கொலைகாரனாக மாறிய அற்புத ஊழியன்
சுகமளிக்கும் வரம்பெற்ற பிரசித்திபெற்ற
அற்புத ஊழியரின் கொலை வழக்கு
பணஆசை எல்லா தீமைக்கும் வேராக இருக்கிறது . . . . . . 1 தீமோ 6:9,10.
நீயோ தேவனுடைய மனுஷனே இவைகளை விட்டுவிடு . . 1தீமோ 6:11.
K.A.Paul

இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் சிட்டிவல்சா என்ற ஊரில் சகோ.K.A.PAUL (Kilari Anand Paul) என்ற வாலிபன் தன் 19வது வயதில் இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு நல்ல சாட்சியாக வாழ்ந்தான். ஆனால் வரம் பெற்ற ஊழியன் என்று பெயர் பெற்ற ஒரு பாஸ்டருடன் சேர்ந்து பல இடங்களுக்கு சென்று ஊழியத்தில் உதவியாக இருந்தான். அந்த ஊழியர் உண்மையான ஊழியர் அல்லாததால் அவர் செய்த ஊழியத்திலும், ஜீவியத்திலும் பல தவறுகளை கவனித்தான். என்றாலும் பிசாசுகள் ஓடின, அற்புதங்கள் அந்த பாஸ்டர் மூலமாக நடந்ததை கண்டான். அப்போதே அவரை விட்டுவிலகியிருந்தால் தன் ஆத்துமாவை காப்பாற்றிக் கொண்டிருந்திருப்பான். இவன் உள்ளத்தில் விபரீத ஆசை உருவானது. தான் சுகமளிக்கும் வரம் பெற்ற பிரபல ஊழியனாக மாறவேண்டும் என்று விரும்பினான். இந்த தவறான எண்ணம் உருவான உடனேயே பிசாசுக்கு மிகவும் சந்தோஷம் ஏற்பட்டது. கஷ்டப்படாமல் தன் வலையில் ஒரு மீன் வந்துவிழுந்ததைபோல் எண்ணிக்கொண்டான்.

இந்த வாலிபன் உள்ளத்தில் ஊழியத்தை குறித்து விபரீத எண்ணம் உருவாக ஆரம்பித்தவுடன் ஆவியானவர் அவனைவிட்டு கொஞ்ச கொஞ்சமாக விலகினார். பிசாசின் ஆவி கொஞ்சகொஞ்சமாக இவன் உள்ளத்தில் நுழைந்து பின் முழு இருதயத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டான். இவன் ஊழியத்தில் சின்னசின்ன அற்புதங்கள் ஏற்கனவே நடந்ததை பிசாசின் ஆவி இன்று K.A.PAUL என்ற வாலிபன்மூலம் பெரிய அளவில் பொய்யான அற்புதங்களை மக்களுக்குமுன் காட்டி அவனை மக்களுக்குமுன் பெரிய அளவில் உயர்த்திவிட்டான். பெரும் கூட்டங்கள் கூடியது. கூட்டம் என்று சொன்னால் லட்சக்கணக்கில் கூடியது. இந்தியாவில் பால் ஆசீர் லாரி, சகோ.D.G.S.தினகரன் இவர்கள் யாவருக்கும் கூடாத கூட்டம் K.A.PAULக்கு கூடியதுதான் ஆச்சரியம். பிரசங்கத்தில் சரக்கு ஒன்றும் இல்லை. ஆனால் இவருக்கு கூடும் கூட்டத்தின் எண்ணிக்கையை பார்த்து உலக கிறிஸ்தவர்கள் வியந்தார்கள். பணம் கோடிகளாக குவிந்தது. வெளிநாட்டு ஸ்தாபனங்கள் இவருடைய சமூக சேவைக்கு கோடிகள் கொடுக்க போட்டியிட்டன. அமெரிக்காவில் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ், ஒபாமா இவர்களை முன்அறிவிப்பு இல்லாமலே விரும்பியபோது நேரில் சந்திக்க முடிந்தது என்றால் எத்தனையாய் வெளிநாட்டில் பிரபலமானார் என்பதை யூகிக்கலாம். இந்தியாவில் எந்த இடத்தில் K.A.PAULலின் கூட்டம் நடந்தாலும் சொந்த ஹெலிகாப்டரில்தான் போய் வருவார்.

