ஏஞ்சல் டிவி - ஆசீர்வாதம் டிவியின்
ஆபத்தான பின்விளைவுகள்

சகோ.வின்சென்ட் செல்வகுமார், நாலுமாவடி மோகன்.சி.லாசரஸ், சாதுசுந்தர் செல்வராஜ், ஆசீர்வாதம் டிவி ஆலன்பால் ஆகியவர்கள் பிரசங்கங்களை கவனித்தவர்களுக்கு ஏற்பட்ட ஆவிக்குரிய மனநோய் சாட்சிகளின் ஆபத்து.

பத்திரிக்கையின் பெயர்: ஏசுவின் தொனி 2011 டிசம்பர் இதழ் பக்கம் 47

பின்விளைவு நெ.1: ஏஞ்சல் டிவி நேரலை பார்த்துக்கொண்டிருந்தோம். அக்கினி சுழல்காற்றினால் என்னை அபிஷேகித்தார். அப்போது என் நாவுகள் பட்டயங்களாக மாறியது, ஒரு கழுகைப்போல் மாறினேன், என் காலில் அபிஷேகம் இறங்கியது.

- சகோதரி.ஏஞ்சல் பால்ராஜ் - அமெரிக்கா.

பின்விளைவு நெ.2: என் வீட்டில் இருந்தபடி ஏஞ்சல் டிவி பார்த்துக்கொண்டிருந்தேன் அப்போது அக்கினி ஸ்தம்பம் என் வீட்டில் வந்தது - அதில் இயேசுகிறிஸ்து உலாவுவதைக்கண்டேன். வின்சென்ட் செல்வகுமார் சிறகுகளைக்குறித்து பிரசங்கித்தபோது உடனே கர்த்தர் எனக்கும் அந்த சிறகுகளை கொடுத்தார். 8ம் தேதி ஆராதனையில் எங்கள் வீட்டில் என் மனைவியின் அருகில் யூத ராஜசிங்கம் நின்றுக்கொண்டு கர்ஜிக்கிறதைக் கண்டேன்.

- சகோ.ஜார்ஜ் ஜான் - சுவிஸ்.

பின்விளைவு நெ.3: வின்சென்ட் செல்வகுமார் ஜெபிக்கும்போது இப்போது வானத்திலிருந்து இரத்தமும் - மழையும் இறங்கி வருகிறது என்று ஜெபத்தில் கூறிக்கொண்டு இருக்கும்போதே அந்த இரத்த மழையின் வாசனையை முகர்ந்து பார்க்கமுடிந்தது. அடுத்தநாள் வின்சென்ட் செல்வகுமார் பிரசங்கத்தில் சத்தத்தைக்குறித்து பிரசங்கம் செய்தார். அப்போது என் காதிலும் நதியின் சத்தம் கேட்டது.

- சகோதரி.கேதி மின்னிக் - அமெரிக்கா.

பின்விளைவு நெ:4: ... ஒரு தேவதூதன் என்னை வானங்களுக்குள் அழைத்து சென்றார்... சிறிது நேரத்தில் நட்சத்திரங்கள் மழையைப்போல என் மேல் பொழிந்தன.

- சகோதரி.ரேணுகா - டென்மார்க்.

பின்விளைவு நெ:5: பரிசுத்த ஆவியானவர் காற்றைப்போலவும், பிரகாசமான வெளிசத்ததைப் போலவும் என்மேல் வந்தார். எனக்குபின் சிலுவை வைக்கப்பட்டிருந்தது. என் கைகளில் அக்கினி ஊற்றப்பட்டது. அதன்பின் தேவனின் அபிஷேக எண்ணெய் என்மேல் ஊற்றப்பட்டது. நான் ஒரு வெள்ளை குதிரையின் மீது ஏறிப்போகிறேன். என் கைகளில் உலகம் இருப்பதைக் கண்டேன்.

- சகோதரி.லூமினா - அலாஸ்கா.

பின்விளைவு நெ:6: நான் ஒரு வெண்கல பாதத்தைக்கண்டேன். இரண்டு தேவ தூதர்கள் ஒரு ஏணியை தூக்கிக்கொண்டு வருகிறார்கள். பிரதான தூதன் தோல் சுருளை பிடித்துக்கொண்டு நிற்கிறார். அப்போது வின்சென்ட் செல்வகுமார் பேசிய அந்நியபாஷையை நான் புரிந்துக்கொள்ள முடிந்தது. ஒரு சிங்கம் என்னில் வந்தது.

- சகோ.சாமுவேல் - பெங்களுர்.

பின்விளைவு நெ.7: பரிசுத்த அக்கினி என்னை நிரப்பினது. நான் யூதராஜ சிங்கத்தையும், அதன் கண்கள் அக்கினியாய் பிரகாசிப்பதையும் கண்டேன். பெரிய நீரோடை என்மேல் இருக்கிறது. அநேக தேவ தூதர்களும் - ஒரு ஏணியும் கண்டேன்.

- சகோதரி.நான்சி ஷர்லி - சேலம்.


இயேசுவின் தொனி 2012 ஜுன் பக்கம் 31

பின்விளைவு நெ.8: ..... சிங்கத்தின் இரண்டு கண்கள் என்னுடைய கண்களுக்கு வெகு சமீபமாக காணப்பட்டதைக் கண்டேன்.

- ஸ்டீபன்கிரி - பெங்களுர்.

பின்விளைவு நெ.9: காபிரியேல் - மிகாவேல் தூதர்கள் என் அருகில் இருப்பதைக் கண்டேன்.

- சகோ.பிரசாத். ஒதியத்தூர் (வேலுர்).


GIFT OF JESUS - இயேசு கொடுக்கும் பரிசு - 2012 ஜுன் பக்கம் 21

பின்விளைவு நெ.7: சகோ.ஜட்சன் ஆபிரகாம் கூறுகிறார். என் மனைவி ஒருநாள் பரலோக தரிசனத்தைப் பார்த்தார்கள். அதை என்னிடம் விவரித்தார்கள். ஒரு பெரிய சிங்காசனத்தில் வீற்றிருப்பவர் என் மனைவியை முன்னால் வரும்படி அழைத்தாராம். சிங்காசனத்தில் உட்கார்ந்திருப்பவர் அசைவதைக் கண்டாராம். பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் மூன்று விதத்தில் வெளிப்பட்டார், ஆனால் இப்போது ஒன்றாய் காட்சியளித்தாராம். அப்போது இயேசுகிறிஸ்து நான் இந்த உலகத்துக்கு வருவேன் ஜனங்களை நியாயம் தீர்ப்பேன் என்று சொன்னாராம். இப்படி ஜட்சன் ஆபிரகாம் தன் மனைவியை புகழ்ந்து தன் பத்திரிக்கையில் எழுதி முடிக்கிறார். பரலோகம் இவர்களுக்கு வீட்டுக்குள்ளேயே அமைந்திருக்கும் குளியல் அறையைபோலாகிவிட்டது - இயேசுகிறிஸ்து பிதா, குமாரன், பரிசுத்த ஆவி யாவும் இவர்களுக்கு வேலைக்காரர்கள்போல சர்வ சாதாரணமாக போய்விட்டது. சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கும் இயேசு அசைவதில் என்ன அதிசயம் இருக்கிறது. ஜனங்களை நியாயம் தீர்க்க உலகத்துக்கு வருவேன் என்று நம் வேதத்திலேயே பல இடத்தில் ஏற்கனவே எழுதியிருக்கும்போது இதை அறிவிக்க அந்த அம்மையாரை பரலோகத்துக்கு அழைத்து சென்று அங்கு வைத்துதான் அதை கூறவேண்டுமா? . . இதுபோல நிறைய அம்புலிமாமா கதைகள் இவர்கள் பத்திரிக்கைகளிலும் பிரசங்கத்திலும் காணலாம். தாங்கள் கடவுளுக்கு மிக நெருக்கம் என்பதை ஜனங்களை நம்ப வைக்க இத்தனை பில்டப் தேவைப்படுகிறது.


ஏஞ்சல் டிவி 2012 - புதன் 18 ஜுலை 8 மணி :

ஒரு பிரசங்கத்தில் எதையோ கூற சாதுசுந்தர் செல்வராஜ் ஒரு உதாரணம் கூறுகிறார். அதை ஒருவர் மொழிபெயர்க்கிறார். நான் நாலுமாவடியிலிருந்து வந்துகொண்டிருந்தேன் (சகோ.மோகன் சி.லாசரஸ் இருப்பிடம்தான் நாலுமாவடி என்பது) அப்போது 3 பெரிய கழுகுகள் கீழே குனிந்தவாரே வந்துக்கொண்டிருப்பதை கண்டேன். இப்படி கூறிவிட்டு அடுத்த கதைக்கு போய்விட்டார். சரி. இவர் கழுகுகளை ஏன் கண்டார், அதுவும் நாலுமாவடியிலிருந்து அதாவது மோகன் சி.லாசரஸ் வீட்டிலிருந்து வரும்போது ஏன் இந்த கழுகுகள் வரவேண்டும்? கழுகுக்கும் - மோகன் சி.லாசரஸ்க்கும் என்ன கனெக்ஷன்? இந்த விவரங்கள் ஒன்றும் இவர் அறிவிக்கவில்லை. நானும் ஏஞ்சல் டிவி ரசிகர்களைப் போல முட்டாள்தனமாக அந்த டிவி காட்சியை கண்டு கொண்டிருந்தேன். இதில் ஆவிக்குரிய அர்த்தம் ஏதாவது உண்டா? என்ற கேள்வி யாருக்காவது எழுந்ததா என்று தெரியவில்லை.


பின்விளைவு என்ன?

சகோ.வின்சென்ட், சாதுசெல்வராஜ், மோகன் சி.லாசரஸ் இவர்கள் பத்திரிக்கைகளில் மேலே வாசித்ததுபோல இவர்கள் செய்தியில் நம்பக்கூடாத, நம்பமுடியாத இப்படிப்பட்ட கற்பனை கதைகள் பொய்சாட்சிகள் மலிந்துகிடக்கிறது. மாதிரிக்கு சிலதை மட்டுமே மேலே எழுதினேன். இவர்கள் பிரசங்கத்தில் சிங்கம், கழுகு, தூதர்கள், பட்டயம், அக்கினி, பிசாசுகள், பரலோகம், நரகம், வானமண்டலம், ஆகாயம், மேகங்கள், சிவந்த கண்கள், இப்படிப்பட்டவைகளை இவர்களின் ஒவ்வொரு பிரசங்கத்திலும் நீங்கள் கேட்கலாம். இவர்கள் டிவிமுன் உட்கார்ந்து இவர்களுக்கு காணிக்கை கொடுத்து ரசிகர்களாக இருப்பவர்கள் இந்த பிரசங்கத்தைத்தான் மெய்மறந்து கேட்கிறார்கள், அதிலே லயித்தும்விடுகிறார்கள். அதன் விளைவு என்ன? இந்த டிவியை பார்த்த ஜனங்களும் அதையே சொப்பனத்தில் பார்க்கிறார்கள். தொல்லையின் திரட்சியினால் சொப்பனம் பிறக்கும். பிரச 5:3 என்று வேதம் கூறுகிறது. நாம் எதை அதிகம் நினைக்கிறாமோ அல்லது காண்கிறோமோ அல்லது அதிகம் கவனம் செலுத்துகிறோமோ அல்லது அதிகம் எதிர்ப்பார்க்கிறோமோ அதையே அன்றைய சொப்பனத்தில் காணலாம். அதைத்தான் மேலே வாசித்தசாட்சிகள்மூலம் தெரியவருகிறது.

சில வருடங்களுக்குமுன் தன் கூட்டத்தில் கலந்துக்கொள்ளும் எல்லாரையும் தீர்க்கதரிசிகளாக்கும் நவீன தீர்க்கதரிசியான சகோ.எசேக்கியா பிரான்சிஸ் ஜெர்மனியில் கூட்டம் நடத்தும்போது கூறினார்.(வீடியோ ஆதாரம் என்னிடம் உண்டு. பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொருவர் அருகிலும் இருக்கிறதை காண்கிறேன்). உங்களால் உணரமுடியாவிட்டால் அப்படியே சாய்ந்து பாருங்கள் அவர் மார்பில் நீங்கள் சாய்ந்திருப்பதை உணரலாம் - எங்கே சாயுங்கள் இன்னும் கொஞ்சம் உணரமுடிகிறதா! அல்லேலுயா!. அந்த வீடியோவில் கண்ட அந்த சபை ஜனங்கள் மெஸ்மெரிசம் செய்யப்பட்டவர்களைப்போல் சொன்னப்படி செய்கிறார்கள். என்ன அபத்தம் இது? ஆவியானவர் ஒரு ஆள்தத்துவம் உள்ளவர்தான் - ஆனால் அவர் ஆவி (Sprit) தன்மை உள்ளவர். கண் கொண்டே பார்க்கமுடியாதபோது நெஞ்சை முதுகை, மார்பை எப்படி உணரமுடியும். இப்படிப்பட்ட தவறான உபதேசம் இவருக்குள் உருவானதை கண்டவுடன் அவரை BYM ஆசீர்வாத இயக்க ஸ்தாபனத்திலிருந்து பிரிந்துபோக கூறிவட்டனர்.


பிரதான காரணம்:

மேலே வாசித்த எல்லா உபதேச குளறுபடிக்கெல்லாம் ஆரம்ப காரணம் இவர்கள் பேசும் பொய்யான அந்நியபாஷை எல்லா கற்பனை தரிசனங்களுக்கும், பாவ பாலுணர்வு குற்றச்சாட்டுகளுக்கும் மூலக்காரணம் இவர்கள் யாவரும் பேசும் பொய்யான அந்நியபாஷை இங்கு இருந்துதான் எல்லா பொய்களும் சுரந்து வெளிவருகிறது. இதை புரிந்துக்கொண்டால் எல்லா ஊழியர்களும் திருந்திவிடுவார்கள். நான் குறிப்பிட்ட பின்விளைவுகளுக்கும் காரணம் இதுதான். இந்த ஊழியத்துடன் நெருங்கிய தொடர்புக்கொண்டவர்கள் எல்லாரும் பொய் தரிசனம், சிங்கதரிசனம் நரிதரிசனம், கழுகுதரிசனம் காண்பவர்களாக மாறிவிடுகிறார்கள். எச்சரிக்கை!.

மேலே குறிப்பிட்ட இந்த ஊழியர்கள் பிரசங்கம் செய்யும்போதே இந்த சம்பவங்கள் நடைப்பெற்றதாய் எழுதியுள்ளார்கள். இவர்கள் பிரசங்கத்தில் ஆத்துமாவை தொடும் விஷயம் ஒன்றும் இல்லை. இவர்கள் மூளையை தன் வசப்படுத்தும் செய்தியைத்தான் இவர்கள் கூறுகிறார்கள்.

மேலே சாட்சி கூறியவர்கள் கூறிய சாட்சியை (பின்விளைவு) வாசகர்கள் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். அந்த சாட்சியில் பெரும்பாலும் எழுதப்பட்ட விஷயம் அக்கினி இறங்கியது. என் நாக்குகள் பட்டயம்போல் வெளியே வந்தது. கண்கள் இரத்த கலராக சிங்கத்தின் கண்கள்போல இருந்தது. இப்போது நீங்கள் கற்பனை செய்துபாருங்கள். கண்கள் சிவக்க, நாக்குகள் பட்டயம்போல நீண்டு வாய்வழியே வெளியே வர உள்ளங்கையில் அக்கினிப்பற்றி எரிய அப்படியே ஒரு உருவத்தை வரைந்துபாருங்கள். ஏறக்குறைய ஞாயிறு பிள்ளைகளுக்கு பிசாசின் உருவத்தை வரைந்து காண்பிப்பதுப்போல இவர்களின் சாட்சி காணப்படுகிறது அல்லவா? இவர்கள் உருவத்தில் இரண்டு கொம்பு வைத்துபாருங்கள். இரண்டு நீண்ட பல்லுகளை வாயில் வரைந்து பாருங்கள். அதோடு இவர்கள் கூறியபடி நாக்கு பட்டயம்போல நீளமாக வாயிலிருந்து வெளியே வருவதுபோல வரைந்து பாருங்கள். அதே சிவந்த பெரிய கண்கள். என்ன பயங்கர காட்சி இது? பிசாசு மக்களை கிறிஸ்துவின் வசனத்திலிருந்து கிறிஸ்தவர்களை தன் பக்கமாக எத்தனை எளிதாக வசப்படுத்திக்கொண்டான் பாருங்கள். அதுவும் கிறிஸ்துவின் பெயரில் பிசாசு துணிகரமாக டிவி வழியாக இறங்கியிருக்கிறான். பரிசுத்தாவியானவர் இப்படிப்பட்ட காட்சிகளை கொடுப்பாரா?

வானத்திலிருந்து இரத்தமழை அதுவும் பெண்கள்மேல் விழுகிறது, நாட்டில் விபச்சாரம் பெருகிவிட்டது என்று சுட்டிக்காட்டினால் போதுமே அதற்கு ஆண்டவர் எதற்கு இவர்கள் கண்கள் முன் 6 வாலிப பெண்களின் புடவைகளை அவிழ்த்து முழு நிர்வாணமாக்கி வின்சென்ட் செல்வகுமாருக்கும், மோகன் சி.லாரசஸ்க்கும் தரிசனமாக காட்டி இந்த கூட்டத்தில் விபச்சாரம் உண்டு. அல்லது இந்த ஊரில் விபச்சாரம் உண்டு என்பதை ஆபாச காட்சிகளை காட்டித்தான் தீர்க்கதரிசனம் கர்த்தர் காட்டவேண்டுமா? என்ன வக்கிர புத்தி இது. இருதயத்தின் நினைவு வாய் பேசும் என்று வேதம் கூறுகிறது. இவர்கள் எதை அதிகம் மனதில் நினைக்கிறார்களோ அதெல்லாம் இவர்கள் அறியாமல் தரிசனமாக வெளியில் விழுகிறது. அதனால்தான் பல வருடங்களாக பாலியல் குற்றச்சாட்டுகள் இவர்கள்மேல் எழும்பிக்கொண்டேயிருக்கிறது என்று யோசிக்க இடமிருக்கிறதே?.


Top
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM