கர்த்தருக்குள் அன்பானவர்களே,
உயிர்த்தெழுந்த நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் யாவருக்கும் என் வாழ்த்துதல் கூறிக்கொள்கிறேன்.
பரீட்சை எழுதும் ஏராளமான பிள்ளைக்களுக்காக ஜெபித்தேன். கர்த்தர்தாமே நம் பிள்ளைகளுக்கு நல்ல வெற்றியை அருளுவாராக.
ஒவ்வொரு
வருடத்துக்கும் தீர்க்கதரிசனம் சொல்லும் பொய்யர்கள் பெருகிவிட்டார்கள்.
அதை உட்கார்ந்து கேட்கும் ஊழியர்களும், விசுவாசிகளும் அவர்களைப்போலவே
இருப்பார்கள் என்பது நிச்சயம். இப்படிப்பட்டவர்களைப்பற்றி என்ன சொல்வது
என்றே தெரியவில்லை! உதாரணத்துக்கு, ரஷ்யா அதிபர் புட்டீனைக் குறித்து
இயேசுகிறிஸ்து என்னிடம் தனியாக அழைத்து பேசினார். புட்டீன் அவர்கள்
மனந்திரும்பாவிட்டால் அவரை நான் தண்டிப்பேன் என்றாராம். இதை
அறிவித்தவரின் மனைவி, பிள்ளைகள், விசுவாசிகள் எல்லாரும் கொட்டாவி
விட்டுக்கொண்டு அதை கவனிக்கிறார்கள். டிவியில் அதைக் கண்டேன். அவர்களே
இவர் தீர்க்கதரிசனத்தை நம்பவில்லை என்று அறியப்படுகிறது. டிவியில் அதை
பார்த்த நான் இவர் கூறுவது எவ்வளவு முட்டாள்தனமான தீர்க்கதரிசனம்!
ரஷியா அதிபர் புட்டீனை எச்சரிக்க வேண்டுமானால் கர்த்தர்
புட்டீனிடம்தானே போய் கூறவேண்டும், இவரிடம் கூறி என்ன பிரயோஜனம்? இவர்
ரஷ்யா போய் நேரில் சொல்லுவாரா? இது அடி முட்டாள்தனம் அல்லவா!
ஏஞ்சல்
TV சகோ.சாது சுந்தர் செல்வராஜ், சகோ.வின்சென்ட் செல்வகுமார் இவர்களோடு நாலுமாவடி சகோ.மோகன் சி.லாசரஸ் அவர்களும் இணைந்து கர்த்தர் இவர்களுக்கு கூறும் தீர்க்கதரிசனத்தை ஏஞ்சல் டிவி மூலம் வானமண்டலத்தின் வழியாக உலகம் முழுவதும் அறிய செய்யபோகிறார்களாம். ஏஞ்சல் டிவி ரிக்கார்டிங் ஸ்டுடியோவுக்கு மோகன் சி.லாசரஸ் நேரில் வந்து அவரும் அதை ஆதாரித்து அவர் பாணியில்
கர்த்தர் என்னிடம் மிகத்தெளிவாக இதைக் குறித்து பேசினார். நாம் இணைந்து தீர்க்கதரிசினம் கூறுவோம் என்று பிரதிஷ்டை ஜெபம் செய்தார்.
இவர்கள் எல்லாருக்கும் ஒரே அருள்நாதர், சகோ.மோகன் சி.லாசரஸ் திருப்பத்தூரில் இணைந்ததைப்போல் மூவர் அணியாக இந்த புதுமுகங்கள் இணைந்து, இயேசுகிறிஸ்து சிங்கம் ரூபத்தில் வரபோகிறதை தீர்க்கதரிசனமாக அறிவிக்கப்போகிறதை இனி அடிக்கடி கேள்விப்படலாம். இவர்களிடமிருந்து மக்களை கர்த்தர்தாமே காப்பாற்றுவாராக என்று ஜெபிப்போம்.
இம்முறை ஜாமக்காரனில்
அரவாணி(அலி)களைப்பற்றிய செய்தி பெருமளவில் இடம்பெற்றுவிட்டது. இது மிகமுக்கியமான விஷயமானதால் கொஞ்சம் ஆழமாக விளக்கவேண்டியது அவசியமானது. என் இந்த கட்டுரையை
ஆபாசம் என்று வாசகர்கள் நிச்சயம் குற்றஞ்சாட்டுவார்கள் என்று எதிர்ப்பார்க்கிறேன். செய்தியின் மைய விஷயம் ஆபாசமானதால், குறிப்பாக பிறப்புறுப்பை பற்றியதாகையால் வாசிக்கும்போது ஆபாசமாகத்தான் காணப்படும். இந்த ஆபாசத்தையே பிஷப்மார் சபைக்குள் அனுமதிக்கும்போது, இதை அனுமதித்த பிஷப், ஆயர்கள், திருமண்டல மக்கள் பலருக்கு இது ஆபாசமாக தோன்றாதபோது, அதைக் குறித்து நான் விளக்கும்போது அல்லது விமர்சிக்கும்போது அதை நீங்கள் ஆபாசமாக தயவுசெய்து வாசகர்கள் நினைத்துக்கொள்ளக்கூடாது.
இப்போது சிறுபிள்ளைகள் படிக்கும் பாடபுத்தகத்திலேயே
Sex Education-பற்றி படத்துடன் பாடங்கள் வெளிவந்துவிட்டது. பெண்பிள்ளைகளும், ஆண்பிள்ளைகளும் கண்டிப்பாக அதை இணைந்து படித்தாகவேண்டும், அவைகளை அறிந்துக்கொள்ளவேண்டும் என்று அரசாங்க கல்விதுறை கட்டளையிட்டிருக்கும்போது கிறிஸ்தவ பெற்றோர்கள் அது
ஆபாசம், அந்த ஆபாச படமுள்ள பக்கத்தை கிழித்துவிடுங்கள் என்றா கூறுகிறார்கள்? பள்ளிக்கூட குறிப்பிட்ட பாடத்துக்கும் பெற்றோர்கள் வீட்டில் விளக்கம் சொல்லி கொடுக்கும் கட்டாயம் ஏற்பட்டுவிட்டதே! அதை யாவரும் தவிர்க்க இயலாதே! தினசரி டிவியில் பெண்கள் மாதம் ஒருமுறை அந்த குறிப்பிட்ட 3 நாட்களில் உபயோகிக்கும் (PAD-Carefree) பொருளைக் குறித்து பச்சையாக விதவிதமாக 10 நிமிடத்துக்கு ஒருமுறை டிவியில் விளம்பரமாக காட்டிக்கொண்டேயிருக்கிறார்களே! ஏன் இங்க் அதிலே ஊற்றி காண்பிக்கிறார்கள் என்று எந்த வீட்டிலாவது நம் சிறு பிள்ளைகள் கேட்காமல் இருந்திருக்கிறார்களா? அதற்கு வீட்டில் எப்படி விளக்கம் அளித்திருப்பீர்கள்? அது ஆபாசம் என்று வெறுமனே கூறி நழுவிவிடுவீர்களா! அல்லது இப்போது அதற்கு நாங்கள் விளக்கம் கூறக்கூடாது, போகபோக உங்களுக்கே விளங்கும் என்று கூறி சமாளிப்பீர்களா? தினசரி பத்திரிக்கைகள், வார பத்திரிக்கைகள் எதை திறந்தாலும் பக்கத்துக்குபக்கம் குடும்ப வாழ்க்கையில் சந்தோஷம் இல்லையா? என்ற கேள்வியோடு முழுபக்கம் காண்டம், நிரோத் விளம்பரங்கள் ஆபாசத்தின் உச்சமாக தோன்றவில்லை? இவர்களுக்கிடையே பல சித்த வைத்தியர்களின் ஆபாச விளம்பரங்களை ஒரு நாளாவது நாம் அல்லது பிள்ளைகள் டிவியில் பார்க்காமல் இருக்கிறார்களா?
வேதத்தில் பழைய ஏற்பாட்டில் குறிப்பாக
உன்னத பாட்டு புத்தகத்தில் வாசிக்காத ஆபாசமா?இவைகளை நாம் படிப்பதில்லை? தியானிப்பதில்லை?
ஆபாசம் என்று தள்ளிவிடுகிறதில்லையே!
ஆகவே இப்போது ஜாமக்காரனில் வெளிவந்த அரவாணி(அலி) பிரச்சனையின் எச்சரிப்பு செய்தி.
பிரதம மந்திரி, முதல் மந்திரி, பத்திரிக்கைள், டிவி செய்திகளில் சூடு செய்தியாக வந்தபின் இவற்றைக்குறித்து நான் எழுதி விளக்கம் அளிக்காமல் இருக்கமுடியுமா? மேலும் சோதோம்கொமாரா பாவமும், அரவாணி ஆபாசமும்
திருச்சபைகளின் உள்ளே ஆயராகவும், பிஷப்பாகவும், கம்பீரமாக அரசாட்சி செய்ய ஆரம்பித்துவிட்டது. இவர்கள் இவ்வளவு மோசமாக துணிந்தபின் அதற்கான விளக்கம் அளிக்காமல்போனால் இதன் விளைவு வீட்டுக்குள் நம் பிள்ளைகளுக்குள் குறிப்பாக வாலிப பெண்களுக்குள் அந்த பாவம் கடந்துவந்து ஒவ்வொருவீடும்
சோதோம் கொமாராவாக மாறிவிடும்! எச்சரிக்கை!! என்றாலும் இந்த கட்டுரையில் கூடியவரை ஆபாசத்தை தவிர்த்து மேல்போக்காகத்தான் எழுதியுள்ளேன். படங்கள் எதுவும் வெளியிடவில்லை. சற்றே புரிந்துக்கொள்ளுங்கள், தாங்கிக்கொள்ளுங்கள். நம் தலைமுறை பிள்ளைகளை காப்பாற்றுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அரவாணி (அலி) விஷயமாக நான் கடந்த ஜாமக்காரனில் எழுதிய அவசர அறிவிப்பும் - எச்சரிப்பும் குறித்து அறிவித்ததை உற்சாகப்படுத்தி ஆதரவு கொடுத்து
எழுதிய CSI, லூத்தரன் ஆயர்களுக்கும், சென்னை - மதுரை - நெல்லை ஆகிய இடங்களிலுள்ள விசவாசிகளுக்கும், வாசகர்களுக்கும் நன்றி. அதேசமயம் அரவாணிகளை ஆயராக்குவதில் பிழை ஏதும் இல்லை என்று அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், (டாக்டர்.புஷ்பராஜ்) ஆகிய என்னை கண்டித்தும் எழுதிய ஆயர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆன்-லைனில் காணிக்கை அனுப்பகிறவர்களும், ஏற்கனவே அனுப்பியவர்களும் தயவுசெய்து ஒருமுறை உங்கள் விலாசம்,போன் நெம்பர் ஆகியவைகளை எனக்கு எழுதி அனுப்புங்கள். எந்த பேங்கில் அனுப்பினீர்கள் என்றும் எழுதுங்கள். ஏற்கனவே எனக்கு நீங்கள் எழுதியிருந்தாலும் இன்னும் ஒருமுறை விலாசம் எழுதி பேங்க் பெயர் குறிப்பிட்டு தொலைபேசி எண்ணோடு எனக்கு எழுதி அனுப்பி உதவுங்கள். அவைகளை நான் தனியாக எழுதி புதுகணக்கு வைக்கப்போகிறேன். காணிக்கை ஆன்லைனில் கிடைத்தவுடன் போன் செய்து அறிவிக்கவும் அது உதவியாக இருக்கும். காணிக்கை அனுப்பிய யாவருக்கும் என் வாழ்த்துதல்கள். ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பராக.
|