நம் இந்தியாவில் உள்ள அற்புத ஊழியர்கள் யாரும் ஹெலிகாப்டரில் கன்வென்ஷனுக்கு வந்ததாக கூறமுடியுமா? K.A.பால் மட்டும் ஹெலிகாப்டரை கார்போல உபயோகித்தார். இது மட்டுமல்ல, நம்நாட்டில் எந்த ஊழியனுக்கும் ஏன் அரசியல்வாதியான மந்திரிக்கும்கூட சொந்தமாக விமானம் இருந்ததில்லை. ஆனால் இந்த K.A.பாலுக்கு சொந்தமாக விமானம் இருந்தது. இங்குள்ள படத்தில் நீங்கள் அதை காணலாம்.

மக்கள் காணிக்கை பணத்தை இந்த அற்புத ஊழியர் ராஜாவைப்போல அனுபவித்தார்.

சகோ.K.A.பால்க்கு காங்கிரஸ் தலைவி திருமதி.சோனியா காந்தி மேல் மிகுந்த மரியாதை இருந்தது. அவருடைய விசிறியாக அளவுக்கு அதிகமாக மரியாதை வைத்ததால் அவருக்கு உதவி செய்யும் வகையில் ரசிகர் சங்கம் போல் பிரஜா சாந்தி என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கினார். கிறிஸ்துவை உயர்த்தி காண்பிக்க அழைப்பை பெற்றவர், நம் தமிழ்நாட்டு ஸ்டார் ஊழியர்கள் அரசியல்வாதிகளை மேடையில் உட்கார வைத்து ஷோ காண்பிப்பார்களே அந்த வழியை இவரும் பின்பற்றினார்.


கிறிஸ்துவின் ஊழியர் - கொலைகாரனாக மாறினார்:
K.A.பாலை (பால்) போலீசார் கைது செய்து
அழைத்துச் செல்லும் படம்

அரசியலும், கிறிஸ்தவ ஊழியமும் கலந்துவிட்டால் ஊழலும், ஆசையும் வந்துவிடும். உண்மையாகவும், பரிசுத்தமாகவும் இருக்கமுடியாது. பல அரசியல் தலைவர்களோடும், மந்திரிகளோடும் நெருக்கம் அதிகரித்தது. தேர்தலுக்கும் அரசியல் கூட்டங்களுக்கும் அன்பளிப்பு பெயரில் கோடிகள் இங்கும் அங்கும் கை மாறின. இந்த போக்கு நீண்டுபோனால் அரசியல் விளையாட்டில் பணம் எப்படி மொத்தமாக வந்ததோ அதேபோல் மொத்தமாக பணம் கைவிட்டுபோய் பிச்சைக்காரர்களாக மாறினவர்கள் ஏராளம். இதைக்கூடவே எல்லா தவறுகளுக்கும், பாவங்களுக்கும், பணம் கையாடல்களுக்கும் தன் வலது கைப்போல கூடவே ஒத்துழைத்து உதவியாக இருந்த கூட பிறந்த சகோதரன் டேவிட் என்பவர் K.A.பால் நடவடிக்கையை மத்திய அரசாங்கம் C.B.I, மாநில அரசாங்கம், வருமான வரி ஆகியோர் கவனிக்க ஆரம்பித்துவிட்டனர் என்பதையும் K.A.பால் வழி தவறான பாதையில் பயணிக்கிறது என்பதை டேவிட் உணர்ந்தவுடன் சொத்தை பிரித்து கொடுத்துவிட்டால் தான் தனியாக பிரிந்து வாழ விரும்புவதாக கூறினார். அவ்வளவுதான் சொத்தில் பங்குகேட்டு பிரித்துகொடுத்தால் தன் ரகசிய வாழ்க்கையையும், தன் அரசியல் விளையாட்டு ரகசியத்தையும் அறிந்த ஒரே ஆள் தன் சொந்த சகோதரன் டேவிட் ஒருவர்தான். ஆகவே அவரை தீர்த்துகட்டிவிட்டால் ரகசியம் புதைந்துவிடும் என்று சகோதரனை கொலைசெய்ய K.A.பால் திட்டம் தீட்டினார்.

கூலிக்கு கொலை செய்யும் (கேரளாவில் கொட்டேஷன் என்பார்கள்) கொலை ஸ்தாபனம் இன்று ஒவ்வொரு மாநிலத்திலும் பெரிய அரசாங்க ஸ்தாபனம்போல் நடத்துகிறார்கள். ஆந்திராவில் K.A.பால் வசிக்கும் மாவட்டத்தில் கோதேஸ்வர ராவ் என்பவன் தலைமையில் பெரிய பணத்துக்கு கொலை செய்யும் கூலிப்படை இயங்குகிறது. K.A.பால் கோதேஸ்வர ராவ்வை இரகசிய இடத்தில் வரவழைத்து தன் சகோதரன் டேவிட்டை போட்டுதள்ள பேரம்பேசி முடித்தான். பல லட்சங்கள் கைமாறின. ஒரு சில தினங்களுக்குள் டேவிட் கொலை செய்யப்பட்டார். அதோடு பிரச்சனை முடிந்துவிட்டதாக K.A.பால் பெருமூச்சு விட்டார்.


இரண்டாவது கொலை

சில மாதத்திலேயே புதிய பிரச்சனை உருவானது. டேவிட்டை கொலை செய்த கூலி படை தலைவன் கோதேஸ்வர ராவ் K.A.பால்-ஐ பிளாக்மெயில் செய்து டேவிட்டை கொலை செய்ததை தினசரி பேப்பருக்கும் போலீஸ்சுக்கும் தெரிவித்துவிடுவேன் என்று பயமுறுத்தி பலமுறை, பல லட்சங்களை K.A.பாலிடம் வாங்கியவாறே இருந்தான். கொலைகாரன் எல்லை மீறிபோய் தனக்கு தீராத தலைவலியாக இருக்கிறான். தன் நிம்மதியை கெடுக்கிறான். ஆகவே இந்த கொலைகாரனை கூலிபடை தலைவனான கோதேஸ்வர ராவையும் இரகசியமாய் கொலை செய்ய வழி தேடினான். இம்முறை கூலி படை உதவியை நாடாமல் தந்திரமாய் போலீஸை கொண்டே என்கவுன்டர் என்று சினிமாவில் கேள்விபடுவாமே அந்தமுறையில் கொலை செய்துவிட தன் அபார மூளையை உபயோகித்தான்.

மிகப்பெரிய உலக பிரசித்தப்பெற்ற சுகமளிக்கும் ஊழியம் செய்பவன், ஒரு பொய்யை மறைக்க மற்றொரு பொய் - ஒரு கொலையை மறைக்க - மற்றொரு கொலை.

இப்படியாக தன் கிறிஸ்த ஊழியத்தின் மத்தியில், பல கொலைகளை செய்யும் திட்டங்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கும்போது K.A.பால் ஜெபம் செய்தால், ஜனங்கள் விழுகிறார்கள், பிசாசுகள் ஓடுகின்றன, வியாதிகள் சுகமானது என்று மேடையேறி சாட்சி கூறும் கூட்டத்தின் காட்சிகளும், சினிமா காட்சிப்போல் ஓடிக்கொண்டிருக்கின்றன.

K.A.பாலுக்கு போலீஸ் வட்டாரத்தில் தனி மரியாதை உண்டு. பெரிய பெரிய உயர்போலீஸ் அதிகாரிகள் பலர் அடிக்கடி K.A.பால் வீட்டுக்கு விருந்திலும், களி ஆட்டத்திலும் பங்குகொண்டு K.A.பாலும் மிக நெருங்கிய நண்பர்களானார்கள். அந்த நட்பை கொலை செய்ய பயன்படுத்த திட்டமிட்டான். போலீஸ்துறையின் மாநிலத்திலேயே மிக உயர்ந்த தலைமை பதவியில் உள்ள அதிகாரியிடம் தனக்கு பிளாக்மெயில் செய்து தொல்லை கொடுக்கும் கோதேஸ்வர ராவை தப்பி ஓடும்போது சுடப்பட்டு மரித்தான் என்று பேப்பரில் வாசிப்போமே, அதுபோல் என்கவுன்டரில் சுட்டு தன்னை இந்த பிரச்சனையிலிருந்து விடுவிக்க பல கோடிகளை கொலைக்கு விலையாக பேரம் பேசினான். அந்த உயர் அதிகாரியும் பேசிய அந்த கோடிகளை கொண்டுவந்து கொடுக்கும் இடம், நேரம், நாள் இவைகள் தீர்மானிக்கப்பட்டது. இவைகளை குறிப்பிட்டு வீடியோக்களை இரகசியமாக அமைத்து பல போலீஸ்களை யூனிபார்ம் இல்லாமல் வர ஏற்பாடு செய்து கையும் களவுமாக சகல ஆதாரத்துடனும் பணத்தோடு பிடித்து கைது செய்தார்.

அதற்குமுன் அந்த கோடி எதற்காக கொடுக்கப்படுகிறது என்பதை K.A.பால் வாயால் பேசவைத்து பணத்தொகை எத்தனை பெட்டியில் உண்டு என்பதையும் K.A.பால் வாயாலேயே வரவழைத்து அத்தனையம் வீடியோவில் பதிய வைத்து சாட்சியுடன் போலீஸ் வலையில் அகப்படவைத்தார் அந்த உயர் போலீஸ் அதிகாரி.

இந்த செய்தியை ஆந்திராவில் துப்பறியும் செய்தியைப்போல பல பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர்களும், CSI பாஸ்டர்களும் கதைகதையாக பேசிக்கொள்கிறார்கள்.

முதலில் இன்டர்நெட்டில் K.A.பால் பிடிபடுவதை பேரம் பேசுவதை, கைது செய்யப்படுவதை காட்டினார்கள். அதன்பின் ராஜ் டிவியில் அப்படியே சினிமாபோல பேசும் பேசுவது, பணம் ஒப்படைப்பது போலீஸ் வந்து கைது செய்து ஜீப்பில் ஏற்றுவது அத்தனையும் காட்டப்பட்டது என்பதை அறியும்போது இனி போலீஸ் விசாரணையில் K.A.பால் இன்னும் எத்தனை கொலைகள் செய்தான் என்பதும் வெளிவரும்போது கிறிஸ்தவ உலகம் மகா பெரிய அதிர்ச்சிக்குள்ளாகும். மட்டுமல்ல, பெரிய தலைக்குனிவும் உண்டாகும்.

கோடிகள் ரூபாய்க்கு மயங்காத அந்த உயர் போலீஸ் அதிகாரியை பாராட்டுகிறேன். K.A.பால் என்ற இவ்வளவு பிரசித்தி பெற்ற ஊழியரை தமிழ்நாடு, கேரளா கிறிஸ்தவ மக்கள் அதிகம் அறியவில்லை. ஆனால் ஆந்திரா, கர்நாடகா, ஒரிசா மற்றும் வடமாநில கிறிஸ்தவர்களிடையே இவர் மிக பிரசித்தமானவர்.

தமிழ்நாட்டிலும் சில பெரிய ஸ்டார் ஊழியர்கள், சுகமளிக்கும், தீர்க்கதரிசனம் கூறும், பொய்யாய் ஜெபத்தில் பெயர்களை கூறும் கோடீஸ்வர ஊழியர்களின் இரகசியங்களும், இரகசிய கொலைகளும் கொஞ்ச கொஞ்சமாக கசிய தொடங்கியுள்ளன. இவர்களெல்லாம் எப்போது அகப்படபோகிறார்களோ?.

இதை வாசிக்கும் வாசகர்கள் பலர் கூற கேட்டிருக்கிறேன். பரிசுத்த ஆவியானவரின் கிரியை இல்லாமல் இவருக்கு இவ்வளவு கூட்டம் கூடுமா? இத்தனை பேர் மேடையேறி சாட்சி சொல்வார்களா? சாட்சி கூறியவர்களின் புகைப்படம் பத்திரிக்கையில் கண்டோமே! என்றார்கள்.

K.A.பால் கூட்டம் இந்தியாவில் யாருக்கும் வராத கூட்டம் கூடியதே! பல மாநில முதல்வர்கள் மந்திரிகள், MPமார்கள் தலைமையில் நடந்ததே! சொந்த சகோதரனை சொத்து பிரிக்க சொன்ன ஒரே காரணத்துக்காக கொலை செய்த இரத்தம் படிந்த கையுடன்தானே இவர் கூட்டத்தில் ஜெபம் செய்தார்!, பலர் சுகம் ஆனார்கள்!, பலருடைய பெயர்களை கூறினார், பிசாசுகள் ஓடின!.

எந்த புற்றில் எந்த பாம்பு இருக்கிறதோ! ஒருநாள் கண்டிப்பாக வெளிவரும். வெளியே வந்தே தீரும்.

இப்படிப்பட்ட போலி ஊழியர்களைக்குறித்து பரிசுத்த வேதம் நமக்கு விளக்கமாக எழுதியுள்ளது. எனவே போலி ஊழியர்கள் குறிப்பாக சுகமளிக்கும் கூட்டங்கள் நடத்தும் ஊழியர்கள் விஷயத்தில் ஜாக்கிரதையாக இருப்போம்.

இவர்களுக்காக, இவர் மூலமாக தேவ நாமம் தூஷிக்கப்பட்டுவிடகூடாது என்று ஜெபிப்போமா? கடைசி காலத்தில் இது எல்லாம் நடக்கும். ஜெபிப்போம்.


Top
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM