகலவரம், நடந்துமுடிந்த உள்நாட்டுபோர், போரின் விளைவு, இப்போது இலங்கையில் வாழும் உயிரோடு இருக்கும் மீதியுள்ளவர்களின் நிலை என்ன? அவர்களின் எதிர்ப்பார்ப்பு என்ன? இலங்கை அரசாங்கம் என்ன செய்யவேண்டும்? என்ற விவரங்களை எழுதியுள்ளேன்.
இந்திய தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் இந்திய தமிழ் மக்களின் ஓட்டுகளைபெறும் நோக்கத்தோடு இலங்கை தமிழர்கள் பெயரில் நடத்தும் போராட்டங்களை இந்திய அரசாங்கம் மனதில்கொள்ளாமல், மனிதநேயத்தோடு இலங்கை தமிழர்களும் நம் இனத்தவர்தான், அவர்கள் யாவரும் நம் ரத்தத்தின் ரத்தமாகும் என்ற
மனித நேயத்தோடு இந்திய அரசாங்கம் இந்த விஷயத்தில் தலையிடவேண்டும். இலங்கை தமிழர்களுக்கு
தனி ஈழம் அல்ல - தனி நாடல்ல, இலங்கை தமிழர்கள் வாழும் பாகங்களுக்கு
தனி தமிழ் மாநில சுயஆட்சி பெற்றுத்தர முயலவேண்டும் என்ற உள்ளான பாரத்தோடு இக்கட்டுரை எழுதினேன். இதில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை.
 ஜாமக்காரன்
வாசகர்கள் இந்தியாவில், இலங்கை கொழும்புவில், புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்கள் உலக நாடுகளில் எங்கும் ஆயிரக்கணக்கில் உண்டு. லட்சகணக்கில் என் ஜாமக்காரனை வாசிக்கிறார்கள். நாம் அனைவரும் இலங்கையில் நடந்த இனபடுகொலைகளுக்காக கண்ணீர்விட்டு பல வருடங்கள் தொடர்ந்து ஜெபித்துள்ளோம். நடந்துமுடிந்துவிட்டது ஒரு பெரும்
சோகம்தான். இதில் தவறுகள் மிக அதிகம் செய்தது இலங்கை அரசாங்கமா? விடுதலைப்புலிகளா? என்பதைக்குறித்து விவாதிப்பதோ! நியாயம் தீர்ப்பதோ! நியாயப்படுத்துவதோ என் நோக்கமல்ல!, அது
நடந்து முடிந்துப்போன விஷயம் ஆகும். ஆள்பவர்கள் செய்த பெரும் கொடுமைக்கு தண்டனை வாங்கி கொடுக்கவேண்டும் என்று நான் எழுதுவதால் எந்த பிரயோஜமுமில்லை. நான் அரசியல்வாதியல்ல, அப்படி நான் எழுதினாலும் உலக ஐக்கிய நாடுகளில் என் சத்தம் கேட்காது. ஆகவே இப்போதுள்ள இலங்கையில் உள்ள நம் தமிழ் மக்களை நிம்மதியாக வாழவைக்க நம்மால் முடிந்த உதவிகளை செய்யவேண்டும். இலங்கையின் வடக்கு தமிழ் மக்களுக்கு நாம் அனுப்பும் உதவிகள் போய்சேர இலங்கை அரசாங்கம் தடையாக இல்லாமல் இருக்க
இந்திய அரசாங்கம் முயன்றால்மட்டுமே நம் உதவிகள் இலங்கை தமிழருக்கு போய்சேரும். அதற்காக இந்த விஷயத்தில்
இந்திய அரசாங்கத்தை ஆளுபவர்களின் மனமாறவும் இலங்கை உறவில் அரசியல் கொள்கைகள் தமிழருக்கு சாதகமாக மாறவும் நாம் யாவரும் இணைந்து ஜெபிப்போம்.
 இந்தியாவின் மத்திய அரசை இந்த விஷயத்தில் இந்திய
தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணைந்து
மத்திய அரசை நிர்பந்திக்கவேண்டும் என்று ஜெபத்தில் கர்த்தரிடத்தில் நாம் வேண்டுதல் செய்வோம்.
எல்லாவற்றிற்க்கும் ஒரு முடிவு உண்டு என்று கிறிஸ்தவ வேதம் கூறுகிறது. அந்த முடிவு இலங்கை வடக்கு-கிழக்கு தமிழர்களோடு நடந்த இலங்கை அரசின் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்ததின்மூலம் ஏற்பட்டுள்ளது. ஆனால் முழுமை பெறவில்லை.
மாநில சுயஆட்சி அமுலுக்கு வந்தால் மட்டுமே தமிழர்கள் ஆறுதல் அடைவார்கள்.
 இலங்கை தமிழர்களை வாழவைப்போம், இழந்ததை (உயிர்தவிர) மற்றதை அவர்களுக்கு பெற்றுதருவோம். இலங்கையில் உள்ள நமது தமிழ் மக்களுக்கு எல்லா உரிமைகளும் சிங்களர்கள் பெறுவதைப்போல சரிசமமாக கிடைக்க தினமும் ஜெபிப்போம். நமது ஜெபத்தை கண்டிப்பாக நமது ஆண்டவர் கேட்பார், பதில் கொடுப்பார். இலங்கையிலிருந்து மற்ற வெளிநாடுகளுக்கு சென்ற புலம்பெயர்ந்த தமிழ் கிறிஸ்தவ ஜாமக்காரன் வாசக மக்களும் இதற்காக ஜெபிக்கவேண்டியது நமது கடமையாகும்.
|