அரவாணி - ஆயர் விவகாரம்

அவசர அறிவிப்பு

கடந்த 2012 பிப்ரவரி மாத ஜாமக்காரனில் "அவசர அழைப்பு" என்ற தலைப்பில் CSI மெட்ராஸ் திருமண்டலத்தில் அரவாணி (அலி) ஒருவரை ஆயராக்கப்போவதாக வந்த தினசரி செய்திதாளில் வெளிவந்த செய்திகளைக்குறித்து அறிந்தவர்கள் பலர் அதிர்ச்சியுற்று என்னோடு தொடர்புக்கொண்டார்கள். உடனடியாக வாசகர்கள் அனைவருக்காகவும், ஜெபத்துக்காகவும், எச்சரிக்கை செய்யும் பொருட்டும், அவசர செய்தியாக நான் ஜாமக்காரனில் எழுதிய விவரத்தை வாசித்த பலர் அந்த செய்தியை நம்பமுடியாமல் ஆச்சரியப்பட்டு செய்தி உண்மைதானா? என்று சென்னை CSI திருமண்டலத்தில் உள்ளவர்களோடு விசாரிக்க ஆரம்பித்தார்கள். உடனே எதிர்ப்புகளும் பூதாகரமாக எழும்பின. இதனிடையே வார பத்திரிக்கை, தினப்பத்திரிக்கை, TV சேனல்கள் என்று மீடியாக்கள் என்னை நேரில் பேட்டி எடுக்க அனுமதி கேட்டனர். குமுதம் அலுவலகத்திலிருந்து ஆசிரியர் குழு தொலைப்பேசியில் நான் அரவாணியைப்பற்றி எழுதியதைக்குறித்து விளக்கம் கேட்டனர். நானும் அவர்களுக்குமட்டும் அவர்கள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் விளக்கமளித்தேன்.

இந்திய பிரதம மந்திரிக்கும், தமிழக முதல்வருக்கும் என்னைப்பற்றி புகார்கள் சிலரால் அனுப்பப்பட்டதாக குமுதம் அலுவலகத்தில் உள்ளவர்கள் எனக்கு அறிவித்தனர். ஜாமக்காரனில் Dr.புஷ்பராஜ் அவர்கள் அரவாணிகளுக்கு எதிராக மனித உரிமைக்கு எதிரான கருத்துக்களைக் கூறியுள்ளார். ஆகவே ஜாமக்காரன் பத்திரிக்கையை தடை செய்யவேண்டும் என்று அரசாங்கத்துக்கு எழுதியுள்ளதாக அறிந்தேன்.

ஆகவே 2012 பிப்ரவரிமாத ஜாமக்காரனில் என்ன எழுதினேன் என்பதை வாசகர்களுக்கு ஞாபகப்படுத்தும்படி ஜாமக்காரன் 41ம் பக்கத்தில் வந்த செய்தியை அப்படியே மறுபடியும் இங்கு வெளியிடுகிறேன்.

அவசர அறிவிப்பு!

உலகத்திலேயே சென்னை CSIயில் அலி ஆயராகும் வெட்கக்கேடு! சோதோம் கொமாராவின் பாவம் - மெட்ராஸ் CSI டையோசிஸ்குள்ளே!

அலி (அரவாணி) பாரதி

  உலகத்திலேயே குறிப்பாக இந்தியாவில் CSI சரித்திரத்திலேயே சென்னை CSI டையோசிஸ்ஸில் அலி (அரவாணி-திருநங்கை) ஒருவரை CSI சபை ஆயராக ஆக்கும் ஏற்பாட்டின் செய்தி பெரும் தலைக்குனிவையும், வெட்கக்கேட்டையும் உண்டாக்கியுள்ளது.

  2012 பிப்ரவரி 5ஆம் தேதி சென்னை CSI டையோசிஸ் ஆயரான Rev.கிறிஸ்டோபர் ரத்தினசாமி என்பவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அரவாணியை சென்னை பேராயம் CSI ஆயராக்கும் என்று அறிவித்தார். இது CSI சபைகளுக்கு பெரும் தலைக்குனிவை உண்டாக்கிவிட்டது. தூத்துக்குடி பாரதி என்பவர் ஆணாக பிறந்து-பெண்ணாக தன்னை மாற்றிக்கொண்ட நபராவார். இவர் செங்கல்பட்டில் பிஷப்.எஸ்றா சற்குணம் அவர்களின் ECI சபையில் ஏற்கனவே ஊழியராக பணியாற்றியவராவார். இப்போது இவர் மதுரை அரசரடி வேதாகம கல்லூரியில் குருபட்டத்துக்காக BD படிக்கிறார். இவரை சென்னை CSI பிஷப்.தேவசகாயம் அவர்கள் CSI சபையின் ஆயராக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பெருமையோடு அறிவிக்கிறார். அரவாணிகளுக்கு (அலி) உதவியும், படிப்பும் அளிப்பதில் நமக்கு ஆட்சேபணை ஏதும் இல்லை. அரவாணிகளுக்காகவும் இயேசுகிறிஸ்து இரத்தம் சிந்தினார். அவர் பாவமன்னிப்பு பெற்றால் அலிகளும் பரலோகத்து பாத்திரராகமுடியும் என்பது நிச்சயம். ஆனால் CSI சபைக்கு அவரை ஆயராக அபிஷேகம் செய்வது என்பதை வேதம் அனுமதிப்பதில்லை. இதை ஆதரிக்கும் பிஷப்.தேவசகாயம், Rev.கிறிஸ்டோபர் ரத்தினசாமி போன்றவர்களோடு பேராயத்தில் வேறு யாராவது இதை ஆதரிப்பது உண்மையானால் அவர்களின் பரிசுத்தத்தையும், அவர்களின் பாலுறவு (SEX) உணர்வுகளையும் மக்கள் சந்தேகிக்க இடம் உண்டாக்கும். இவர்களும் அந்த பாவத்தில் அகப்பட்டவர்களா? என்று சந்தேகிக்க இடம் உண்டு.

எச்சரிக்கை: சென்னை பேராயத்திலுள்ள CSI ஆயர்கள், அங்கத்தினர்கள், தென்னிந்தியாவிலுள்ள முழு CSI சபைகளும், மார்தோமா சபைகளும், லூத்தரன் சபைகளும் அவரவர்கள் தங்கள் சபையின் கமிட்டியை கூட்டி அலியை ஆயராக்குவதற்கு தங்கள் எதிர்ப்பை CSI சினாட் மூலம் சென்னை CSI பேராயருக்கு உடனடியாக காலதாமதமின்றி அறிவிக்க கடமைப்பட்டுள்ளார்கள். அகவேதான் இதை மிக அவசர அறிக்கையாக வெளியிடுகிறேன்.

  அரவாணி (அலி) என்பது தெய்வத்தின் படைப்பு அல்ல - சரீர பாவ உணர்வுகளை தூண்டிவிட்டதால் உண்டான விபரீதமாகும். இதை உடற்கூற்றின்படியும், வேத வசனத்தின்படியும் இது எப்படி பாவமாகிறது என்பதைப்பற்றிய முழுவிளக்கத்தை அடுத்த ஜாமக்காரனில் வெளியிடுகிறேன்.

- ஜாமக்காரன்


(அரவாணிகளை என் கருத்துக்கு எதிராக தூண்டிவிடும் ஆயர்கள், நபர்கள், அரவாணி சங்கங்களில் உள்ளவர்களுக்காக, மனித உரிமை கழகங்களில் உள்ளவர்களுக்காக இதை எழுதுகிறேன். அவர்களும் இதை படிக்க கேட்டுக்கொள்கிறேன்)

அரவாணிகள்-அலிகள்-திருநங்கைகள் என்றெல்லாம் அழைக்கப்படும் இவர்களை நான் எங்கும் அவமானப்படுத்தவில்லை, கொச்சைப்படுத்தவில்லை. நான் அவர்களை தரக்குறைவாகவும் எழுதவில்லை! இவர்களும் சமுதாயத்தில் பல நிலைகளில் இப்போது வளர்ந்துகொண்டிருக்கிறார்கள். நான் அதை வரவேற்கிறேன். நானும் அரவாணிகள் மத்தியில் ஊழியம் செய்தவன்.

  அப்படியிருக்கும்போது அரவாணிகளைப்பற்றி நான் 2012 பிப்ரவரி மாத ஜாமக்காரனில் 41ம் பக்கத்தில் எழுதியதை முதலில் நன்கு படித்துபார்த்து நான் எழுதியது சரியா? தவறா என்று முடிவுக்கு வாருங்கள். இதை விளங்கிக்கொள்ளாத சிலர், என்னை பிடிக்காத சிலர் உங்களை எனக்கு எதிராக தூண்டிவிடும் நபர்களாக இருக்கிறார்கள். ஆகவே நீங்கள் அரவாணியாக மாறியதற்கு சரியான காரணம் உங்களுக்கே தெரியும். எனவே நான் கூறுவது அரவாணிகள் சபை ஆயராக பணி செய்ய கிறிஸ்தவ வேதம் கூறவில்லை என்ற செய்தியைமட்டும் அதில் எழுதியிருக்கிறேன்.

  ஒரு சபை ஆயராக ஒருவர் பொறுப்பெடுக்கவேண்டுமானால் அதற்கு என்னனென்ன தகுதிகள் என்று கிறிஸ்தவ வேதத்தில் 1 தீமோ 3ம் அதிகாரத்தில் கூறியுள்ளது. அதன் அடிப்படையில்தான் அரவாணிகள் ஆயராக தகுதியில்லை என்று எழுதினேன். ஆனால் அவர்கள் (அரவாணி-அலி-திருநங்கைகள்) மனந்திரும்பி இயேசுகிறிஸ்துவை ஆண்டவராக ஏற்றுக்கொண்டால் அவர்கள் தங்களைப்போலுள்ள அரவாணிகள் மத்தியிலும், சபை சுவிசேஷ ஊழியத்திலும், புறமதத்தினர் மத்தியிலும் ஊழியம் செய்யலாம். இதைக்குறித்து யாரும் தப்பாக குற்றம் சொல்லமுடியாது.

  உபாகமம் 23ம் அதிகாரத்தில் அண்ணகர்களை தள்ளிவைத்து சட்டம் இயற்றிய தெய்வத்திற்கு அந்த சட்டத்தை மாற்றவும் அவருக்கு அதிகாரம் உண்டு. அதன்படி ஏசாயா 56ம் அதிகாரத்தில் நம் தேவனே அண்ணகர்களுக்கு ஊழியம் செய்ய அதிகாரமும் கொடுத்துவிட்டார். இதற்கு யாரும் தடையாக நிற்கமுடியாது.

ஆனால் அவர்களுக்கு ஆசாரிய பணியோ, ஆயர் பணியோ செய்ய கர்த்தர் அனுமதிக்கவில்லை, அவ்வளவுதான். எனவே நான் எழுதியதை தவறாக புரிந்துக்கொள்ளாதீர்கள். அரவாணிகளுக்காகவும் இயேசுகிறிஸ்து இரத்தம் சிந்தினார். அரவாணிகளும் சிறப்பாக கர்த்தரின் மற்ற ஊழியத்தை செய்யலாம். எனவே நான் எழுதி கருத்துக்கள் அனைத்தும் பரிசுத்த வேதத்துடன் ஒப்பிட்டு பார்த்து வாசியுங்கள். கிறிஸ்தவ சபைக்கு, கிறிஸ்தவ மக்களுக்கு ஆதாரம், அஸ்திபாரம் எல்லாம் பரிசுத்த வேதம்தான்.


HUMEN RIGHTS - மனித உரிமை கழகத்தில்
தொடர்புடையவர்கள் கவனிக்கவும்:

  அரவாணி(அலி)களைப்பற்றி நான் கொச்சைப்படுத்தியோ அவர்களை எதிர்த்தோ நான் எழுதவில்லை என்பதை மேலே வாசித்திருப்பீர்கள். எங்கள் CSI சபை ஆயர் ஊழியத்திற்கான தகுதி, எங்கள் வேதத்தில் எழுதியபடி அரவாணிகளுக்கு ஆயர் ஊழியம் கூடாது என்று எழுதினேன். இது மனித உரிமையை எந்த விதத்திலும் பாதிக்க நியாயம் இல்லை.

  இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில், கேரளாவில் உள்ள பல இந்துமத கோவில்களில் கிறிஸ்தவர்-இஸ்லாமியர் ஆலயத்துக்குள் பிரவேசிக்கக்கூடாது என்ற அறிவிப்பும், தடையும் உள்ளது. மற்றும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் ஆலயத்திற்குள் பிரவேசிக்கக்கூடாது என்ற தடையை மனித உரிமை மீறிய செயல் என்று எல்லாரும் அறிவித்தும் மனித உரிமை கழகத்தினர் நடவடிக்கை ஏதும் எடுத்ததுபோல் தோன்றவில்லையே!

  இந்திய குடியரசு தலைவர், இந்திய தேசத்தின் மூத்த குடிமகன், தன் சொந்த மாநிலமான கேரளாவிலுள்ள குருவாயூர் கோவிலில் அநேக எதிர்ப்புகளின் மத்தியில் தான் வணங்கும் தெய்வத்தை தொழுதுகொள்ள தன் பதவியின் அதிகாரத்தை பயன்படுத்திதானே அந்த கோவிலில் பிரவேசித்தார். அதற்குமுன் அவருக்கு அனுமதி கிடைக்கவில்லையே! அதன்பின் அவருக்கு ஏற்பட்ட அவமானம் இந்திய குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் தலைகுனிவானதே! முன்னாள் குடியரசு தலைவர் Shri.K.R.நாராயணன் அவர்கள் தன் அதிகாரத்தை பயன்படுத்தி குருவாயூர் ஆலயம் சென்று திரும்பியவுடன் ஆலய பூசாரிகள் பொதுமக்கள் யாரையும் ஆலயத்துக்குள்விடாமல், மாட்டு சானகம் தண்ணீரில் கறைத்து தெளித்து முழு கோவிலையும் தீட்டு நீக்கம் என்ற பெயரில் கோவிலை கழுவியது, இன்னும் மக்கள் உள்ளத்தில் பெரும்பாதிப்பை உண்டாக்கியுள்ளதே! அது நம் குடியரசு தலைவரை அவமானப்படுத்தியதற்கு சமம். அந்த கோவிலின் அந்த மனித உரிமையின் பாதிப்பு நீங்கவில்லையே! இந்து அல்லாத யாரையும் தலித்தையும் இன்றுவரை உள்ளே விடவில்லையே! இப்படியிருக்க மனித உரிமை கழகம், இப்படிப்பட்ட முக்கிய காரியங்களில் இன்னும் நடவடிக்கை எடுத்தாக தெரியவில்லையே?

  அதே கேரளத்தில் வைக்கம் என்ற ஊரில் உள்ள இந்து ஆலயத்திற்குள் தி.க.தலைவர் ஈ.வெ.ரா.பெரியார் அவர்கள் தமிழ்நாட்டிலிருந்து சென்று கேரள தலித்துக்களோடு சேர்ந்து ஆலய தடையை மீறி, ஆலய பிரவேசம் நடத்தியதால்தான் இன்று தாழ்ந்த ஜாதியினர் அந்த கோவிலுக்குள் பிரவேசிக்க முடிந்தது. ஆனால் மனித உரிமை கழகத்தால் அந்த ஏற்பாட்டை செய்ய இயலவில்லை. அப்படியிருக்க ஜாமக்காரனில் அரவாணி ஒருவர் ஆயராக கூடாது என்று நான் ஜாமக்காரனில் எழுதியது மனித உரிமை மீறலாகியதாக எதிர்ப்பு தெரிவித்தது எப்படி நியாயம்?.

மேலே வாசித்த அறிவிப்பை ஆதாரமாககொண்டு அரவாணிகளை நான் அவமதித்ததைப்போல் இந்திய பிரதமருக்கும், தமிழக முதல்வருக்கும் புகார் அனுப்பியுள்ளார்கள். மேலே வாசித்த அறிவிப்பில் எந்த வரியிலாவது அரவாணிகளை அவமானப்படுத்தியுள்ளேனா என்பதை நீங்களே அறியுங்கள். இந்திய பிரதமருக்கு என்னை குற்றம்சாட்டி எழுதியவர்கள் நான் அரவாணிகளை அலி என்று எழுதி கொச்சைப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளார்கள். திருநங்கை, அரவாணிகள் என்ற பெயர்களைக் குறித்து பெரும்பாலானவர்களுக்கு அர்த்தம் தெரியாது. ஆகவே இந்த பெயர்கள் யாரைக் குறிக்கிறது என்பதற்காக அரவாணிகள் என்ற பெயருக்கு பக்கத்தில் அலி என்று அடைப்புக்குள் எழுதினேன். அந்த காலத்திலிருந்தே இவர்களை அலிகள் என்றுதானே அழைக்கப்பட்டிருந்தார்கள். நான் குறிப்பிட்டதில் பிழை என்ன? இது அவர்களை கொச்சைப்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டதல்ல என்பதை நீங்கள் வாசிக்கும்போதே அறிய இயலும்.

  அரவாணி (அலி) என்பவர்கள் தெய்வத்தின் படைப்பு அல்ல என்பதை உடற்கூற்றின்படியும்-வேதவசனத்தின்படியும் அடுத்தமாத ஜாமக்காரனில் விளக்குகிறேன் என்று குறிப்பிட்டு எழுதியுள்ளதை வாசித்தும் பலர் மிகவும் அவசரப்பட்டு தங்கள் விளம்பரத்துக்காக புகார் அனுப்பியும், அரவாணிகளை அவமானப்படுத்தியதாக பலர் தவறாக நினைத்தும், கோபப்பட்டும் பேசியுள்ளார்கள். மறுபடியும் கூறுகிறேன், அரவாணிகள் மனம்திரும்புதலின் அனுபவத்தைபெற்றால் நிச்சயம் அவர்களுக்கு பரலோகம் உண்டு, அவர்கள் ஊழியமும் செய்யலாம். ஆனால் அவர்கள் மனந்திரும்புதலின் அனுபவம் பெற்றாலும் திருச்சபையின் ஆயர் ஊழியத்துக்கு அவர்கள் தகுதியற்றவர்கள் ஆகிறார்கள். எப்படி தகுதியற்றவர்களாகிறார்கள் என்பதை நான் இங்கு வலியுறுத்த விரும்பினேன். இது விஷயமாக நான் அரவாணிகளோடு பேசுவதோ, அரவாணிகளைப்பற்றி வெளிஉலகத்துக்கு விளக்கம் அறிவிப்பதோ என் வேலையல்ல, அவர்களைப்பற்றி பேசவேண்டும் அல்லது எழுதவேண்டும் என்பதும் என் நோக்கமல்ல! அவர்களுக்கும், எனக்கும், என் பத்திரிக்கைக்கும் சம்பந்தம் ஏதும் இல்லை. என் பத்திரிக்கை பொது மக்கள் வாசிக்கும் பத்திரிக்கையும் அல்ல. அனைத்து கிறிஸ்தவர்களுக்காகவும் நான் பத்திரிக்கை நடத்தவில்லை. குறிப்பிட்ட சில என் வாசகர்களுக்காகமட்டும் அவர்களுக்கு ஆலோசனை, எச்சரிப்பு கொடுப்பதற்காகமட்டும் நடத்தப்படும் பத்திரிக்கையாகும். கிறிஸ்தவ சபை ஆயர்களின் தகுதிகளைப்பற்றிய கேள்விக்கு என் வாசகர்களுக்கு நான் அளித்த பதில்தான் கடந்த மாதம் ஜாமக்காரனில் நான் எழுதிய அந்த அவசர அறிவிப்பு ஆகும். ஆயர்களுக்கு என்று வேதம் கூறும் முக்கிய தகுதிகள் உண்டு. அந்த தகுதியின் அடிப்படையில் என் வாசகர்களுக்கு விளக்கம் கொடுக்கவேண்டியது என் கடமை. ஆகவே இதைக்குறித்து TVக்கோ, மற்ற பத்திரிக்கைக்கோ, என் பேட்டி அல்லது என் விளக்கம் எதுவும் அளிக்க நான் விரும்பவில்லை. அதனால்தான் TV பேட்டி, பத்திரிக்கையாளர்களின் பேட்டி எதுவும் எனக்கு பிரியமில்லை. யாரும் என்னை தேடி இது விஷயமாக வரவேண்டாம் என்று தொலைபேசியில் தொடர்புக்கொண்டவர்களுக்கெல்லாம் அறிவித்துவிட்டேன். நான் எழுதுவது அனைத்தும் என் ஜாமக்காரன் வாசகர்களுக்கான விஷயமாகும். என் பத்திரிக்கை பொதுமக்கள் வாசிக்கும் பத்திரிக்கை அல்ல என்பதை அறியவேண்டும். மேலும் பரிசுத்த வேதத்தில் எழுதப்பட்டு உள்ளவைகளை கவனியுங்கள்.


அலி-அரவாணிகள்-திருநங்கைகள்

இவர்களைப்பற்றி எல்லாரும் சுட்டிக்காட்டும் வசனங்கள் மத்தேயு 19:12,ஏசாயா 56:3 முதல்:

1). தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாகப் பிறந்தவர்களும் உண்டு,

2). மனுஷர்களால் அண்ணகர்களாக்கப்பட்டவர்களும் உண்டு.

3). பரலோக ராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக்கொண்டவர்களும் உண்டு என்று இயேசுகிறிஸ்து கூறினார். இப்போது இயேசுகிறிஸ்து அண்ணகர்களைப்பற்றி ஏன் இப்படி பேசினார் என்று அறியவேண்டும். வேதத்தில் எந்த வசனத்தை தியானித்தாலும், எந்த சூழ்நிலையில் அந்த வசனம் கூறப்பட்டதோ அதன் அடிப்படையில்தான் அந்த வசனத்தின் அர்த்தத்தை விளங்கிக் கொள்ளவேண்டும். இயேசுகிறிஸ்துவின் சீஷர்கள் விவாகரத்தைப்பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது, விவாக வாழ்க்கையைப்பற்றி இவ்வளவு கடினமான உபதேசங்களை சீஷர்கள் கேட்டதிநிமித்தம் இயேசு கிறிஸ்துவை நோக்கி புருஷன்-மனைவியைப்பற்றிய காரியம் இப்படியிருந்தால் (மனுஷன்) விவாகம் பண்ணுகிறது நல்லதல்ல என்றார்கள். அதாவது குடும்ப வாழ்க்கையில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும்போது! கல்யாணமே செய்யாமல் இருந்துவிட்டால் என்ன? இதுதான் அவர்களின் கேள்வியாக இருந்தது. இப்போதுள்ள கிறிஸ்தவ விசுவாசிகள் பலரும் இப்படிப்பட்ட சிந்தனையில்தான் இருக்கிறார்கள். குடும்ப பிரச்சனை, விவாகரத்து இப்படிப்பட்ட பிரச்சனைகளை சந்திப்பதைவிட விவாகம் செய்யாமலே இருந்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால், அது தவறு என்று ஆண்டவர் கூறுகிறார்: மனிதன் தனிமையாக இருப்பது நல்லதல்ல - (ஆதி 2:18) என்று கூறின அதே ஆண்டவர்தான் அண்ணகர்களை உதாரணமாக்கி இந்த பதிலையும் கூறுகிறார்.

கடவுளால் நம் சரீரத்தில் கொடுக்கப்பட்டதுதான் பால்உணர்வு (SEX). இந்த பால்உணர்வின் ஊற்றுக்காலுக்கு கொடுக்கப்பட்ட ஏற்பாடுதான் கல்யாணம் (திருமணம்) என்பது. தேவன் இப்படியொரு நல்ல திட்டத்தை ஏற்படுத்தியிருக்கும்போது கல்யாணமே செய்யாமல் இருந்துவிட்டால் பிரச்சனையே வராது என்று சீஷர்கள் பிழையாக நினைத்துவிட்டார்கள்.

திருமணம் செய்யாமல் இருந்து குடும்ப பிரச்சனைகளை தவிர்க்கலாம். ஆனால் சரீரத்தில் இயற்கையாக உருவாகும் பால்உணர்வுக்கு வழி என்ன? பால்உணர்வு பெருகும்போது, பாவம் செய்ய மனம் அலையுமே! அதை எப்படி கட்டுப்படுத்துவது? ஆகவே திருமண வாழ்க்கை ஒவ்வொருவருக்கும், குறிப்பாக ஊழியர்களுக்கு, பிஷப்மார்களுக்கு, பாஸ்டர்களுக்கு திருமண வாழ்க்கை அவசியமாகிறது. இவற்றை உணர்த்துவதற்காக யார் திருமணமாகாமல் வாழலாம்! என்பதற்கு ஆலோசனை கொடுக்கும் போது "அண்ணகர்கள் (EUNUCH)" என்ற வார்த்தையை உபயோகித்து, அதை தொடர்ந்து மற்ற விவரங்களையும் இயேசுகிறிஸ்து இங்கு விளக்குகிறார்.


அண்ணகன் - (EUNUCH)

"அண்ணகன்" என்பதற்கு "EUNUCH" என்று ஆங்கில மொழிபெயர்ப்பு கூறுகிறது. "EUNUCH" என்பதற்கு கிரேக்க மூலபாஷையில் ORIGIN GREEK (EUNOUKHOS) என்ற அர்த்தமுள்ள சொல் உபயோகிக்கப்படுகிறது. இதற்கு மூன்றுவித அர்த்தங்கள் உண்டு. அந்தந்த சூழ்நிலையில், அந்த ஒரு வார்த்தைக்கு பொருள் மாறுபடுகிறது. ஹிந்தியில் கல் என்றால் நேற்று என்று ஒரு அர்த்தம் உண்டு. அதே கல் என்பதற்கு நாளை என்று ஒரு அர்த்தமும் உண்டு. இந்த வார்த்தையை உபயோகப்படுத்தும் சூழ்நிலையை பொருத்து அதன் அர்த்தம் மாறுபடுகிறது. அதுபோல அண்ணகர் என்ற வார்த்தைக்கு இரண்டுவித பொருள்கொள்ளும் வகையில் இயேசுகிறிஸ்து அந்த வார்த்தையை உபயோகித்தார். அதுபோல அண்ணகர்கள் என்ற வார்த்தை வேதத்தில் பல இடங்களில் வித்தியாசப்படுகிறது. பிறப்பிலே அண்ணர்கள் (EUNUCHS) என்பதற்கு அர்த்தம் வேறு. இதைக்குறித்து தொடர்ந்து நீங்கள் வாசிக்கும்போது அந்த வித்தியாசத்தை அறியலாம். வேதத்திலே அண்ணகர்கள் என்று குறிப்பிடுவது அலி-அராவணி-திருநங்கைகள் அல்ல.

  அரவாணிகள் என்பவர்களுக்கு பெண்களின் பாலுணர்வு உணர்ச்சியோ-ஆண்களின் பாலுணர்வு உணர்ச்சியோ இதில் ஏதாவது ஒன்று காணப்படும்.

  ஆனால் வேதம் கூறும் அண்ணகர்கள் (EUNUCH-CASTRATE) மாட்டுக்கு அல்லது ஆண் நாய்களுக்கு விரையடிப்பதுப்போல ஆகும். அந்த காலத்தில் அரண்மனை அந்தபுரத்தில் வேலை செய்பவர்களுக்கும், அரண்மனை ஊழியர்களுக்கும், பழம் பிழிந்து கொடுக்கும் பானபாத்திரகாரன் வேலையில் இருப்பவர்களுக்கும் SCROTUM - TESTICLES - அதாவது, ஆண்களின் இருவிதைகளை முழுவதுமாகவோ - விதைகளைமட்டுமோ நீக்கிவிடுவது ஆகும்.

  தானியேல் 1:4ம் வசனத்தில் பிரதானிகளின் தலைவன் அஸ்பேனாசு (அண்ணகன்) தமிழ் வேதத்தில் அந்த வசனத்தில் அண்ணகன் என்று குறிப்பிடவில்லை. ஆங்கில வேதத்தில் தானியேல் 1:3ல் அந்த வசனத்துக்கு EUNUCH என்று எழுதப்பட்டுள்ளது. அதுபோல சாத்ராக், மேஷாக், ஆபத்நேகோ ஆகியவர்களும் அண்ணகர்களாக ஆக்கப்பட்டிருக்கவேண்டும். அந்தகால அரண்மனை வழக்கப்படி அடிமைகள், கைதிகள், இப்படிப்பட்டவர்களை அரண்மனை வேலைக்கு அமர்த்தப்படும்போது அண்ணகர்களாக ஆக்கப்பட்டிருக்கவேண்டும் என்று கூறப்படுகிறது.

  எத்தியோப்பியா மந்திரி அப் 9:27ல் ஆங்கிலத்தில் அந்த மந்திரியை அண்ணகன் (EUNUCH)என்றும், மலையாள வேதத்தில் (ஷண்ணன்) என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு பெண் எத்தியோப்பிய நாட்டுக்கு ராணியாக இருப்பதால் பாதுகாப்பு கருதி, இப்படி இந்த மந்திரி அண்ணகனாக்கப்பட்டிருக்கலாம்.

  2 இராஜாக்கள் 9:32ல் - பிரதானிகள் என்று குறிப்பிடப்பட்டவர்களையெல்லாம் அண்ணகன் (EUNUCH) என்று ஆங்கில மொழிபெயர்ப்பு கூறுகிறது.

  2 இராஜாக்கள் 20, ஏசாயா தீர்க்கதரிசி, எசேக்கியா ராஜாவுக்கு தேவனின் கோப அறிவிப்பை தீர்க்கதரிசினமாக கூறும்போது, எசேக்கியா ராஜாவாகிய உன் பிள்ளைகள் பாபிலோன் ராஜாவின் அரண்மனையிலே (விதையடிக்கப்பட்ட-EUNUCH) (அண்ணகர்களாக) வேலைக்காரராக (இ)யிருக்கும் நாள் வரும் என்று கர்த்தர் சொல்கிறார் என்று உரைத்தார்.

  2 நாளாகமம் 18:8லும், எஸ்தரின் புத்தகத்திலும் பிரதானிகள் என்று வருகிற அநேக இடங்களில் மொழிபெயர்ப்பில் EUNUCH - அண்ணகர்கள் என்றும் குறிப்பிடுவதாக கூறுகிறார்கள். ஆகவே, வேத புத்தகம் கூறும் அண்ணகர்கள் மேலே குறிப்பிட்ட தன்மையில் கட்டாயப்படுத்தி அண்ணகர்களாக ஆக்கப்பட்டு அரண்மனையில் வேலை செய்யப் பயன்படுத்தப்பட்டார்கள்.

  இவர்கள் இயேசுகிறிஸ்து மத்தேயுவில் சீஷர்களிடம் குறிப்பிட்ட 3 வகை அண்ணகர்களில் இரண்டாவது வகையை சேர்ந்தவர்கள் ஆகும். மனுஷர்களால் அண்ணகர்கள் ஆக்கப்பட்டவர்கள் என்று இயேசுகிறிஸ்து குறிப்பிட்டது இவர்களைத்தான்.

  இவர்கள் திருமணம் செய்யமுடியாது. குழந்தைகள் பெற்றுக்கொள்ளமுடியாது.

மூன்றாவதாக இயேசுகிறிஸ்து குறிப்பிட்டது: ஊழியத்துக்காக தங்களை தாங்களே அண்ணகர்களாக்கிக்கொண்டவர்கள்:

  குடும்பம், பிள்ளைகள் என்று ஆகிவிட்டால் கர்த்தருடைய ஊழியத்தை அதிக நேரம் செய்ய முடியாது. சுதந்திரமாகவும் செய்யமுடியாது என்று ஊழிய பாரத்தை உண்மையாக மனதில் கொண்டவர்கள் மனதிற்குள் தீர்மானம் செய்து ஆண்டவரிடம் அறிவித்து திருமணமாகாமல் அவர்கள் ஊழியத்தில் இறங்குவதைத்தான் இயேசுகிறிஸ்து அண்ணகர் என்று குறிப்பிடுகிறார்.

  இப்படிப்பட்டவர்கள் அண்ணகர்களைப்போல (விரையடிக்கப்படாமல்) தங்களை தாங்களே தேவபெலத்தோடு, தங்கள் பால் உணர்வுகளையும், காம எண்ணங்களையும் தேவ பெலம்கொண்டு கட்டுப்படுத்தி - பாவசெயலுக்கு இடங்கொடாமல் தங்களை பரிசுத்தமாக காத்துக்கொண்டு ஊழியம் செய்பவர்கள் ஆவர். இவர்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு (பால் உணர்வு உண்டு - காம எண்ணங்களும் உண்டு). ஆனால் அதை கர்த்தரின் பணிக்கென்று உபவாசித்து, ஜெபித்து தங்கள் உணர்ச்சிகளை தேவ பெலத்தால் கட்டுப்படுத்திக்கொள்வார்கள்.

ரோம 7:17-24ல் பவுல் இப்படிப்பட்ட காம உணர்ச்சிகளால் தூண்டப்பட்டு பலமுறை இந்த பாவ உணர்வுகள் என்னைவிட்டு நீங்கவில்லையே, அது என் சரீரத்துடன் தொடர்ந்து வருகிறதே என்று கர்த்தரிடம் கதறினான். அவனுக்கு விடுதலை கிடைத்ததா? - விடுதலை கிடைத்தது. 8ம் அதிகாரம் முதல் வசனம், 6ம் வசனம் ஆகியவைகளை வாசித்தால் அறியலாம். அதனால்தான் கிறிஸ்துவின் ஆவி எங்கேயோ, அங்கு விடுதலை உண்டு என்றும் கூறினான். பிலி 4ம் அதிகாரத்தில் என்னை பெலப்படுத்துகிறவராலே என்னை சரிப்படுத்திக்கொள்ளமுடியும் என்ற அனுபவத்தையும் எழுதினான். இப்படிப்பட்ட பவுலைக்கூட எங்கள் அரவாணி இனத்தை சேர்ந்தவர் என்று கூறுகிற அரவாணி கிறிஸ்தவர்கள் ஏராளம்.

  பவுல் அரவாணி இல்லை - அவர் திருமணம் ஆகாதவரும் அல்ல - அவர் ஏற்கனவே திருமணமானவர் ஆவார். இதற்கான ஆதாரம், அவர் அன்றைய காலத்தில் அரசாங்கத்தில் இருந்த மிக உயர்ந்த சனகரீப் சங்கத்தில் பவுல் சவுலாக இருந்தபோது அவரும் அதில் ஒரு அங்கத்தினனாக இருந்தார் என்று வேதசரித்திரம் கூறுகிறது. சனகரீப் சங்கத்தின் சட்டங்களில் ஒன்று அதில் அங்கத்தினனாக இருப்பவர்கள் திருமணமானவராகவும், உயர்ந்த குலத்தில் பிறந்தவர்களாகவும், மிக அதிக படிப்புள்ளவராகவும் இருக்கவேண்டும் என்பதாகும். அந்த அடிப்படையில்தான் அவர் திருமணமானவர் என்று கூறுகிறார்கள். ஆனால் அவர் மனைவியைப்பற்றி விவரம் வேதத்தில் எங்கும் குறிப்பிடவில்லை. ஆகவே ஒருவேளை பவுலின் மனைவி இறந்திருக்கலாம் என்றெல்லாம் யூகிக்கப்படுகிறது.

  இயேசுகிறிஸ்து சீஷர்களுக்கு கூறிய இந்த பகுதியில் மத் 19:12ல் தேவ ஊழியத்துக்காக தங்களை அண்ணகர்களைப்போல் ஆக்கிக்கொண்ட இப்படிப்பட்ட ஊழியர்களை விரையடிக்கப்பட்ட அண்ணகர் என்ற அர்த்தத்தில் கூறாமல், அண்ணகன் எப்படி திருமணத்துக்கு தகுதியில்லாதவனோ, அப்படியே தன் சரீரத்தில் திருமண வாழ்க்கைக்கு சகல தகுதிகள் இருந்தும் உணர்ச்சிகள் இருந்தும் கர்த்தருக்காக, கர்த்தரின் பணிக்காக தங்கள் உணர்ச்சிகளை அவித்து அண்ணகர்களைப்போல வாழ்ந்து, கர்த்தருக்கு பணிசெய்வதைத்தான் அண்ணகன் என்ற வார்த்தை மூலமாக இயேசுகிறிஸ்து விளங்கவைக்கிறார். பாதாளம் - பரதீசு ஆகிய இரண்டையும் சியோல் என்ற ஒரே பெயரில் எப்படி வேதத்தில் அறியப்பட்டதோ, அதே வழியில் அண்ணகர் என்ற வார்த்தையை இயேசுகிறிஸ்து கல்யாணமாகாமல் ஊழியம் செய்யும் ஊழியருக்கு உபயோகிக்கிறார்.

இயேசுகிறிஸ்து = பவுல் கூறியதைப்போல் இயேசுகிறிஸ்துவையே அவரும் அரவாணிதான் என்று துணிந்து கூறும் கிறிஸ்தவ வேத பண்டிதர்கள் உண்டே!

அதற்கு அவர்கள் கூறும் காரணம் இயேசுகிறிஸ்து கல்யாணம் செய்யாதவர் என்றும், ஆண் புணர்ச்சிக்காரர் என்றும் கூறி, அதற்கு ஆதரமாக சீஷன் யோவான் என்பவன் இயேசுவின் மார்பில் சாய்ந்திருப்பதை வேதத்தில் சுட்டிக்காட்டி, யோவான் அந்த அளவு இயேசுகிறிஸ்துவின்மீது சாயும் சரீர உரிமை பெற்றவனாக இருந்தான் என்கிறார்கள்.

பிதா = பிதாவையும் இவர்கள் விடவில்லை, பிதாவையும் தங்கள் இனம்தான் என்று கூறும் அரவாணி கிறிஸ்தவர்களும் உண்டு. காரணம், பிதா ஆணா - பெண்ணா என்ற சர்ச்சை ஆண்டாண்டு காலமாக வேதாகம கல்லூரிகளில் சர்ச்சை செய்யப்படும் தேவையில்லாத சர்ச்சை விஷயமாகும்.


ஆதியாகமம் 1:26,27, 2:7,22

தேவன் மனுஷனை (ஆதாமை) மண்ணிலே உண்டாக்கி அவருடைய சாயலாகவும், அவருடைய ரூபத்தின்படியும் சிருஷ்டித்தார் (உண்டாக்கினார்) என்று எழுதியுள்ளது. ஆனால், ஏவாளை அந்தமுறையில் சிருஷ்டிக்கவில்லை என்பதையும் அறியவேண்டும். ஏவாளை உருவாக்கினார் என்ற வார்த்தையை உபயோகித்து எழுதியுள்ளதை கவனிக்கவும். ஏவாளை உருவாக்கும்போது தமது (தேவனின்) சாயலாகவோ, தமது (தேவனின்) ரூபத்தின்படியோ ஏவாளை உண்டாக்கவில்லை என்பதையும் நாம் கவனிக்கவேண்டும். ஆகவே பிதாவை ஒருகாலும் பெண்ணாக கற்பனை செய்து யோசிக்காதீர்கள். உங்கள் கிறிஸ்தவ விசுவாச அஸ்திபாரமே உடைந்துவிடும்.

  தேவனை தாய் ஸ்தானத்தில், தகப்பன் ஸ்தானத்தில் அன்பு கூறி ஜெபிக்கலாம். இயேசு கிறிஸ்து தன்னை மூத்த சகோதரன் என்று கூறியதையும் கவனிக்கவும். ஆனால் ஒருபோதும் கர்த்தரை பெண்ணாக கற்பனை செய்யக்கூடாது என்பதை அறியவும். பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் என்ற திரியோக தெய்வம், மனுஷர்களுக்கும், தூதர்களுக்கும் அப்பாற்பட்டவர். அவரை மனிதன் தன் மூளை அறிவைக்கொண்டு ஒருபோதும் ஆராயக்கூடாது. மனிதன் செய்யும் தவறுகளுக்கு அண்டசராசங்களையும் படைத்த தேவாதித்தேவனை உதாரணப்படுத்த துணியக்கூடாது. அதனால்தான் கர்த்தர் அடிக்கடி நம்மை மண் என்பதை நினைவுப்படுத்தி மட்டம் தட்டுகிறார். நாம் வெரும் களிமண் என்பதை மறந்துபோகக்கூடாது. மேலும், கடவுளைப்பற்றிய தேவையற்ற ஆராய்ச்சியில் ஈடுபடுவது ஆத்துமாவுக்கு பிரயோஜனமற்ற விஷயமாகும். அது பெரிய முட்டாள்தனம். அதனால்தான் அறிவு பெருத்தவன் நோவு பெருத்தவன் பிர 1:18 என்று வேதம் கூறுகிறது.


இந்த விஷயத்தில் கடவுளின் சிருஷ்டிப்பு என்று எதை கூறலாம்:

யாத்திர 4:11ல் ஊமையனையும், செவிடனையும், பார்வையுள்ளவனையும், குருடனையும் உண்டாக்கினவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவா?

இப்படிப்பட்ட குரூரமான பிறப்புக்கு அன்புள்ள கர்த்தராகிய நான்தான் காரணம் என்று அவரே ஒத்துக்கொள்கிறார். அப்படி என்றால் தேவன் அன்பில்லாதவரா? இதன் பதில் புதிய ஏற்பாட்டில் காணப்படுகிறது. ஒரு குருடனை தேவநாம மகிமைக்காக அப்படி படைக்கப்பட்டான் என்று இயேசு கூறுகிறார். அவன் பிறப்புக்கு காரணம் அவன் பாவமுமல்ல - பெற்றோர் பாவமும் அல்ல, தேவ நாம மகிமைக்காக நான்தான் அப்படி பிறக்க செய்தேன் என்கிறார்.

  இதை மெத்த படித்த சில போதகமார்களும் (ஆயர்களும்), மற்ற ஊழியர்களும் ஊனமாக பிறக்கும் எல்லாரும் தேவமகிமைக்காகவே அப்படி பிறப்பிக்கபட்டார்கள் என்கிறார்கள். அது தவறு. (கான்ஸப்ட்டின்படி) சூழ்நிலையின்படி சீஷர்கள் சுட்டிக்காட்டிய அந்த குறிப்பிட்ட குருடனின் பிறப்பு மட்டுமே, தேவ மகிமைக்காக அப்படி பிறப்பிக்கப்பட்டான் என்பதுதான் பொருந்தும். மற்ற குருடர்கள் ஊனர்களின் பிறப்புக்கு என்ன காரணம் என்பது தெரியாது! அவர்கள் எல்லோரும் தேவ மகிமைக்காக பிறப்பிக்கப்படவில்லை.

அதைப்போலவே இயற்கையிலேயே கர்ப்பபையிலேயே 6 கைவிரல்கள், 6 கால்விரல்கள், 24 விரல்கள், இருதலைகள் ஒட்டி பிறப்பது, இரு கர்ப்பைகளுடன் பிறப்பது, இரண்டு குழந்தைகள் ஒருவரோடு ஒருவர் ஒட்டிப்பிறப்பது, ஒரு குழந்தைக்கு இரண்டு பிறப்பு உறுப்புகளுடன் (ஆண்-பெண்) பிறந்த செய்திகளையெல்லாம் நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இவைகள் எல்லாம் கர்ப்பபையில் உண்டான இயற்கை சிதைவு மாற்றங்களால் உண்டானவைகளாகும்.

  அதுபோல அரவாணிகள் இயற்கை பிறப்பு - இது இறைவனின் பிறப்பல்ல. இயற்கையில் நம் சரீரத்தில் உண்டாகும் சரீர குரோமோசோம்களின் மாற்றத்தால் ஏற்பட்ட வித்தியாசமான பிறப்புகள் ஆகும்.

  தாயின் வயிற்றில் ஆண்-பெண் தன்மையையை உருவாக்குவது குரோமோசோம்களாகும் (Chromosomes). இந்த குரோமோசோம்கள் என்பது தாயிடமிருந்து சுமார் 23, தந்தையிடமிருந்து 23 ஜோடி, ஆக மொத்தம் 46 குரோமோசோம்களாக இணைந்து உடலிலுள்ள பலவித ஹார்மோன்களால் அவை இயக்கப்படுகின்றன அல்லது சேர்க்கப்படுகின்றன.

  இவைகளை மரபணு என்றும் - இதிலே XX, XY, 44+XY, 44+X என்றும் கணக்கிடப்படும். இப்படி அல்ஜீப்ரா கணக்குப்போல உடல் சாஸ்திரம் இருக்கிறது. அதை முழுவதும் விளக்கினால் 3 மாத ஜாமக்காரனில் தொடர்ந்து தொடர்கதையைப்போல் எழுத வேண்டியிருக்கும். அது வாசிக்க பெரும் சலிப்பை உண்டாக்கும். பொதுவாக நீங்கள் எளிதில் விளங்கிக்கொள்ளக்கூடியதைமட்டும் சுருக்கமாக அதுவும் மிக சுருக்கமாக இங்கு எழுதுகிறேன். சரி மேற்கொண்டு வாசியுங்கள்.

முன்பு நான் எழுதியதுபோல ஒரு தாயின் வயிற்றில் உருவாகும் குழந்தை குரோமோசோம்களில் உருவாகி - ஹார்மோன்கள் மூலம் ஆண்-பெண் என்று உறுதியாக்கப்படுகிறது.

இந்த ஹார்மோன்களின்மூலம் சரீரத்தில் ஈஸ்ட்ரோஜன் இயக்கப்பட்டு டெஸ்டோஸ்டிரோன் என்பவைகளோடு இணைந்துதான் ஆண்-பெண் தன்மைகளையும் உருவாக்குகிறது.

ஆண்:   தாய் வயிற்றில் ஆண் குழந்தையாக உருவாகவேண்டுமானால் டெஸ்டோஸ்டிரோன் (Testosterone) என்ற ஹார்மோன் அதிக அளவில் சுரக்கவேண்டும். அதேசமயம், அதே உடலில், பெண் உணர்வான ஈஸ்ட்ரோஜனும் (Estrogens) சிறிய அளவில் இணைந்து இருக்கும். ஒரு மனிதனின் உடலில் இவைகள் இரண்டுமிருக்கும்.

பெண்:   தாய் வயிற்றில் பெண் குழந்தை உருவானால் ஈஸ்ட்ரோஜன் என்ற பெண் தன்மைக்கு காரணமான ஹார்மோன் அதிகமாக சுரக்கவேண்டும். அதேசமயம், ஆண் தன்மைக்கு காரணமான டெஸ்டோஸ்டிரோனும் கொஞ்சமாக இவற்றோடு சேர்ந்து இருக்கும். ஆண்-பெண் பால் உணர்வு என்பது ஆண்-பெண் இரண்டு பேருக்குள்ளும் எப்போதும் இருக்கும்.

  தாயின் வயிற்றில் குழந்தை உருவாகினவுடன் சுமார் 7 வாரங்களின் பின்னர்தான் ஆண்-பெண் ஹார்மோன்கள் உற்பத்தியாகின்றன. அதன் அடிப்படையில் குரோமோசோம்கள் மூலமாக ஆணாகவோ - பெண்ணாகவோ சரீரம் மாறும்போது ஹார்மோன் சரீரத்தில் உற்பத்தியாகி அதன் வேகத்திற்கேற்ப ஆணாகவோ - பெண்ணாகவோ உருமாறி அதற்கான ஆண் உறுப்பு அல்லது பெண் உறுப்பு ஆகியவைகள் சிறிய அளவில் குழந்தை சரீரத்தில் தோன்ற ஆரம்பிக்கும். பிறகு குழந்தை பிறந்தவுடன் பிறப்பு உறுப்பை பார்த்துதான் அது ஆணா-பெண்ணா என்று தீர்மானிக்கிறார்கள். குழந்தை பிறந்தவுடன் அது ஆணா-பெண்ணா என்று உறுதியாக சொல்லவேண்டுமானால் 4வது வயதில்தான் உறுதியாக திட்டமாக தீர்மானிக்கமுடியும்.

  ஆக, எந்த மனிதனாக இருந்தாலும் அது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் ஆண்உணர்ச்சி ஹார்மோன், பெண்உணர்ச்சி ஹார்மோன் இரண்டும் ஒரே சரீரத்தில் காணப்படும்.

இந்த அடிப்படையில் 100க்கு-100 ஆண் உணர்வுகள் உள்ள ஆண், 100க்கு-100 பெண் உணர்வுள்ள பெண் இந்த உலகில் யாருமே இருக்கமுடியாது. ஆண்-பெண் இரண்டு உணர்வுகளும் கலந்தவர்களாக இருப்பவர்கள்தான் மனிதன் அல்லது மனுஷி ஆகும்.

ஒருவேளை ஆன்ட்ரோஜன் ஹார்மோன்மட்டுமே 100 சதவீதம் ஒரு ஆணுக்கு இருந்தால் அவன் மிகவும் கொடூரமானவனாக இருப்பான். அன்பு, பாசம், கருணை என்பது மருந்துக்குகூட இருக்காது. அப்படியே ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன்மட்டும் ஒரு பெண்ணுக்கு 100 சதவீதம் இருந்தால் மிகவும் பலவீனமாக இருப்பாள். வீரம், துணிவு என்பது சிறிதேனும் இருக்காது. ஆகவே இந்த உலகில் எந்த ஆணும் 100க்கு 100 ஆணுமல்ல - எந்த பெண்ணும் நூற்றுக்குநூறு பெண்ணுமல்ல.


தேவனின் படைப்பல்லாத அரவாணி (அலி-திருநங்கை)

இந்த இரண்டுவித ஹார்மோன்கள் ஒவ்வொரு மனுஷனுக்குள்ளும் இருப்பதால் இந்த இரண்டு வித ஹார்மோன்களில் ஏதாவது ஒன்று எப்போதாவது மேலோங்கும் அந்த மேலோங்கும் தன்மை பெண்ணுக்குறியதாக இருந்தால் அப்போது உடலிலுள்ள பெண் தன்மைக்கு காரணமான ஈஸ்ட்ரோஜனை ஹார்மோன் ஊக்கிவிடுகிறது. அப்போது பெண்களின் பால்உணர்ச்சி சரீரத்தில் அதிகமாக ஏற்படும். அப்படியே ஆண் பால்உணர்வுக்கான டெஸ்டோஸ்டிரோனை ஹார்மோன் எப்போதாவது ஊக்குவிக்கும்போது ஆண்களுக்குள்ள பால் உணர்ச்சி பெண்களுக்கும் உருவாகும். இது மனுஷன், மிருகம் யாவற்றுக்குள்ளும் உருவாகக்கூடியதாக இருக்கிறது. இப்படி இயற்கையாக உருவாகும் ஹார்மோன் தூண்டுதல் தானாக அடங்கிப்போகும். ஆனால் யாராவது, என்றாவது சரீரத்தில் உருவாகும் இப்படிப்பட்ட ஏதாவது ஒரு குறிப்பிட்ட உணர்ச்சிகளால் தூண்டப்படும்போது அந்த குறிப்பிட்ட உணர்ச்சி ஆண் உணர்ச்சியாகவோ - பெண் உணர்ச்சியாகவோ இருந்தால் அந்த குறிப்பிட்ட உணர்ச்சிக்கு தீனிபோட்டு அல்லது ஊக்குவித்தால் அதுவாகவே மாறிவிடுகிறார்கள். உதாரணமாக பெண் உணர்ச்சிகளுக்குரிய ஹார்மோன் தூண்டப்பட்டு அதை ஊக்குவித்தால் பெண் பால் உணர்வு பெருகி பெண்ணாக வாழவே ஆசைப்படுவார்கள்.

ரோம 6:16, எதற்கு கீழ்ப்படியும்படி உங்களை (உங்கள் சரீர உணர்ச்சிகளை) அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாக இருக்கிறீர்கள்.

  உதாரணமாக, வீட்டில் வளர்க்கும் பெண் நாய், ஆண் நாயைப்போல என்றாவது ஒருநாள் சரீர இனசேர்க்கையின் செயலை, பெண் நாய் - ஆண் நாயின் மீது ஏறி காண்பிப்பதைக் காணலாம். அப்படியே பெட்டை கோழி வழக்கத்துக்கு மாறாக (சேவலின்) ஆண் கோழியின்மேல் ஏறுவதையும் சர்வ சாதாரணமாக காணலாம்.

  இதே உணர்வு மனிதனுக்குள்ளும் எப்போதாவது உண்டாகும். சிறுவயதில் பழகும் தவறான நண்பர்களால் தமாஷாக (பகடியாக) சரீரத்தின் மறைவு பாகத்தை தொட்டுவிளையாடி, அந்த விளையாட்டுக்கேற்ற ஹார்மோன்கள் அதிகம் சுரக்கும் அதன் காரணமாகதான் ஹோமோ செக்ஸ் விளையாட்டில் அவனுக்கு நாட்டம் அதிகமாகிவிடுகிறது. சிறு பெண்களும் - தங்களைப்போன்ற பெண்களானாலும் அவர்களை தொட்டுப்பழகும்போதும் அல்லது மேலே குறிப்பிட்டதைப்போல ஒருவருக்கொருவர் உரசிவிளையாடும் காம விளையாட்டுகளுக்கு அந்த பெண்கள் இடம்கொடுத்தால் குறிப்பிட்ட ஹார்மோன் அதிகம் சுரந்து அந்த பால்உணர்ச்சிக்கு அந்த பெண் அடிமையாகி பெண்ணுக்கு-பெண் (ஆண் புணர்ச்சிக்காரர்களைப்போல) செக்ஸ் விளையாட்டில் லயித்துவிடுவார்கள். இவர்கள்தான் நாளடைவில் லெஸ்பியன் கேரக்டர்களாகமாறி திருமணமே வேண்டாம் என்று முடிவு செய்துவிடுகிறார்கள். நாளடைவில் இப்படிப்பட்ட பெண்கள் ஒரு ஆண் தன்னை தொடுவதைக்கூட விரும்பாமல் பெண்ணோடு-பெண் உறவுக்கொண்டு அதிலே அவர்கள் திருப்தியடைந்து அல்லது இன்பமடைந்து, அப்படியே ஆண் துணையே வேண்டாம் என்று வாழ்ந்துவிடுகிறார்கள். (இதற்கு பெயர்தான் "லெஸ்பியன் - Lesbians" ஆகும்.)

  இப்படிப்பட்ட பிரச்சனைகள் பெரும்பாலும் ஹாஸ்டலில், போர்டிங்கில் தங்கி படிக்கும் பெண் பிள்ளைகளிடம் அதிகம் உருவாகிறது. அதனால்தான் எத்தனை உயிர்த்தோழியானாலும், ஒரு பெண் - மற்றொரு பெண்ணோடு ஒரே பாய் அல்லது கட்டிலில் ஒன்றாக படுக்கக்கூடாது என்று பல பெண்கள் ஹாஸ்டல்களில் எச்சரித்து, அதை சட்டமாகவே அவர்கள் படுக்கும் அறையில் எழுதி ஒட்டியிருப்பார்கள். ஆண்களும் அப்படியே ஒருவரோடு ஒருவர் ஆண்-ஆணையும், பெண்-பெண்ணையும் தொட்டு பேசி உறவாடக்கூடாது. நம் சரீரத்தில் தலை முதல் - கால் வரை காம உணர்ச்சி நரம்புகள் வியாபித்திருக்கிறது. பரிசுத்த வேதமும் அருமையாக அதை அறிவுறுத்துகிறது.

1 கொரி 7:1ல் "ஸ்தீரியைத் தொடாமலிருக்கிறது மனுஷனுக்கு நல்லது".
1 Cor 7:1- It may be a good thing for a Man to remain unmarried.(William),
1 Cor 7:1- It is good for a man not to touch a women.(N.A.S)


தேவனின் படைப்பல்லாத அரவாணி(அலி-திருநங்கை)

மேலே கூறப்பட்ட செயல்மூலம் செயல்படும் ஆண் புணர்ச்சிகாரர்களோ - அரவாணிகளோ தேவனின் படைப்பல்ல என்பதை மேலே எழுதப்பட்ட ஆராய்ச்சிகொண்டு கூறுகிறேன். கெட்ட நண்பர்களால் தொட்டு விளையாடும் ஸ்பரிசத்தாலும் மயக்க மருந்துக்கு (போதைக்கு) அடிமைப்பட்டவர்களால் ஏற்படும் தவறான பழக்கத்தாலும் சில குறிப்பிட்ட உணர்வுகளை தூண்டி அல்லது ஊக்கப்படுத்திவிடுவதால் அந்த உணர்வுக்கு அடிமையாகிவிடுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் கடவுளின் படைப்பல்ல - அவரவர்களே அவர்களின் வித்தியாசமான பால்உணர்வுக்கு காரணமாகிறார்கள். பெற்றோர்களின் கவனக்குறைவும் இதற்கு மற்றொரு முக்கிய காரணமாகும்.

  1965ல் என் ஆஸ்பத்திரிக்கு ஒரு சிறு பையனை அழைத்து வந்தார்கள். அவர்கள் அவனை என்னிடம் அழைத்து வந்தது வேறு நோயின் சிகிச்சைக்காக. ஆனால் நான் அவன் செயலையும், அவன் உறுப்பையும் கவனிக்க நேர்ந்தபோது - தகப்பனை தனியாக அழைத்து அந்த பையனுக்கு பெண் தன்மை உருவாவதைக்குறித்து அறிவித்து, உடனடியாக விசேஷ மருத்துவரிடம் காண்பிக்கும்படி ஆலோசனைக் கூறினேன். அவர்களும் உடனடியாக செயல்பட்டனர். அவனுக்கு ஹார்மோன் சிகிச்சை கொடுக்கப்பட்டது. ஏறக்குறைய வருடத்துக்குள் அவனில் நல்லமாற்றங்கள் உண்டானது. இப்போது அவன் ஒரு குடும்பஸ்தன், அவனுக்கு இப்போது பிள்ளைகள் உண்டு. அந்த குறிப்பிட்ட ஆரம்ப கட்டத்திலேயே பெற்றோர் சிகிச்சை செய்ய நடவடிக்கை எடுக்காதிருந்தால் அந்த பையன் ஒரு அரவாணி(அலி)யாக மாறியிருப்பான்.

  1966ம் வருடம் 6ம் வகுப்பு பெண்பிள்ளை ஒருவளை என் ஆஸ்பத்திரிக்கு அழைத்துவந்து கைகள், முகம் எல்லாம் முடிகள் வளர்ந்து, குரல் மாற்றமும் உண்டாவதாக பெற்றோர் என்னிடம் கூறினார்கள். உடனடியாக CMC வெல்லூர் ஆஸ்பத்திரிக்கு போகவேண்டும் என்று ஆலோசனை கூறினேன். பெற்றோர்களுடன், நானே அவளை அழைத்துசென்று, அப்போது எனக்கு மிகவும் பழக்கமான Dr.ஜான்சன் சத்யபாமா, MD., (மெடிசன் பகுதிக்கு தலைமை மருத்துவராக இருந்தார்கள்) அவர்களிடம் ஆலோசனை கேட்டேன். அவர்கள் சிறப்பு டாக்டர்களை வரவழைத்து கவனித்தார்கள். நான் சேலம் திரும்பிவிட்டேன். பலகட்ட பரிசோதனைகளுக்குபின் ஹார்மோன் சம்பந்தமான மாத்திரைகளும், மருந்தும் கொடுத்து அனுப்பிவிட்டனர். சுமார் 6 மாதத்துக்குள் சரீரத்தில் காணப்பட்ட முடிகள் எல்லாம் தானாக உதிர்ந்து கொட்டிவிட்டது. அவள் நல்ல அழகான பெண்பிள்ளையாக மாறிவிட்டாள். ஆனால் அந்த சிகிச்சைக்குபின் அவளுக்கு 14 வயது ஆகியும் பெண்களுக்கான மாதவிடாய் உண்டாகவில்லை. மறுபடியும் CMC வெல்லூர் ஆஸ்பத்திக்கு அவளை அழைத்து சென்றனர். பிறப்பு உறுப்பினுள் சிறு ஆப்ரேஷன்செய்து சரிப்படுத்தினார்கள். ஒரு மாதத்திற்குள் மிகப் பெரிய மாற்றம் அவளில் ஏற்பட்டது. அப்போதே அவளுக்கும் திருமணம் முடிந்து இப்போதும் கணவன்-மனைவியாக சந்தோஷமாக இருக்கிறார்கள். ஆனால் குழந்தை பாக்கியம் இல்லை.

இதேபோன்று கேரளாவில் உள்ள ஒரு சிறுபெண்ணுக்கு இயற்கைக்கு வித்தியாசமான சரீர மாற்றங்கள் உண்டாகியதை பெற்றோர் கண்டு ஆரம்ப கட்டத்திலேயே திருவனந்தபுரம் மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திக்கு கொண்டுபோனார்கள். அங்கு சிகிச்சைக்குபின் நல்ல நார்மல் பெண்ணாக மாறிவிட்டாள். இப்போது மற்ற பெண்களைப்போல் அவள் சாதாரண பெண்ணாக வாழ்ந்து, திருமணமும் செய்து இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறாள்.

இந்த உதாரணங்கள் ஏன் கூறுகிறேன் என்றால், பெற்றோர்கள் பிள்ளைகளை சிறுவயதில் குளிப்பாட்டும்போது பிள்ளைகளின் சரீர மாற்றங்களை சரீர பிறப்பு உறுப்புகளின் மாற்றங்களையும் கவனிக்கவேண்டும். அதோடு பிள்ளைகள் வளரும்போது யாரோடு அதிகம் பழக விரும்புகிறார்கள், சிறுவயதில் என்ன மாதிரி பொம்மைகளை வைத்து விளையாட விரும்புகிறார்கள். சிறுவயதில் அந்த ஆண்பிள்ளைகள் - பெண்பிள்ளைகள் விரும்பும் விளையாட்டு பொம்மை, பெண் பிள்ளைகள் உடுத்தும் உடைகளை வளரும் அந்த ஆண்பிள்ளைகள் விரும்புகிறார்களா! என்பதை கவனித்து அவர்களின் நடவடிக்கைகளில் வித்தியாசம் கண்டால் அப்போதே ஆரம்பத்திலேயே அதற்கான சிகிச்சை செய்தால் சரியான ஆண் பிள்ளைகளாக அல்லது சரியான பெண் பிள்ளைகளாக வளர்க்கலாம். இதன்மூலம் அரவாணிகள் (அலி) உருவாகாமல் தடுக்கலாம்.

  2012 பிப்ரவரி மாதம் தினசரி பத்திரிக்கையில் பாரதி என்பவர் ஆயராக அபிஷேகிக்கப் போவதாக செய்தி அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் இங்கிலாந்து நாட்டின் BBCயில் கொடுத்த பேட்டியை நான் கேட்டேன். அதன்பின் தூத்துக்குடியில் அவர் குடும்பத்தினருக்கு நெருக்கமானவரோடு நான் தொலைபேசியில் நானே விவரம் சேகரித்தபோது பாரதி என்கிற அந்த நபர் சிறு பையனாக இருக்கும்போதே, அவன் நடவடிக்கையிலுள்ள மாற்றங்களை அருகில் குடியிருக்கும் நாங்கள் சாடையாக அவன் பெற்றோருக்கு அறிவித்தோம். ஆனால், அவன் பெற்றோர் இது நாளாக நாளாக, அவன் வளரும்போது சரியாகிவிடும் என்றார்களாம். அவன் பெற்றோர் படித்தவர்கள்தான். ஆனால் அவர்களுக்கு இதைப்பற்றிய விழிப்புணர்வு இல்லை. ஒரு டாக்டரிடம் அவனை கொண்டுபோய் காண்பித்து பரிசோதிக்கவேண்டும் என்று அவர்களுக்கு தோன்றவில்லை. ஏற்கனவே நான் கூறிய என் கிளினிக்கில் நடந்த சம்பவத்தின்படி 1965ம் வருடம் லோக்கூர் என்ற ஊரின் சிறுகிராமத்திலிருந்து சிகிச்கைகாக தன் மகனை என்னிடம் அழைத்துவந்த அவன் பெற்றோர் தன் பையன் பெண்ணாக மாறாமல் தடுக்க, உடனடி சிகிச்சைக்கு சம்மதித்த அந்த கிராமத்து குடும்பத்தினருக்கு உண்டான விழிப்புணர்வுக்கூட, இன்று பட்டிணத்தில் படித்தவர்களுக்கு ஏற்படாதது ஆச்சரியமே!

ஆகவே மேலே கூறப்பட்ட உதாரணங்களின்படி, சரீரத்தில் உண்டாகும் உடல் சாஸ்திர மாற்றங்கள் மூலமாக இயற்கையாக நம் சரீரத்தில் உண்டாகும் பால்உணர்வுகள், நாம் அறியாமலேயே தூண்டப்படுகிறது அல்லது தூண்டிவிடப்படுகிறது. அதன்பின்தான் அந்த நபர் அந்த குறிப்பிட்ட இயற்கைக்கு மாறான பால்உணர்ச்சி உள்ளவராகவே மாறிவிடுகிறார். அப்படிப்பட்டவர்கள்தான் அரவாணிகளாக மாறிவிடுகிறார்கள். சிலர் ஹோமோ செக்ஸ் (Homo-Sex) வெறியர்களாகவும் மாறிவிடுகிறார்கள். அதன்பிறகு அவர்கள் விரும்பினாலும் அவர்களாலேயே தங்களை மாற்றிக் கொள்ளமுடியாமல் போகிறது. அதன் விளைவாக, அவர்கள் தங்கள் சொந்த குடும்பத்திலேயே தனிமையாக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டவர்களாகிறார்கள், அது அவர்கள் வாழ்க்கையில் மிகவும் பரிதாபமான சூழ்நிலையாகும். இப்படிப்பட்டவர்கள் வெளி உலகிலும் யாரோடும், எல்லாரையும் போலவும் பழகமுடியாமல் தனிமையாக்கப்படுகிறார்கள். இவர்கள் வாலிப வயது வரும்போது இயற்கையில் அவர்களுடைய சரீரத்தில் ஏற்படும் பால் உணர்வுக்கு ஊற்றுக்கால் (வழி) தேட, தன் பால் உணர்வுக்கு துணை ஆள் தேடவும் ஆரம்பித்துவிடுகிறார்கள். இறுதியாக இவர்கள் வீட்டை விட்டேவிலகி தங்களை போன்றுள்ள அரவாணிகளிடம் சென்று அடைக்கலம் (தஞ்சம்) அடைகிறார்கள்.

  கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவன் அரவாணியாக மாறியவன். அவன் என்னிடம் ஆலோசனைக்கு வந்தபோது தன் நிலையை விளக்கினான். ஆரம்பகட்டத்திலேயே தன் சரீரத்தில் ஏற்பட்ட மாற்றத்துக்கு வைத்திய ஆலோசனைப்பெற தான் கூச்சப்பட்டதால்தான் நான் இப்படி அரவாணியாக மாறினேன் என்று வேதனைப்பட்டான். அதன்பிறகு என் ஆலோசனைக்குக் கீழ்ப்படிந்து சிகிச்சைக்கு தயாரானான். அவன் தைரியமாக மருத்துவ பரிசோதனைக்கு தன்னை உட்படுத்திக் கொண்டான். ஆனால் உடலில் ஹார்மோன்கள் முற்றிவிட்டநிலையில், அவனுக்கு அளித்த சிகிச்சை பலனளிக்கவில்லை. அந்த வாலிபன், நல்ல ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில், நல்ல கிறிஸ்தவனாக வளர்ந்தவன். அவன் பெண் உணர்ச்சி உள்ளவனாக அல்ல. ஆண் உணர்ச்சியுள்ள ஹோமோ செக்ஸ் தன்மை உள்ளவன். ஆனால் நண்பர்களின் தூண்டுதல், தவறான நட்பு ஆகியவைகள் அவனுக்கு ஏற்பட்டதால் ஹோமோ செக்ஸ் - ஆண் புணர்ச்சிக்கு அதிக நாட்டம் கொண்டவனாகிவிட்டான். அதேசமயம் தன் பெற்றோரை அதிகம் அவன் நேசித்தப்படியால் அவர்கள் வேண்டுகோளின்படியும், அவர்கள் கட்டாயப்படுத்தியதாலும், ஒரு பெண்ணை ஆலயத்தில் வைத்து அவன் திருமணம் செய்து கொண்டான். திருமணம் புரிந்த அந்தப்பெண்ணை சரீர உறவில் திருப்திப்படுத்தி அவளை சந்தோஷமாகவும் வைத்துக்கொண்டான். ஆனால், அதேசமயம் அவன் வாலிபர்களோடு Homo-Sex வைத்துக்கொள்வதையும் அவனால் நிறுத்தமுடியவில்லை. ஒருநாள் வீட்டிலேயே தங்கியிருந்த உறவினர் பையனோடு தன் கணவன் உறவுக்கொண்டதை அவன் மனைவி பார்த்துவிட்டாள். குடும்ப சந்தோஷம் தகர்ந்தது. கணவனாகிய அவன் தன் மனைவியிடம் உண்மையை கூறினான், இந்த ஹோமோசெக்ஸ் உறவு பல வருடமாக தனக்கு இருக்கிறது என்றும் அதன்மேலுள்ள நாட்டம் தனக்கு அதிகமாக உள்ளது. ஆனால், அதேசமயம், உன்னை எந்த குறைவுமில்லாமல் வாழவைக்கமுடியும் என்றும், உன்னையும் நான் சந்தோஷப்படுத்தி, பிள்ளைபேறும் என்னால் உனக்கு உண்டாக்கமுடியும் என்றும் கெஞ்சினான். ஆனால் அவள் அவனிடம் உன்னை அருவருக்கிறேன் என்று கூறி வெறுத்து வீட்டைவிட்டு வெளியேறினாள். இன்று அவள் தனித்து வாழ்கிறாள்.

  இந்த அரவாணி விஷயத்தைப்பற்றி 1969ம் வருடம் நான் இலங்கை ஊழியத்துக்கு சென்றபோது அங்கு இலங்கையில் ஒரு ஊழியனிடம் இந்த பாவத்தைக் கண்டதால் இலங்கையில் வைத்தே இதைக்குறித்து கட்டுரை எழுத தீர்மானித்தேன். ஆனால் அவைகளைப்பற்றி எழுத இப்போதுதான் சந்தர்ப்பம் உருவானது.

  இப்போதும் ஏராளமான ஊழியர்களிடம் இந்த பாவம் உண்டு. கிறிஸ்தவ உலகில் ஊழியர்களுக்கு மத்தியில் குறிப்பாக, TPM பாஸ்டர்கள், கத்தோலிக்க பாதிரிமார்கள், மார்தோமா சபை, யாக்கோபையா சபை - ஆயர்கள், பிஷப்மார்களில் பலரிடம் ஹோமோ செக்ஸ் பழக்கம் இப்போதும் உண்டு. அதை பத்திரிக்கைகளிலும் வாசித்திருக்கிறோம், TV-யிலும் அதை காட்டியுள்ளனர்.

  நம் பிராட்ஸ்டன்ட் பிஷப் ஒருவர், இங்கிலாந்து தேசத்தில் அவர் ஆங்கிலிக்கன் சர்ச் ஆர்ச் பிஷப் ஆவார். அவர் ஒரு பெண்ணை திருமணம் செய்து 8 வருடம் குடும்பம் நடத்தி, அவளை விவாகரத்து செய்து, இப்போது ஒரு ஆணை மனைவியாக இரண்டாம் திருமணம் செய்து (ஆணுக்கு-ஆண்), புருஷனும்-மனைவியுமாக வாழ்கிறார்கள். அதைவிட வெட்கக்கேடு அதேசபையில் அவர் ஆயராக ஊழியமும் செய்கிறார். இந்த ஆபாசத்தை சபை மக்களும் அனுமதித்துள்ளார்கள். இப்படிப்பட்ட பிஷப்புக்கு இந்தியாவில் நாமும் வரவேற்பு கம்பளம் விரித்து கௌரவிக்கிறோம். இப்படிப்பட்ட பாவத்தை விரும்பும் பிஷப்பின் தலைமையின்கீழ் இப்போதும் இந்தியாவில் தமிழ்நாட்டில் பாரதி போன்றோரை ஆயராக்க, அந்த பிஷப்புடன் இணைந்து எல்லா பிஷப்மாரும் சம்மதிப்பார்கள் என்று நினைக்கிறேன். ஆணோடு-ஆணை திருமணம் நடத்தி ஆமென் என்றும் இவர்கள் கூறுவார்கள். இதில் யாருக்கும் வெட்கம் இல்லை, தெய்வபயமும் இல்லை. இப்போதெல்லாம் இவர்கள் செய்யும் பாவத்திற்கு பெயர் இயற்கை பலவீனம் என்பதாகும்.

  நான் இந்திய ராணுவத்தில் பணியாற்றியபோது அங்கு ஆபீஸர்ஸ் மெஸ்ஸில் கொடுக்கும் சாப்பாடு மிகவும் உயர்ந்ததாக இருக்கும். ஆபீஸர்கள், ராணுவ வீரர்கள் யாவருக்கும் நல்ல சாப்பாடு கிடைக்கும். பொதுவாக ராணுவத்தில் நல்ல இறைச்சி சாப்பாடு விதவிதமாக கிடைக்கும். அப்படி சாப்பிட்டு வளர்த்தப்பட்ட உடம்பில் காம உணர்ச்சிகளும், பால் உறவுக்காக ஏங்கும் உணர்வுகளும் அவர்கள் சரீரத்தில் கொப்பளித்துக்கொண்டு இருக்கும். அப்படிப்பட்ட பெலம் கொண்ட ராணுவ சரீரம் பால் உறவுக்கு ஊற்றுக்கால் தேடும். அதனால்தான் உலகில் மிக அதிகமான ஹோமோ செக்ஸ் பாவம் ராணுவத்தில் உண்டு என்று கூறப்படுகிறது. அங்கு இப்படிப்பட்ட பாவம் கரைபுரண்டு ஒடுவதை நானும் கண்டிருக்கிறேன். ஆகவேதான் எப்படியாவது இந்திய ராணுவத்திலிருந்து வெளியேற துடித்தேன். கடவுளுடைய கிருபையால் முறைப்படி ராணுவத்திலிருந்து வெளியேறினேன்.

  அரவாணிகள் என்பது கடவுளின் சிருஷ்டிப்பு அல்ல - அரவாணியாக மாறுவது என்பது மனுஷன் சிறுவயதிலேயே சரீரத்தில் ஏற்படும் இயற்கைக்கு அப்பாற்பட்ட வித்தியாசமான பாலுறவின் உணர்வுகளை ஆரம்பகட்டத்திலேயே கவனிக்காமல் அலட்சியப்படுத்தியதாலும், பெற்றோர்களும் அதில் கவனம் செலுத்தாமல்போனதாலும் ஏற்பட்ட விளைவாகும். எந்த உணர்ச்சிக்கு தீனிபோட்டு பழக்கப் படுத்திக்கொள்கிறார்களோ அவர்கள் அதுவாகவே மாறிவிடுகிறார்கள். ஆண் புணர்ச்சி உள்ளவர்களாகவோ - வேறு சிலர் பெண் தன்மைக்கொண்டு தன் உணர்ச்சிக்கு தீனிபோட ஆண்களைத்தேடும் அரவாணிகளாகவோ இவர்கள் மாறிவிடுகிறார்கள். ஆகவே இது கடவுளின் படைப்பு அல்ல என்பது என் சொந்த கருத்தாகும். இது என் தனிப்பட்ட ஆராய்ச்சியின் கருத்து. இந்த கருத்தை உங்களில் யார் ஏற்றுக்கொள்ள பிரியமில்லையோ! அது உங்கள் இஷ்டம். என் கருத்தை என் வாசகர்களுக்கு அறிவிப்பது என் உரிமை. என் சபைமக்களுக்கு இதை அறிவிக்கவேண்டியது என் கடமையாகும். மேலே கூறப்பட்ட அரவாணி என்பவர்கள் ஆண்கள் தங்களை தேடிவரும்போது அவர்களின் பாலுறவு உணர்ச்சிகளுக்கு தீனிபோட வசதியாக அரவாணிகள் தங்கள் ஆண் உறுப்புகளை நீக்கிவிட்டு, பெண்களின் பிறப்பு உறுப்புபோல ஆப்ரேஷன்செய்து மாற்றிக்கொள்கிறார்கள். இப்படிப்பட்டவர்களை யார் திருமணம் செய்வார்கள்? அப்படி செய்தாலும் குழந்தைகள் உண்டாகுமா? உண்டாகாதே! அதனால்தான் இவர்கள் வசனத்தின்படி ஆயர் பணிக்கு தகுதியில்லை என்கிறேன்.

  இந்த ஆப்ரேஷனுக்கு பெயர் SRS ஆப்ரேஷன் என்பார்கள். இதை சாதாரணமானவர்கள் செய்யமுடியாது. வெளிநாடுகளில் இந்த ஆப்ரேஷனுக்கு பல ஆயிரம் டாலர்கள் செலவாகும். இந்தியாவில் பம்பாயில், கல்கத்தாவில் இந்த ஆப்ரேஷனை மிக அதிக பணம் கொடுத்து இரகசியமாக செய்கிறார்கள். இதைபோல் மார்பகங்களுக்கு சிலிகான் என்ற சுருங்காததும், விரிவடையாததுமான ஒரு திரவத்தை பெண்களின் மார்புபோல அமைத்து பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக்கொள்வார்கள். இதற்கு செலவாகும் மிகப்பெரிய பணதொகைக்குதான் இவர்கள் தங்கள் பாவசெயல்மூலம் பணம் சேர்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

  அரவாணிகள் விஷயத்தைக்குறித்து 4 விதமான படிப்பு உண்டு:
1). ஹார்மோன் தியரி, 2). ஜெனிட்டிக் தியரி, 3). சைக்கோ தியரி, 4). அனாலிட்டிக்கல் தியரி என்று நான்குவித தியரி சொல்லப்படுகிறது.

  கிறிஸ்தவர்களாகிய நாம் நம் பரிசுத்த திருச்சபை மக்களை வழிநடத்த (மேய்ப்பன்) ஆயர் பணிக்கு அரவாணி (அலி) ஒருவரை நியமிப்பது வேதவசனத்தின்படி சரியா-தவறா என்பதைத்தான் நாம் சிந்திக்கவேண்டும். அதோடு அரவாணிகள் வாழ்க்கை விஷயத்தில் இது (இயற்கையா) நேச்சுரலா என்று விவாதிப்பதைவிட ஹெல்தியான (ஆரோக்கியமான) விஷயமா? என்று சிந்திப்பதுதான் நல்லது.

  நான் முன்பு எழுதியதைப்போல அரவாணிகளை அவமானப்படுத்தவோ, கொச்சைப்படுத்தவோ நான் முயற்சிக்கவில்லை. வெல்லூர் CSI திருமண்டத்தில், சென்னை CSI திருமண்டலத்தில் ALC லூத்தரன், TELC லூத்தரன் சபைகளில் அரவாணிகளுக்கு மத்தியில் ஊழியம் செய்வதற்க்கென்றே குருவானவரை நியமித்து, உடன் ஊழியர்களையும் நியமித்து மிக அற்புதமாக ஊழியம் செய்கிறார்கள்.

  ஆரணி CSI சபையில் கன்வென்ஷனில் பிரசங்கிக்க நான் சென்றபோது அரவாணிகளுக்காக ஒரு ஊழியர் தன் சபை ஆயர் பணியை ராஜினாமா செய்து முழுநேர ஊழியராக புருஷனும் - மனைவியுமாக ஊழியம் செய்வதைக்கண்டேன். அவர்கள் அரவாணிகளுக்காக தனியாக வாராவாரம் ஆராதனை நடத்துவதை அறிந்தேன். என் கூட்டத்திற்கும் இயேசுவை ஏற்றுக்கொண்ட கிறிஸ்தவ அரவாணிகளை கண்டேன் - பேசினேன் - ஜெபித்தேன். இயேசுகிறிஸ்து விபச்சாரிகள், வேசிகள், டையோசிஸ் பணக்கொள்ளையர்கள்கூட மனந்திருந்தினால் அவர்களையும் மன்னித்து பரலோகத்தின் பாத்திரவான்களாக கர்த்தர் அவர்களை மாற்றப்பிரியப்படும்போது அந்த நல்ல கர்த்தரின் செயலுக்கு குறுக்கே யார் நிற்கமுடியும்? ஒரு விபச்சாரி விடமுடியாத தன் பாவதொழிலைவிட்டு மனந்திரும்பி சாட்சிகொடுத்து பரிசுத்தமாக வாழும்போது, தன் உணர்ச்சிகளை காட்டி மற்றவர்களை பாவத்தில் தள்ளும்விதமாக இனி நான் வாழமாட்டேன் என்று ஒரு அரவாணி கர்த்தருக்குள் தீர்மானம் செய்து மனந்திரும்பினால், இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்ட நல்ல கிறிஸ்தவ விசுவாசியாக மாறலாமே! அவர்களையும் இயேசுகிறிஸ்து நேசிக்கிறாரே!

  ஆனால், அவர்கள் சபை ஆயர் ஊழியத்தைத்தவிர, சுவிசேஷ ஊழியத்தையோ, பிரசங்கி யாராகவோகூட ஊழியம் செய்யலாம். அவர்கள் சபையில் தைரியமாக சாட்சி கூறலாம். அரவாணியாக இருந்த என்னை இயேசுகிறிஸ்து இரட்சித்ததால் என் பாவசிந்தைகளை நான் விட்டுவிட்டேன் என்று இவர்கள் தைரியமாக மேடையேறி சாட்சி சொல்லாமே! இதைத்தானே கடந்த ஜாமக்காரனில் நான் எழுதினேன். அதை சரியாக விளங்கிக்கொள்ளாமல், மற்றவர்களால் தூண்டிவிடப்பட்ட அரவாணிகளில் சிலர் என்மேல் கோபப்பட்டதை அறிந்து வருந்துகிறேன். அதே சமயம் சமூகத்தில் மிக கவுரவமாக வாழும் அரவாணிகள் இப்போது பெருகிவருகிறார்கள்.

  இப்போதும் கடந்த 2012 மார்ச் மாதம் 16ம் தேதி தூத்துக்குடி மக்கள் நீதிமன்றத்தில் ஓய்வுப்பெற்ற நீதிபதி, வழக்குரைஞர் இவர்களுடன் சமூகசேவகரான அரவாணி விஜி என்பவரையும் இந்தியாவிலேயே முதன்முறையாக தீர்ப்பளிக்கும் பொறுப்புக்கு நியமித்த செய்தியை பத்திரிக்கைகளில் வாசித்தேன். அவருக்கும் என் வாழ்த்துக்கள்.

  கிறிஸ்துவின் சபை ஆயர் ஊழியத்தை தவிர எந்த பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு இவர்கள் திறமையாக செயல்படமுடியும் என்பதுதான் என் முடிவான கருத்தாகும்.


Top
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM
Friend Link: Timberland 6 Inch Boots Herren Nike Air Max 2016 Nike ELASTICO Finale III Street TF Adidas Messi 16.3 IC MBT Lami Damen TIMBERLAND CHUKKA BOOTS Adidas Superstar 2 Shoes Friend Link: NIKE ROSHE TWO FLYKNIT SHOES AIR JORDAN 23 Adidas Originals NMD Adidas Yeezy Boost 550 Adidas Tubular Schuhe Adidas Springblade Schuhe ADIDAS D ROSE 7 MEN Friend Link: Adidas Originals Pride Pack Adidas Originals Stan Smith W Adidas Originals ZX 500 Adidas Climacool Boat Lace NIKE AIR FORCE 1 07 HIGH MBT BARIDI WOMEN AIR JORDAN 2 MEN