|
 |
Rt.Rev.K.B.YESUVARAPRASAD |
ஆந்திர மாநிலம்
ராயல்சீமா CSI டையோசிஸ்
பிஷப் Rt.Rev.K.B.YESUVARAPARASAD என்பவர்
பிஷப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
CSIயின் புதிய மாடரேட்டராக பதவியேற்ற
Most Rev.தேவகடாட்சம் (கன்னியாகுமரி பிஷப்) அவர்கள் பதவி நீக்க அறிவிப்பை வெளியிட்டார்.
உதவி மாடரேட்டரும், பிஷப்புமான
Rt.Rev.G.தேவாசீர்வாதம் அவர்களை ராயல்சீமா டையோசிஸ்ஸின் பிஷப் கமிஷனரியாக பொறுப்பெடுக்க ஏற்பாடு செய்துள்ளார்.
கோயமுத்தூர்
CSI டையோசிஸ் பிஷப்.துரை அவர்களின் பதவி நீக்கத்துக்குபிறகு,
CSIயில் இரண்டாவது பிஷப்.ஏசுவரபிரசாத் அவர்களை பதவி நீக்கம் செய்தது
CSIயின் புதிய ஆரோக்கிய சூழ்நிலையின் அடையாளமாகும். பண ஊழல் காரணமாக, அடுத்தடுத்து பிஷப்மார்கள் நீக்கப்படுவது
CSIயில் நல்ல விழிப்புணர்வு உண்டாகிக்கொண்டிருப்பதின் அடையாளமாகும்.
CSI பிஷப்மார்களுக்காக கடந்த சில வருடங்களாக அந்தந்த திருமண்டலத்தின் குறிப்பிட்ட மக்கள் ஜெபித்ததும், போராடியதும் வீண்போகவில்லை.
இது CSIயில் உண்டான உயிர்மீட்சியல்ல. ஆனால் நல்ல விழிப்புணர்வு உண்டாகியிருக்கிறது என்று மட்டுமே கூறலாம். சில பிஷப்மார்களுக்கு கிடைக்கவேண்டிய தண்டனைக்குமுன்
மரணம் முந்திக்கொள்கிறது.
இவைகள்
யாவும் உயிரோடிருக்கும் CSI, மார்தோமா மற்றும்
லூத்தரன் பிஷப்மார்களுக்கு தேவனால் கொடுக்கப்படுகிற எச்சரிக்கைகள் ஆகும்.
இதுநாள்வரை பணம், செல்வாக்கு, அரசியல் பின்னணி இவைகள்தான் பல பிஷப்மாரை தண்டனைக்கு தப்பிக்க வைத்தது. அதே சமயம் நமது
தேவன் தலையிடும்போது அது எத்தனை பயங்கரமாக இருக்கும் என்பது கிறிஸ்தவர்களும், கிறிஸ்தவ தலைவர்களும் சமீபத்தில் நடந்த பிஷப்மார்களின் பதவி நீக்கம் இவர்கள் படிக்க வேண்டிய பாடமாகும்.
|