|
|
|
நதி மூலம் பாலியல் (SEX) குற்றச்சாட்டு |
2012 ஜுன் மாதம் தமிழ்நாட்டின் பிரபலமான வாரப்பத்திரிக்கையில்
(Investigation journal) கிறிஸ்தவ டிவி ஊழியர்களான சகோ.வின்சென்ட் செல்வகுமார், நாலுமாவடி
மோகன் சி.லாசரஸ், ஏஞ்சல் டிவி சாதுசுந்தர் செல்வராஜ் ஆகியவர்களைப்பற்றி பலவிதமான பரிசுத்த குலைச்சலான சாட்சியில்லா புகைப்படங்களுடன் இவர்களின்
பாலியல் குற்றச்சாட்டுகளுடன் இவர்களைப்பற்றிய பலரின் புகார்களை அந்த பத்திரிக்கையில் வெளியிட்டிருந்தார்கள். அந்த செய்தி தமிழ்நாட்டு கிறிஸ்தவ மக்களை ஒரு
குலுக்குகுலுக்கிவிட்டது. சாவு செய்தியைப்போல எங்கு பார்த்தாலும் இவர்களைக் குறித்தே மக்களிடையே பேச்சாக இருந்தது. இவர்களைப்பற்றிய செய்திகள்
உண்மைதான் என்று கூறியவர்கள் உண்டு. செய்திகள் பொய்யானதாக இருக்கும் என்று புலம்பியவர்கள் உண்டு. ஒரு பூகம்பம் உண்டானால் எப்படி ஜனங்கள் பயந்து, குழம்பி, செய்வதறியாது திகைத்து
ஓடுவதும், நிற்பதுமாக இருப்பார்களோ அப்படி தமிழ்நாடு மற்றும் உலக தமிழ் கிறிஸ்தவர்களுக்குள் பிரதிபலித்தது. |
சத்தியம் டிவி என்ற தனியார் டிவியில் நேருக்குநேர் நிகழ்ச்சி: |
அதைத் தொடர்ந்து டிவியிலும் பாலியல் குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்டவர்களை நேரில் வரவழைத்து நேருக்குநேர் நிகழ்ச்சி மூலம் குற்றசாட்டுகளை குறித்து நேரிடையாக விளக்கங்களை கேட்டு மக்களையும்
Live-வாக தொலைபேசிமூலம் சம்பந்தப்பட்டவர்களுடன் பேசவைத்து, மக்கள் கேட்ட சந்தேகங்களுக்கு இவர்களின் பதிலையும் கூற வைத்தார்கள். சுமார் இரண்டு மணி நேரம் இந்த நிகழ்ச்சிகள்
Live-வாக (நேரிடை காட்சியாக) காட்டினார்கள். அந்த நிகழ்ச்சியில் குற்றம் சாட்டப்பட்ட அந்த மூன்று ஊழியர்களின் பதில்
முன்னுக்குபின் முரணாக இருந்ததால் மக்களுக்கு இன்னும் சந்தேகத்தை இன்னும் அதிகமாக
ஊர்ஜிதப்படுத்துவதை போன்று அமைந்தது. இவர்கள் சொந்த டிவியில் விளம்பரத்துக்காக ஏற்பாடு செய்தது இந்த மூவரணிக்கே வில்லங்கமாகிப்போனது. வசமாக மாட்டினார்கள். பல கேள்விகளுக்கு இவர்களால் பதில்கூற முடியாமல் முகம் வெளுத்த நிலையில் டிவியில் காணப்பட்டார்கள்.
மேலே வாசித்த இந்த இரண்டு சம்பவங்களும் அடுத்தடுத்து நிகழ்ந்ததால் கிறிஸ்தவ மக்கள் இன்னும் அதிகமாக குழம்பிபோனார்கள். பத்திரிக்கை செய்தி - டிவி சம்பாஷணை ஆகியவைகளை வாசித்த பலர் நேரில் டிவியில் நிகழ்ச்சிகளை கண்டவர்கள் ஏராளமானவர்கள் இந்த ஊழியர்கள் சம்பந்தமாக
ஜாமக்காரன் அலுவலகத்துக்கு கேள்விகள் கேட்டு தொலைப்பேசி மூலம் பேசினர். அதற்கு நாங்கள் பதில் கூறி சலித்துப்போனோம். உள்நாடு - வெளிநாடுகளிலிருந்து இ-மெயில் மூலம் கேள்வி கேட்டு வந்த செய்திகள் ஏராளம்.
சிலர் இவர்களைப்பற்றி பல புதிய தகவல்களை தைரியமாக அறிவிக்க ஆரம்பித்தார்கள். உண்மை என்ன? அடுத்த ஜாமக்காரன் எப்போது வரும் என்று மக்கள் ஆவலாக இருப்பதை நாங்கள் உணர்ந்தோம். ஆகவே எனக்கு தெரிந்த சில விளக்கங்களை வாசகர்களுக்கு இவர்கள் சம்பந்தமாக பதிலாக எழுதவேண்டியது என் கடமையாகும். |
பாலியல் (SEX) குற்றச்சாட்டுகள்: |
தம்பி.வின்சென்ட் செல்வகுமார் 1984ம் வருடம் ராமநாதபுரத்தில் ஊழியம் தொடங்கிய நாளிலிருந்து நான் அறிவேன். ஆனால் பழகினதில்லை.
1976ம் வருடம் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரத்தில் கிருபாசனம் என்ற சபை ஸ்தாபகர்
சாது ஏசுதாஸ் ஐயா அவர்கள் அங்கு ஒரு பொதுகூட்டம் ஏற்பாடு செய்து அதில் என்னை பிரசங்கிக்க அழைத்தார்கள். நான்
CSI சபையை சேர்ந்தவன் என்பதை
சாது ஏசுதாஸ் அவர்கள் அறிந்தாலும் என் பைபிள் டீச்சிங் அவருக்கு மிகவும் பிடிக்கும்.
கிருபாசனத்தில் சாது ஐயா அவர்களின் வலதுகரம் போல் இருந்தவர்களான பாஸ்டர்.கிறிஸ்தியான், பாஸ்டர்.தாஸன் ஆகியவர்கள் வேதாகம கல்லூரியில் படிக்காதவர்களானாலும் நல்ல
வேத ஞானத்தை ஆவியானவர் அவர்களுக்கு அருளியிருந்தார். அந்த பாஸ்டர்களுக்கும் என்னை மிகவும் பிடிக்கும். கிருபாசனம் சாது ஐயா அவர்களுடன் இவர்கள் இருவரும் என் வீட்டுக்கும் வந்திருந்து வேத வசனங்களைக்குறித்து நாங்கள் பலமுறை பகிர்ந்துக்கொண்டு கூடி ஜெபித்துள்ளோம்.
பாஸ்டர்.கிறிஸ்தியான் அவர்கள் ராமநாதபுரத்தில் இருந்தபோது அவர் நடத்திய பத்திரிக்கை விஷயமாக சிலமுறை ராமநாதபுரம் வந்திருக்கிறேன்.
மேற்கண்ட விஷயங்களை இங்கு கூற காரணம். எனக்கு ராமநாதபுரம் பகுதியில் உள்ள சபைகளை -
ஊழியர்களைக்குறித்து
ஓரளவு அறிவேன். என் வாசகர்களும் நிறையபேர் பெந்தேகோஸ்தே சபையிலும்,
CSIயிலும் உண்டு. 1999ம் வருடம்
ராமநாதபுரம்
CSI கன்வென்ஷனில் 3 நாட்கள் பிரசங்கம் செய்திருக்கிறேன். ஆகவே ராமநாதபுரத்தில் உள்ள ஒவ்வொரு சபைகளைப்பற்றியும் அவர்களின் உபதேசங்களைப்பற்றியும், பாஸ்டர்களைப்பற்றியும் விசாரித்து அறிந்திருக்கிறேன்.
வின்சென்ட் செல்வகுமார் நடத்திய சபை ஊழியத்தில் ஆரம்பத்திலேயே அநேக ஆண்டுகளுக்கு முன்பே இதே போன்ற
குற்றச்சாட்டுகள் இவர்பேரில் நிறைய எழும்பின. என் ஒழுங்கின்படி
வின்சென்ட்டுக்கு நான் ஒரு கடிதம் எழுதி குற்றச்சாட்டுகளுக்கு உங்கள் பதில் என்ன? என்று கேட்டேன். உடனே தாமதமில்லாமல் அவர் பதில் கடிதம் எழுதி அவரைப்பற்றி சில விவரங்களை எழுதி எழும்பிய குற்றசாட்டுகளுக்கான விளக்கமும் கொடுத்து அந்த குற்றசாட்டுகளை அப்போதே மறுத்துதான் எனக்கு பதிலளித்தார். அவர் எழுதிய கடிதம் இப்போதும் அவர் பெயரில் உள்ள பைல்லில் இருக்கிறது. இவரின் ஆரம்பகால ஊழியம், இவரின் மனந்திரும்புதல் யாவும் சரியானதாகத்தான் இருந்ததாக அறிகிறேன். இவர் மூலமாக இரட்சிக்கப்பட்ட சில வாலிபர்களையும் நான் அறிவேன். அவர்கள் இப்போது ஊழியத்தில் இல்லை என்றாலும் அவர்கள் யாவரும் நல்ல சாட்சியுடன்தான் வாழ்கிறார்கள்.
|
அதைத்தான் பிரச்சனைகளுக்கு நதிமூலம் என்று இந்த
கட்டுரைக்கு பெயர் வைத்தேன். இவர் சேர்ந்த இடம் சரியில்லை. மனந்திரும்பிய ஒருவர்
வசனத்தில் வழிநடத்தும் ஒரு ஊழியரிடமோ, ஒரு நல்ல
விசுவாசிகள் ஐக்கியத்திலோ தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளவேண்டியது மிக முக்கியம். யார் நமக்கு முன்மாதிரியாக வைக்கிறமோ அவரைப்போல வளருவோம்.
ஆகவே வின்சென்ட் செல்வகுமார் ஊழிய பயிற்சிபெற்ற இடம்
இயேசு வருகிறார் ஊழியர் சகோ.ஜான் ரபீந்தரநாத் (பாளையங்கோட்டை) என்பவரிடமாகும். அந்த காலத்தில் அவர் பிரசித்திப் பெற்ற ஊழியர்தான். ஆனால் தவறான
தரிசனத்திலும், தவறான தீர்க்கதரிசனங்களையும் உரைக்கிறவராக இருந்தார். இவர் மூலமாகவும் இரட்சிக்கப்பட்டவர்கள் ஏராளம். ஆனால்
உபதேசம் வசன அடிப்படையில்லாமல்போனதே! - அப்படிப்பட்ட இடத்தில் இவர்
அலுவலக பொறுப்பிலும் ரபீந்திரநாத் அவர்களுக்கு உதவியாளனாக அமைந்தார். அதே
பட்டறையில்தான் நம் சாதுசுந்தர் செல்வராஜ் அவர்களும் ஊழிய பயிற்சி எடுத்துக்கொண்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்? அவர் பார்க்கும்
சிங்கத்தை மற்றவரும் பார்க்கிறார். இவர் கழுகைப்பார்த்தால் அவரும் கழுகைப்பார்க்கிறார். அதனால்தான் இவர்கள் ஜெபநேரத்தில் யாராவது பார்க்கவந்தால் இப்போது பார்க்கமுடியாது அவர்
சுக்கிரன் கிரகத்தில் இருக்கிறார், அவர் செவ்வாய் கிரகத்தில் இருக்கிறார் என்கிறார்கள். |
சகோ.ஜான் ரபீந்திரநாத் அவர்கள் அந்த காலத்திலேயே தினசரி
பரலோகம் போய் வருகிறவர். உதாரணத்துக்கு ஒரு சம்பவம் கூறுகிறேன்.
CSI சபை ஆயர் (இப்போது ஓய்வு பெற்று இப்போதும் உயிரோடு இருக்கிறார்) அவர்கள் சகோ.ஜான் ரபீந்திரநாத் அவர்களை கன்வென்ஷனில் பிரசங்கிக்க தேதி கேட்க அவர் வீட்டுக்கு சென்றார்.
ஒரு மணி நேரம் ஆயர் அவர்களுக்கு அவரின் சந்திப்பு கிடைக்கவில்லை, நீண்டநேரம் காத்திருக்கவேண்டி வந்தது. ஒரு வழியாக சகோ.ஜான் ரபீந்திரநாத் அவர்கள் ஆயர்முன் வந்து அமர்ந்து உங்களை அதிகநேரம் காக்க வைத்துவிட்டேன். மன்னித்துக்கொள்ளுங்கள். காரணம் என்னவென்றால் நான் குளித்துக்கொண்டிருக்கும்போது
குளியலறையிலேயே இயேசு வந்துவிட்டார். (அப்போது இவர் எந்த நிலையில் இருந்தார் என்று கேட்காதீர்கள்) நீண்ட நேரம் நானும், இயேசுவும் பேசிக்கொண்டிருந்துவிட்டோம். நேரம் போனதே தெரியவில்லை! அவர் சென்ற உடன் உடலை துடைத்து உடைமாற்றி உங்களை பார்க்க வந்தேன் நீண்ட நேரம் ஆகிவிட்டது மன்னியுங்கள் என்றார். அவ்வளவுதான். கன்வென்ஷனுக்கு அழைக்க வந்த ஆயர்
தேதிகூட கேட்காமல் மறுமுறை உங்களை சந்திக்கிறேன் என்று விடைபெற்றார்.
இந்த சம்பவத்தை ஆயர்கள் கூட்டத்திலேயே இந்த குறிப்பிட்ட ஆயர் பகிர்ந்துக்கொண்டு இப்படிப்பட்ட ஊழியர் நம் சபைக்குவேண்டாம்.
குளியலறையிலேயே இயேசுவிடம் மணிக்கணக்காக பேசும் ஊழியர் நம் சபைக்கு வேண்டாம் என்று மற்ற ஆயர்களும் முடிவெடுத்தார்கள் என்பதை பகிர்ந்துக்கொண்டார்.
இவர் பரலோகம் செல்வதுபோல்
நரகத்துக்கும் சென்று வருவாராம். இவர் ஓட்டிய பிசாசுகளோடு பலமுறை பேசியிருக்கும் கதைகள் இவரிடம் ஏராளம். இதைத்தான் ஆசீர்வாதம் டிவி ஆலன்பால் பின்பற்றுகிறார். இதை அவர் பிரசங்கத்தில் கேட்கலாம். இப்படிப்பட்டவரிடம் படித்துக்கொண்ட
தரிசனம்தான் இந்த இருவரும் இப்போது கூறும் கற்பனை தரிசனங்களாகும்.
வீட்டைவிட்டு
ஓடிவந்த வாலிபப் பெண்ணை சகோ.ஜான்ரபீந்திரநாத் மகளாக ஏற்றுக்கொண்டு இருவரும்
ஒரே அறையில் தங்குவதும், ஒரே கட்டிலில் படுப்பதும்,
ஒரே லாட்ஜில் தங்குவதுமான சம்பவங்களை கேரளா பிஷப் கேள்விப்பட்டு தன் திருமண்டலத்தில் அவரை இனி யாவரும் அழைக்கக்கூடாது என்று சபைகளுக்கு அறிக்கை அனுப்பினார். இவரை பின்பற்றுகிறவர்கள் மேலும் இதே குற்றச்சாட்டுகள் இப்போது வந்துகொண்டிருப்பதை பார்க்கிறாமே?
இதனால் வின்சென்ட் செல்வகுமார் ராமநாதபுரத்தில் நன்றாக நடத்திக்கொண்டிருந்த
சபையை கலைத்துவிட்டு அதை இயேசு சிங்கமாக வந்து தீர்க்கதரிசனம் உரைக்கும் மண்டபமாக மாற்றிவிட்டார். சபை உருவாக்குவதே பெரிய விஷயம் - உருவாகி நன்றாக வளர்ந்துகொண்டு வந்த சபையை யாராவது கலைப்பார்களா? இவரை நம்பி வந்த ஆடுகள் எங்குபோகும்.
இன்று இவரோடு ஐக்கியம் வைத்தவர்கள் தனி தனி
சபைகளில் தங்களில் ஒருவரை பாஸ்டர்களாக தெரிந்தெடுத்து
ஆராதித்துக்கொண்டிருக்கிறார்கள்!.
சகோ.ஜான் ரபீந்திரநாத் அவர்களிடம் பயிற்சி எடுத்துக்கொண்ட இந்த இருவருமே சில விஷயத்தில் பயிற்சி பெற்ற இடத்தில் கொடுமைப்படுத்தப்பட்டார்கள் என்றும் கேள்விப்பட்டேன். அதற்கும் ஒரு பெண்தான் காரணம். |
சகோ.சாதுசுந்தர் செல்வராஜ்: |
சாது - சன்னியாசி இந்த இரண்டுக்கும் இந்து மதத்தில் நல்ல விளக்கங்களும், நல்ல மரியாதையும் உண்டு. அதைப்பற்றிய விஷயத்தில் நான் கடக்க விரும்பவில்லை. சாதுசுந்தர் செல்வராஜ் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர். அவர்களின் தாய் குடும்பத்தினர் யாவரும்
சிங்கப்பூரிலும் - மலேசியாவிலும் இப்போதும் வாழ்கிறார்கள். அவர்களை நானும் அங்கு கண்டிருக்கிறேன்.
இப்போது இந்தியாவில் இருக்கும் இவர் எந்தவிதமான
குடியுரிமை பெற்றிருக்கிறார் என்பது எனக்கு தெரியாது. நானும் அதை அறிய முயலும் அவசியம் எனக்கு ஏற்படவில்லை.
ஆஸ்ட்ரோலியாவில் ஒருநாள் தமிழ் சபையினர் என்னிடம் இவர் புகைப்படத்தை காட்டி இந்தியாவில் உள்ள இவரை உங்களுக்கு தெரியுமா?
சாதுசுந்தர்சிங் மரித்தபின் அவர் ஊழியத்தை இவர் திபெத்தில் செய்யும்படி வானத்திலிருந்து கட்டளை பெற்றவராம். சில காலமாக நாங்கள் பெரும்தொகையை இவர் ஊழியத்துக்கு கொடுத்துக்கொண்டிருக்கிறோம். இவர்கள் ஊழியத்தை விரிவுப்படுத்தபோகிறார் என்றார். அதைப்பற்றி உங்களுக்கு தெரியுமா? என்று கேட்டார்கள். அன்று சாது செல்வராஜ்பற்றி நான் கேள்விப்பட்டதேயில்லை. நேபாளத்திலும்-திபெத்திலும் அந்த காலத்தில் ஊழியம் செய்தவர் சகோ.சாமுவேல் (ஊட்டி) கோத்தகிரி என்பவராவார். அவரைமட்டும்தான் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் இவரை எனக்கு தெரியாது என்றாலும் விசாரித்து சொல்கிறேன் என்றேன்.
திபெத்-நேபாள ஊழியத்துக்காகத்தான் இவர்
காவி உடை உடுத்தினார் என்று அநேக நாட்களுக்குபின் கேள்விப்பட்டேன். அதன்பின் சாதுசுந்தர் செல்வராஜின் வாழ்க்கையில்
நாடகத்தில் பல சீன்கள் மாறுவதுபோல் இவர் ஊழியத்திலும் பெரும்மாற்றங்கள் நிகழ்ந்தது.
ஏஞ்சல் டிவி ஊழியம் தொடங்கப்பட்டது. இவரும் ஜான் ரபீந்திரநாத் மாதிரி தரிசனங்களை பார்ப்பதைப்பற்றி பேசுவார். பரலோக கமிட்டியும் தொடங்கினார். ஆரம்பத்தில்
பரலோக கமிட்டி கூட்டியது சகோ.தினகரன் அவர்களாகும். அவர் மரணத்துக்குபின் இவர்தான்
பரலோகத்தில் கமிட்டி கூட்டினார். தம்பி.பால்தினகரனுடன் சாதுசெல்வராஜ்க்கு கொஞ்சம்
உரசல் ஏற்பட்டவுடன் இவர் பரலோகத்தில் கூட்டிய கமிட்டியிலிருந்து
சகோ.தினகரன் அவர்களை நீக்கிவிட்டார். பிதாவின் அடுத்த சீட்டில் சாதுசெல்வராஜ் உட்கார்ந்துக்கொண்டதாக அவரே அறிவித்திருக்கிறார். இப்படி போகிறது பரலோக பொய்கள். |
நாலுமாவடி மோகன் சி.லாசரஸ்: |
இவருடைய குரு சகோ.தினகரனாவார்.
பவர் மினிஸ்ட்ரியில் 15 நாள் பயிற்சியில் ஜெபத்தில்
பெயர், வியாதியின் பெயர் இவைகளை எப்படி அழைப்பது என்ற டெக்னிக்கை பயின்று அருமையாக ஞானமாக அதை செயல்படுத்தினார். இதையெடுத்து ஜெபத்தில் பெயர் அழைக்கும் வியாதி,
ஜெபத்தில் பெயர் - வியாதியின் பெயர் அழைப்பது ஆவியானவர் செயல் அல்ல என்று ஏற்கனவே நான் எழுதினேன். அப்படி அழைப்பது
பொய் என்பதையும் நான் நிரூபித்தேன். ஜெபத்தில் பெயர் அழைப்பது
பன்றிகாய்ச்சலைப்போல ஏராளமான ஊழியர்களை ஒட்டிக்கொண்டது.
எயிட்ஸ் வியாதியஸ்தன் ஒருவனின் பெயரை இவர் ஜெபத்தில் கூறினார். மேடையில் தன்னோடு உள்ள இயேசு மேடையிலிருந்து இறங்கி கூட்டத்தில் உள்ள அந்த வியாதியஸ்தனை தொடுகிறதைப் நான் பார்க்கிறேன் என்றார். இப்போது
எயிட்ஸ் கிருமிகள் தலையிலிருந்து பாதம் வழியாக பூமிக்குள் இறங்குகிறது. கர்த்தர் உன்னை சுகமாகிவிட்டார் என்று கூற, அந்த வாலிபனும் மேடை ஏறிவந்து தான் சுகமானதாக சாட்சி கூறிவிட்டான். கூட்டத்தில் இருந்த படித்த டாக்டர்கள் இருவர் அவன் விலாசம் கேட்டு பெற்று, மறுநாள் அவனை சந்தித்து
இரத்த பரிசோதனை செய்து எயிட்ஸ் கிருமி உனக்கு அதிகமாயிருக்கிறது. நீ தினசரி முட்டை, பால், பழம் சாப்பிட்டு
எடை குறையாமல் பார்த்துக் கொண்டால் எயிட்ஸ் வியாதி
(HIV) அதிகமாகாமல் மரணத்திலிருந்து நீ காப்பாற்றபடுவாய்,
எடை குறைந்தால் எயிட்ஸ் கிருமி பலுகிபெருகும். ஜாக்கிரதை! என்று ஆலோசனை கூறி என்னிடமும் அவனைப்பற்றி விவரம் அறிவித்தார்கள்.
என்ன ஏமாற்றுதனம் இது என்று கூறி அந்த டாக்டர்கள் வேதனைப்பட்டார்கள். நானும் அந்த விவரத்தை
மோகன் சி.லாசரஸ்க்கு அறிவித்தேன். என் ஜாமக்காரனிலும் அவர் கூறியது
பொய் தீர்க்கதரிசனம் என்று அறிவித்து உலக மெடிக்கல் கவுன்சில் அறிவித்த செய்தியையும் ஜாமக்காரனில் எழுதினேன். உலகில் இதுவரை எயிட்ஸ் வியாதியிலிருந்து யாரும்
சுகம் பெறவில்லை. இது ஐக்கிய நாடுகளின் ரிப்போர்ட். அப்படியிருக்க மோகன் சி.லாசரஸ் துணிந்து பொய் கூறிவிட்டாரே! அவர் இயேசு விடுவிக்கிறார் போர்ட்டில் படித்த
டாக்டர் உண்டே, அவர் இதை நம்புகிறாரா?
என்று கேள்வி எழுப்பினேன். இதுவரை அந்த டாக்டரிடமிருந்து ஒரு பதிலும் இல்லை. அந்த டாக்டர் இப்போது இயேசு விடுவிக்கிறார் போர்டில் இருக்கிறார்.
மோகன் சி.லாசரஸ் கூட்டத்தில் எயிட்ஸ் வியாதி சுகமானதா என்று பல வருடமாக கேள்வி எழுப்பிக்கொண்டிருக்கிறேன். வருடங்கள் கடந்தது இதுவரை பதில் இல்லை!. இயேசு விடுவிக்கிறார் சார்பில்
என் வீட்டுக்கு ஒரு குழுவினர் வந்தனர். இப்படியே ஒவ்வொரு ஜாமக்காரனிலும் சகோ.மோகன் சி.லாசரஸ் பொய் சொல்கிறார் என்று எழுதுகிறீர்களே இதற்கு ஒரு முடிவு உண்டாக்கமாட்டீர்களா? எத்தனை லட்சம்பேர் மோகன் சி.லாசரஸ்மூலம்
இயேசுவை அறியமுடிகிறது. அதற்காகவாவது அவரை குற்றப்படுத்தி கொண்டிருப்பதை நிறுத்தக்கூடாதா என்றார்கள். நான் அவர்களிடம் கூறினேன். என் கேள்விக்கு நீங்களே சகோ.மோகன்.சி.லாசரஸ் அவர்களிடம் பதில் கேளுங்கள். அன்று ஜெபத்தில்
பெயர் அழைத்தது பொய்யா - இயேசுதான் அதை சொன்னார் என்றால்
இயேசு பொய் சொல்வாரா? இந்த இரண்டு கேள்விகளுக்கும் இதுவரை என் வீட்டுக்கு வந்த நாலுமாவடி குழுவினர் யாரும் பதில் கூறவில்லை.
தீர்க்கதரிசனம் என்ற பெயரில்
மோகன் சி.லாசரஸ் தமிழ்நாடு சுபிட்சம் பெறும், பொருளாதாரம் உயரும். தமிழ்நாடு செழிக்கும், இப்படியாக கர்த்தர் எனக்கு காட்டினார் என்றார். ஆனால்
தானே புயல் காரணமாக கடலூர்-பாண்டிசேரி போன்ற கிழக்கு தமிழ்நாடே பெருத்த அழிவு ஏற்பட்டு நாடே சோகத்தில் ஆனபோது அதன் புனரமைப்புக்கு
காணிக்கை தாருங்கள் என்று அதே ஏஞ்சல் டிவியில் மோகன் சி.லாசரஸ் தோன்றி பேசினாரே. இப்படிப்பட்ட
பொய் தரிசனம் கூறும் இந்த மூன்றுபேரும் இப்போது ஒன்று சேர்ந்து இன்னும் நிறைய தரிசனங்களையும், தீர்க்கதரிசனங்களையும்
ஏஞ்சல் டிவி மூலமாக கூறப்போகிறார்களாம். அதற்காக கர்த்தர் எங்கள் மூவரையும் ஒன்று சேர்த்தார் என்று இந்த 3 பேரும் டிவியில் கூறினார்களே?. உலக மக்கள்முன், புறஜாதிகள்முன், கிறிஸ்தவம் முழுமைக்கும் இவ்வளவு
பெரிய தலைக்குனிவு ஏற்பட இவர்களின் பொய் தீர்க்கதரிசனங்களே காரணம். |
பணம் கோடி கோடியாக பெருகபெருக பிரச்சனைகளும் உருவாகும்: |
டிவியில் குறிப்பிட்ட இந்த மூவரும்
நேருக்குநேர் சம்பாஷணையில் எங்களுக்கு தங்கள் பெயரில்
பணம் இல்லை தன் பெயரில் சொத்து
இல்லை என்றார்கள். பாலியல் குற்றச்சாட்டு எங்கள் மேல் கூறியவர்கள்
எங்கள் சொத்துமேல் ஆசைக்கொண்டு அப்படி பொய் செய்தி கூறினார்கள்
என்றார்கள். அதேசமயம் வின்சென்ட் செல்வகுமார் தன் பத்திரிக்கையில்
Vincent Selvakumar - பெயரில்
Axis Bank-ல் காணிக்கை அனுப்ப அக்கவுண்ட் நெம்பர் குறிப்பிட்டுள்ளார். அடுத்தது
Voice of Jesus Ministries என்ற பெயரிலும்
காணிக்கை அனுப்பலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். என்ன
பொய் இது? சாதுசுந்தர் செல்வராஜ் கூறுகிறார்: ஏஞ்சல் டிவி, இயேசு ஊழியங்கள், இயேசுவின் தொனி (வின்சென்ட் செல்வகுமார் பத்திரிக்கை) இவைகள் யாவும் ஒரே
அமைப்பின்கீழ் செயல்படுகிறது என்று எழுதி அறிவிக்கிறார்.
(2012 இயேசுவின் தொனி மாத இதழ் பக்கம்
14).
சாதுசுந்தர் செல்வராஜ் ஒரு பெண்ணின் தோள்மீது கைப்போட்டப்படி எடுத்த போட்டோ
வார பத்திரிக்கையில் வெளியிடப்பட்டது. அதுமட்டுமல்ல மலேசியா -
சிங்கப்பூர் - இந்தியா இன்னும் சில வெளிநாடுகளில் பல வீடுகளில் தங்கியபோது இவர் பெண்களுடன் இதைப்போன்று புகைப் படங்கள் பல கண்டிருக்கிறேன். சிங்கப்பூர் கலாச்சாரத்தில் இது சர்வ சாதாரணம். அதனால்தான் காவி உடையுடன் தொடர்ந்து இருக்கமுடியவில்லை.
டி-சர்ட்,
ஜீன்ஸ் பேண்ட் இதுதான் இவருக்கு பிடித்தமான உடை அப்படியிருக்க ஏன் இந்த
காவி வேஷம்? |
இவர்களின் குருவின் மேல்விழுந்த குற்றசாட்டு |
|
|
|
|
|