கேரளா AOG சபை கமிட்டி கூடுகையில் பாதுகாப்புக்கு போலீஸ் வந்தது

CSI, லூத்தரன் சபையைவிட AOG சபையில் பதவி ஆசையும், பதவி போட்டியும் - சண்டையும் பல வருடங்களாக தொடர்ந்து கொண்டேயிருப்பதை நான் எழுதியிருக்கிறேன்.

2013 பிப்ரவரி மாதம் புனாலூரில் கேரள AOG சபை நிர்வாக கூட்டம் நடந்தபோது பாஸ்டர்கள் இடம்மாற்றம் பெற பெரும் போட்டி நடந்தது. அதிக தசமபாகம் வரும் சபைக்கு தாங்கள் பாஸ்டராக பொருப்பெடுக்க கடும்போட்டி AOG சபையில் ஏற்பட்டது. கேரளா AOG சபைகளுக்கு பாஸ்டர்.சாமுவேல் பொதுசெயலாளராக இருக்கிறார். அவருக்கு பிடித்தமானவர்களை பெரிய சபைக்கு பாஸ்டராக நியமிக்கிறார், அவருக்கு பிடிக்காதவரை சாதாரண சபைக்கு மாற்றல் கொடுக்கிறார் என்று கூறி பல பாஸ்டர்கள் பொருமுகிறார்கள்.

இந்தமுறை நிர்வாக கூட்டத்தில் கடும் போட்டி உண்டு. நிச்சயம் அடிதடி உண்டாகலாம் என்று எதிர்பார்த்து பாதுகாப்புக்கு போலீஸ் வரவழைக்கப்பட்டதாக கூறப்பட்டது. உள்ளே நடக்கும் பதவி சண்டைகளை புகைப்படம் எடுக்க கிறிஸ்தவ சிந்தா பத்திரிக்கையின் புகைப்படம் எடுக்கும் நிருபர்களை AOG பாஸ்டர்கள் போலீஸில் பிடித்துகொடுத்து கேஸ் பைல் செய்ததாக கூறப்படுகிறது. பதவி சண்டை போடுவதில் செத்த சபை என்று வர்ணிக்கும் CSI, லூத்தரன் சபைகளுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்க ஒவ்வொருமுறையும் அந்நியபாஷையின் பெலம் AOG சபையில் பெரும் பிரச்சனை உண்டாகும். இந்தமுறை அப்படி ஏதாவது நடக்கலாம் என்று முன்கூட்டியே அறிந்து போலீஸ்ஸை நிறுத்தியிருக்கிறார்கள். இவர்கள் மத்தியிலும் பாஸ்டர் ஜிப்பாவுக்குள்ளே புகுந்த சில ரௌடிகள் உண்டு. அவர்கள் கூட்டம் நடக்கும் இடத்தின் வெளியே பாதுகாப்புக்காக நின்றுக் கொண்டிருப்பதை காணமுடிந்தது என்று ஒரு பத்திரிக்கை நிருபர் கூறினார்.

இவர்களின் ஒழுங்கு என்னவென்றால் கூட்டம் ஆரம்பிக்கும்முன் ஜெபித்து கொஞ்சநேரம் அந்நியபாஷை பேசி வல்லமைபெற்று பிறகு சண்டையை ஆரம்பிப்பார்கள். ஒரு பாஸ்டர் சொல்கிறார். இந்த பதவி சண்டை IPC சபையில் மிக அதிகம். AOG பாஸ்டர் இடமாற்றத்துக்கு அல்லது பதவிக்கு பெரும் தொகை லஞ்சமாக கொடுத்து பதவி பெருகிறார்கள் என்று கூறப்படுகிறது. அதைவிட பெரும்தொகைகளை IPC பாஸ்டர்கள் பணத்தை தங்கள் கையில் வைத்துக் கொண்டு தங்களுக்கு நிர்வாக கமிட்டியில் உயர்ந்த பதவி வேண்டும் என்று பண விளையாட்டு நடத்துவார்கள். அத்தனையம் மக்களின் தசமபாகமாக செலுத்திய காணிக்கையாகும். ஏறக்குறைய அவர்களைவிட மோசமாக AOG சபையில் இம்முறை பதவி இடமாற்றம் நிர்வாக கமிட்டி கூட்டத்தில் நடக்கும் போல் இருக்கிறது என்று புனாலூர் நிர்வாக கூட்டத்துக்கு வந்த ஒரு பாஸ்டர் மனவேதனையுடன் கூறியதாக கூறப்படுகிறது.

(படத்தில் AOG நிர்வாக கூட்டம் நடக்கும் புனாலூர் மண்டபத்தில் பாதுகாப்பு அரணாக நிற்கும் பாஸ்டர்கள்)


தமிழ்நாடு AOG பாஸ்டர்கள் P.S.ராஜாமணி,
J.J.Y.அருள் பற்றிய பழைய வால்போஸ்ட்

AOG யில் இந்த பதவி போட்டியும் சண்டையும் இப்போதுதான் புதிதாக தோன்றியதல்ல. காலாகாலமாக இருக்கிறது.

தமிழ்நாட்டு AOG சபை சண்டையின் உச்சக்கட்டநிலை வால்போஸ்ட் சண்டையாக பழைய வால்போஸ்;டிங் படங்கள் என்னிடம் உள்ள பழைய AOG Fileலில் அன்றைக்கு சேமித்த பேப்பர் கட்டிங்கில் தேடியபோது கிடைத்தது. அதைத்தான் நீங்கள் இடது பக்கத்தில் காண்கிறீர்கள். பொறாமை உள்ளவர்களும், போட்டியில் தோற்றவர்களும், சில உதவி பாஸ்டர்களை பல வருடங்களாக முன்னுக்கு கொண்டுவராததால் தன் பிற்கால நிலையை குறித்து பயந்த அவர்கள் AOG தலைமையிடம் பேசி ஒரு நன்மையும் பெற முடியவில்லை என்று வெளி உலகில் அவி சுவாசிகள் அறிய அரசியல்வாதிகளைப் போல் மற்ற CSI, லூத்தரன் சபை அவிசுவாசிகள் வெளியிடுவதைப்போல வால்போஸ்ட், துண்டுபிரதி, மொட்டை கடிதங்கள் போன்ற முறைகளை AOG சபையினரும் பின்பற்றினார்.

அபிஷேகம் பெற்றேன், அந்நியபாஷை பேசுகிறேன். தரிசனம் பார்க்கிறேன், தீர்க்கதரிசன வரமும் எங்களுக்கு உண்டு என்று கூறுபவர்கள். அந்நியபாஷை பேசிக் கொண்டே வீதிகளில் ஒட்டிய வால்போஸ்டைத்தான் இங்கு நீங்கள் காண்கிறீர்கள். வாசகர்கள் AOG சபை பாஸ்டர்களுக்காக ஜெபியுங்கள். அவர்கள் தங்கள் பதவி சண்டையை நிறுத்தி அந்நியபாஷை ஏதும் பேசாமல் கர்த்தர் தனக்கு எந்த சபைக்கு மேய்ப்பனாக ஊழியம் செய்ய வாய்ப்பளிக்கிறாரோ அந்த இடம் செல்லும் மனபக்குவம் பாஸ்டர்களுக்கு உண்டாக ஜெபிப்போம். உதவிபாஸ்டர்கள் பழிவாங்கப்பட்டாலும் இடமாற்றம் வேதசித்தம் என்று ஏற்றுக் கொண்டு ஊழியம் செய்வார்களாக. அப்படி பழிவாங்கப்பட்ட பாஸ்டர்கள் ஆத்தும ஆதாயம் செய்பவர்களாக, ஒவ்வொரு வாரமும் புதுபுது ஆத்துமாக்களை சபையில் சேர்க்கும் மனபாரம் அவர்களுக்கு உண்டாக ஜெபிப்போம். AOG ஒரு நல்ல சபையாகும். ஆனால் பல வருடமாக பாஸ்டர்மார்களுக்குள் சமாதானம் இல்லை. இவர்கள் எப்படி சபை மக்களை இயேசுகிறிஸ்துவின் வருகைக்கு ஆயத்தப்படுத்துவார்கள். ஜெபிப்போம்.


Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM