ஏஞ்சல் TV மூலம் வரப்போகும் பெரும் ஆபத்து

கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும் (வந்துவிட்டது). 1தீமோ 4:1-4.

இயேசுகிறிஸ்துவின் ஆரோக்கியமான வசனங்களையும் தேவ பக்திக்கேற்ற உபதேசங்களையும் ஒப்புக்கொள்ளாமல் . . . . . (இவர்கள்) வேற்றுமையான உபதேசங்களைப் போதிக்கிற(வர்களாய் இருக்கிறபடியால்) இப்படிப்பட்டவர்களை விட்டு விலகு . . . . . . . . . . . . . . . . . . கொள்கையின் விபரீதங்களுக்கும் விலகு. 1 தீமோ 6:3-6,20.

ஏஞ்சல் TVயும், ஆசீர்வாதம் TV-யும் கிறிஸ்துவை அறிவிக்க நல்ல ஒரு மீடியா என்று நான் ஏற்கனவே ஜாமக்காரனில் எழுதினேன். ஆனால், அதை பொறுப்பெடுத்தவர்களின் பிழையான பிரசங்கத்தையும் அவர்களின் செய்கைகளையும் கண்டால் . . . . . இவர்களோடு நாலுமாவடி மோகன் சி.லாசரஸ் அவர்களின் தவறான வெளிப்பாடுகளை காணும்போது இவர்கள் மூவரும், ஆசீர்வாதம் TVயும் அந்திக்கிறிஸ்துவின் இரகசிய முன்னோடிகளாக இருப்பார்களோ என்று பலரும் சந்தேகித்தது இப்போது உறுதியாகிக்கொண்டிருக்கிறது. அப்படி உறுதியாக காரணம்:

1).இவர்கள் கூறும் ஆபத்தான பரலோக தரிசன செய்திகள், தினசரி நரகத்தை பார்த்து வருவதாக கூறும் பொய் செய்திகள்,

2).இவர்களைப்பற்றி வாரப்பத்திரிக்கைகளிலும், TV சேனல்களிலும் சமீபத்தில் புகைப்படங்களுடன் வெளிவந்த பாலியல் குற்றச்சாட்டுகளுடன் இவர்களின் பொய் தீர்க்கதரிசனங்கள் யாவும் இனி மலையாளத்திலும் மற்ற மொழிகளிலும் பரவ திட்டம் உண்டு என்று இவர்கள் அறிவித்தபோது உடனே இந்த ஆபத்தைக்குறித்து கேரள மாநில மக்களும் அறிய வேண்டி இந்த கட்டுரையை மலையாள ஜாமக்காரனிலும் எழுத உந்தப்பட்டேன்.


எருசலேமில் மில்லியன் டாலர் பங்களா

வெளிப்படுத்தின விசேஷம் 11ம் அதிகாரத்தில் வரும் இரண்டு சாட்சிகள் மனித சரீரத்துடன் பரலோகம் எடுக்கப்பட்டவர்களான எலியா-ஏனோக்கு என்ற இரண்டு பேர்கள் மறுபடியும் உலகத்தில் வந்து வாழ்ந்து மற்ற மனிதர்கள்போல இவர்கள் இருவரும் மரித்து சரீரம் மண்ணுக்கும், ஆவி ஆத்துமா கர்த்தரின் கைக்கும் (பிர 12:7) போய் சேர வேண்டும். தேவனின் இந்த வித்தியாசமான அதே சமயம் விசேஷமான இந்த திட்டத்தில் இவர்களின் ஊழியம் என்னவென்றால் இவர்கள் இருவரும் அந்திக்கிறிஸ்துவின் காலத்தில் வாழ்ந்துக்கொண்டிருப்பவர்களுக்கு கடைசி சந்தர்ப்பமாக சுவிசேஷம் அறிவித்து அதன் காரணமாக இவர்கள் இருவரும் இரத்த சாட்சிகளாக அந்திக்கிறிஸ்துவின் ஆட்களால் வாளால் வெட்டப்பட்டு மரிப்பார்கள். அதற்கென்றே இவர்கள் வானத்திலிருந்து பூமிக்கு அனுப்பப்படுவார்கள்.


எப்போது அனுப்பப்படுவார்கள்?

