கர்த்தருக்குள் அன்பானவர்களே,
உயிர்த்தெழுந்த நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன்.
இந்த ஜாமக்காரன் ஆசிரியர் குறிப்பை வேதனையுடன் எழுதுகிறேன். இந்த ஜாமக்காரனில் எழுதப்பட்ட செய்திகள் அனைத்தும் நான் சந்தோஷத்தோடு எழுதவில்லை. காரணம், இந்த ஜாமக்காரன் ஏறக்குறைய எல்லா பக்கங்களும் தவறு செய்த ஊழியர்கள்,
பாவம் செய்த ஊழியர்கள், கொலை செய்த அற்புத ஊழியர்கள் இப்படி கர்த்தரின் மனதை மிகவும் வேதனைப்படுத்திய செய்திகளைத்தான் இந்த ஜாமக்காரன் சுமந்து வந்திருக்கிறது.
இதில் குறிப்பிட்ட பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான சாது வேஷத்திலும், பல வேஷத்திலும் டிவி சீரியல் நடிகர்போல
கண்ணம்மா என்றழைக்கும் ஊழியர்களைப் பற்றி பல தவறுகளை கேள்விப்பட்டு கர்த்தருடைய பிள்ளைகள் மிகுந்த வேதனையில் ஆழ்ந்திருக்கிறார்கள். அநேகர் விசேஷ உபவாச ஜெபம் இந்த ஊழியர்களுக்காக ஏறெடுக்க தொடங்கியிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். மனித விசுவாசிகளுக்கே இப்படி மனவேதனை உண்டானதானால் இவர்கள் எல்லாருக்கும் இரத்தத்தை தானமாய் சிந்திய தேவன் எண்ணமாய் வேதனைப்பட்டிருப்பார்.
இத்தனை வெளியரங்கமாக ஊரறிய, உலகறிய இவர்களைப்பற்றிய குற்றச்சாட்சிகள் எழும்பினாலும் இவர்களை தொடர்ந்து கண்மூடிதனமாக பின்பற்றும் கிறிஸ்தவ கூட்டம் இருக்கிறதே! அவர்கள் மாறவேமாட்டார்கள்! இவர் ஊழியமும் நிற்காது, அது இன்னும் வளரும் என்பதையும் நான் அறிவேன். பிசாசுக்கு இப்படிப்பட்ட ஊழியர்கள்தான் தேவை. ஆகவே அவன் உதவி இவர்களுக்கு எப்போதும் கிடைக்கும். இவர்கள் எவ்வளவு
பொய்களை அள்ளி வீசினாலும் அது பிசாசுக்கு சந்தோஷம். ஆகவே அவன் இவர்களுக்கு பக்கபலமாக இருப்பான். இந்த பிழையான ஊழியர்களை
அடையாளம் காட்டும் என்னைப்போன்றவர்களை குற்றம் சொல்லும் ஆவி -
குறை சொல்லும் ஆவி என்று கூறி திருப்பத்தூர் அல்லது
நாலுமாவடியில் சென்று ஜாமக்காரன் அழிந்துபோக இவர்கள் - உபவாச ஜெபம் ஏறெடுப்பார்கள். ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்பே இந்த 5 ஊழியர்காரர்களும் ஜாமக்காரனை அழிக்கப்படவேண்டும் என்று ஜெபிக்க, அதற்கு
அல்லேலுயா கூறவும், ஆமென் போடவும் ஒரு பெரிய கூட்டம் வண்டியேறி - வாடகைக்கு வேன் அமைத்து மாதமாதம் சென்று ஜெபிப்பார்கள். ஏற்கனவே பலமுறை அவர்கள் தவறை சுட்டிக்காட்டியதற்காக என்னை அவர்கள் ஜெபத்திலேயே சபித்தார்கள். இவர்களைப் பின்பற்றும் கூட்டங்களை யோசிக்கும்போது கர்த்தர் எப்படி இவர்களை விளங்கவைக்கபோகிறார்? எப்போது விளங்கவைப்பார்? என்று மன ஏக்கமும், பாரமும் எனக்குள் கூடுகிறது.
இவர்கள் கூட்டத்தில் பொய்யான சாட்சிகள் கூறவும் ஆட்கள் பெருகுகிறார்கள். இவர்கள் பத்திரிக்கையில் புகைப்படத்தோடுவந்த சாட்சிகளில் பெரும்பாலானோரை நான் நேரில் சந்தித்தேன். சுகம் ஆகாமலே சுகம் ஆயிற்று என்று கூறியிருப்பதை அவர்களே ஒத்துக்கொண்டார்கள். ஜெபநேரத்தில் சுமாகியிருக்கும் என்ற விசுவாசித்தில் அப்படி கூறினேன் என்றார்கள். இவர்கள் பலவீனம் என்னவென்றால் தங்கள் புகைப்படம் பத்திரிக்கையிலும், டிவியிலும் காட்டப்படுகிறதை இந்த விசுவாசிகள் விரும்புகிறார்கள். இந்த பலவீனத்தை அறிந்த இந்த ஊழியர்கள் இதையே விளம்பரமாக்கி எளிதாக வியாபாரமாகவும் மாற்றி பணம் உண்டாக்குகிறார்கள். பிறந்தநாள் புகைப்படம் இந்த ஊழியர்களுக்கு அனுப்பி அதோடு பெருந்தொகை காணிக்கையை அனுப்பினால் இவர்கள் போட்டோவை டிவியில் போட்டு காண்பித்து இவர்களுக்காக சிறுஜெபம் ஏறெடுக்கிறார்கள். ஒரு டிவி நிகழ்ச்சிக்கு
45,000 ரூபாயை இவர்களுக்கு அனுப்பி தங்கள் குடும்ப புகைப்படத்தையும் அனுப்பினால் உடனே அந்த புகைப்படத்தை டிவியில் காட்டி ஜெபிக்கிறார்கள்.
பால்தினகரன் முதல் ஏறக்குறைய எல்லா டிவி நிகழ்ச்சி நடத்தும் அற்புத ஊழியர்கள் பலரும் இப்படித்தான் மிக எளிதாக பணம் சம்பாதிக்கிறார்கள். இவர்களுக்கு காணிக்கை அனுப்புபவர்கள் யாரும் உண்மையான கிறிஸ்தவர்களாக நிச்சயம் இருக்கமுடியாது.
வலதுகை செய்வது இடதுகை அறியாதிருப்பதாக என்று இயேசு சொன்னதற்கு இவர்கள் கீழ்ப்படிந்திருந்தால் தங்கள் காணிக்கையை தங்கள் போட்டோவை விளம்பரம் செய்ய அனுமதித்திருப்பார்களா? இந்த ஊழியர்களும்
உண்மையானவர்களல்ல என்பதை கிறிஸ்தவ விசுவாசிகளும் நம்பமறுக்கிறார்கள். உண்மையான ஊழியர்கள் புகைப்படத்தையும், இப்படி அனுப்பும் காணிக்கையையும் ஊக்கப்படுத்தமாட்டார்கள். ஆகவே இந்த ஊழியர்களும் உண்மையில்லை என்பது உறுதியாகிறது - அப்படியே சாட்சிகூறும் கிறிஸ்தவர்களிடமும் உண்மையில்லை என்பது தெளிவாகிறது. தங்கள்
பெயர் - புகைப்படம் விளம்பரப்படுத்த இந்த கிறிஸ்தவர்கள் துணிகரமாக பொய்சாட்சி கூறுகிறார்கள். பெரும்பாலும்
சர்க்கரை வியாதி - கேன்சர் வியாதி இப்படிப்பட்ட வியாதியஸ்தர்கள் இப்போது மருந்து சாப்பிட்டுக்கொண்டே வியாதி சுகமானது என்று இவர்கள் பத்திரிக்கையில் சாட்சி எழுதுகிறார்கள் - மேடையேறி சாட்சியும் கூறுகிறார்கள்.
அப் 16:17ல்
குறிசொல்கிற பிசாசு பிடித்த பெண் ஒருவள் பவுலைக் காண்பித்து இவர்கள் தேவனுடைய ஊழியக்காரர்கள் - இரட்சிப்பின் ஊழியத்தை இவர்கள் அறிவிக்கிறார் என்று இவர்கள் போகும் இடமெல்லாம் கூடவே வந்து சாட்சி கூறினாள். இந்த சாட்சி உண்மையான சாட்சிதான்.
நாலுமாவடி பத்திரிக்கை - இயேசு அழைக்கிறார், வின்சென்ட் செல்வகுமார், ஆனந்த்ஸ்ரா, அற்புத ஊழியர். ஜான் சாலமோன், ராபின்சன், ஜவஹர் சாமுவேல், எசேக்கியா பிரான்சிஸ் போன்ற ஏராளமான ஊழியர்கள் பத்திரிக்கைகளில் வெளிவரும் பொய்சாட்சிகள்போல் அல்ல இது. பவுலைப்பற்றி சாட்சி கூறியவள் நூற்றுக்குநூறு உண்மையான சாட்சியைத்தான் பவுலைப்பற்றி கூறினாள். பவுல் பிசாசின் ஊழியன் அல்ல. அவர்
உண்மையான தேவனுடைய ஊழியன் என்றாள். அதுவும் பவுல் செய்யும் ஊழியம்
இரட்சிப்பின் சுவிசேஷம் அறிவிப்பதாகும் என்றாள். அவர் ஊழியம் வெறும் சுகமளிக்கும் ஊழியம் மட்டுமல்ல இது பவுலை எத்தனையாய் பெருமைப்படுத்தும் என்பது அதன் அர்த்தம். அதுவும் பிசாசு பிடித்த அந்த பெண்ணின் சாட்சியை ஊர் ஜனங்கள் நிச்சயம் நம்புவார்கள், ஆனால்
பவுல் அப்படிப்பட்ட சாட்சி விரும்பவில்லை, அந்தசாட்சி அவரை (பவுலை) பெருமைப்படுத்தும் என்பதை அறிவான். அதனால் பவுலுக்கு அவள் சாட்சி
கோபத்தை உண்டாக்கியது. அந்த உண்மை சாட்சியையே பவுல் கடிந்துக்கொண்டு விரட்டியடித்தார். ஆனால் நம்ம ஊர் அற்புத மேடை ஊழியர்கள் தங்கள் கூட்டத்தில் உள்ளவர் பொய்சாட்சி கூறினாலும் அப்படிப்பட்ட கடிதத்தையும், அவர்கள் புகைப்படத்தையும் மிகவும் எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார்கள்.
கர்த்தரைமட்டும் மகிமைப்படுத்தும் ஊழியனுக்கும்,
தனக்கு பெருமை சேர்க்கும் ஊழியனுக்கும் உள்ள வித்தியாசத்தை இதன்மூலம் விளங்கிக்கொள்ளமுடிகிறதா! இதற்கு அப்புறமும் பொய் பேசும் இப்படிப்பட்ட ஊழியர்களை நீங்கள் நம்புவதும், உதவுவதும் உங்கள் இஷ்டம்.
கர்த்தர் கிருபையாக இந்தியாவில் நம் தமிழர்களுக்காக 24 மணி நேரமும் காண்பதற்கு கிறிஸ்தவ டிவி சேனல் இரண்டை அனுமதித்துள்ளனர்.
ஒன்று
ஏஞ்சல் டிவி, அடுத்தது ஆசீர்வாதம்
(Blessing TV) டிவி.
ஆரம்பத்தில் இந்த இரண்டு டிவி சேனல்களுக்காக நாம் பெருமைப்பட்டோம். கர்த்தரை துதித்தோம். ஆனால், அதே
டிவி சேனலில் நம் வேத வசனத்துக்கு முரனாண உபதேசங்களும் - பொது மக்கள்கூட கிறிஸ்துவிடம் நெருங்கமுடியாத அளவு அநேக தவறான நிகழ்ச்சிகளைக் காண்பிப்பதை அறியும்போது அதை நடத்துகிற
சாதுசுந்தர் செல்வராஜ் - வின்சென்ட் செல்வகுமார், ஆலன்பால் ஆகியவர்களை நினைத்து மனம் மிகவும் வேதனைப்படுகிறது. கர்த்தர் கிருபையாக கொடுத்ததை இவர்கள் தவறாக பயன்படுத்துகிறார்களே?.
22.7.2012 ஞாயிறு அன்று ஆசீர்வாதம் டிவி பிரசங்கத்தில் சகோ.ஆலன்பால் கூறுகிறார். நான் இங்கு நின்றுகொண்டே இங்கு கூட்டத்தில் உட்கார்ந்துகொண்டிருக்கும் அத்தனைப்பேர்களையும் அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதையும், அவர்களுக்குள் என்ன வியாதி இருக்கிறது என்பதையும், என்ன பிரச்சனை அவர்களுக்குள் இருக்கிறது என்பதையும்
என்னால் பார்க்கமுடிகிறது. அதற்கு பெயர்தான் ஆவிக்குரிய கண்கள் என்பதாகும். அந்த ஆவிக்குரிய கண்கள் ஊழியக்காரர்களுக்கு அவசியம் தேவை. இவர் கூறியதின் அர்த்தம் என்ன?
நான் கடவுள் என்று சொல்லாமல், ஆனால் மறைமுகமாக ஜனங்கள் எண்ணும்படி அறிவிக்கிறார். இது எத்தனை பயங்கரம்! அது அவருக்கே ஆபத்தாக முடியுமே? தேவகோபம் நிச்சயம் அவர்மேல் வருமே! ஏசா 42:8,48:11 இவர் இப்படி பலமுறை டிவியில் பேசியிருக்கிறார். அது பிசாசின் சிந்தையல்லவா! அப்படித்தானே அதை வேதம் கூறுகிறது. இதை எல்லாம் அறிவிப்பதால் சந்தோஷமில்லாமல் இந்த ஜாமக்காரனை வெளியிடுகிறேன் என்று எழுதினேன்.
நீங்கள் அனுப்பிய எல்லா ஜெப குறிப்புகளுக்காகவும், நம்முடைய பிள்ளைகளின் பள்ளி - கல்லூரி சேர்க்கைக்காகவும் விசேஷ ஜெபம் ஏறெடுக்கப்பட்டது.
நாம் அனைவரும் ஊழியர்கள் எல்லாருக்காகவும் தினமும் ஜெபிக்கவேண்டியது எத்தனை அவசியம் பார்த்தீர்களா? ஜெபியுங்கள். வாசகர்கள் யாவருக்காகவும் தொடர்ந்து நானும் ஜெபிக்கிறேன்.
|