|
|
|
இந்தியாவின் 66வது சுதந்திர தினம் |
|
FMPB என்ற ஆசியாவின் மிகப்பெரிய மிஷனரி இயக்கத்தின்
துணைத்தலைவராக தெரிந்தெடுக்கப்பட்டிருக்கும் என் அன்பு ஆவிக்குரிய மகனும், ஆவிக்குரிய தம்பியுமான
சகோ.ரெஜினால்ட் அவர்களை பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்.
சேலம் மத்திய அரசாங்க ஸ்டீல் பிளாண்ட் (இரும்பாலை) அலுவலகத்தில் மிக முக்கிய உயர்ந்த பொறுப்பில் பணிசெய்து கொண்டிருந்தவர்
சகோ.ரொஜினால்ட் அவர்கள். இயேசுகிறிஸ்துவை சொந்த ரட்சகராக ஏற்றுக் கொண்டு
FMPB மிஷனரி இயக்கத்தில் ஜெபவீரராக இணைந்தார்.
FMPBயின் பங்களாராகவும் தன்னை இணைத்துக்கொண்டு வெளி உலகத்தில் தன்னை காட்டிக்கொள்ளாமல்
FMPBயின் உள்பிரச்சனைகளை, மிஷனரிகளின் பிரச்சனைகளை, மிஷனரி பணிதளங்களில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்த்து வைத்தல் போன்ற பல முக்கிய விஷயங்களில் சகோ.ரெஜினால்ட் அவர்களின் பங்களிப்பும், ஆலோசனையும்
FMPB சரித்திரத்தில் இடம்பெற வேண்டியவையாகும்.
அவரின் தாழ்மை தன்னைவிட இளையவர்களையும் அண்ணன் என்றும்
அக்கா என்றும் அழைக்கும் நாகரீகம் என்னை மிகவும் கவர்ந்த விஷயமாகும். அவருக்கு ஏற்றதுணையாக அவர் மனைவின் ஒத்துழைப்பு குறிப்பிடத்தக்கதாகும். பொறுப்புள்ள வேலையை முடித்து மாலை வீடுவந்து சேர்ந்ததும், உடனே பையில் பைபிளை எடுத்து வைத்துக்கொண்டு, தன் மனைவியையும் அழைத்து
FMPBயின் பிராந்திய ஜெபகூட்டங்கள் நடத்த, பிரசங்கம் செய்ய அவர் அலைந்த அலைச்சலை நான் நன்கு அறிவேன்.
FMPB சம்பந்தமாக எந்த பணிதளத்திலும் எந்தவிதமாக காரியத்துக்கும் ஜெபத்தோடு நேரில் சென்று பிரச்சனைகளை மிக லாவகமாக கையாளுவார்.
பெத்தேல் ஐக்கியத்தின் பொறுப்பெடுக்க, அந்த காலத்திலேயே
Dr.சாம்கமலேசனால் அவர்களால் இவர் பெயர் அறிவிக்கப்பட்டவர்,
FMPBயின் மிஷனரி ஸ்தாபனத்தின் பொதுசெயலராக தம்பி.கிருபாகரன் அவர்கள் ஓய்வு பெற்றபின் அந்த பொறுப்புக்கு தெரிந்தெடுக்கப்பட்ட நபர்களின் பட்டியலில் இவர் இடம்பெற்றவர். மட்டுமல்ல, அந்த பொறுப்புக்கு இவர் தகுதியானவர் ஆவார். அன்று நான் இந்த இரண்டு பெரிய ஸ்தாபனங்களின் பொறுப்பை நீங்கள் எடுத்தால் என்ன? என்று சகோ.ரெஜினால்டை கேட்டபோது அவர்தான் வகிக்கும் மத்திய அரசாங்க பொறுப்பை விடுவதா வேண்டாமா? என்ற குழப்பத்தில் இருந்தார். ஆனால் இன்று அந்த பதவியில் முறையான
ஓய்வுபெற்று சுதந்திரமாகவும் முன்பைவிட தீவிரமாகவும்
FMPBயின் துணைத்தலைவர் பொறுப்பை நிறைவேற்றுவார் என்பதில் சந்தேகம் இல்லை. இப்போது அவருக்கு கிடைத்திருக்கும் இந்த பதவி மிகப்பொருத்தமானது ஆகும். சகோதரனை ஜாமக்காரன் சார்பில் வாழ்த்துகிறேன்.