அந்திக்கிறிஸ்துவின் கடைசிகாலம் 7 ஆண்டுகள். இந்த 7 ஆண்டுகளில் ஆண்டுகள் அவன் ஆட்சி மிகவும் சமாதானமாக இருக்கும். ஆராதனைகளை நடத்த அனுமதிப்பான். அதன்பிறகு உள்ள ஆண்டுகள் அந்திக்கிறிஸ்துவின் ஆட்சி மிகவும் கொடூரமாக இருக்கும். தேவன் அருளும் கடைசி சந்தர்ப்பமாக முதல் வருடத்தில் வாழும் அன்றைய உலகத்தின் மக்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கப்படும். இயேசு கிறிஸ்து இரத்தம் சிந்திய நோக்கம் அந்த மக்களுக்கு அறிவிக்கப்படும். அந்திகிறிஸ்துவின் அந்த கடைசி கொடூர ஆட்சிக்குமுன்பு ஒரு சிலராவது மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் நோக்கத்தை புரிந்து இயேசுகிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொள்ள மாட்டார்களா! என்று நம்பிக்கையினால் இரக்கமுள்ள தேவன் இந்த கடைசி சந்தர்ப்பத்தை அந்த மக்களுக்கு கொடுப்பார். இந்த கடைசி சந்தர்ப்பத்தில் சுவிசேஷத்தின், இரட்சிப்பின் செய்தியைப்பற்றி அறிவிக்கத்தான் இந்த இரண்டு சாட்சிகள் பரலோகத்திலிருந்து அனுப்பப்படுவார்கள். அவர்களுக்கு சகல வரமும் கொடுக்கப்படும். அந்த சமயத்தில் ஒரு சிலர் மட்டுமே இவர்கள் வார்த்தையை ஏற்றுக்கொள்வார்கள். கடைசி சமயத்தில் இப்படி ஒரு ஏற்பாட்டை கர்த்தர் செய்ததையும் அப்போதுள்ள மக்களில் சிலர் இரட்சிக்கப்படுவதையும் அறிந்த அந்திக்கிறிஸ்து மிகவும் கோபம்கொண்டு இந்த இரண்டு சாட்சிகளையும் நடுவீதியில் வெட்டி கொலை செய்வான். இந்த இரண்டு பேர்களின் சரீரமும் தெருவில் கொல்லப்பட்டு கிடக்கும். இது மீதியுள்ள மக்களுக்கு அந்திக்கிறிஸ்துவின் எச்சரிக்கையாக இருக்கும். இந்த இரண்டு உடல்களையும் உலகம் அனைத்திலுமுள்ளவர்கள் காணுவார்கள். அவர்கள் அந்த சம்பவத்தை அந்திக்கிறிஸ்துவுக்கு ஆதரவாக கொண்டாடுவார்கள். இதுதான் இந்த இரண்டு பேர்களைப்பற்றி நம் வேதத்தில் காணப்படும் தீர்க்கதரிசன விஷயமாகும்.


இனி ஏஞ்சல் டிவி கூட்டணியின் பொய் வெளிப்பாடுகளை பார்க்கலாம்:
சகோ.சாதுசுந்தர் செல்வராஜ் - சகோ.வின்சென்ட் செல்வகுமார்
- சகோ.மோகன் சி.லாசரஸ்

சாதுசுந்தர் செல்வராஜ் - வின்சென்ட் செல்வகுமார் ஆகிய இருவரும் கூறுவதென்னவென்றால் இவர்களை இயேசுகிறிஸ்து ஒருநாள் தனியாக எருசலேமுக்கு அழைத்து சென்று அந்த வாளால் வெட்டுண்டு மரித்து வீதியில் கிடக்கும் அந்த இரண்டு பேர்களின் உடல்களை, பூமி உருண்டையில் உள்ள உலகமக்கள் அனைவருக்கும் ஏஞ்சல் TV மூலமாகத்தான் காட்ட வேண்டுமாம். காரணம், அன்று உலகில் எல்லா டிவி சேனல்களும் ஒழிந்து போய்விடும் என்று இவர்கள் கூறுகிறார்கள். ஆனால் ஏஞ்சல் TV மட்டும் இருக்குமாம். ஆகவே எருசலேமில் ஏஞ்சல் TV நிலையம் அமைத்து அதன்மூலம் இந்த கொலை சம்பவத்தை உலகமனைத்திலும் உள்ள மக்களுக்கு காண்பிக்கும் முழு பொறுப்பையும் உங்களிடத்தில் ஒப்படைக்கிறேன் என்று இயேசுகிறிஸ்து கூறினாராம்.

