|
|
|
கேள்வி: TVயிலும், வார பத்திரிக்கையிலும் பிரபல
TV ஊழியர்கள், ஏஞ்சல்
TV சாதுசுந்தர் செல்வராஜ், வின்சென்ட் செல்வகுமார், மோகன் சி.லாசரஸ் ஆகியவர்களைப்பற்றி
பாலியல் குற்றச்சாட்டுகளும், சொத்துப்பற்றிய குற்றச்சாட்டுகளும் புகைப்படங்களோடு வெளிவந்ததை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதைப்பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன?
|
பதில்: வேத வசனங்களைவிட்டு குறிப்பிட்ட இந்த ஊழியர்கள் விலகிபோய் கொண்டிருப்பதைக் குறித்து பக்கம்பக்கமாக எழுதி என் ஜாமக்காரன் வாசகர்களைமட்டும் எச்சரித்து பல வருடங்களாக எழுதி வந்தேன். பெரிய மாற்றங்கள் ஏதும் ஏற்படவில்லை. ஆனால் பெருமளவு ஜாமக்காரன் வாசகர்களுக்கு ஓரளவு விழிப்புணர்வு ஏற்பட்டதில் பெரும் திருப்தி உண்டானது. ஆனால் நீங்கள் குறிப்பிட்ட
TV சேனலிலும்,
ஜுன் மாத ஒரு பிரபல வாரப் பத்திரிக்கையிலும் பல்வேறு புகைப்படங்களுடன் வெளிவந்த சில சாட்சியில்லா செய்திகளையும்,
TVயில் நேருக்குநேர் நிகழ்ச்சியில் மோகன் சி.லாசரஸ் அவர்கள் கூறிய மறுப்பு செய்திகளையும் கிறிஸ்தவ மக்கள் கண்டுக்கொண்டிருக்க
சாதுசுந்தர் செல்ராஜும், வின்சென்ட் செல்வகுமாரும் கூறிய பகிரங்கமான
பொய்களையும் மக்கள் அறிய வாய்ப்பு ஏற்பட்டது. அவர்களை பேட்டி கண்டவர் கேட்ட
கேள்விக்கு இவர்கள் முன்னுக்குபின் முரணாக அளித்த பதில் அவர்களின்
போலி கிறிஸ்தவ வாழ்க்கையை பொதுமக்களுக்கு
வெளிப்படுத்திக்காட்டியது. நான் பல வருடமாக ஜாமக்காரனில்
இவர்களைப்பற்றி எழுதிய எழுத்தின் பலனைவிட அந்த குறிப்பிட்ட
TV சேனலிலும், குறிப்பிட்ட
பிரபல அரசியல் பத்திரிக்கையிலும் இவர்களைப்பற்றி புகைப்படத்துடன் செய்திகள் வெளிவந்தது. தமிழ்நாட்டிலும் - வெளிநாட்டிலும் வாழும் கிறிஸ்தவ தமிழர்களையே உலுக்கிவிட்டது. மீடியாவின் சக்தியின் தன்மை எத்தகையது என்று ஓரளவு ஊழியர்களும் கிறிஸ்தவர்களும் புரிந்துக்கொள்ள வழி உண்டானது.
ஆனால் தேவனை உண்மையாக ருசித்தவர்களோ உள்ளத்தில் மிகுந்த வேதனை அடைந்தார்கள். தினசரி பத்திரிக்கையில் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் போன்ற செய்திகள் வந்தால் அதில் அகப்பட்டவர்களின் பெயரை அறிய நானும், என் மனைவியும் அறிய தீவிரப்படுவோம். அந்த பெயர்களில்
கிறிஸ்தவ பெயர்கள் காணப்படுகிறதா? என்பதில் கவனம் செலுத்துவோம். ஒரு
கிறிஸ்தவ பெயரை கண்டாலும் எங்கள் உள்ளம் மிகவும் தொய்ந்துப்போகும். இந்தமுறை மேலே குறிப்பட்டவர்களின் பெயர்களையும்,
விசாரணை குற்றவாளிகளாக டிவியில் கண்டதும் கிறிஸ்தவ உலகம் தலைகுனிந்தது. ஆண்டவர் மனம் எத்தனையாய் வேதனைப்பட்டிருக்கும். இயேசு சொன்னார். உங்கள் மீது
பொய்யாய் குற்றம் சொன்னால் நீங்கள் பாக்கியவான்களாக இருப்பீர்கள். இந்த வசனத்தைத்தான் மேலே குறிப்பிட்ட ஊழியர்கள் இந்த செய்திகளுக்கு பதிலாக உபயோகிப்பார்கள் என்று எல்லாருக்கும் தெரியும். ஆனால் இந்த வசனத்தில் கவனிக்க வேண்டிய வார்த்தை பொய்யாய் குற்றம் சுமத்தினால்தான் பாக்கியவானாக இருப்பார்கள்?.... இவர்கள் தாங்கள் இதுவரை பேசிய
பொய் தீர்க்கதரிசனத்தின் விளைவுதான் இந்த அவமானம்.
|
கேள்வி: ஐயா, உங்களுக்கு நாங்கள் அனுப்பும் ஜெபகுறிப்புகளை உங்கள் அலுவலகத்தில் யார் வாசிக்கிறார்கள்? உங்கள் ஜெபத்துக்காக அந்த ஜெபகுறிப்புகள் எப்போது உங்கள்முன் வரும்?.
பதில்: இந்த கேள்வியைக்கேட்ட நீங்கள்
மனம்திரும்பின அனுபவமுள்ள விசுவாசியாக இருந்தால் உங்கள் பிரச்சனைகளை மற்றவர்களிடம் கூறி ஜெபிக்க சொல்லமாட்டீர்கள்.
உங்களுக்கும் - தேவனுக்கும் இடையில் இடைவெளியிருந்தால் அல்லது கர்த்தருக்குமுன் நீங்கள் ஜெபிக்கும்போது உங்கள் உள்ளத்தில்
குற்ற உணர்வுகள் இருந்தால் உங்கள் ஜெபத்தில் உங்களுக்கு நம்பிக்கையில்லாமல் போகும். அப்போதுதான் நீங்கள் பலருடைய ஜெபதயவை நாடவேண்டிவரும்.
ஆண்டவர் சொன்னார். ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து ஒருவருக்காக ஒருவர் ஜெபியுங்கள். ஆகவே உண்மை கிறிஸ்தவர்கள் மற்றவர்களுக்காக ஜெபிக்க கடமைப்பட்டவர்கள். ஒரு விசுவாசி
மனம் திரும்பின அனுபவமுள்ள விசுவாசியாக இருந்தாலும், அவர்களும்
மனிதர்களே. முக்கியமான பிரச்சனைகளில் ஜெபத்துக்கு பதில் தாமதப்படும்போது அவர்கள் நிச்சயம் சோர்ந்துபோவார்கள். அப்போது அவர்கள் தன்னைப்போலுள்ள நல்ல விசுவாசிகளோடு அல்லது ஆவிக்குரிய ஜெப ஐக்கியத்தில் உள்ளவர்களோடு பிரச்சனைகளைப் பகிர்ந்துக்கொண்டு அவர்களோடு இணைந்து ஜெபம் ஏறெடுக்கவேண்டும். அந்த ஐக்கியத்தில் ஜெபித்த இரண்டு அல்லது மூன்று பேர்கள் நீங்கள் பகிர்ந்துக்கொண்ட விஷயத்தை தங்கள் மனதில் மட்டும் வைத்து நீங்கள் அவர்களிடம் என் பிரச்சனைக்காக ஜெபியுங்கள் என்று நீங்கள் கேட்காமலே இந்த இரண்டு அல்லது மூன்று உண்மையான விசுவாசிகள் தங்கள் தனி ஜெபத்தில் நீங்கள் பகிர்ந்துக்கொண்ட விஷயத்தைக்குறித்து ஞாபகமாக உங்களுக்காக நிச்சயம் ஜெபிப்பார்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான ஜெபம் பிணியாளியைக்கூட இரட்சிக்கும் என்று வேதம் கூறுகிறது. அவர்களின் தனிப்பட்ட அந்த ஜெபம், உங்கள் ஜெபத்துடன் இணைந்து சக்தியுள்ள ஜெபமாக மாறும். அப்படிப்பட்ட ஜெபம் நிச்சியம் பலன் அளிக்கும். விசுவாசத்தில் பலவீனமானவர்கள் அல்லது மிக அதிக பிரச்சனைகளினால் மிகவும் சேர்ந்து போய் நொந்துபோனவர்கள் அல்லது மனந்திரும்பதலின் அனுபவம் இல்லாத கிறிஸ்தவர்கள் இப்படி பல தரப்பட்ட கிறிஸ்தவர்கள் ஜெபத்துக்காக ஜெப குறிப்புகளை குறிப்பிட்டு எனக்கும் கடிதம் எழுதுவார்கள். எனக்கு வரும் எந்த கடிதத்தையும் என் அலுவலகத்தில் என்னையும், என் மனைவியையும் தவிர யாரும்
பிரிப்பதும் இல்லை - படிப்பதும் இல்லை.
மற்ற ஊழியர்கள்போல உங்கள் ஜெப கடிதத்துக்கு ஜெபிக்க
கூலி படைகளை நான் வைத்துக் கொள்வதுமில்லை. இன்று
மாத சம்பளத்துக்கு ஜெபிக்க பல ஊழியர்கள் ஆட்களை நியமிக்கிறார்கள். மக்களின் பிரச்சனைகளுக்காக ஜெபிக்க
கூலி படைகளை அமைத்து அவர்கள் ஜெபிக்க கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து
AC மண்டபங்கள் அமைத்து அதை தங்கள் பத்திரிக்கைகளில், டிவியில் காட்டி
விளம்பரம் செய்யும் பிரபல அற்புத ஊழியர்கள் இப்போது பெருகிக்கொண்டே போகிறார்கள். அந்தவிதமான ஜெப கட்டிடங்களுக்கு கோடிகோடியாக பண வசூலும் அமர்களப்படுகிறது. இப்போது இப்படிப்பட்ட ஜெபிக்கும் கூலி படைகளும் பெருகிவிட்டனர். என்னிடம் எத்தனையோ பேர் வெளி வேலை கிடைக்காதவர்கள் உங்கள்
24 மணி நேர ஜெப கட்டிடத்தில் ஜெபிக்க விரும்புகிறேன். இப்போது நான்
ஜெபத்தை முழுநேர ஊழியமாக நேர்ந்துக்கொண்டேன் மாத சம்பளம் எவ்வளவு கொடுப்பீர்கள் என்றார்கள். இதை கேட்டு எனக்கு அதிர்ச்சியும், ஆச்சரியமுமாய் போனது. ஜெபிக்க
மாத சம்பளத்துக்கு விண்ணப்பிக்கும் கிறிஸ்தவர்களின் கேடுகெட்ட நிலையை அறியும்போது மனம் மிகவும் வேதனைப்படுகிறது. இப்போதுள்ள
கோடீஸ்வர ஸ்டார் ஊழியர்கள் ஜெப மண்டப திறப்புவிழாக்களை பல ஊர்களில் நடத்தி
கிறிஸ்தவர்களை சுயமாய் ஜெபிக்க விடாமல் கெடுத்து குட்டிச்சுவராக்கிவிட்டனர். இவர்களுக்கு பின்பலமாக பல பிஷப்மார் போஸ் கொடுத்துகொண்டிருக்கிறார்கள். கிறிஸ்தவர்களின் இன்றைய நிலை இதுதான்!. எப்படி
உயிர்மீட்சி உண்டாகும்? வாடகை கொலையாளிகளைப்போல மாத சம்பள ஜெப வீரர்கள், வீராங்கனைகள் கிறிஸ்தவ உலகில் பெருகிவிட்ட நிலையில்
உயிர்மீட்சி எப்படி வரும்?.
நீங்கள் கேட்ட கேள்விக்கு என் பதில்கூற நான் எங்கோ போய் சுற்றி வளைத்து இப்போதுதான் மையத்துக்கு வந்திருக்கிறேன். இன்றைய ஜெபகூட்டங்களின் நிலையை கண்டு என் உள்ளத்தில் உண்டான தாக்கம் இப்படி எழுத வைத்துவிட்டது. எனக்கு பலர் எழுதும் ஜெபகுறிப்புகளுக்கு நான் செய்வதாவது, முதலில் அவர்களுக்கு ஆலோசனை தேவை என்று நான் உணர்ந்தால் அவர்களுக்கு பிரச்சனை நீங்க, வியாதி சுகமாக தேவையான ஆலோசனைகளை எழுதுவேன்.
மனம்திரும்பின அனுபவம் இல்லாதவர்களுக்கு மனம்திரும்புதலைக்குறித்து அறிவித்து, வியாதிக்கு அல்லது பிரச்சனைக்கு பாவம் எப்படி காரணமாகிறது என்பதை விளக்கி எழுதுவேன். புருஷனைப்பற்றி அல்லது மனைவியைப்பற்றி அல்லது பிள்ளைகளைப்பற்றி அல்லது திருமணத்தைப்பற்றி இப்படி பல விஷயங்களுக்காக எழுதும் கடிதங்களுக்கு தேவையான வசன ஆலோசனைகளை எழுதி அவர்களுக்கு அறிவித்துவிட்டு அதன்பின்தான் அவர்கள் எழுதிய ஜெபகுறிப்புக்காக அந்த
கடிதம் வாசித்த உடனேயே அவர்களுக்காக ஜெபித்துவிடுவேன். இதுதான் நான் ஏற்படுத்திக்கொண்ட ஒழுங்காகும். நான் வெளிஊர்களில் இருந்தால் அந்தந்த நாளில் வந்த கடிதங்களின்
விவரங்களை என் மனைவிமட்டும் எனக்கு வந்த கடிதத்தைப்பிரித்து அதன்
ஜெப சாராம்சத்தை தொலைபேசியில் என்னிடம் கூறுவார். இதற்கென்று வெளிநாட்டிலிருந்தாலும், இந்தியாவில் வெளிஊர்களில் இருந்தாலும் இரவு 11 மணிக்குமேல் தொலைபேசியில் என் மனைவியுடன் தொடர்புக்கொண்டு மனைவி கூறிய கடிதத்தின் ஜெபகுறிப்புகளுக்காக
அந்த இரவே நான் எங்கிருந்தாலும் ஜெபித்துவிடுவேன். என் மனைவியும் அதே சமயம் அன்றே அந்த ஜெபகுறிப்புகளுக்காக ஜெபித்துவிடுவார்.
பதில்மட்டும் மிக தாமதமாக அவர்களுக்கு எழுதுவேன். அந்த என் பதில் கடிதமும்
ரெடிமேட் பதிலாக இருக்காது. நானே என் கைப்பட பதில் எழுதிவிடுவேன். இதுதான் உங்கள் கடிதத்துக்கு
நானும், என் மனைவியும்மட்டும் ஜெபிக்கும் ஒழுங்காகும். இந்த என் பதில் போதுமா? உங்கள் கேள்விக்கு ஒரு வரியில் என் பதில் என்ன தெரியுமா? உங்கள் ஜெபகுறிப்பு கடிதத்துக்கு எனக்கு பதிலாக ஜெபிக்க ஜெபிக்கும் கூலி படைகள் யாரையும் அமர்த்தவில்லை.
|
கேள்வி: பாண்டிச்சேரி
சகோ.சாம்சன்பால் அவர்கள் தன் மாத பத்திரிக்கையான
ஜீவ நீரோடையில் இப்போதெல்லாம் ஊழியர்களின் பெயர்களை பகிரங்கமாக குறிப்பிட்டு பிழையான உபதேசங்களையும்,
ஊழியங்களையும் கண்டிக்க தொடங்கிவிட்டாரே?
|
சகோ.சாம்சன் பால் |
பதில்: ஆம். பத்திரிக்கை நாகரீகம் கருதி அவர் ஊழியர்களின் பாவங்களையும், தவறான
உபதேசங்களையும் மறைமுகமாகவும் தெளிவாகவும் கண்டித்து உணர்த்தி பார்த்தார். ஆனால் வாசகர்கள் அல்லது விசுவாசிகள் அதை விளங்கிக் கொள்ளவில்லை. அந்த ஊழியர்களின் தவறுகளை குறிப்பிடும்போது அதை
யாரோ எங்கோ செய்ததுபோல நினைத்துக்கொண்டு மறுபடியும் அந்த
தவறான ஊழியர்களுக்கு பின்னே மக்கள்போகிறார்கள்
"அந்த மனிதன் நீர்தான்" என்று தாவீது ராஜாவை நோக்கி
நேருக்கு நேர் தாவீதின் தவறை அந்த ஊழியன் சுட்டிக்காட்டிய பின்தான்
தாவீதுக்கு புத்தி தெளிந்து தன் தவறை உணர்ந்தான். அதுபோல இப்போதெல்லாம் நம் மக்களுக்கு மேலோட்டமாக அல்லது ஜாடையாக கூறினால் விளங்குவதில்லை. ஆவியானவரும் இப்போது மக்களை கெடுக்கும்
பிசாசின் தந்திரமான ஊழியங்களை வெளிப்படையாக கண்டிக்கும் தைரியத்தை தமிழ்நாட்டில் சில ஊழியர்களுக்கு இப்போது கொடுத்துக்கொண்டிருக்கிறார்.
கர்த்தர் தவறு செய்யும் ஊழியர்களை பார்த்துக்கொள்வார், நாம் அவர்கள் ஊழியத்தில் தலையிடவேண்டாம் என்று நினைத்து ஒதுங்கிக்கொள்ளும் ஊழியர்கள் உண்டு. ஒரு சிலர் ஊழியர்கள் செய்யும் தவறை சுட்டிக்காட்டினால் தவறு செய்த ஊழியர்கள் அவர்களை சபித்துவிடுவார்கள் என்று பயப்படுகிறார்கள் அல்லது நம் ஊழியத்துக்கு வரும் காணிக்கையை ஜனங்கள் நிறுத்திவிடுவார்களோ என்று சில ஊழியர்கள் பயந்ததால்தான் கர்த்தர்
கல்லுகளைக்கொண்டு பேச வைப்பதைப்போல் தமிழ்நாட்டு
Indian Express என்ற தின பத்திரிக்கை
வார பத்திரிக்கைகள், அரசியல் பத்திரிக்கைகளில் இப்படி தவறு செய்யும் ஊழியர்களை புகைப்படத்தோடு பகிரங்கப்படுத்தி இவர்கள் தவறுகளை உலக மக்கள் அறியும் வகையில் அவர்களையும் கர்த்தர் அனுமதித்து உபயோகப்படுத்துகிறார் என்பதை
ஜுன் மாதம் வெளிவந்த பிரபல வார பத்திரிக்கை செய்திகளும், புகைப்படங்களும் வெளிப்படுத்தின.
தமிழ்நாட்டில் சகோ.Dr.ஞானப்பிரகாசம் அவர்களின்
பூரண சற்குணராகுங்கள் என்ற மாத பத்திரிக்கையில்
Rev.Dr.சேவியர், பாஸ்டர்.ஸ்டீபன்ராஜ் ஞானமுத்து ஆகியவர்களின் பத்திரிக்கைகள், இன்னும் வேறு சில பத்திரிக்கைகளும் வெளிப்படையாக ஊழியர்களின் பெயரை அறிவித்து அவர்கள் தவறை தவறென்று வெளிப்படையாக எழுத தொடங்கிவிட்டனர். இப்படி ஆங்காங்கு பல
ஜாமக்காரர்கள் எழும்பி வெளிப்படையாக இவர்களின் வண்டவாளங்களைப்பற்றி எழுதினால்தான் நம் கிறிஸ்தவ
சபை விசுவாசிகளின் மண்டையில் ஏறுகிறது. ஆகவேதான் சகோ.சாம்சன்பால் அவர்களும் இப்போதெல்லாம்
ஊழியர்களின் பெயர்களை குறிப்பிட்டே தவறுகளை சுட்டிக்காட்டி வாசகர்களை தெளிவுப்படுத்துகிறார்.
கேரளா மாநிலத்திலும் பெந்தேகோஸ்தே சபைகளில் உள்ள தவறுகளையும் சில
பெந்தேகோஸ்தே பாஸ்டர்கள் செய்யும் தவறுகளையும் சுட்டிக்காட்ட,
பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர்களையே கர்த்தர் உபயோகிக்க ஆரம்பித்துவிட்டார். கேரளாவிலும் அப்படி பல பத்திரிக்கைகள் ஜாமக்காரன் வேலையை செய்ய தொடங்கிவிட்டது. இது கடைசி நாட்கள் என்பது மக்களுக்கு விளங்க ஆரம்பித்துவிட்டது.
|
கேள்வி: வின்சென்ட் செல்வகுமார் - சாதுசுந்தர் செல்வராஜ் - மோகன் சி.லாசரஸ் ஆகியவர்களின் நேர்காணல் நிகழ்ச்சி சத்தியம்
TV சேனலில் அவர்கள்மேல் எழுந்த பாலியல் குற்றச்சாட்டுகளைப்பற்றி இரண்டு மணி நேரம் கேள்விகள் கேட்கப்பட்டது. அந்த நிகழ்ச்சிகளை நீங்கள் கண்டீர்களா?
சத்தியம்
TVயை நாலுமாவடி மோகன்.சி.லாசரஸ் அவர்களின் சொந்தமாக நடத்தும்
TV சேனல் என்று எல்லாரும் பேசிக்கொள்கிறார்களே அது உண்மையா?
பதில்: சத்தியம்
TV சேனலில் வந்த அந்த மூவரைப்பற்றிய நேர்காணல் நிகழ்ச்சியை நானும் கண்டேன். ஆனால் அது சகோ.மோகன் சி.லாசரஸ்ஸின்
சொந்த சேனலா? அல்லவா என்பதை அறியேன். ஆனால் நீங்கள் கேட்பதுபோல் பலருக்கு இந்த சந்தேகம் எழுந்துள்ளது.
அதேசமயம் இவர் சொந்த பத்திரிக்கையான இயேசு விடுவிக்கிறார் பத்திரிக்கையில் 2010ம் வருடம் மார்ச் மாத இதழில் 15ம் பக்கத்தில் சில
தொழிலதிபர்களும், தானும் சேர்ந்து சத்தியம்
TV சேனல் தொடங்கப்போவதாக அன்றே அறிவித்துள்ளார். இவருடைய பங்கு எவ்வளவு என்பது தெரியாது. எப்படியோ ஊழியர் தம்பி.பால்தினகரனைப்போல் ஒரு
தொழிலதிபராகிவிட்டார். வெறும் கிறிஸ்தவ நிகழ்ச்சி மாத்திரம் ஒளிப்பரப்பினால் லாபம் வராதே, அதனால்தான் மற்ற
TV சேனலைப்போல விளம்பரங்களை அதிகம் எதிர்ப்பார்க்கிறார். சினிமா காட்டாமல், சீரியல் காட்டாமல்
TV சேனல் நடத்தமுடியாது.
இயேசு விடுவிக்கிறார் ஊழிய வியாபாரம் அதற்கு கவர்ச்சி சாட்சிகள் சத்தியம்
TVக்கு கவர்ச்சி நிச்சயம் வரும். இவர்களைப்பற்றிய
பாலியல் குற்றச்சாட்டுகளைப்பற்றிய நேர்காணல் நிகழ்ச்சி நடத்தியதின்மூலம்
சத்தியம் TV என்று ஒன்று இருக்கிறது என்பதை தமிழ்நாட்டு மக்களுக்கு இதன்மூலம்தான் அறியமுடிந்தது. சரியான
வியாபார தந்திரம் என்றாலும் பாவ குற்றச்சாட்டு மூலமாகவா தன்
TVக்கு விளம்பரம் தேடவேண்டும்!.
|
கேள்வி: தமிழ்நாட்டில் திருச்சியில் தில்லை நகரில் உள்ள ரோஸ் கார்டன் மருத்துவமனை நடத்தும் செவிலியர் பள்ளியில் அரவாணி (அலி) ஒருவர் செவிலியர் (நர்ஸ் படிப்பு படிப்பதாக செய்திதாளில் கண்டோம் உண்மையா? அப்படி அவர் நர்சாக படிப்பை முடித்துவிட்டால் அவரை ஆண்கள் வார்டில் வேலைக்கு அமர்த்துவார்களா அல்லது பெண்களின் பிரசவ வார்டில் நர்சாக பணிபுரிவாரா?
பதில்: நீங்கள் குறிப்பிட்ட விவரங்களின்படி கடந்த வருடம் திருச்சியில் உள்ள நீங்கள் குறிப்பிட்ட செவிலியர் பள்ளியில் பயின்று கொண்டிருப்பதாக அறிந்தேன். அவர் படிப்பை முடித்துவிட்டாரா? நர்ஸ் தொழில் செய்கிறாரா என்ற விவரம் நான் அறியவில்லை. ஆனால் அவர் அங்கு நர்ஸ் பயிற்சி படிக்கும்போது அதன் இயக்குனர்
Dr.கோவிந்தராஜ் அவர்கள் தன் ஸ்தாபனத்தில் நர்ஸ் பயிற்சி படிக்கும் பிரியங்கா ஆரம்பத்தில்
அல்லிதுரை என்ற இடத்தில் கரகாட்டம் ஆடும் குழுவில் சேர்ந்து கரகாட்டம் ஆடியவர் என்றும்
நர்ஸ் படிப்பில் ஆர்வம் உண்டு என்று எனக்கு அறிவித்ததால் அவரை பள்ளியில் சேர்த்துக்கொண்டோம். எங்களுக்கும் இவர் நர்சிங் படிப்பு முடித்தால் ஆஸ்பத்திரியில்
எந்த பிரிவில் வேலைக்கு அமர்த்துவது என்ற சர்ச்சை எழுந்தது. முதலாவது விண்ணப்ப படிவத்தில்
ஆணா-பெண்ணா என்று எழுதவேண்டிய இடத்தில் இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட
டிரான்ஜென்டர் என்று குறிப்பிடும் அர்த்தத்தில்
(T) என்று குறிப்பிட்டுள்ளோம். இப்போதைக்கு இவரை
அறுவை சிகிச்சை பிரிவு அல்லது அவசர சிகிச்சை பிரிவு ஆகிய பிரச்சனையில்லாத இடத்தில்தான் வேலை செய்ய அனுமதிக்கமுடியும் என்றார். இவர் தன்
இன உறுப்பை ஆப்ரேஷன் செய்து மாற்றாதவரை பெண் என்றோ,
ஆண் என்றோ அழைக்க இயலாது. காரணம் நிச்சயம் இவர்களுக்கு
காம உணர்வு
(Sex feelings) உண்டு. அதன் காரணமாக பிரச்சனைகள் எழலாம். ஆஸ்பத்திரி இயக்குனர் குறிப்பிட்டதுபோல் இப்படிப்பட்டவர்களை ஒரு சில குறிப்பிட்ட வைத்திய பிரிவில் பணி செய்ய அனுமதிக்கலாம்.
|
|
|
|
|
|