35th TRIBAL MISSION CONVENTION - NAGERCOIL

மே மாதம் தமிழ்நாட்டில் உள்ள நாகர்கோவில் CSI Christ Church ஆலய சபையினர் Tribal Mission 35வது வருடாந்திர கூடுகையை பொறுப்பேற்று வெற்றிகரமாக நடத்தினர்.

Tribal Mission பொது செயலர்.Dr.முரளிதர் அவர்களும், நானும் சிறப்பு செய்திகளை பகிர்ந்துக் கொண்டோம். தமிழ்நாட்டில் எத்தனையோ மிஷனரி ஸ்தாபனங்களை தாங்கிக்கொண்டிருக்கிற நாகர்கோவில் CSI கிறிஸ்தவர்கள் Tribal Mission ஊழியத்தையும் மனதில்கொண்டு பாரப்பட்டு இந்த மிஷனரி ஸ்தாபனத்தையும் Christ Church விசுவாசிகளுடன் இணைந்து பல வருடங்களாக தாங்கிக் கொண்டிருப்பது எங்களுக்கு சந்தோஷத்தை அளிக்கிறது. இதற்கு தங்கள் பங்கைஅளித்தவர்கள், முன்னின்று பொறுப்பெடுத்து இக்கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தவர்கள், டாக்டர்கள் நாகர்கோவில் CSI விசுவாசிகள் குறிப்பாக Christ Church குருவானவர்கள், சபை பொறுப்பாளர்கள் யாவருக்கும் Tribal Mission சார்பில் நன்றி கூறுகிறோம். மாதாமாதம் தொடர்ந்து காணிக்கைகளால் Tribal Mission ஊழியத்தை மிஷனரிகளையும், மிஷனரி பணிதளங்களையும் தாங்கிவரும் அனைத்து நாகர்கோவில் விசுவாசிகளுக்கும், நானும், Dr.முரளிதர் அவர்களும் கைகூப்பி நன்றி கூறுகிறோம். இப்படிப்பட்ட கூட்டங்களுக்கு தடையேதும் கூறாமல் ஆதரவு நல்கிய CSI மாடரேட்டரும், கன்னியாகுமரி திருமண்டல பிஷப் Most Rev.தேவகடாட்சம் அவர்களுக்கும் நன்றி கூறுகிறோம்.

1972ம் வருடம் வஸ்திரம் இல்லாமல் வாழும் ஆதிவாசி குடும்பங்களைக் குறித்து தினசரி செய்திதாள்மூலம் வாசித்து அறிந்த தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் வாழும் விசுவாசிகள் பலர் அந்த செய்திகளை கேள்விபட்டு அந்த ஆதிவாசிகளுக்கு சுவிசேஷம் அறிவிக்க புறப்பட்டார்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால், ஒருவர் புறப்படுவதை மற்றவர்கள் அறியாதநிலையில் ஆவியானவர் எங்களை எதிர்பாராதமுறையில் ரயில்வே ஸ்டேஷனில் ஒரே இடத்தில் சந்திக்க வைத்தார். அங்குகூடிய எங்கள் எல்லாருடைய நோக்கமும் பாரமும் ஒன்றாக இருந்ததை அறிந்து ஆச்சரியப்பட்டோம். செய்திதாளில் வாசித்த ஆதிவாசிகளுக்கு முதல்முறையாக சுவிசேஷம் அறிவிக்கவேண்டும் என்ற பாரம், வைராக்கியம் எல்லாருடைய உள்ளத்திலும் நிரம்பி வழிவதைக்கண்டு ஒருவருக்கொருவர் உணர்ந்து அதே இரயில்வே பிளாட்பாரத்தின் ஒரு மூலையில்கூடி நின்று ஒருவருக்கொருவர் கைகோர்த்து ஜெபித்து அப்போதே எங்கள் பயணத்தை தொடர்ந்தோம்.