மேலும் இந்த இரண்டு சாட்சிகள் பரலோகத்திலிருந்து பூமிக்கு இறங்கி வந்தால் வருடம் எருசலேமில் அவர்கள் தங்குவதற்கு சகல வசதிகள் நிரம்பிய அரண்மனை போன்ற கட்டிடம் கட்டிக்கொடுக்கவும், கர்த்தர் எங்களிடம் கட்டளையிட்டார் என்று இந்த மூவரணி கூறுகிறார்கள். எருசலேமில் இந்த பங்களா கட்டவும், சக்தியுள்ள அதிநவீன கருவிகளை பொருத்தி ஏஞ்சல் TV நிலையம் கட்டவும், சுமார் மில்லியன் டாலர் பணம் தேவைப்படுமாம். அந்த பணத்தை உங்களிடம் அதாவது ஏஞ்சல் TVயை காணுபவர்களிடமிருந்து கேட்டுபெற்றுக்கொள்ள கர்த்தர் கட்டளையிட்டிருக்கிறார் என்று இவர்கள் தனிப்பட்ட அறிக்கை மூலமாகவும், இன்டர்நெட் மூலமாகவும், கடிதம் மூலமாகவும் விவரம் அறிவித்திருக்கிறார்கள். இதை அறிவித்த சில மணி நேரத்தில் 9,00,000 ஒன்பது லட்சம் டாலர்கள் (1 டாலர் என்பது நமது இந்திய ரூபாயில் 55 ரூபாயாகும்). அதாவது பல கோடி ரூபாய்கள் திரட்டப்பட்டுவிட்டது என்பதை ஏஞ்சல் TV நிறுவனம் அறிவித்துள்ளனர். இன்னும் பாக்கி 4,00,000 லட்சம் டாலர்கள் மட்டும்தான் தேவை என்றும் அறிவித்து உள்ளார்கள். ஆனால் மேலே குறிப்பிட்ட பணம் இவர்கள் கைக்கு சேராமலேயே சேர்ந்ததாக பொய்யாய் அறிவித்திருப்பது ஒரு வியாபார தந்திரமாகும்.

இந்த இரண்டு சாட்சிகள் தங்குவதற்கு எருசலேமில் வீடு வாங்கப்பட்டுவிட்டது. அந்த வீடும், நிலமும் எது என்பதை ஆண்டவரே இந்த மும்மூர்த்திகளை அழைத்து காட்டினாராம். தாங்கள் காணும் தீர்க்கதரிசனத்தை TV மூலம் அறிவிக்கும் இந்த புது திட்டத்தில், நாலுமாவடி மோகன் சி.லாசரஸ்சும் இணைந்து தன் மூலமாக காட்டப்படும் தரிசனத்தையும் ஏஞ்சல் TV மூலம் அறிவிக்க போகிறார்களாம். இதில் இவர்கள் எல்லாருக்கும் பங்கு உண்டு என்பதால் இவர்களை மூவரணியாக மக்கள் அழைக்கிறார்கள்.

ஒருவர் இப்படி அறிவிக்கிறார்: இப்படிப்பட்ட திட்டம் இயேசுகிறிஸ்துவின் பிறப்பை பிதாவால் யோவான் ஸ்நானகன் மூலமாக அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டபோது, கிறிஸ்து பிறப்புக்கு முன்பதாக பிதாவால் அனுப்பப்பட்ட யோவான், இயேசுகிறிஸ்துவை குழந்தையாக பிறப்பிக்க மாட்டு தொழுவத்துக்குபதில் பெத்லகேமில் ஒரு பங்களாவைக்கட்ட உதவியிருக்கலாமே? சாதுசெல்வராஜ் அவர்களின் கூட உள்ள மும்மூர்த்திகளுக்கு உண்டான இந்த எருசலேம் பங்களா ஐடியா யோவானுக்கு ஏன் ஏற்படவில்லை? வானத்திலிருந்து பிதாவால் இறக்கப்படும் இந்த இரண்டு சாட்சிகள் தங்கவைக்க பிதாவுக்கு திட்டமில்லாமலாபோகும்? உலகத்தில் உள்ள பெரிய பெரிய தீர்க்கதரிசிகள் என்று தங்களை கூறிக்கொள்ளும் ஊழியர்கள் யாருடைய உதவியையும் இந்த எருசலேம் பங்களா திட்டத்துக்கு கர்த்தர் தேடாமல், பிதாவானவர் ஏஞ்சல் & Co-வை மட்டும் தேடிவந்த மர்மம் என்ன? கோடி டாலர் கணக்கை யார் பார்ப்பார்கள்? இதிலே இந்த மூவர் அணியினருக்கு எவ்வளவு பங்கு? இந்த கோடி டாலர் அல்லது கோடிகள் என்றாலே பிரச்சனையும் கூடவே வருமே? வருமானவரி அலுவலர்கள் பார்வை இந்நேரம் கோடி டாலர்கள் என்று கூறிய இந்த மூவர்மேல் விழுந்திருக்குமே? அதன் கணக்கை வருமானவரிக்கு எப்படி இவர்கள் காட்டுவார்கள்? வருமானவரி பிரச்சனை வரும்போதுதான் இந்த மூவரணி, இருவரணியாக மாறி பின் ஒரு அணியாக கரைந்து ஒன்றுமில்லாமல்போகும். நான் கூறியது தீர்க்கதரிசனமல்ல.


பொய் திட்டத்தின் ஆரம்பம்:
ஓரல் ராபர்ட்

இப்படிப்பட்ட பொய் திட்டம் முதலில் பிரபல சுகமளிக்கும் வரம் பெற்ற ஊழியர்.ஓரல் ராபர்ட் (அமெரிக்கா) அவர்கள் மூலமாக வெளிப்பட்டது. காலையில் 7 மணிக்கு ஓரல் ராபார்ட் துப்பறியும் கதை புத்தகம் வாசித்துக் கொண்டிருக்கும்போது இயேசுகிறிஸ்து அறை வாசல்படியில் நிற்பதை ஓரல் ராபர்ட் கண்டாராம். அப்போது அவரைநோக்கி இயேசுகிறிஸ்து கூறினாராம். வேதாகம பள்ளியில் படிக்கும் வெளிநாட்டு பிள்ளைகளின் உதவிதொகைக்காக பல லட்சம் (எத்தனை லட்சம் டாலர் என்று இப்போது எனக்கு ஞாபகமில்லை) ஏப்ரல் மாதத்துக்குள் நீ சேர்க்கவேண்டும் எனவே மக்களே இதற்கான பணத்தை உன்னிடம் கொடுப்பார்கள். குறிப்பிட்ட தேதிக்குள் நான் குறிப்பிட்ட தொகை உன்னிடம் வந்துசேராவிட்டால் உன்னை நான் எடுத்துக்கொள்வேன் என்று அறிவித்துவிட்டு மறைந்துபோனாராம்.(உன்னை கொன்றுவிடுவேன் என்று பயமுறுத்துவதுபோல இந்த வார்த்தை இருக்கிறது அல்லவா?). எப்படியோ இப்படி கூறிவிட்டு இயேசுகிறிஸ்துபோய்விட்டார். ஒரு அதிசயம் என்ன வென்றால் ஏப்ரல் மாதம் முடிவதற்கு முன்பாகவே இயேசு கூறிய அளவுக்குமேல் டாலர்கள் ஓரல் ராபர்ட்டிடம் குவிந்தது என்று இவர் தம் பத்திரிக்கையில் அறிவித்தார். கிறிஸ்தவ வியாபார தந்திரத்தை உணர்ந்தீர்களா? இவர் அந்நியபாஷை பேசும் பெந்தேகோஸ்தே சபையின் தலைவராவார்.


இவரைத்தான் சகோ.DGS.தினகரன் பின்பற்றினார்:

காருண்யா கல்லூரி தொடங்குவதற்குமுன் சகோ.DGS.தினகரன் அமெரிக்கா சென்று ஓரல் ராபர்ட் யூனிவர்சிட்டியை சுற்றிப்பார்த்து அதன்பின்தான் காருண்யா கல்லூரியை கட்டினார். அதன்பிறகு அவர் கர்த்தரின் பாதையைவிட்டும் விலகிபோனார். அமெரிக்காவில் ஓரல் ராபர்ட் யூனிவர்சிட்டியை சகோ.தினகரன் பார்த்தபின் நேராக கனடா நாட்டுக்கு வந்து அங்கு அவர் தங்கிய வீட்டில் உள்ளவர்களிடம் இதை பகிர்ந்துக்கொண்டார். அந்த வீட்டார் என் வாசகர்கள், நாகர்கோவிலை சேர்ந்த தமிழர்கள் இவர்கள் நல்ல விசுவாசிகள். நான் கனடா நாட்டிற்கு போகும் போதெல்லாம் நானும் இவர்கள் வீட்டில்தான் தங்குவேன். சகோ.தினகரன் இவர்களிடம் கூறினாராம் இந்தியா சென்றடைந்ததும் கல்லூரி வேலையை ஆரம்பிக்க போகிறேன் என்றாராம். இந்தியா திரும்பியதும் அன்று ஒன்றாக சேர்ந்து ஊழியம் செய்த எங்கள் நான்கு பேரோடு சகோ.தினகரன் அவர்கள் காருண்யா கட்டப்போவதைக்குறித்து பகிர்ந்துக்கொண்டார். ஆனால் இவைகள் அத்தனையும் மறந்து அல்லது மறைத்து ஒருநாள் திடீரென்று தூதர்கள் கல்லூரி பணிய பிளான் கொண்டுவந்து என்னிடம் காண்பித்து இந்த காருண்யா கல்லூரியை நீதான் கட்டவேண்டும் என்று கர்த்தர் கட்டளையிட்டதாக தூதர்கள் கூறினார்கள் என்றார்.

இதற்கு தேவையான பணம் உன்னை நேசிப்பவர்களின் குழந்தைகளை இதில் பங்காளர்களாக சேர்த்துவிடு என்றாராம். அதன்பின்தான் தலைக்கு 1000 ரூபாய் வாங்கும் இளம்பங்காளர் திட்டம் தொடங்கப்பட்டது. (அன்று 1000 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இன்று பொருளாதார விலைவாசி கூடியதால் தலைக்கு ரூ.2000 வாங்கப்படுகிறது). இந்த இளம்பங்காளர் திட்டத்தின்மூலம் அந்த பிள்ளைகளை நான் ஆசீர்வதிப்பேன். அதற்கு இளம்பங்காளர் திட்டம் என்று பெயர் வை என்று கர்த்தர் கூறினாராம். ஏழைகளுக்காகவே இந்த கல்லூரி கட்டப்படுகிறது என்ற பொய்யையும் அள்ளித்தெளித்துவிட்டார். இதையும உண்மை என்று நம்பின மெத்தபடித்த ஆசிரியைகள், ஆசிரியர்கள், புரொபஸர்கள், நீதிபதிகள், பிஷப்மார்கள், வியாபாரிகள், ஆயர்கள் ஏராளம்! ஏராளம்!! இவர்கள் யாவரும் தங்கள் பிள்ளைகள் பெயரையும் 1000 ரூபாயும் சகோ.தினகரன் அவர்களுக்கு அனுப்பியுள்ளார்கள். இவர்களை என்னவென்று கூறுவது? இன்றைக்கும் பலர் அவர் கூறியது உண்மைதான் என்று நம்பி தொடர்ந்து இயேசு அழைக்கிறார் ஊழியத்துக்கு பணம் அனுப்பிக்கொண்டும், அவர்கள் கொடுத்த சர்டிபிக்கட்டை பிரேம் போட்டு வீட்டில் மாட்டி வைத்துள்ளார்கள். இவர்களையெல்லாம் எப்படி கிறிஸ்தவ விசுவாசிகள் என்று அழைப்பது!


இதையேதான் நாலுமாவடி மோகன் சி.லாசரஸ்
அவர்கள் பின்பற்றுகிறார்:

ஜெபத்தில் பொய்யாய் பெயர் அழைப்பதிலிருந்து திறப்பின் வாசல் என்ற பெயரில் பணம் வசூல் செய்வது வரை சகோ.DGS.தினகரனைத்தான் தனக்கு ரோல் மாடலாய் வைத்து அவர் வழியை அப்படியே காப்பியடித்து அவர் ஊழியத்தை பின்பற்றுகிறார். கர்த்தர் சொன்னார் என்று அறிவித்து தான் கூறிய பொய்களுக்கு கர்த்தர்பேரில் பழியை போட்டுவிடுகிறார்.


ஒருவர் ஜாமக்காரனுக்கு கேள்வி கேட்டுள்ளார்.:

பணம் இரட்டிப்பு மோசடி செய்ததால் கைது செய்யப்பட்ட கிறிஸ்தவர்களை போலீஸ் கைது செய்துகொண்டுபோகும் படத்துடன் உள்ள செய்திதாள் துண்டு ஒன்றை எனக்கு சிலர் அனுப்பி கைது செய்யப்பட்ட இவர்கள்மேல் உள்ள குற்றசாட்டு என்னவென்றால் 1000 கொடுத்தால் 3 மாதத்தில் இரட்டிப்பாக பணம் அளிப்பதாக கூறி ஜனங்களை ஏமாற்றியிருக்கிறார்கள். ஏமார்ந்தவர்கள் போலீஸில் கொடுத்த புகார் பேரில் இந்த கிறிஸ்தவர்கள் கைது செய்யப்பட்டார்கள். இது மாதிரி எத்தனையோ இரட்டிப்பு மோசடிகள் நம்நாட்டில் தொடர்ந்து நடக்கிறது என்றாலும் நம்நாட்டு ஜனங்களுக்கு புத்தி வரவில்லையே? என்று இவர்கள் எனக்கு எழுதிவிட்டு,

இரட்டிப்பு மோசடி:
சாட்சி 1: திறப்பின் வாசலுக்கு ரூ.1000 காணிக்கை கொடுத்தேன், 200000 - இருபது லட்ச ரூபாய் கிடைத்தது அதில் ஒரு வீடு கட்டி முடித்தோம்.

சாட்சி 2: திறப்பின் வாசலுக்கு ரூ.10000 கொடுத்தோம். இரண்டு நாட்களில் வீட்டின் கதவை யாரோ தட்டி 10 லட்சம் ரூபாயை ஒருவர் கொடுத்துவிட்டுபோகிறார். சாட்சி என்ற பெயரில் ஜனங்களை 1000 காணிக்கை கொடுக்க தூண்டும் இப்படிப்பட்ட விளம்பரம் இரட்டிப்பு மோசடியாகாதா? என்று கேட்டிருக்கிறார்.

இந்த கவர்ச்சி விளம்பரத்தை தன் பத்திரிக்கையான இயேசு விடுவிக்கிறாரில் கொடுத்த மோகன் சி.லாசரஸ் தன் பத்திரிக்கையில் குறிப்பிட்ட அந்த சாட்சிகளை சுட்டிக்காட்டி இவர்களைப்போல் நீங்களும் கொடுத்தால் உங்களுக்கும் 10 லட்சம் கிடைக்கும் என்று இவர் வெளிப்படையாக எழுதியிருந்தால் அவர் பண இரட்டிப்பு, மோசடி புகாருக்கு ஆளாகிவிடுவார்.

ஆகவே குறிப்பு ஒன்றும் எழுதாமல் சாட்சியை மாத்திரம் அறிவித்திருப்பதால் இது மறைமுக பண இரட்டிப்பு ஏமாற்று மோசடி ஆகும். என்றாலும் இதற்கு போலீஸ் ஒன்றும் செய்யமுடியாது. ஆனால் இந்த விளம்பரத்தை தன் பத்திரிக்கையில் எழுதிய மோகன் சி.லாசரஸ்ஸின் உள்நோக்கத்தை கர்த்தர் அறிவாரே! அவர் இந்த ஏமாற்று விளம்பரத்திற்கெல்லாம் நிச்சயம் கணக்கு வைத்திருப்பார். அது நியாய தீர்ப்பில் வெளிப்படும்.

வரைப் பின்பற்றி ஆசீர்வாதம் டிவி ஆலன்பால், சகோ.ராபின்சன், சாம் ஜெபதுரை, ஆனந்த்ஸ்ரா போன்று இன்னும் ஏராளமானவர்கள் காணிக்கை இரட்டிப்பு மோசடி விளம்பரத்தை தொடர்ந்து செய்துகொண்டு வருகிறார்களே!

இந்த ஏஞ்சல் TVயின் கடைசிக்கால பொய் தீர்க்கதரிசனமும், மில்லியன் டாலர் காணிக்கை ஏமாற்றையும் குறித்து வாசித்த விசுவாசிகள் யாரும் இவர்களிடம் ஏமாறக்கூடாது என்பதற்காக இவைகளைக்குறித்து எழுதினேன்.

அவர்களுக்கு காணிக்கை அனுப்பி ஏமார்ந்த இவர்கள் யாவரும் தீர்க்கதரிசனத்தை நம்புகிறவர்கள் ஜெர்மனியிலும், கனடாவிலும், சிங்கப்பூரிலும் இப்படிப்பட்டவர்கள் மிக அதிகம். அப்படியே கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்திலும் இப்படிப்பட்ட ஏமாளிகள் ஏராளம்! ஏராளம்!!

எருசலேமில் ஏஞ்சல் TV நிலையம், இரண்டு சாட்சிகளுக்கு வீடு இவைகளுக்காக, மில்லியன் டாலர் - இவைகள் யாவும் நூற்றுக்கு-நூறு - பொய்! பொய்!!.

இவர்களின் குரு சகோ.DGS.தினகரன், பால்தினகரன் ஆகிய இவர்கள் எருசலேமில் கட்டும் ஜெபகோபுரம், டெல்லி பார்லிமெண்ட் அருகில் கட்டியுள்ள ஜெபகோபுரம் - இவைகளுக்கும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கும் கொஞ்சமும் சம்பந்தமில்லை என்பதை வாசகர்கள் அனைவரும் அறியவேண்டும்.

அப்படியே ஆசீர்வாதம் TV ஆலன்பால் கண்டதாக கூறும் நரகம் போன்ற கதைகள் 5 அப்பம், 2 மீன் காணிக்கை, ஆசீர்வாதம் இப்படிப்பட்ட கற்பனை கதைகளையும், காணிக்கை விளம்பரங்களையும் நம்பி தேவ ஆசீர்வாதத்தை இழந்துவிடாதீர்கள்.

அக்கினி இறங்குவதை பார்க்கிறேன், ஒரு வாலிபனின் கைகளில் அக்கினி பற்றி எரிகிறதை பார்க்கிறேன் என்றெல்லாம் கூறும் பொய்களை இனியும் நீங்கள் நம்பினால் அதன் விளைவு பெருத்த நஷ்டமாக முடியும்.

இவைகளுக்கு காணிக்கை கொடுக்கிறவர்கள், இவர்கள் கூறுவதை நம்புகிறவர்கள் . . . . . . . இவர்கள் துர்க்கிரியைகளுக்கும் பங்குள்ளவர்களாயிருக்கிறார்கள். 2யோ 11ம் வசனம்.

வேறொரு சுவிசேஷம் இல்லையே! . . . . . . . . . . . . .

சிலர் உங்களை கலகப்படுத்தி சுவிசேஷத்தைப் புரட்டமனதாயிருக்கிறார்கள். கலா 1:7-12

. . . காதுள்ளவன் கேட்கக்கடவன். மத் 11:15, மாற் 4:9,23 என்று இயேசுகிறிஸ்து கூறினார்.

குறிப்பு: ஏஞ்சல் டிவியும், ஆசீர்வாதம் டிவியும், சில கிறிஸ்தவ பொய் ஊழியர்களும் எப்படி வேத வசனத்தை தவறாக வியாக்கியானம் செய்கிறார்கள் என்பதையும், அதன்மூலம் அந்த டிவியை பார்க்கிறவர்கள் - அந்த ஊழியர்களின் உபதேசத்தை கேட்கிறவர்கள் மனநிலை எப்படி மாறி பிரசங்கித்த நபர்களைப்போலவே தாங்களும் மாறுகிறார்கள் என்பதை சில சாட்சிகள் மூலம் தொடர்ந்து வாசித்து அறியுங்கள்.


Top
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM