|
|
|
இந்தியாவின் 67வது சுதந்திர தினம் |
|
வாழ்த்துகிறோம்! வரவேற்கிறோம்!! |
மதுரை & ராமநாதபுரம் CSI திருமண்டத்திற்கு புதிய பிஷப்பாக
Rev.Dr.M.JOSEPH, MA.,BL.,B.D.,MTh.,Ph.D., அவர்கள் தெரிந்தெடுக்கப்பட்டார். திருமண்டல ஆயர், சபைமக்கள் யாவரும் பிரச்சனைகள், போராட்டங்கள், வெறுப்பு, ஜாதி பாகுபாடு இவைகளை மறந்து மதுரை
& ராமநாதபுரம் திருமண்டல சபைகளை ஆவிக்குரிய சபைகளாக வசனத்தில் வளர்க்கவும், நவீன உபதேசங்களும், பரவச உபதேசங்களும் சபைகளுக்குள்ளே புகுந்துவிடாதபடி பாதுகாக்க புதிய பிஷப் அவர்களின் கையை பெலப்படுத்துவார்களாக. புதிய பிஷப்
Rev.Dr.M.JOSEPH, MA.,BL.,B.D.,MTh.,Ph.D., அவர்களை ஜாமக்காரன் வாசகர்கள் சார்பிலும், என் சார்பிலும் வாழ்த்துக்கள் கூறுகிறோம். ஜெபிக்கிறோம்.
- ஜாமக்காரன்
|
|
ஜாமக்காரனை ஆங்கிலத்தில் வெளியிடும்படி ஏராளமான கடிதங்கள் பல வருடங்களாக வந்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக வெளிநாட்டில் வாழும் இந்திய-இலங்கை பிள்ளைகளுக்கும், மற்ற சிலருக்கும் தமிழ் அல்லது மலையாளம் எழுத, படிக்க தெரியாது. ஆகவே அவர்களுக்காக ஜாமக்காரனை ஆங்கிலத்தில் வெளியிடவேண்டியது அவசியமாகிறது. ஜாமக்காரனில் வரும் சில முக்கிய செய்திகளையாவது
ஆங்கிலத்தில் வெளியிடுவது மிக முக்கியமாகிறது. இதற்கு தமிழிலிருந்து ஜாமக்காரன் செய்திகளை
ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க, என்னை புரிந்துக்கொண்டவர்கள் யாராவது முன்வந்தால் மிகவும் உதவியாக இருக்கும். குறைந்தது 28 பக்கம் மட்டும் இரண்டு மாதத்துக்கு ஒருமுறை மட்டும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உதவி செய்ய முன்வருபவர்கள் எனக்கு உங்கள் தொலைபேசி எண்ணோடு முழு விலாசத்தையும் குறிப்பிட்டு எனக்கு எழுதுங்கள். இதை ஒரு ஊழியமாக கருதி ஜெபத்துடன் தொடர்ந்து இப்பணி செய்ய முன்வருபவர்கள் எனக்கு எழுதுங்கள்.
|
|
ஜாமக்காரன் பத்திரிக்கை தேவையானவர்கள் உங்கள் முழுவிலாசத்தையும் தொலைபேசி எண்ணையும் கடிதம் மூலமாகவோ, இ-மெயில் மூலமாகவோ தெரிவிக்கலாம். தபால்துறையின் சட்டத்தின்படி ஜாமக்காரன் பத்திரிக்கைக்கு சந்தா என்று ஒரு தொகையை கடைசி பக்க அட்டையில் மேலே குறிப்பிட்டுள்ளது. மற்றபடி 1969ம் வருடத்திலிருந்து
சந்தா குறிப்பிடாமல், சந்தா அனுப்புங்கள் என்று கேட்காமலேயே வெற்றியுடன் நடத்தப்படுவதுதான் ஜாமக்காரன் மற்ற பத்திரிக்கையிலிருந்து வேறுபடும் விஷேச சிறப்பாகும்.
ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி ஜாமக்காரன் தபாலில் சேர்க்கப்படுகிறது. ஒரு மாதம் தமிழிலும், மறுமாதம் மலையாளத்திலும் வெளியிடுகிறோம். 15ம் தேதியிலிருந்து 25ம் தேதிக்குள் ஜாமக்காரன் உங்களுக்கு வந்து சேரவில்லையானால் தபால் அல்லது தொலைபேசி மூலமாக உங்கள் முழுவிலாசமும் தொலைப்பேசி எண்ணையும் சேர்த்து எழுதி தெரிவித்தால் உடனே மறுபடியும் ஜாமக்காரன் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
|
சில குறிப்பிட்ட இடங்களில் ஜாமக்காரன் பத்திரிக்கை வீடுகளுக்கு சேராமல் தடுக்கப்படுகிறது. அப்படிப்பட்டவர்களுக்கு நாங்கள் ஜாமக்காரனை
Speed Post-ல் அனுப்புகிறோம். உங்களில் யாருக்காவது ஜாமக்காரன் வந்து சேருவதில்
தொடர்ந்து தடையிருக்கிறது என்று நீங்கள் அறிவித்த
Speed Post-ல் ஜாமக்காரனை அனுப்புவோம்.
|
|
அரேபிய நாடுகளில் என் ஊழியம் |
(UAE) ஷார்ஜா CSI மத்திய கேரளா திருமண்டல
மலையாள சபைகளின் கன்வென்ஷன்
2013 செப்டம்பர் 22 முதல் 27 வெள்ளிவரை |
பெஹரின் தமிழ் கிறிஸ்தவ ஐக்கிய சபை (BTCC)
2013 அக்டோபர் 3 முதல் 6 வரை BTCC சபை ஆலயம்.
(பிரசங்கம் தமிழில்) |
KUWAIT (St.Peter's CSI Malayala Congregation)
பிரசங்கம் - மலையாளத்தில் |
|
திருவிருந்தில் கைக்கொள்ள தடை செய்யக்கூடாது? ஏன்? |
சபையில் சிலர் பாவம் செய்தவர்கள், குடிகாரர்கள் என்று அறிந்தாலும் திருவிருந்தின் நேரத்தில் அவர்களும் திருவிருந்து கைக்கொள்ள முன்வந்தால் அவர்களை தடை செய்ய வேதத்தில் அனுமதியில்லை. தடை செய்யக்கூடாது? ஏன்?. காரணம் திருவிருந்து ஆராதனையின் சமயத்தில் வேத வசன எச்சரிப்பு கொடுக்கப்படவேண்டும்.
1.அவனவன் தன்னைத்தான் சோதித்து இதிலே பானம் பண்ணக்கடவன், 2.அபாத்தரமாய் இதை கைக்கொள்கிறவனுக்கு இரண்டு எச்சரிப்புகளும் மரண முடிவும் வேதத்தில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 1 கொரி 11:28,30. திருவிருந்தில் தகுதியில்லாமல் கைக்கொள்பவர்களுக்கு கொடுக்கப்பட்ட எச்சரிப்பு என்ன என்பதை கவனியுங்கள்.
1.பலவீனம், 2.வியாதி. இவைகள் இரண்டும் முதல் எச்சரிப்பாகும். இதையும் மீறி பாவம் செய்துக்கொண்டே மனம்திரும்பின தகுதியில்லாமல் திருவிருந்தை கைக்கொண்டால் முடிவு மரணம் என்று வேதம் பயங்கரமான மூன்றாவது எச்சரிப்பையும் எழுதி கொடுத்திருக்கிறது.
திருவிருந்து ஒருவனை கொல்லும் என்றால் அது எத்தனை பயங்கரம் என்பதை அறியவேண்டும். இந்த குறிப்பிட்ட வேத வசனத்தை ஒவ்வொரு திருவிருந்திலும் வாசிக்கப்பட வேண்டும். இந்த எச்சரிப்பை உதாசீனம் செய்து ஒருவன்
திருவிருந்து பந்தியில் சேர துணிந்துவந்தால் அவனை தடுக்கக்கூடாது. காரணம் எச்சரிப்பு கொடுத்தாகிவிட்டது. அதன் விளைவை அவன் அனுபவிப்பான். அதனால்தான்
பிரதரன் சபையில் ஆராதனைக்கு முன்பாகவே அவர்கள் சபை விசுவாசிகள்மட்டும்
திருவிருந்தில் பங்குகொள்ள முதல் ஆராதனைப்போல திருவிருந்து நடத்திவிட்டுதான் பொதுவான ஆராதனையை நடத்துவார்கள். இப்படி அவர்கள் ஆராதனையை இரண்டு பகுதியாக நடத்துகிறார்கள். ஒன்று திருவிருந்து ஆராதனை விசுவாசிகளுக்கு மட்டும். இரண்டாவது பொது ஆராதனை சபை விசுவசரிகளுக்கும் அன்று வந்த மற்ற எல்லாருக்கும் வேண்டி நடத்துகிறார்கள் இது நல்ல ஏற்பாடு ஆகும்.