முதன்முதலாக சந்தித்த சோலைநாயக்கன்
ஆதிவாசி தலைவன் குடும்பம்

சோலைநாயக்கன்மார் என்ற அந்த ஆதிவாசிகள் வாழும் அடர்ந்த காட்டுப்பகுதியான, மேற்கு தொடர்ச்சிமலையில் அமைந்த நிலம்பூர் காடுகளுக்கு பயணமானோம். அவர்கள் வாழும் திசைகேட்டு, வழிகேட்டு ரயிலிலும், பஸ்ஸிலும் பிரயாணம் செய்து நீலம்பூர் மலை அடிவாரம்வரை ஜீப்பில் பயணப்பட்டு சென்றடைந்தோம். அங்கு ஆதிவாசிகளை சந்தித்தோம், சுவிசேஷம் அறிவித்தோம். அங்கேயே மூன்று நாட்கள் தங்கினோம். இதுதான் டிரைபல் மிஷனின் முதல் மிஷனரி பயணமாகும். இது நடந்தது 1975ம் வருடம் ஆகும். அதன்பின் அதே மேற்கு தொடர்ச்சி மலையில் வாழும் இருளர், முதுவர் என்ற ஆதிவாசிகள் வாழும் பல மலைகளுக்கு அவர்களை சந்திக்க தொடர்ந்து எங்கள் மிஷனரி பயணத்தை தொடர்ந்தோம், இந்த மிஷனரி ஊழியம் வேகமாய் விரிவடைந்தது. ஆவியானவரின் பாரமும் இதுவாயிருந்தது. ஆகவே ஆவியானவர் எங்களோடு இருந்து எங்களை இந்த ஊழியத்தில் இணைத்து அருமையாக வழிநடத்தினர். நாங்கள் செய்யும் இந்த ஆதிவாசிகள் ஊழியத்தை கேள்விப்பட்ட பலர் இந்த ஊழியத்தின்மீது பாரம்கொண்டு கவரப்பட்டு இந்த ஊழியத்தை சிறப்பாக தாங்கவும், ஜெபிக்கவும் தொடங்கினர்.

அப்படியாகத்தான் நாங்கள் செய்துக்கொண்டிருந்த இந்த ஊழியத்தை Dr.முரளிதர், MD., அவர்கள் கேள்விப்பட்டார். ஒருமுறை இந்த ஊழியத்தில் பங்குகொண்டு இது உண்மை ஊழியம் என்று அறிந்து, இந்த ஊழியத்தைக்குறித்து பாரப்பட்டு எங்களோடு 1977ம் ஆண்டு எங்களோடு இணைந்தார். Dr.முரளிதர்,MA., அவர்கள் பாண்டிசேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் இருதய நிபுணர் (Cordialigist) படிப்பு படித்து, கொல்லம் (Quilon) - பென்ஜஹிர் கத்தோலிக்க ஆஸ்பத்திரியில் பெரிய சம்பளத்தில் தலைமை இருதய வியாதி நிபுணராக பணியாற்றிக்கொண்டிருந்தபோது முழுநேர ஊழியத்துக்கு தன்னை ஒப்புக்கொடுத்தார். Dr.முரளிதர்,MD,MA,MS., அவர்கள் தொடர்ந்து காடுகளில் ஆத்துமாக்களைத்தேடி எங்களோடு அலைந்தார். இதுதான் உண்மையான ஊழியம் என்பதையும், "இதற்காகத்தான் நான் உன்னை தெரிந்தெடுத்தேன். சுகமான, சௌகரியமான ஊழியத்தை அல்ல" என்பதையும், ஆவியானவர் அவருக்கு உணர்த்தினார். இந்த கடினமான ஊழியத்தை உன்னிடம் ஒப்படைக்கிறேன் என்று ஆவியானவர் Dr.முரளிதர் அவர்களோடு திரும்பதிரும்ப உணர்த்தினர். உடனே அவர் ஆண்டவரின் சத்தத்துக்கு கீழ்படிந்தார். Tribal Mission ஊழியம் என்ற இந்த கடினமான ஊழியத்துக்கு தன்னை முற்றிலுமாக அர்ப்பணித்தார். இப்படித்தான் Dr.முரளிதர் அவர்கள் Tribal Mission ஊழிய பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

எவர்கள் ஆவியைத் தேவன் ஏவினாரோ அவர்கள் எல்லாரும் எழும்பினார்கள். எஸ்றா 1:5. இந்த வசனத்துக்கேற்ப இந்த மகத்தான மிஷனரிபணிக்கு பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டவர்கள் ஏராளம். சபை வித்தியாசமின்றி பாஷை வித்தியாசமின்றி இயேசு கிறிஸ்துவை ஒருமுறைகூட கேட்டிராத ஆதிவாசிகளுக்கு சுவிசேஷம் என்ற Tribal Mission மிஷனரி பணியில் ஏராளமான விசுவாசிகள் இணைந்தனர்.

இந்த Tribal Mission மிஷனரி ஊழியம் இன்று ஆலமரம்போல் மிகவேகமாக வளர்ந்து தமிழ்நாடு, கேரளா, ராஜஸ்தான், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வாழும் ஆதிவாசிகள் வாழும் காடுகளில், மிஷனரிகளை அனுப்பும் பெரிய மிஷனரி ஸ்தாபனமாக தலைநிமிர்ந்து நிற்கிறது. 6000 ஆதிவாசிகளுக்காக அவர்கள் வாழும் யானைகள் நிறைந்த காடுகளான ஆனைக்கட்டி என்றழைக்கப்படும் மலையில் அவர்களுக்காகவே 120 படுக்கைகள்கொண்ட பெத்தனியா மெடிக்கல் சென்டர் என்ற பெயரில் ஆஸ்பத்திரி நடத்தப்படுகிறது. மெத்த படித்த ஏறக்குறைய 9 விஷேச மருத்துவர்கள், செவிலியர்கள் தியாகத்தோடும், அர்ப்பணிப்போடும் அங்கு பணிபுரிந்து வருகின்றனர்.

முதன்முதலாக ஆங்கிலமொழியில்
பயின்ற ஆதிவாசி பிள்ளைகள்;

அங்குள்ள காட்டிலிருந்து ஆதிவாசி குடும்பத்திலுள்ள சிறுபிள்ளைகளை ஆனைக்கட்டிக்கு வரவழைத்து அவர்களுக்கு சிறப்பு கல்விப்பயில ஏற்பாடு செய்தோம். கோவணத்துடன் வந்த அந்த பிள்ளைகளுக்கு பூட்சும், டையும், நல்ல யூனிபார்மும் அணிவித்து அவர்களுக்கு சிறப்பான மெட்ரிக்குலேஷன் படிப்பு (ஆங்கிலமொழி பாடபடிப்பு) சொல்லி கொடுத்து அவர்களை அரசாங்க பரீட்சை எழுத வைத்தோம். அவர்களின் சிறந்த படிப்புக்காக கோல்டு மெடல் வாங்கும் அளவு சிறப்பான படிப்பை ஆதிவாசி பிள்ளைகள் பெற்றுவருவதை மாநில அரசாங்கம் Tribal Missionனின் ஆதிவாசிகளிடையே நடத்தும் கல்வித் தொண்டை பாராட்டி வாழ்த்தி புகழ்த்தியுள்ளார்கள்.

Tribal Mission ஆஸ்பத்திரியில் (மத்திய அரசாங்கம்) டெல்லி, தமிழ்நாடு ஆகிய அரசாங்க அங்கீகாரம் பெற்ற செவிலியர் பள்ளி நடத்தப்படுகிறது. நான்கு வருட செவிலியர் படிப்பை வெற்றிகரமாக முடித்து ஆதிவாசி பிள்ளைகள், இன்று CMC (Vellore) ஆஸ்பத்திரியிலும், அரபு நாடுகளிலுள்ள ஆஸ்பத்திரிகளிலும் வேலை செய்து நல்ல சம்பளம் பெறுகிறார்கள் என்பது எங்கள் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும்.

Tribal Mission மிஷனரிகளை பணிதளம் அனுப்பும்முன் அவர்களுக்கு ஒருவருட அடிப்படை வேதாகம கல்வியை கற்றுக்கொடுக்கும் ஏற்பாடும் இங்கு தொடர்ந்து நடைபெறுகிறது.

நாகர்கோவிலிருந்தும், கேரளாவிலிருந்தும், பெரிய படிப்பு படித்த டாக்டர்கள் அடிக்கடி ஆதிவாசி காடுகளில், கிராமங்களில் தங்கி அவர்களுக்கு இலவச வைத்தியம்மூலம் சிகிச்சை அளித்து இயேசுகிறிஸ்துவையும் அறிவிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த இலவச வைத்திய ஊழியத்தில் தங்கள் வருமானத்தையும் இழந்து காடுகளில் தங்கி, இந்த ஊழியத்தில் பங்குகொண்ட எல்லா டாக்டர்மார்களுக்கும் நன்றி கூறிக்கொள்கிறோம்.

சமீபத்தில் சென்னையை சேர்ந்த ஒரு சகோதரி தன் கணவர் மரிக்கும்முன் தன்னுடைய பேங்கிலுள்ள சேமிப்பிலிருந்து பணம் எடுத்து அதை என் கையில் (டாக்டர்.புஷ்பராஜ்) ரொக்கமாக கொடுத்து ஆதிவாசிகள் வாழும் காடுகளுக்குள்ளே ஆலயம் கட்டும் முழுசெலவும் இந்த பணத்திலிருந்து செலவு செய்யப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டு என் கணவர் கர்த்தரின் பாதம் போய்சேர்ந்தார் என்று கூறி அவர் கணவரின் ஆசையை நிறைவேற்ற அவர் மனைவியும், மகனும் நேரிடையாக சேலத்தில் என் வீட்டுக்குவந்து பணத்தை கொடுத்து மரித்த என் கணவரின் ஆசையை நிறைவேற்றுங்கள் என்று அந்த முழுதொகையையும் ஒப்படைத்தார்கள். அந்த பெரும்தொகையை அப்படியே Dr.முரளிதர் மூலமாக கையளிக்கப்பட்டு ஆலய கட்டுமானபணி இப்போது தொடங்கப்பட்டுள்ளது என்ற சந்தோஷ செய்தியையும் இச்சமயம் அறிவிக்கிறேன்.

தமிழ்நாட்டில் நாகர்கோவில் (கன்னியாகுமரி மாவட்டம்) CSI கிறிஸ்தவ விசுவாசிகள் பல வருடங்களாக Tribal Mission பணியை தாங்குவதுபோல், திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைகுறிச்சி என்ற பகுதிகளிலும் Tribal Mission ஊழியத்தைத்தாங்க இப்போது ஒரு மிஷனரிகூட்டம் அங்குள்ள விசுவாசிகளால் ஒழுங்கு செய்யப்பட்டு Dr.முரளிதர் அவர்கள் அக்கூட்டங்களில் பேசுகிறார். இப்படியாக ஆரம்பத்தில் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த Tribal Mission மிஷனரிபணி இந்தியா முழுவதும், வெளிநாட்டிலும் பரவுவதை அறிந்து நாங்கள் தேவனைத்துதிக்கிறோம். Tribal Mission ஊழியத்தை தாங்கும் அன்பு உள்ளங்களை அறியும்போது ஒரு வேதவசனம் ஞாபகத்தில் வருகிறது. நெகேமியா 2:18 "அந்த நல்ல வேலைக்குத் தங்கள் கைகளைத் திடப்படுத்தினார்கள்". இந்த வசனத்தின்படி ஏராளமானவர்கள் இந்த Tribal Mission ஊழியத்தை தாங்க முன்வந்துள்ளனர் என்பது சந்தோஷமான விஷயமாகும்.

இந்த டிரைபல் மிஷன் ஊழியங்களுக்காக வாசகர்களாகிய நீங்களும் ஜெபியுங்கள் என்று வேண்டிக்கொள்வதற்காக அநேக வருடங்களுக்குமுன் ஜாமக்காரனில் எழுதிய Tribal Mission வரலாற்றை இம்முறை சுருக்கமாக எழுத உங்களுக்கும் புதிய வாசகர்களுக்கும் அறிவிக்கிறேன். இந்த Tribal Mission ஊழியத்துக்கு உதவி செய்யவும், இதைக்குறித்த முழுவிவரங்களை அறியவும் Tribal Mission பத்திரிக்கை (தமிழ், ஆங்கிலம், மலையாளம்) பாஷைகளில் தேவைப்படுபவர்கள் கீழே உள்ள விலாசத்தில் தொடர்புக்கொள்ளலாம்.

காணிக்கையை ஆன்-லைன் மூலம், டிடி மூலம், செக் மூலம் அனுப்ப விரும்புபவர்களுக்காக பேங்க் முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. AXIS BANK LTD, PERUMBAVOOR - SB A/C No.910010028193291, IFSC: UTIB 0000803
     2. STATE BANK OF TRAVANCORE, PERUMBAVOOR - SB A/C No. 57041605654, IFSC: SBTR 0000154
     3. THE CATHOLIC SYRIAN BANK LTD, PERUMBAVOOR - SB A/C No. 0156-00705880-190001,
         IFSC: CSBK 0000156
     4. INDIAN OVERSEAS BANK, PERUMBAVOOR - SB A/C No. 00690100008239, IFSC: IOB-A-0000069
     5. Dr.K.MURALIDAR, THE CATHOLIC SYRIAN BANK, PERUMBAVOOR - SB A/C No.0156-007066354-190001,
         IFSC:CSBK 0000156.

மேலும் விவரங்களுக்கு
     Dr. K.MURALIDAR, MD.,
     TRIBAL MISSION,
     IRINGOLE.PO, PERUMBAVOOR - 683 548
     ERNAKULAM.DT, KERALA, INDIA,
     PH: 0484-2593866.
     e-Mail: [email protected]


குறிப்பு: இந்த ஜாமக்காரனில் அறிமுகப்படுத்தியுள்ள மிஷனரி ஸ்தாபனங்களுக்கு, மிஷனரிகளுக்காக காணிக்கைகளை அனுப்ப விரும்புகிறவர்கள் தயவுசெய்து என் பெயருக்கு அனுப்பவேண்டாம். இதைக்குறித்து மேலும் விவரங்கள் அறிய விரும்புபவர்களும் என்னோடு தொடர்புக்கொள்ளவேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். டிரைபல் மிஷனைப்பற்றி கூடுதல் விவரம் அறியவும், காணிக்கை அனுப்பவும் முழு விலாசத்தையும், விவரங்களையும் மேலே குறிப்பிட்டுள்ளதை கவனித்துக் கொள்ளவேண்டுகிறேன்.


Top
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM