கடைசி காலத்தில் கள்ள உபதேசங்களும்,
பொய்யான தீர்க்கதரிசிகளும் எழும்புவார்கள் என்று இயேசுகிறிஸ்து கூறியது இப்போது மேலே வாசித்த தவறான உபதேசங்கள்மூலம் தெளிவாகிறது. இந்த
ஏஞ்சல் டிவியை பார்க்கும் எத்தனைப்பேர், எத்தனையோ வாலிபர்கள் இப்படிப்பட்ட
கற்பனை கதைகளை பொய் செய்திகளை கேட்டு ஏமாற்றப்படுகிறார்கள். இது வரவர மிகவும் அதிகமாகிக்கொண்டேபோகிறது.
 |
சகோ.சாது சுந்தர் செல்வராஜ், வின்சென்ட்
செல்வகுமார், மோகன் சி.லாசரஸ் |
நானே ஏஞ்சல் டிவியில் இந்த நிகழ்ச்சிகளை
நேரில் பார்த்ததால்தான் இவர்களின் முட்டாள்தானமான சம்பாஷைகளைக்குறித்து
எழுதினேன். பல மாதங்களுக்கு முன்பே ஏராளமான வாசகர்கள் ஒவ்வொரு நாளும்
அவர்கள் ஏஞ்சல் டிவியியைப் பார்த்துபோது கண்டதும் - பார்த்ததுமான
விஷயங்களை ஏராளமாக தங்கள் மொபைலில் பதிவுசெய்து எனக்கு அறிவித்தார்கள்.
அவைகள் என்னை மிகவும் பிரம்மிக்க வைத்தது. இப்படியும் வேத வசனங்களுக்கு
ஒரு பைத்தியகார விளக்கம் யாராவது கூறுவார்களா? இதை நம்பவும், இந்த
ஊழியங்களை தாங்கவும் ஒரு பெரும் கூட்டம் இருக்கிறதே! என்ன செய்வது?
இப்போது நாலுமாவடி சகோ.மோகன் சி.லாசரஸ் அவர்களும் இதே போன்ற
தரிசனங்களையும், வெளிப்பாடுகளையும் அறிவிக்க இவர்களோடு சேர்ந்து
கூட்டணி வைத்துள்ளார்கள். புதிய கூட்டணி எத்தனை
நாள் நீடிக்குமோ
தெரியாது?
திருப்பத்தூரில் சகோ.சாம் ஜெபதுரை அமைத்த கூட்டணியில்
அக்கினி இறக்கும் பிழையான ஊழியத்தை இவர் செய்து சலித்துப்போனவர். இப்போது இவர்
பொய்யான தீர்க்கதரிசினத்தை கூறுபவர்களுடன் கூட்டணி வைத்திருப்பது -
பொய்-பொய்யோடு இணைக்கிறது என்பதை தெளிவாக ஆவிக்குரியவர்களுக்கு காட்டப்பட்டுவிட்டது. இதை நான் எழுதுவதற்கு முன்
மோகன் சி.லாசரஸ் ஊழிய ரசிகர்களும் அவர் ஊழியத்தை தாங்குகிறவர்களுமே இந்த புதிய கூட்டணியை விரும்பவில்லை அவர்களே இவ்விவரங்களை எனக்கு எழுதி அறிவித்ததின் மூலம் மக்களுக்கு
ஓரளவு விழிப்புணர்வு வர தொடங்கிவிட்டது என்று உணரமுடிகிறது.
இப்போது சகோ.மோகன் சி.லாசரஸ் ஜெபத்தில் பெயர், வியாதிகளை கூறி அழைத்தது.
கர்த்தர் காட்டியது அல்ல - அது பொய்யான வெளிப்பாடு என்று ஏராளமானவர்கள் உணர்ந்துவிட்டனர்.
