|
 |
|
ரோமர் நிருபத்தின் சிறப்பு: |
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்,
காரல் பார்த் என்ற சுவிட்சர்லாந்து நாட்டின் போதகர், தன் ரோமர் நிருபத்தின் விளக்கவுரையில்
"ரோமர் நிருபம் ஒரு மைதானம். நாம் ஒரு பந்தைப்போல் அதில் விழுந்துவிடவேண்டும்" என்று எழுதியுள்ளார்.
மார்டின் லூத்தர், ரோமர் நிருபத்திற்கு முன்னுரை எழுதும் போது
"ரோமர் நிருபம் - புதிய ஏற்பாட்டின் முக்கிய புத்தகம். அது கூறுவது சுத்த சுவிசேஷம், அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் அதில் உள்ள வார்த்தைகள் தெரிந்திருக்கவேண்டும், மட்டுமல்ல அதை தினமும் தங்கள் ஆத்துமா ஈடேற பருக வேண்டும். எவ்வளவு நேரம் அதில் செலவிடுகிறோமோ, அவ்வளவு அது விலையேறப் பெற்றதாகவும், புதிதாகவும் நமக்குத் தோன்றும். அது முழு நிருபங்களுக்கும், ஏன் முழு வேதாகமத்திற்கும் வழிகாட்டும் ஒரு கலங்கரை விளக்கு" என கூறுகிறார்.
வேத பண்டிதர்
கால்வின்
"ரோமர் நிருபத்தை ஒருவர் ஒழுங்காகப் புரிந்துக்கொண்டால், முழு வேதத்தையும் புரிந்துக்கொள்ள அது வழி வகுக்கும்" என்றார்.
-நன்றி:விஷ்வவாணி சமர்ப்பண்
|
|
"என்னை கைவிடாதிரும்",
என் பிள்ளைகளுக்கும், இந்த தலைமுறைக்கும் இனிவரும்
தலைமுறைக்கும் வாழ்வு தரும் பரிசுத்த வேத வார்த்தைகளை
நான் கொடுக்கும்வரை என்னை கைவிடாதிரும்.
|
|
சாட்சியாய் ஜீவிக்க முடியுமா? |
ஒரு விசுவாசி கர்த்தர் தனக்கு செய்ததை, சுகப்படுத்தியதை
சாட்சியாக அறிவிக்கமுடியும். ஆனால், சாட்சியாக ஜீவிக்கமுடியுமா? நம் வாழ்க்கையின்மூலமாக கிறிஸ்துவை காட்டமுடிகிறதா? வேதத்தில்
சாட்சி கூறுங்கள் என்பதை வலியுறுத்தாமல் சாட்சியாய்யிருங்கள் என்ற வார்த்தையைத் தான் ஆவியானவர் உபயோகிக்கிறார்.
பவுல் அகரிப்பா ராஜாவின் சங்கிலிகளால் கட்டப்பட்டு குற்றவாளியாய் நீதிமன்றத்தில் நிற்கையில் ராஜாவைப்பார்த்து தைரியமாக கூறியது என்ன தெரியுமா? தன்னைப்பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூறிவிட்டு ராஜாவோடும் சுற்றிலும் நிற்கிற மற்ற பிரதானிகள், பிரதான ஆசாரியன், சொந்த நாட்டுக்காரர் அத்தனைப்பேரையும் நோக்கி சொல்கிறான்.
தன் கைகளில் உள்ள இந்த சங்கிலி கட்டுகளைத்தவிர, என் பேச்சை கேட்ட (இங்குள்ள) யாவரும்
என்னைப்போல ஆகவேண்டும் என்று தைரியமாக கூறினான். இயேசுவைப்போல ஆகவேண்டும் என்று கூறவில்லை. காரணம், கிறிஸ்துவின் அச்சடையாளங்களை தன்னில் தரித்த காரணத்தால் தன்னைப்போல(பவுலைப்போல) மாறவேண்டும் என்று சொன்னவன் பவுல் மட்டுமே.
இயேசுகிறிஸ்துவின் மற்ற
11 சீஷர்களுக்கு இல்லாத சாட்சியின் தைரியம் பவுலுக்கு மட்டுமே இருந்தது.
வாழ்க்கை, செயல், பேச்சு யாவும் சாட்சியுள்ளதாக இருந்தபடியால் அப்படி அவர் தைரியமாக சொல்லமுடிந்தது. இயேசுவும் சீஷர்களோடு பேசும்போது என்னைப்பற்றி சாட்சி கூறுங்கள் என்று சொல்லாமல்
சாட்சியாயிருங்கள் என்றுதான் கூறினார். அப் 1:8. நம் ஒவ்வொருவரின் செயல்கள்மூலம் இயேசுகிறிஸ்துவை நாம் பிரதிபலிக்கமுடியும். அதனால்தான் நாம் யாவரும் பலரால் வாசிக்கப்படும் நிருபங்களாக (கடிதங்களாக கவனிக்கப்படுபவர்களாக) இருக்கிறேமே என்று பவுல் எழுதமுடிந்தது.
சாட்சி கூறுவது எளிது - சாட்சியாய் வாழ்வது கடினம். ஆனால் நம் சாட்சியாக வாழ்வதைத்தான் கர்த்தர் விரும்புகிறார்.
|
|
ஜாமக்காரன் வாசகர்களுக்கு ஓர் அறிவிப்பு: |
விலாசம் மாற்றம் இருந்தாலோ அல்லது பத்திரிக்கை வரவில்லை என்றாலும் உடனே உங்களுடைய முழுவிலாசத்தையும், உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கணினி எண்ணையும்
(COMPUTER NUMBER) குறிப்பிட்டு
CAPITAL LETTERS எழுதுங்கள். ஜாமக்காரன் பத்திரிக்கை அனுப்பி வைக்கப்படும்.
எங்களோடு தொடர்புகொள்ளும்போது உங்களுக்கு எந்த பெயரில் பத்திரிக்கை வருகிறதோ அதே பெயரில் தொடர்புக்கொள்வது நல்லது.
உங்களுக்கு பத்திரிக்கை தேவையில்லை என்றால் ஒரு
கடிதம்மூலம் உடனே எங்களுக்கு தெரியப்படுத்தவும். நீங்கள் வேண்டாம் என்ற பின்பும் உங்களுக்கு பத்திரிக்கை வந்தால் தயவுசெய்து சிரமம் பாராமல் எங்களுக்கே அதை திருப்பி அனுப்பிவிடவும். தயவுசெய்து விலாசத்தை கிழித்து திருப்பி அனுப்பினால் மறுபடியும் உங்கள் பெயருக்கு வர வாய்ப்பு உண்டு. ஆகவே விலாசம் கிழிக்காமல் அனுப்பினால் உடனே பெயர் நீக்கம் செய்யப்படும்.
தயவுசெய்து அநேக விலாசங்கள் எழுதி இவர்களுக்கு பத்திரிக்கை அனுப்ப கேட்க வேண்டாம். பத்திரிக்கை தேவை உள்ளவர்களே எழுதுவது நல்லது.
|
|
CSI TRUST ASSOCIATION கம்பெனி |
CSI TRUST ASSOCIATION என்பது ஒரு கம்பெனி ஆகும் என்று
CHENNAI HIGH COURT தீர்ப்பளித்தது.
CSI TRUST ASSOCIATION என்பது ஒரு கம்பெனியென்றும் அதன் கணக்குகள் யாவும் ஆடிட் செய்தாகவேண்டும் என்றும்
HIGH COURT தீர்ப்பளித்தது.
CSI சபை அங்கத்தினரான சென்னை மைலாப்பூரில் உள்ள
Mr.JOHN S.DURAI என்பவர்
CSI டிரஸ்ட் அசோசியன் கணக்குகளை கம்பெனி ரிஜிஸ்ட்டர்தான் பரிசோதனை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்ட வழக்குக்குதான் இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டது. உடனே
CSI சினாட் பொதுசெயலர்
Mr.PHILIP இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு அப்பீல் செய்யப்படும் என்றும் மேற்கொண்டு இதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்பது தீர்மானிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
கடந்த வருடமே இதை பரிசோதிக்க ரிஜிஸ்ட்டிராருக்கு நீதிமன்றம் கட்டளையிட்டது. உடனே
2011 செப்டம்பர் 12ல் விசாரணை ஆரம்பிப்போம் என்று ரிஜிஸ்டாரார்
CSI ASSOCIATION-னுக்கு அறிவிப்பு கொடுத்தது. உடனே
CSI சினாட் விசாரணைக்கு
STAY வாங்கியது. உடனே
Mr.JOHN S.DURAI அவர்கள் அந்த ஸ்டேயை நீக்க வழக்கு தொடுத்ததால் கோர்ட்டும் அதை தள்ளுபடி செய்து
விசாரணை கண்டிப்பாக நடத்தப்படவேண்டும் என்று கட்டளையிட்டது.
CSI TRUST ASSOCIATION என்பதாக அரசாங்கத்தால் ரிஜிஸ்டர் செய்தது.
1947ம் வருடம்
இந்திய கம்பெனி சட்டப்படி ரிஜிஸ்டர் செய்யப்பட்டது ஆகும் என்று செய்திகள் கூறுகிறது. இந்த தீர்ப்பு
CSI அனைத்துக்கும் இப்போது ஒரு பயத்தை உண்டுப்பண்ணியுள்ளது.
CSI ஆலய சொத்து, காணிக்கை வரவு-செலவு, சபை நிலம் விற்றது ஆகியவை வெளிச்சத்துக்கு வரும். சபை நிலங்கள் எதுவும் விற்க
CSI TRUST-க்கு உரிமையில்லை என்று சட்ட வல்லுனர் பேசிக்கொள்கிறார்கள். ஆகவே சபை நிலத்தை விற்றவர்கள்
ஓய்வு பெற்றிருந்தாலும் அவர்கள் குற்றசாட்டில் பதில் சொல்லியாக வேண்டும். அவர்கள் தண்டனை பெறவும் சட்டத்தில் வழியுண்டு என்று கூறப்படுகிறது.
|
|
தமிழ்நாட்டு கல்லூரிகளில்
சோதோம் கொமோரா பாவம் |
இந்தியாவில் சென்னையிலுள்ள கல்லூரிகளிலும், பல்கலைகழகங்களிலும் முதன்முறையாக
லெஸ்பியன் கிளப் (பெண்ணோடு-பெண் புணர்ச்சி பாவத்தில் உள்ளவர்களின் ஐக்கிய சங்கம்) ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு கல்லூரி, பல்கலை கழகங்களின் அதிகாரிகளின் எழுத்துபூர்வ அனுமதியோ, ஒப்புதலோ இல்லை என்றாலும் இந்த பாவத்துக்கு விருப்பம் உள்ள வாலிப பெண்கள் இப்போது வெளியரங்கமாகவே கல்லூரிகளில் கூடுகிறார்கள். தங்கள் உணர்ச்சிக்கு ஏற்ப
ஆண் கேரக்டர் - பெண் கேரக்டர் உள்ள பெண்களை தேர்ந்தெடுத்துக்கொள்ள வசதிகள் ஏற்படுத்தி இந்த கிளப் உதவுகிறது.
மாணவிகள் மத்தியில் சுவிசேஷ ஊழியம் செய்யும்
EU-குழுவினர், மற்ற கிறிஸ்தவ ஸ்தாபன பெண் ஊழியர்கள் இந்த கிளப்புக்கு செல்லும் கல்லூரி மாணவிகளை ஜெபத்துடன் கண்டுபிடியுங்கள் அவர்களை சந்தியுங்கள். அந்த வாலிப பெண்பிள்ளைகளில் பாவம் முற்றுவதற்குள் அந்த பெண்பிள்ளைகளின் பெற்றோருக்கு விவரம் அறிவித்து அந்த வாலிப பெண்பிள்ளைகளை காப்பாற்றுங்கள். - செய்தி -
Times of India மற்ற விவரங்களை
Times of India Website பார்த்து அறிந்துக்கொள்ளுங்கள்.
முழு உலகமும், நம் கிறிஸ்து சபைகளும் சோதோம்கொமாராவாக மாறும் நாள் வெகுதூரத்தில் இல்லை. நாம் வாலிப பெண் பிள்ளைகளுக்காக ஜெபிப்போம்.
|
|
ஜாமக்காரன் வாசகர்கள் கவனிக்கவும்: |
எனக்கு Dr.PUSHPARAJ என்ற பெயரிலோ,
JAMAKARAN என்ற பெயரிலோ எந்த
FACE BOOK IDயும் கிடையாது என்பதை அறிவித்துக்கொள்கிறேன்.
எனக்கு WEBSITE மட்டும் உண்டு. அது
www.jamakaran.com ஆகும். இது அல்லாது என் பெயரை அல்லது
Jamakaran பெயரை சிலர் தவறாக பயன்படுத்துவதாக அறிந்தேன். வாசகர்கள் அப்படிப்பட்டவைகளோடு தொடர்புக்கொள்ளவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
|
|
BETHANI SCHOOL OF NURSING |
ANAIKATTI - COIMBATORE.Dt.
(A Project of Tribal Mission Established in the year 2000)
Tribal Mission மிஷனரி ஸ்தாபனத்தால் நடத்தப்படும் ஆஸ்பத்திரியில்
செவிலியர் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இது தமிழ்நாடு அரசாங்கத்தாலும், தமிழ்நாடு செவிலியர்
& மருத்துவ கவுன்சில் அங்கீகாரத்தாலும், இந்தியா செவிலியர் கவுன்சிலாலும் அங்கீகாரம் பெற்றது.
(Govt of Tamilnadu & Tamilnadu Nurses & Midwives
Council, Indian Nursing Council, Board of Nursing Education, Christian Medical
Association of India(CMAI)).
இதுமேலே குறிப்பிட்ட அனைத்து துறையின் அங்கீகாரம் பெற்ற பள்ளியாகும். இங்கு படித்து பாஸ் செய்தவர்களுக்கு உடனே
CMC, அரோபிய தேசங்களான சவுதி, தோஹா, துபாய், பெஹரின் போன்ற நாடுகளில் உள்ள பெரிய அரசாங்க ஆஸ்பத்திரிகளில் வேலை கிடைக்கிறது. அப்படி இங்கு பயிற்சி பெற்று வேலை செய்துக்கொண்டிருப்பவர்கள் ஏராளம்.
MULTI-PURPOSE HEALTH WORKER
(ANM)COURSE.
படிப்பு தகுதி
: +2 (12ம் வகுப்பு தேர்ச்சி -எந்த பிரிவானாலும் சரி -
Any Group),
பயிற்சி காலங்கள் : 2 வருடங்கள்.
தகுதியுள்ளவர்களுக்கு ST/SC உதவிதொகையும் அளிக்கப்படுகிறது.
படிப்பு முடித்தவுடன் வேலை உத்திரவாதம் உண்டு.
விண்ணப்பம் அனுப்பவேண்டிய முகவரி:
The Principal
Bethany School of Nursing
Anaikatty.Po, Coimbatore. Dt., - Tamil Nadu. 641 108.
|
|
கத்தோலிக்க பாதிரியார்கள் மீது செக்ஸ் புகார் |
13 ஏப்ரல்
2012: அமெரிக்காவில் 700 கத்தோலிக்க பாதிரியர்கள்மீது செக்ஸ் புகார் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர். இந்த புகார்களில்
683 பேர் முதல்முறையாக பாதிரியார்கள் மீது செக்ஸ் புகார் தெரிவித்தவர்களாகும்.
மொத்த புகார்களில் 68 சதவீதம்
1979ம் வருடங்களுக்குமுன்பு நான்கு வருடங்களுக்குள் நடந்ததாகும். புகார்கள் பற்றி விசாரணை முடியவில்லை. அதற்குள் புகாரில் அகப்பட்ட பாதிரியார்களில் சிலர் மரித்தும் போய்விட்டனர். சுமார்
280 பாதிரியார்கள் ஊழியத்திலிருந்து நீக்கப்பட்டார்கள்.
இந்த பாதிரிகளால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தை அணுகியதால் தீர்ப்பு பாதிரியார்களுக்கு பாதகமாகிபோனதால் பாதிரியார்கள் சார்பில் கத்தோலிக்க திருச்சபை பாதிரியார்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகையாக கொடுத்தது சுமார்
144 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாயில் சுமார்
720 கோடி).
இப்படி இன்றுவரை கத்தோலிக்க பாதிரியார்கள்மீது பலவிதமான செக்ஸ் புகார்கள் கூடிகூடி வருவதால் கத்தோலிக்க திருச்சபை தலைமை செய்வதறியாது அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
|
மேலே வாசித்தது தினசரி பத்திரிக்கை செய்தியாகும். பல ஆண்டுகளாக இப்படிப்பட்ட செய்திகள் வந்து கிறிஸ்தவத்துக்கு பெரும் அவமானத்தையும் பரிசுத்த குலைச்சலையும் உண்டாக்கியுள்ளது.
இதேபோல் உள்ள குற்றசாட்டுகள் இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில்
தமிழ்நாடு-கேரளா மாநிலத்திலுள்ள கத்தோலிக்க சபை, யாக்கோபையா சபை,மார்தோமா சபை அதோடு ஆவிக்குரிய சபை என்றும் பரிசுத்த ஆவியானவரை
அந்நியபாஷையுடன் மொத்த குத்தகை எடுத்துள்ள சிலோன் பெந்தேகோஸ்தே
(TPM) சபையிலும் பெருகிவிட்டது.
ஆயர்கள், பிஷப்மார், பாஸ்டர்கள் திருமணம் செய்துகொள்ளகூடாது என்று வேதத்தில் இல்லாத சட்டத்தை தங்கள் சபை சட்டமாக இவர்களாக எழுதிக்கொண்டார்களோ, அப்போதே வசனத்தை விட்டு விலகினவர்களாக - பரிசுத்தகுலைச்சலை ஏற்படுத்தி பலர் சபையின் சாட்சியை கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சுவிசேஷ ஊழியத்துக்காக சிலர் தங்களை அண்ணகர்களாகக்கிக்கொண்டார்கள் என்று இயேசுகிறிஸ்து கூறினாரே தவிர, ஊழியர்கள் எல்லாரும்
திருமணம் செய்துக்கொள்ளக்கூடாது என்று ஒரு சட்டமாக வேதம் ஒரு இடத்திலும் கூறவில்லை. சபை
ஆயர் ஊழியத்தின் தகுதியே திருமணம் செய்திருக்கவேண்டும் என்பதாகும். சொந்த
குடும்பத்தை சரியாக நடத்தாதவன் சபையை எப்படி நடத்துவான் என்று 1 தீமோ 3ல் எத்தனை
தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது!
CSI, லூத்தரன் சபைகளில் திருமணமாகாமல் முழுபட்டம் கொடுத்து ஆயராக்கமாட்டார்கள். மேலே குறிப்பிட்ட வசன அடிப்படையில்தான் அப்படி ஒரு சட்டத்தை சபைகளில் கொண்டுவந்தார்கள்.
|
|
2012 ஏப்ரல் ஜாமக்காரன் தபால்துறை உதவியோடு சென்னை வாசகர்களுக்குமட்டும் தடுக்கப்பட்டது:
2012 பிப்ரவரி ஜாமக்காரனில் சென்னை
CSI திருமண்டலம் உலகிலேயே முதன்முதலாக அரவாணி (அலி) ஒருவரை ஆயராக்கப்போகிறார்கள் என்பதை அறிவித்து, அனைத்து
CSI, மார்தோமா, லூத்தரன் சபைகள், சபை மக்கள்,
ஆயர்கள், பிஷப்மார்கள் தங்கள் எதிர்ப்பை
CSI மாடரேட்டருக்கும், மெட்ராஸ் டையோசிஸ்
பிஷப் அவர்களுக்கும் எழுதி அறிவிக்க அழைப்பு விடுத்தேன். மேலும் ஏப்ரல் ஜாமக்காரனில்
அரவாணி என்றால் யார்? அவர்கள் கடவுளால் இயற்கையாக படைக்கப்பட்டவர்களா? இதைக்குறித்து வேதவசனம் என்ன கூறுகிறது?
உடற்கூறு, மருத்துவக் குறிப்பு என்ன சொல்கிறது? என்பதை விரிவாக எழுதுவேன் என்றும் அறிவித்திருந்தேன். அந்த அறிவிப்பை அறிந்த (அலி) அரவாணிகளோடு பழகுகிறவர்கள், அனுதாபிகள், சென்னை
CSI திருமண்டலத்தை சேர்ந்தவர்கள் ஏப்ரல் மாத
ஜாமக்காரன் தபாலில் சேர்க்கப்பட்டவுடன் சென்னையிலுள்ள வாசகர்களுக்குமட்டும் அனுப்பப்பட்ட
ஏப்ரல் மாத ஜாமக்காரனை சென்னையில் உள்ள தபால் துறையினர் சிலரின் உதவியோடு அனைத்து ஜாமக்காரனையும் எப்படியோ ஒட்டுமொத்தமாக எடுத்து அழித்துவிட்டனர் என்று யூகிக்கப்படுகிறது. ஏராளமானவர்கள் கடிதம் மூலமாகவும், தொலைப்பேசியிலும் ஏப்ரல் மாத ஜாமக்காரன் தங்களுக்கு கிடைக்கவில்லை என்பதைக்குறித்து விசாரித்தார்கள். அவர்களுக்கெல்லாம் நாங்கள் மறுபடியும் ஒரு ஏப்ரல் மாத ஜாமக்காரனை பெரும்செலவில் கூரியரிலும்,
Speed Post மூலமாகவும் அனுப்பிவைத்தோம். இதுவரை தமிழ்நாட்டில் ஜாமக்காரன் இப்படி ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டதில்லை. ஆகவே
ஏப்ரல் மாத ஜாமக்காரனைமட்டும் சென்னை வாசகர்களுக்காக
மறுபடியும் அச்சடித்து கூரியர் மூலமாக சென்னை வாசகர்களுக்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்கிறோம். தேவையானவர்கள் தங்கள்
தொலைப்பேசி எண்ணுடன், முழு விலாசத்தையும் குறிப்பிட்டு எனக்கு எழுதினால்
ஏப்ரல்
2012 மாத ஜாமக்காரனை உடனே கூரியரில் அனுப்பி வைப்போம்.
சென்னையில் உள்ள ஜாமக்காரன் வாசகர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு பொறுத்துக்கொள்ளவும்.
- ஜாமக்காரன்
|
|
|
 |
|
|
|