|
|
ஆலோசனை - ஜெபத்துக்கு தொடர்புக்கொள்பவர்கள் கவனிக்கவும்: |
ஒவ்வொரு மாதத்திலும் வாரத்தில் செவ்வாய்கிழமை முதல் புதன் மதியம் வரை மட்டுமே நான் வீட்டில் சேலத்தில் இருப்பேன். ஆலோசனை - ஜெபத்துக்கு நேரில் சேலம் (தமிழ்நாட்டுக்கு) வர விரும்புகிறவர்கள் முன்பதாகவே தேதிகளை கடிதத்தில் குறிப்பிட்டு எழுதி கேட்டு அல்லது போனில் தொடர்புகொண்டு உறுதிப்படுத்திக்கொண்டு வரவும். தொலைப்பேசியில் ஆலோசனை பெறுகிறவர்கள் வேதவசன சந்தேகம் கேட்கிறவர்கள், ஜெப குறிப்புகளை பகிர்ந்துக்கொள்கிறவர்கள் காலை 8 மணியிலிருந்து இரவு 11 மணிவரை தொடர்புக்கொள்ளலாம்.
தினசரி மதியம் 2 மணியிலிருந்து மாலை 5 மணிவரை போனில் தொடர்புக்கொள்ள முயல வேண்டாம். குறிப்பிட்ட அந்த நேரம் நேரில் வருபவர்களுக்காக ஜெபிக்கும் நேரமாகும். மேலும் அது நாங்கள்
ஓய்வு எடுக்கும் நேரமுமாகும். அந்த 3 மணி நேரம் தொலைபேசி ஆப் செய்து வைத்துவிடுவோம் என்பதை நீங்கள் அறிய விரும்புகிறேன்.
|
|
Rev.Prof.S.பன்னீர்செல்வம் அவர்கள்
கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்: |
IBT (India Bible Translators) இயக்கத்தின் நிறுவனரும், இயக்குனருமான
Rev.Prof.S.பன்னீர்செல்வம் அவர்கள் கடந்த 2-6-2013 ஞாயிறு காலை 9.30. மணிக்கு நித்திய இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்தார்கள்.
அவரது குடும்பத்தினருடைய ஆறுதலுக்காகவும்,
IBT பணிகள் மற்றும் 200 மொழியில் வேதாகமம் மொழிப்பெயர்க்கப்படவேண்டும் என்ற அவரது தரிசனம் தொடர்ந்து நிறைவேற ஜாமக்காரன் வாசகர்கள் அனைவரும் ஜெபியுங்கள்.
சகோ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு நல்ல எழுத்து தாலந்து உண்டு. அவர் எழுதிய நல்ல ஆழமான செய்திகளை அவ்வப்போது அவர் பத்திரியிலிருந்து எடுத்து ஜாமக்காரனில் வெளியிட்டுள்ளேன். பலருக்கு அது மிகவும் பிரயோஜனமாக அமைந்தது.
சகோ.பன்னீர்செல்வம் அவர்கள் தன்னுடைய கல்லூரி பேராசிரியராக வேலை செய்து அதை ராஜினாமா செய்து முழுநேர ஊழியனாக மாறி வேதாகம மொழிபெயர்ப்பு ஊழியத்தை தொடங்கினார்.
இதுவரை இவர் IBT ஸ்தாபனம் மூலமாக புதியஏற்பாடு எட்டு மொழிகளில் மொழி பெயர்த்துள்ளார். 1).படுமா, 2).சௌராஷட்ரா (தமிழ்நாடு), 3).போஜ்புரி (உ.பி) 4).சத்தீஸ்கர் (சத்தீஸ்காட்) 5).தெசியா 6).மிர்கான் 7).கொலகாண்டியா 8).போடோ போர்ஜா (ஒடிசா).
நான்கு சுவிசேஷங்களைமட்டும் 17 மொழிகளில் மொழி பெயர்ப்பட்டுள்ளது.
1.தோடா, 2.பணியா, 3.கோத்தா, 4.இருளா (தமிழ்நாடு), 5.எரவா,
6.கொடவாதக், 7.வாக்ரி, 8.ஜெனுகுரும்பா (கர்நாடகா), 9. சாம்பல்பூரி,
10.முண்டாரி, 11கடபா, 12.கோண்டோபோர்ஜா, 13.சௌரா (ஒடிசா),
14.பண்டேல் காண்டி, 15.பாகேலி (ம.பி) 16.குடுக் (சத்தீஸ்காட்), 17.மார்வாடி (இராஸ்தான்)
மேலும் படுகா மொழியில் சங்கீத புத்தகம், சௌராஷ்ட்ரா மொழியில்
நீதிமொழிகள் ஆகியவை மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.
இப்போது 1). குருளா (வெள்ளியங்காடு - தமிழ்நாடு), 2). லம்பாணி, 3). சித்தி,
4).போவி (கர்நாடகம்), 5).ஹடோத்தி, 6). துந்தானி, 7).வாக்ரி,
8).டிஸ்கல், 9).மேவாரி (ராஸ்தான்) 10). சௌரா,
11).கோளா (ஒடிசா), 12).ஹல்பி (ம.பி) ஆகிய மொழிகளில் சுவிசேஷ புத்தகங்கள் மொழிபெயர்க்கப்பட்டு விநியோகிக்கப்பட தயார் நிலையில் உள்ளது.
சகோதரன் விட்டுப்போன இந்த மகத்தான் மொழிபெயர்ப்பு ஊழியம் சகோதரன்.பன்னீர்செல்வம் அவர்களின் மனைவி திருமதி.சுதந்திரதேவி அவர்கள் பொறுப்பின்கீழ் மொழிபெயர்ப்பு ஊழியம் மிஷனரி ஊழியம் யாவும் தொடரும். ஊழியம் தடைப்படாமல் இருக்க நாம் தொடர்ந்து ஜெபிப்போம் தாங்குவோம்.
பத்திரிக்கை உலகில் அவரது மரணம் பெரிய இழப்பு ஆகும். அவரின் சாட்சியுள்ள வாழ்க்கைக்காக, அற்புதமான வேத புத்தக மொழிப்பெயர்ப்பு பணிக்காக நான் தேவனைத் துதிக்கிறேன். அவர் மொழிபெயர்ப்பு பணி இனியும் அவர் ஸ்தாபனம் மூலம் தொடர்ந்து நடைபெற வாசகர்கள் ஜெபியுங்கள்.
(சகோ.Prof.பன்னீர்செல்வம் அவர்கள் தன் பத்திரிக்கையில் எழுதிய அருமையான இராஜாவின் வேலையை துரிதமாய் செய்யவேண்டும் என்ற கட்டுரையை வாசகர்கள் வாசித்து பயனடைய இங்கு இந்த சூழ்நிலையில் வெளியிடுவது பொருத்தமானதாக இருக்கும் என்று நம்புகிறோம். -
இந்த இதழில் சகோ.பன்னீர்செல்வம் அவர்கள் எழுதி கட்டுரை படியுங்கள். - ஜாமக்காரன்)
|
|
கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்: |
சகோ.M.A.நெல்சன் அவர்கள் தன் 83ம் வயதில் 2013 ஏப்ரல் மாதம் 17ம் தேதி தன் ஓட்டத்தை முடித்தார். என் நீண்ட நாளைய ஆவிக்குரிய நண்பரும், நீண்டகால என் ஜாமக்காரன் குடும்பத்தில் ஒருவரும், நான் மிகவும் மதிக்கக்கூடிய ஆவிக்குரிய சகோதரர் மரித்தது கிறிஸ்தவ உலகிற்கு ஒரு இழப்பு. இவர்
CSI சபையின்மேல் வைத்திருக்கும் மரியாதை சபையைக்குறித்த வைராக்கியம் மிகவும் போற்றத்தக்கது. திருநெல்வேலி திருமண்டல பழையகால சரித்திரங்களை தெளிவாக அறிந்தவர்.
இவர் தகப்பனாரும் சிறந்த பக்தர், திருநெல்வேலி திருமண்டலத்தில் ஆசிரியராகவும், உபதேசியாராகவும், இடையர்காடு, முள்ளன்விளை, வைகுந்தபுரம், நடுவைக்குறிச்சி, சுப்ரமணியபுரம், சாயர்புரம் ஆகிய ஊர்களில் பணி செய்து ஊழியம் நிறைவேற்றியவர்.
இவர் சொந்த ஊர் சாயர்புரம். தனது 15ம் வயதில் அன்றைய திருநெல்வேலி திருமண்டலத்தில் ஆபீஸ்
கிளார்க்காக பணியாற்றி 17ம் வயதில் திருமண்டலத்தில் அக்கவுண்டண்டாக பதவி உயர்வு பெற்றவர். நெல்லை திருமண்டலத்தின் சர்ச்களில் உள்ள பள்ளிகள் ஸ்தாபனங்களின் தணிக்கை செய்து திருமண்டல கணக்குகள் தயார் செய்யும் முக்கிய பணி செய்தவர். அதனால் திருநெல்வேலி திருமண்டலத்தின் நெளிவு-சுளிவுகள் எல்லாம் நன்றாக அறிந்தவர். அந்த காலத்தின் திருமண்டலத்தின் விவரங்களை அவர் பேசத்தொடங்கினால் மணிக்கணக்கில் உட்கார்ந்து கேட்டுகொண்டேயிருக்கலாம். அந்த நாட்களில் திருமண்டலத்தின் ஊழியம் செய்த
ஆயர்கள், பிஷப்மார், உபதேசியார்கள் நான்கனாவிலிருந்து 12 ரூபாய் சம்பளத்தில் எத்தனை உண்மையாக தங்கள் பணிகளை நிறைவேற்றினார்கள் என்பதை கேட்கும்போது அந்த நாட்கள் இப்போது வராதா என்று மனம் ஏங்கும்.
தனது 25வது வயதில் திருமண்டத்தில் வேலையை விட்டு மத்திய அரசாங்க வேலையில் சேர ரயில்வேயில் சர்வீஸ் கமிஷனில் தேர்வில் வெற்றிபெற்று பணியில் சேர்ந்து தனது 58 வயதில்
ஓய்வுபெற்றார்.
என் ஜாமக்காரனை வாசித்து அதில் உள்ள நிறை-குறைகளை பக்கம்பக்கமாக எழுதுவார். இவருடைய கட்டுரைகள் அடிக்கடி
நெல்லை திருமண்டல பத்திரிக்கையான நற்போதகத்தில் அடிக்கடி இடம் பெறும்.
ஆசீர்வாத தட்டைக்குறித்து நான் ஜாமக்காரனில் எழுதியதை ஆதாரித்து அதோடு வேறு சில நான் அறியாத திருநெல்வேலி சரித்திரகால சில விவரங்களையும் எனக்கு எழுதி என்னையும் தெளிய வைத்தவர்.
மனைவி ஓய்வு பெற்ற ஆசிரியை ஆவார்கள். 2 மகள்கள், ஒரு மகன் எல்லாரும் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக சென்னையில் வாழ்கிறார்கள். கர்த்தர் அந்த குடும்பத்துக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் பெலத்தையும் அருளுவாராக.
திரு.M.A.நெல்சன் அவர்கள்
CSI நெல்லை திருமண்டலத்தில் செய்த நல்ல பணிக்காக, திருமண்டல மக்களுக்கு நல்ல முன்மாதிரியாக வாழ்ந்து காட்டியதற்காக, எனக்கு நல்ல ஆலோசகராக இருந்து உதவினதற்காக தேவனை துதிக்கிறேன். என் தனிப்பட்ட என் பத்திரிக்கை ஊழியத்துக்கு பத்திரிக்கை ஆசிரியர் குழுவில் ஒருவரைபோல் திகழ்ந்து அவர் கொடுத்த ஒவ்வொரு நல்ல ஆலோசனைகளுக்காக தேவனுக்கு நன்றி கூறுகிறேன்.
|
|
ஜாமக்காரன் வாசகர்களுக்கு ஓர் அறிவிப்பு |
|
|
|
|
|
|