அனனியா-சப்பிராள் விசுவாசிகள்தான். ஆனால்
பொய் பேச, அதுவும் ஆவியானவருக்கு விரோதமாக பொய் பேச ஒன்றாக இணைந்தார்கள். அதைப்போலவே
ஏஞ்சல் டிவியின் பொய் தீர்க்கதரிசன கூட்டணியில் போய்
மோகன் சி.லாசரஸ் இணைந்துவிட்டார். பாம்பின் கால் பாம்பு அறியும் என்பதைப்போல் ஒருவர் பேசும் பொய் மற்றவர்கள் நன்றாக அறிவார்கள். அதை வெளிக்காட்டாமல்
பிசாசின் திட்டத்துக்கு ஒன்றிணைந்து இவர்கள் கூட்டணி அமைத்துக்கொண்டார்கள். ஆனால் இப்படிப்பட்ட
TV விளம்பரங்கள் சகோ.சாம்ஜெபதுரையின் திருப்பத்தூர் கூட்டணியில் இல்லை. ஆகவே திருப்பத்தூரைவிட்டு அதாவது சகோ.சாம் ஜெபதுரையை விட்டு சகோ.மோகன் சி.லாசரஸ் அவர்கள் கொஞ்சகொஞ்சமாக விலகி
ஏஞ்சல்
TVயுடன் கூட்டணி வைத்துக்கொண்டார். வின்சென்ட் செல்வகுமார் - சாது சுந்தர் செல்வராஜ் தங்கள் பொய் வெளிப்பாடான,
சிங்கம், கழுகு போன்ற உருவங்கள், மேலும் வானத்திலிருந்து விழும்
இயேசுவின் இரத்தம், செத்துப்போன விசுவாசிகள் தினசரி வந்து இவர்களுக்கு ஆலோசனை தருவது, இவர்கள் குருவான
D.G.S.தினகரன் இல்லாத
பரலோக கமிட்டியும், வெள்ளைக்குதிரை வருவது, மஞ்சள் குதிரை வருவது,
தேவ தூதர்கள் வந்துபோவது. இப்படிப்பட்ட ஏராளமான
பொய்களுக்கு இவைகள் யாவும் உண்மை இவர்களுக்கு சான்றிதழ் (சர்ட்டிபிகட்) கொடுக்க, பிரபலமான ஒரு ஆளைத்தேடினார்கள். இவர்கள் வலையில் மோகன் சி.லாசரஸ்தானே வந்துவிழுந்தார்.
கர்த்தர் எங்களுக்கு சொன்னார் என்று இவர்கள் சொல்ல, அவரும் கர்த்தர் இதையேதான்
எனக்கும் காட்டினார் என்று கூறி ஏஞ்சல் டிவி மூலம் இவர்கள்
தீர்க்கதரிசனம் கூற ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். இது நீடிக்காது என்பது வேறு விஷயம். ஆனால் இப்போதைக்கு கிறிஸ்தவர்களுக்கு, குறிப்பாக
ஏஞ்சல்
TV பார்ப்பவர்களுக்கு பெரிய விசுவாச ஆபத்து காத்துக்கொண்டிருக்கிறது.
ஜாக்கிரதை!.
ஆவி உலகம் - ஆவிகளுடன் பேசுவது எப்படி? என்ற
தலைப்பில் மந்திரவாதிகள் மாதிரியுள்ளவர் எழுதிய புத்தகங்கள் இப்போது
கடைகளில் விற்கப்படுகிறது. இவைகளை இவர்கள் வாங்கி வாசித்து இந்த
புத்தகத்தில் எழுதியபடி அதை அப்படியே ஆவியானவர் கூறினார் என்ற பெயரில்
அறிமுகப்படுத்தி மரித்த பரிசுத்தவான்கள் நமக்கு பல விதங்களில்
உதவமுடியும் என்ற புதிய ஆபத்தான உபதேசத்தை
அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். எச்சரிக்கை!
சரி, இப்போது ஜாமக்காரன் வாசகர்கள் செய்யவேண்டியது என்ன? உடனே வேதம் இவர்கள் கூறியதைக்குறித்து என்ன சொல்லுகிறது என்பதை வசனத்துடன் ஒப்பிட்டு பார்க்கவேண்டும்.
ஒருவன் போதித்தால் தேவனுடைய வசனத்தின்படி போதிக்கவேண்டும். 1பேதுரு 4:11.
உன்னைக்குறித்தும் உன் உபதேசங்களைக்குறித்தும் எச்சரிக்கையாக இரு. 1 தீமோ 4:16.
ஆவிகள் அநேகம் நிதானித்து அறியுங்கள். நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள். 1யோ 4:1.
பிள்ளைகளே, இது கடைசிகாலமாயிருக்கிறது! .................. அனேக
அந்திகிறிஸ்துகள் இருக்கிறார்கள்.(ஜாக்கிரதை!). 1யோ 2:18.
அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய
வஞ்சகத்தை தேவன் அவர்களுக்கு அனுப்புவார். 2 கொரி 2:11,12.
(மேலே குறிப்பிட்டவர்கள் யாவரும்) கிறிஸ்து இயேசுவுக்குரியவைகளைத் தேடாமல் தங்களுக்குரியவைகளையே தேடுகிறார்கள். பிலி 2:21.
மரித்தவர் நம்மோடு பேசமுடியுமா?
மரித்தவர்
நமக்கு உதவமுடியுமா?