என்னை கனப்படுத்துகிறவனை நானும் கனப்படுத்துவேன். 1 சாமு 2:30.
|
|
சகோ.DGS.தினகரன் ஆயுளுக்காக
பரலோகம்வரைப்போன சகோ.சாதுசுந்தர் செல்வராஜ்: |
சத்யவான்-சாவித்திரி என்ற இந்துமத புராண கதையைப்போல, சகோ.D.G.S.தினகரன் அவர்கள் மரண படுக்கையில் இருக்கும்போது சகோ.சாதுசுந்தர் செல்வராஜ் (ஏஞ்சல்
TV) ஆகிய நான் பரலோகம் போனேன். அங்கு சிம்மாசனத்தில்
இயேசுகிறிஸ்து வீற்றிருந்தார். அருகில் சகோ.தினகரன் நிற்பதை கண்டேன். அப்போது நான் இயேசுவோடு கர்த்தாவே பலத்தின் மிகுதியால் மனிதனின் வயது 80 என்று வேதத்தில் எழுதியுள்ளதே!. இன்னும் 7 வருஷம் சகோதரனுக்கு கூட்டிக்கொடுத்தால் நிறைய பேருக்கு அவர் ஊழியம் பிரயோஜனமாக இருக்குமே என்றேன். ஆனால் ஆண்டவர் என் வேண்டுகோளை மறுத்துவிட்டார். நான் உடனே
பூலோகம் திரும்பிவிட்டேன். அப்போது சென்னையில் சகோ.தினகரனின் சுகத்துக்காக ஜெபித்துக்கொண்டிருந்தவர்கள் எல்லாரிடமும் நான்தான் முதலில் நான் அறிந்த பரலோக செய்தியை அறிவித்தேன்.
இனி சகோ.தினகரன் பிழைக்கமாட்டார் அவர் மரித்துவிடுவார் என்று அறிவித்தேன். நான் அறிவித்த சில மணிநேரத்தில் சகோ.தினகரன் அவர்கள் மரித்துப்போனதை அறிவித்தார்கள்.
2012 ஜுன்
22 ஏஞ்சல் டிவியில் சகோ.சாதுசுந்தர் செல்வராஜ் - ஆனந்த் என்பவர்களின் சம்பாஷைணையில் கூறப்பட்டது. இந்த அளவு மோசமான பொய் அனுபவத்தை தம்பி.பால்தினகரன் குடும்பம் நம்புமா?
இயேசு அழைக்கிறார் விசுவாசிகள் அல்லது மோகன் சி.லாசரஸ் ஆகியவர்கள் சாது சுந்தர் செல்வராஜின் இந்த அனுபவத்தை நம்புகிறார்களா? என்று கேட்டு சொல்லுங்கள். வரவர இவர்களின்
தரிசன பொய்கள் கட்டுக்கடங்காமல் போய்கொண்டிருக்கிறது என்பதை இனியாவது ஏஞ்சல் டிவியை பார்க்கும் கிறிஸ்தவ விசுவாசிகள் விளங்கிக்கொண்டால் நல்லது.
|
|
13 ஜுலை
2012 வெள்ளி காலை 8 மணியிலிருந்து
9 மணிக்குள் ஒரு குறிப்பிட்ட ஊழியர் எழும்பூர் சபையை நடத்துபவர்
ஏஞ்சல் டிவியை கண்டனம் செய்து பேசினார். பிரசங்கத்தில் ஏஞ்சல் டிவி என்றே தெளிவாக குறிப்பிட்டு
வெளிப்படுத்தின விசேஷத்தில் உள்ள செய்தியை, அந்திக்கிறிஸ்துவின் வரவை ஏஞ்சல் டிவி ஊழியர்கள் மிகவும்
தவறாக பிரசங்கிக்கிறார்கள். ஏஞ்சல் டிவி செய்தியை நம்பாதீர்கள் என்றே பேசினார். பிரசங்கத்திலும் பத்திரிக்கையின் மூலமாகவும் பிழையான பிரசங்கத்தை, பிழையான ஊழியர்களை, மக்களுக்கு அடையாளம் காட்டிய உண்மை ஊழியர்களின் வரிசையில், இப்போது டிவியிலும், சில ஊழியர்கள்
ஏஞ்சல் டிவி, ஆசீர்வாதம் டிவியின் தவறான உபதேசங்களை சுட்டிக்காட்டி பிரசிங்கிப்பது
கிறிஸ்தவ உலகில் நல்ல ஆரோக்கியத்தின் ஆரம்பம் என்று கருதுகிறேன்.
|
|
கர்த்தருக்குள் மரித்த சகோதரி.குளோரி நல்லதம்பி |
|
|
Sis.குளோரி நல்லதம்பி |
சென்னை நகரில் கிண்டியில் வாழ்ந்த சகோதரி
Mrs.குளோரி நல்லதம்பி.BA,BT., அவர்கள்
St. Thomas Hr. Sec. Schoolலில் டீச்சராக வேலைசெய்து
ஓய்வு பெற்றவர். இவர் திரு.நல்லதம்பி (St.
Paul's Hr. Sec. Schoolலில் திறமையான கணக்கு ஆசிரியர்) அவர்களின் மனைவியும், சென்னை பிரபல ஆடிட்டரும்,
St. Thomas Mount - CSI English Wesley Church
சபையின் முக்கிய பிரமுகருமான Mr.Livingston
Nallathambi அவர்களின் தாயாருமாவார். இவருக்கு
Dr.Mrs.Benita Samuel,MD.,
Dr.Mrs.Enda Wesly என்ற இரண்டு மகள்களும், பேரப்பிள்ளைகளும் உண்டு.
இவர் நீண்டகாலமாக ஜாமக்காரன் வாசகர் குடும்பத்தை சேர்ந்த வராவார். இவர் நல்ல இரட்சிப்பின் அனுபவம் பெற்ற, ஆத்தும பாரம் உள்ளவராவார். ஜெபகுறிப்புகள் எழுதி வைத்து நீண்டநேரம் ஜெபிக்கும் ஜெப வீராங்கனையாகவும் வாழ்ந்தவர்.
Scripture Union என்ற சிறுவர் ஊழிய ஸ்தாபனம் மூலமாக
அவர்களின் பத்திரிக்கை ஊழியங்களில் தன் பெரும் பங்கை நிறைவேற்றினார். நிறைய துண்டுபிரதிகளை தயாரித்து எழுதி தன் செலவிலேயே அவைகளை அச்சடித்து விநியோகம் செய்து, ஊழியர்களுக்கும் இலவசமாக கொடுத்து விநியோகிக்க உதவினார். ஜெப ஐக்கிய கூட்டங்களில் தொடர்ந்து பங்குகொண்டு மற்றவர்களுக்காக ஜெபிப்பார்.
தன் பிள்ளைகளையும் மிகவும் கட்டுப்பாட்டுடன், சில சமயங்களில் அளவுக்குமீறிய கட்டுப்பாட்டுடனும் வளர்த்து, இன்று அவர்கள் அத்தனைபேரும் உயர்ந்த பதவியில் இருந்து கொண்டு பலவிதமான ஊழியங்களில் பங்குகொண்டும் சாட்சியுடன் வாழ்கிறார்கள். தன் கணவரையும் ஜெபிக்கும் ஆவிக்குரியவராக மாற்றியதில் இவரின் பங்கு மிக அதிகம். கணவனும், மனைவியுமாக அதிகாலையில் இவர்கள் இணைந்து ஜெபிப்பது நல்லசாட்சி. பொதுவாக நானும் - என் குடும்பமும் கர்த்தரையே சேவிக்கிறோம், கர்த்தருக்கு சாட்சியாக வாழ்கிறோம் என்று இவர் தைரியமாக கூறக்கூடிய சிலாக்கியம் பெற்றவர் ஆவார்.
நான் ஒவ்வொருமுறையும்
வெளிநாட்டு ஊழியத்துக்காக சென்னை விமான நிலையத்துக்கு செல்லும் வழியில் சகோதரி.குளோரி நல்லதம்பி அவர்களோடு இணைந்து ஜெபித்து செல்வது எனக்கு ஆவிக்குரிய தைரியத்தை கொடுத்தது. அதற்காக தேவனைத் துதிக்கிறேன்.
என் ஜாமக்காரன் ஊழியத்தில் நான்
சரிப்படுத்தவேண்டிய குறைகளை சிரித்தப்படியே என்முன் நேருக்குநேர் தைரியமாக கூறிய ஒரே நபர் திருமதி.குளோரி நல்லதம்பிதான் என்றால் அது மிகையாகாது. என் இரண்டு பிள்ளைகளான
Dr.சாமுவேல், மகள்
Mrs.ஷீபா பிரபுசிங் ஆகியவர்களின் ஆரம்பகால படிப்பின் முன்னேற்றத்துக்கு அவர்கள் சிறுவர்களாக இருந்தபோது தன் வீட்டிலேயே தங்க வைத்து படிப்பில் உயர்த்திவிட்டது திருமதி.நல்லதம்பி அவர்களின் குடும்பமாகும் என்று நன்றியுடன் இச்சமயம் கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன். அப்பேர்பட்ட நல்ல ஆவிக்குரிய சகோதரியின் இழப்பு மனதுக்கு வேதனை கொடுத்தாலும், அவர் ஆவிக்குரிய வாழ்க்கை, ஜீவியம், சாட்சி, பிள்ளைகளை வளர்த்திய விதம், செய்த ஊழியம் இவைகள் யாவற்றிற்காகவும் நாங்கள் குடும்பமாக திருமதி.குளோரி நல்லதம்பி அவர்களுக்காக தேவனை துதிக்கிறோம். விட்டுப்போன அவருடைய கணவர் மற்றும் பிள்ளைகளுக்கும் கர்த்தர் ஆறுதல் அளிக்க ஜெபிக்கிறோம்.
|
|
|
|
Shri.Pranab Mukherjee |
இந்தியாவின் குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின்
14வது குடியரசு தலைவராக
Shri.பிரணப் முகர்ஜி அவர்கள் தெரிந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்த இவர் மத்திய அமைச்சரவையில் பல்வேறு துறைகளில் மத்திய அமைச்சராக இருந்தவர். இவர் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு முக்கிய பொறுப்புகளையும் வகித்துள்ளார். இவர் கடைசியாக
நிதி அமைச்சராக பதவி வகித்து இப்போது இந்தியாவின் தலைமகனாகிவிட்டார்.
புதிய ஜனாதிபதி
Shri.பிரணப் முகர்ஜி அவர்களை ஜாமக்காரன் சார்பில் வாழ்த்துகிறோம். இவர் பணி சிறப்பாக அமைந்திட ஜெபிப்போம். தேசத்தை ஆளுகிறவர்களுக்காக ஜெபிப்பது நமது கடமையாகும். ஜெபிப்போம்.
|
|
புதிதாக
e-மணிஆர்டர் மூலம் காணிக்கை அனுப்புவர்கள்கூடவே தனிகடிதம் எழுதி காணிக்கை எதற்காக அனுப்புகிறீர்கள் என்பதை குறிப்பிட்டு பத்திரிக்கைகாகவா? அல்லது ஊழியத்துக்காகவா என்பதையும் குறிப்பிட்டு, அதோடு உங்கள் ஜெபக்குறிப்புகளையும் எனக்கு எழுதுங்கள். நீங்களும் தேவனைத் துதித்து உங்கள் வேண்டுதல்களை ஜெபத்தில் சமர்பியுங்கள். ஆண்டவர் பதில் கொடுப்பார். நானும் தொடர்ந்து ஜெபிக்கிறேன்.
|
|
|
|
|
|
|