மரித்தவர் பூமிக்கு வந்து ஏஞ்சல் டிவி பொய் கூட்டணியினருடன் பேசுவதுபோல பேசமுடியுமா?
வேதம் என்ன சொல்லுகிறது:
பிரசங்கி 9:5, சங் 88:10, யோபு 14:14 இந்த வசனங்கள் இன்னும் பல வசனங்களும் மரித்தவர்கள் எந்த கிரியையும் செய்யமுடியாது. மரித்தவர்
உலத்துக்குள் வரமுடியாது என்பதை இந்த வசனங்கள்மூலம் அறிகிறோம்.
பரலோகத்துக்கும்-நரகத்துக்கும் போய்வந்த ஒரே ஒருவர்
இயேசுகிறிஸ்து மட்டும்தான். அதை லாசரு-ஐசுவரியவான் உதாரணம் மூலம் தெளிவாக கூறினார்.
மரித்த பரிசுத்தவான் அல்லது பரதேசியிலுள்ள பரிசுத்தவான் யாராக இருந்தாலும் அவர்கள் ஒருநாளும் உலகத்துக்குள் மறுபடியும் போய்வர முடியாது என்றார். அதனால்தான்
மரித்த பரிசுத்த மரியாள்,
St.பேதுரு, அந்தோணியார், அருளப்பர் இப்படிப்பட்டவர்களோடு நாம் விண்ணப்பம்,
ஜெபம் ஏறெடுக்கக்கூடாது. இவர்கள் எல்லோரும் பரிசுத்தவான்களானாலும்
இவர்கள் யாவரும் செத்துப்போனவர்கள் ஆவர். அவர்களோடு பேசி பிரயோஜனமில்லை. அவர்களும் நமக்காக வேண்டுதல் செய்யமுடியாது. ஆனால் இயேசுகிறிஸ்து மரித்தவர். ஆனால்
உயிரோடு எழுந்தவர் - இப்போதும் உயிரோடு இருக்கிறவர். ஆகவேதான் அவரோடு நாம் பேசுகிறோம், ஜெபிக்கிறோம். மேலும் நமக்காக
பரிந்துப்பேச இடைதரகர் (மீடியேட்டர்) யாரும் நமக்கு தேவையில்லை.
மரியாளும் நமக்காக பரிந்துப்பேசமுடியாது. ஆனால் இயேசுகிறிஸ்து நமக்காக பரிந்துபேசுகிறவராக இருக்கிறார் என்று 1 தீமோ 2:5,6 வசனம் கூறுகிறது. மேலும்
மரித்துப்போன ஆவிகளோடு யாரும் பேசக்கூடாது என்று
பிதாவும் திட்டமாய் அறிவித்து இருக்கிறார், கண்டித்துமிருக்கிறார்.
உபா 18:11, லேவி 19:26,31, 2 நாளா 33:6, ஏசா 57:3. இத்தனை வசனங்கள் மூலமாக இவைகளைக்குறித்து ஆவியானவர் நம்மோடு பேசியுள்ளார்.
செத்துப்போன ஆவிகளோடு (செத்துப் போனவர்களோடு) ஏன் பேசக்கூடாது. காரணம் அது செத்துப்போன ஆவியல்ல! செத்துப்போனவர்கள் பூமிக்கு வரவேமாட்டார்கள். ஆனால்
செத்துப்போனவர்களின் ரூபத்தில் பிசாசுகள் வரும். இதை ஜனங்கள் அறியாமல் அது செத்துப்போன ஆவி என்று ஏமார்ந்து விடுகிறார்கள், ஆகவேதான்
செத்துப்போன ஆவிகளோடோ அல்லது செத்துப்போனவர்கள் என்று கூறிக்கொண்டு வருகிற
பரிசுத்தவான்களோடோ பேசுகிறவர்கள் சபிக்கப்பட்டவர்கள் என்று கர்த்தர் கோபத்தோடு ஏசுகிறார்.
தயவுசெய்து
செத்துப்போன பரிசுத்தவான்களோடு தொடர்புக்கொள்ளும்
பொய்களை பேசும் ஏஞ்சல்
TVயின் இந்த மூவரணியுடன் தொடர்புக்கொள்ளவேண்டாம். இவர்களை உற்சாகப்படுத்தவேண்டாம் என்று உயிரோடு இருக்கும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாசகர்களோடு நான் கேட்டுக்கொள்கிறேன்.
மேலே கூறப்பட்ட மூவரும் பொய்யர்கள் என்று நமது பரிசுத்த வேத வசனத்தோடு ஒப்பிட்டு பகிரங்கமாக அறிவிக்கிறேன். இவர்கள் பகிரங்கமாக தெய்வபயம் இல்லாமல் தமிழ் கிறிஸ்தவ மக்களை வசனத்தைவிட்டு விலக்கும் அளவு தங்கள்
TVயை பயன்படுத்தி தவறான நிகழ்ச்சிகள் மூலம் கிறிஸ்துவர்களை இவர்கள் பகிரங்கமாக கெடுக்கும்போது நான் இவர்களை
பொய்யர்கள்,
CULT, கள்ளஉபதேசம் செய்பவர்கள், கள்ள தீர்க்கதரிசிகள் என்று ஜாமக்காரனில் எழுதி ஏன் நான் என் வாசகர்களை எச்சரிக்கக்கூடாது? அதுவும் என்
மனித உரிமைதான்.
இதை
வாசிக்கும் பெரிய அனுபவம் வாய்ந்த பெந்தேகோஸ்தே பாஸ்டர்கள், வசன
அடிப்படையில் உபதேசிக்கும் பிரசங்கிமார்கள், பிஷப்மார்கள், நல்ல
ஆவிக்குரிய ஆயர்கள் ஏன் தங்கள் அபிப்ராயத்தை இவர்களுக்கு எழுதி
அறிவிக்கக்கூடாது? அல்லது உங்கள் சபையில் விசுவாசிகளுக்கு
அறிவிக்கலாமே! அல்லது அறிக்கை எழுதி விநியோகம் செய்யலாம்.
இல்லாவிட்டால் இவர்கள் உபதேசம் தவறு என்பதைக்குறித்து விளக்கம் எழுதி
எனக்கு அனுப்புங்கள் நான் அதை ஜாமக்காரனில் வெளியிடுகிறேன். இவர்களின்
ஊழியம் மிகப்பெரிய விசுவாச அழிவை கிறிஸ்தவ சபைக்குள் உண்டாக்கப்போகிறது
என்று நீங்கள் அறிந்தும் வாய்மூடி மௌனமாக இருந்தால் நீங்கள் எல்லாரும்
கர்த்தருக்கு கணக்கு கொடுக்கவேண்டிவரும்!
ஏஞ்சல் டிவியை
நடத்துகிறவர்கள், அவர்களின் சம்பாஷனை நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டவர்களின் பின்னால்
சாட்சியில்லா நிகழ்ச்சிகள் பல உண்டு. இப்படிப்பட்டவர்கள் எப்படி இயேசுகிறிஸ்துவை தரிசிக்கமுடியும். இவர்கள் எப்படி பரலோகம் போகமுடியும், தூதர்களுடன் பேசமுடியும் என்பதை யோசித்துப்பாருங்கள்.
மோசே, எலியா, யோவான், ஆபிரகாம் இயேசுகிறிஸ்து ஆகியவர்கள் அடிக்கடி தன் வீட்டிலுள்ள
சோபாவில் மனுஷசரீரத்தில் வந்து உட்கார்ந்து மணிக்கணக்காக பேசுவார்கள். இது அடிக்கடி என் வீட்டில் அடிக்கடி நடக்கும் நிகழ்ச்சி என்று
சாது செல்வராஜ் கூறுகிறார். வேதம் அறிந்த கிறிஸ்தவ விசுவாசிகள் இதை நம்புகிறீர்களா? இவர் துணிந்து பேசும் இப்படிப்பட்ட கதைகளை பொய் என்று கூறாமல் வேறு எந்த
வார்த்தையை பயன்படுத்துவது நீங்களே கூறுங்கள். மேலும் இந்த ஏஞ்சல்
TV நிகழ்ச்சி மூலம் உங்கள் சபை
வாலிபர்களும், வாலிபபெண்களும் மரித்தவர்களோடும், தூதர்களோடும் பேசி உங்கள் சபையையே குழப்பி -
பாஸ்டர், ஆயர், மேய்ப்பர் உங்கள் எல்லோரையும் ஆவியில்லாதவர்கள் என்று சபை மக்கள் சொல்லும்படி செய்துவிடுவார்கள். ஜாக்கிரதை! இவர்கள் மூவரைப்பற்றி நான் செய்த விமர்சனத்தில் தவறு ஏதும் கண்டால் உடனே வசன அடிப்படையில் எனக்கு எழுதுங்கள். நான் திருத்திக்கொள்ள தயாராக இருக்கிறேன். தயவுசெய்து கிறிஸ்தவ சபைமக்களை இந்த மாதிரி டிவி நிகழ்ச்சி நடத்துபவர்களிடமிருந்து காப்பாற்றுங்கள் என்று வேண்டிக்கொள்கிறேன்.
|