சபை பாஸ்டர்களுக்கான செய்தி
மேய்ப்பனாயிராதவனும்
யோவான் 10:12
தேவ எச்சரிப்பின் செய்தி Selected

அன்பான தேவனுடைய ஊழியர்களே! மேய்ப்பர்களே! கர்த்தருடைய ஆடுகளை மேய்க்கிறவன்தான் மேய்ப்பர். இயேசுகிறிஸ்து நானே நல்ல மேய்ப்பன் என்று சொல்லியிருக்கிறார் (யோ 10:11). கர்த்தர் நம்மைப்போல் மேய்ப்பனாக இருக்கவேண்டும் என்று ஜனங்களை நம்முடைய கையில் கொடுத்திருக்கிறார். நாம் ஒவ்வொரு ஆட்டையும் கவனித்துக்கொண்டு இருப்போம். ஒரு ஆடு காணாமல் போனாலும் அதை தேடி கண்டுபிடித்து அதை தேற்றிவிடுவோம். இயேசுவும் அதை செய்தார் என்று கூறிடுவோம் (மத் 18:12-13).


நல்ல மேய்ப்பன் (பாஸ்டர்)

நாம் ஆடுகளை குறித்து எப்போழுதும் கவனமாக இருந்து அதற்கு என்ன தேவை என்று அறிந்து அதற்க செய்யவேண்டிய உதவிகளையும், ஓய்வு நாளில் ஆடு வரவில்லை என்றால், ஓய்வு நாள் அன்று ஆடுகளை பார்க்கமாட்டேன் என்று சொல்லாமல் அதை காப்பாற்றி வருவோம் (மத் 12:11-12). நாம் ஆடுகளை ஒரேவிதமாகத்தான் பார்ப்போம். பணக்கார ஆடு, ஏழை ஆடு, நடுத்தர ஆடு, நோய்யுள்ள ஆடு, கீழ்படியாத ஆடு எது என்று நமக்கு தெரியும். அந்த ஆடுகளை எப்படி நடத்த வேண்டும் என்று கர்த்தர் நமக்கு சொல்லித்தருவார். அதின்படி அந்த ஆடுகளை மேய்ப்போம். ஆடுகள்மேல் மிகவும் கவனமாக இருப்போம்.

நம்முடைய சபையில் ஆடுகள் பெருகிக்கொண்டு இருக்கும். ஜனங்கள் பெருகும்போது இடமும் வேண்டியதாக இருக்கும். அதற்கேற்ற இடத்தையும் கர்த்தர் தருவார். நாம் நம்முடைய ஊழியத்தில், நான் மேய்ப்பன் என்ற பெருமை வராது. எல்லா ஊழியர்கள் மேலும் அன்பு உண்டாகும். ஊழியர்களை குறைவாக பேசமாட்டோம். சபையில் ஜனங்கள் பெருகிக்கொண்டு செல்வார்கள். உங்கள் யோசனைகள் எல்லாம் ஜனங்கள்மேல்தான் இருக்கும். ஜனங்கள் நன்றாக இருக்கவேண்டும் என்று எண்ணினால்தான் உங்கள் இருதயத்தில், தான் கட்டின மனைவி, பிள்ளைகள், சொந்த பந்தங்கள் எல்லாம் கர்த்தருடைய பிள்ளைகளுக்கு அடுத்துதான் நேசிப்பீர்கள். ஜனங்கள் மேல்தான் உங்கள் ஏக்கம் இருக்கும். கர்த்தர் உங்கள்மேல் அதிகமாக பிரியம் வைப்பார். ஆனால் பிசாசு உங்கள்மேல் பொறாமை கொண்டு உங்களை எப்படியாவது தன்பக்கம் இழுக்கவேண்டும் என்று பலவிதமான தந்திரங்கள் ஏவிவிடுவான். நீங்கள் இயேசுகிறிஸ்துவின் ஜனங்களை பாதுகாக்கும் காவலனாகவும், மேய்ப்பனாகவும் இருப்பீர்கள் (சங் 80:1). ஒரு மேய்ப்பன் எப்பொழுதும் பிரகாசித்துக்கொண்டே இருக்கவேண்டும். வெளிச்சம் இருக்கும்போது எந்த விதமான திருடர்களும், ஓநாயும் வராது. உங்களுக்குள் இருக்கும் பிரகாசம் இயேசுகிறிஸ்துவை வெளிப்படுத்தும். நீங்கள் பணத்திற்கு அடிமையாகாத மேய்ப்பனாகவும், எந்த ஆடுகள் மீதும் ஆசை வந்து ஜொள்ளு வடிக்காத மேய்ப்பனாகவும், பெருமைக்காக ஊர் சுற்றாத மேய்ப்பனாகவும், பெருமைக்காக மற்றவர்களை கொலை செய்யாத மேய்ப்பனாகவும் இருப்பீர்கள்.

உங்கள் கனவு, நினைவு, பரிசுத்தம் மற்றவர்கள் நன்றாக இருக்கவேண்டும் என்றும், தனக்காக வாழாமல் மற்வர்களுக்காக வாழும் ஒரு பரிசுத்த மேய்ப்பனாகவும், பெருமைக்காக மற்றவர்களை கொலை செய்யாத மேய்ப்பனாகவும் இருப்பீர்கள். நீங்கள் ஜெபம் பண்ணும்போது அற்புதங்கள் நடக்கும். கர்த்தர் உங்களை ஆசீர்வாதமாக வைத்திருப்பார் (2பேதுரு 2:1-3). அந்த ஆசீர்வாதத்தை உங்களிடமிருந்து எடுத்துப்போட பிசாசு ஒரு தந்திரம் செய்வான். எல்லோருக்கும் தன் சொந்த குடும்பத்தின்மேல் கை வைத்துவிட்டால் கோபம் வரும், இல்லை என்றால் அதிக அன்பு வைத்திருந்தால் கோபமும், பாவமும் வரும். தன் குடும்பத்தில்மட்டும் அன்பு வைத்திருந்தால் பாவம்தான் உங்களை முதலில் கோபப்படுத்தும்.

எப்படியென்றால் உங்கள் சொந்தக்காரர்கள் உங்கள் வீட்டுக்கு வந்திருப்பார்கள். அவர்கள் உங்கள் சபையில் பலிபீடத்தில் இருக்கும் எந்த பொருளையாவது எடுப்பார்கள். அதை பார்த்துக்கொண்டிருக்கும் விசுவாசி அவர்களிடம் அதை எப்படி நீங்கள் எடுக்கலாம்? பாஸ்டரிடம் கேட்டு வந்து எடுங்கள் என்று அதை கொடுக்கமாட்டார். உடனே அவர் உங்களிடம் வந்து சொல்லாமல் உங்கள் மனைவியிடம் வந்து சொல்வார்கள். அவர்கள் உடனே போய் அந்த விசுவாசியை திட்டிவிடுவார், அந்த விசுவாசியை விரட்டியும் விடுவார். இது உங்களுக்கு தெரியாது. அவர் இரண்டு நாட்களாக வராததை பார்த்து ஏன் அவர் வரவில்லை என்று அவரை பார்க்கச் செல்வீர்கள். அவர் உங்கள் மனைவி திட்டினதையும், வெளியே விரட்டினதையும் சொல்வார். நீங்கள் அது உண்மை கிடையாது என்று நினைத்து உன்மேல் இருக்கும் தப்பை என் மனைவிமேல் சொல்லாதே. எங்கள் குடும்பத்தை பிரிக்கவேண்டும் என்று எத்தனை நாட்கள் நினைத்தாய் என்று கோபமாக திட்டிவிட்டு வந்துவிடுவீர்கள். பிசாசு கோபப்படுத்தி உங்களை ஏமாற்றிவிடுவான். உங்கள் மனைவிமேல் வைத்த அன்பு அவர் தப்பு செய்யமாட்டார் என்ற நம்பிக்கையில் உண்மையான விசுவாசியை இழந்துவிடுவீர்கள். அதற்கு அடுத்து உங்கள் மனைவி அவர்களுடைய சொந்தக்காரர்களைப்பற்றி சொல்லும்போது அவர் செய்த தப்பை மறைக்க உங்கள்மேல் மாய்மாலமான அன்பு காட்டுவார்கள். ஏனென்றால் நீங்கள் குடும்பத்தைப் பார்க்காமல் விசுவாசிகளைத்தான் மிகவும் நேசிப்பவர். அவர்களைப்பற்றி சொன்னால் விரட்டினது தெரிந்தால் நம்முடன் சண்டை செய்வார் என்று நினைத்துக்கொண்டு தந்திரம் செய்வார்கள். அந்த வார்த்தை பொய் என்று உங்களுக்கு தெரியாது.


முன்கோபம்

கோபம் என்கிற பிசாசு உங்களுக்குள் இருந்துக்கொண்டு உங்கள் மனைவிமேல் அன்பு காட்ட தூண்டுவான். அடுத்து பிள்ளைகள்மேல் அன்பு காட்டத்தூண்டுவான். உங்களுக்குள் இருக்கும் பரிசுத்த ஆவியானவர் கோபப்படுவது பாவம் என்று சொன்னால் அதை பிசாசு மறுத்து அவன் தவறு செய்தான், கோபப்படுவது சரிதான் என்று சொல்லிக்கொடுப்பான். வசனத்தையும் எடுத்துக் கொடுப்பான், அதற்கு அடுத்து உங்களை மேய்க்கின்ற மேய்ப்பனாகிவிடுவான். உங்கள் சொந்தக்காரர்கள், மனைவி, பிள்ளைகள் என்று தனக்காக வாழவேண்டும் என்று பிசாசு தூண்டிவிடுவான். நீங்கள் ஒன்றும் இல்லாதவராய் இருந்தபோது உங்கள் சொந்தக்காரர்கள் எல்லாம் உங்களை விட்டுவிலகியிருப்பார்கள். உங்களை மதிக்கமாட்டார்கள், உங்களுக்கு அவர்கள் சத்துருவாக தெரிவார்கள். அவர்கள் இரட்சிக்கப்பட்டும் உங்களை இழிவாகத்தான் நினைப்பார்கள்.

ஆனால் இப்பொழுது நீங்கள் ஒரு பெரிய ஊழியக்காரர். அப்பொழுது வராதவர்கள் இப்பொழுது வருவார்கள். அவர்கள் உங்களிடம் உண்மையாக வருகிறார்களா? இல்லை தந்திரமாக வருகிறார்களா? என்று உங்களுக்கு தெரியாது. பணம், இல்லை கடன் பிரச்சனைகளில் உதவுவார்கள் என்று இப்பொழுது வந்துவிடுவார்கள். வந்தவர்கள் சும்மா இருக்கமாட்டார்கள். உங்கள் மனைவியிடம் ஆசையை தூண்டுவிடுவார்கள். எங்கள் வீட்டில் எல்லாம் பிரிட்ஜ், மிக்ஸி, கிரைண்டர், வாசிங் மெசின் எல்லாம் இருக்கின்றன. கர்த்தர் உங்களை ஆசீர்வதித்திருக்கிறார். ஏன் வாங்கவில்லை? வாங்கினால்தான் நமக்கு நல்லது. சீக்கிரமாக வேலையை முடித்துவிட்டு சபைக்கு செல்லலாம் என்று தந்திரமாக சொல்லிக்கொடுப்பார்கள்.

உங்களுடைய மனைவி அவர்களுடைய பேச்சு உண்மை என்று எண்ணி உங்களிடம் கேட்பார்கள். அவர்கள் கேட்ட எல்லா பொருட்களையும் வாங்கிக்கொடுப்பீர்கள். இதற்கு எல்லாம் பணம் தேவை. இதை எல்லாம் யார் தரவேண்டும்? ஆடுகள்தான் தரவேண்டும். எந்த ஆட்டிடமிருந்து வாங்கலாம் என்று எண்ணிக்கொண்டிருக்கும்போது பணக்கார ஆடுகளை உங்கள் இருதயத்தில் இருந்து எடுத்துக் கொடுக்கும். அவர்களுடைய வீட்டிற்குச் செல்வீர்கள். அவர்கள் நீங்கள் வருவதைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள். ஒருநாளும் வராதவர் நம் வீட்டிற்கு வந்து இருக்கிறார் என்று ஆச்சரியப்படுவார்கள். நீங்கள் அவர்களுக்காக ஜெபம் செய்யசென்றால் அவர்களிடம் பணம் கறக்கலாம் என்று எண்ணிக்கொண்டு அவர்களிடம் நான் ஒரு பொருள் வாங்க வந்தேன். அப்படியே உங்களையும் பார்த்துவிட்டுச் செல்லலாம் என்று நினைத்து வந்தேன் என்று சொல்வீர்கள். நீங்கள் எந்த பொருளை வாங்கவேண்டும் என்று சொன்னவுடனே அவர்களே வாங்கி கொடுத்துவிடுவார்கள். இப்படியாக பணத்தை வாங்க விசுவாசி வீட்டிற்குச் சென்று பொருட்களை வாங்கிவிடுவீர்கள். அவர்களை பாதுகாக்க வேண்டிய நீங்கள் அதை அடித்து சாப்பிடுவீர்கள் (எசே 34:3). உங்களுக்கு பணம் என்கிற ஆவி புகுந்தவுடன் உங்கள் குடும்பத்தை பார்க்கவேண்டும். நமக்கு ஒரு தனி அந்தஸ்து வரவேண்டும் என்று ஆடுகளைப்பற்றி கவலைப்படாமல் உங்களையும், உங்கள் குடும்பத்தைப்பற்றியும் தான் கவலைப்படுவீர்கள்.


தகுதியில்லாத மூப்பர்கள்

உங்கள் சொந்தக்காரர்கள்தான் சபையில் மூப்பராக இருக்கவேண்டும். உங்கள் சபையில் சொந்தக்காரர்கள்தான் ஊழியம் செய்யவேண்டும் என்று மனதில் நினைத்து உங்கள் சொந்தக்காரர்கள்தான் உங்களுடன் இருக்கவேண்டும் என்று எண்ணி சபையில் மூப்பரையும், ஊழியக்காரர்களையும் எப்படி விரட்டலாம் என்று வகை தேடுவீர்கள். நீங்கள் பணக்கார வீட்டுக்கு செல்வீர்கள். ஏழைகள் வீட்டிற்கு அவர்கள் செல்வார்கள். பணக்காரர்கள் உங்களை புகழ்வார்கள். ஏழைகள் அவர்களை புகழ்வார்கள். அவர்களுக்கு சம்பளம் கொடுத்து அவர்கள் குடும்பத்தையும் கவனித்து கொண்டு வருவீர்கள். அவர்களை எப்படியும் வெளியேற்றவேண்டும் என்று எண்ணி வீண்பழி சுமத்தி அவர்களை வெளியே அனுப்பிவிடுவீர்கள். அவர்கள் இருந்தால் சபையில் வரும் பணத்தை எல்லாம் உங்களுக்கு எடுத்துக்கொள்ளமுடியாது. அவர்கள் இருந்தால் அதை கணக்கு பார்க்கவேண்டும். யார் தசமபாகம் காணிக்கை அதிகமாக கொடுக்கிறார்களோ, அவர்களை சபைக்கு முன்பாக பெருமையாகப் பேசுவீர்கள். அவர்களுடைய வீட்டிற்கு அடிக்கடி செல்வீர்கள். 50, 100 ரூபாய் கொடுக்கும் விசுவாசி வீட்டிற்கு செல்லமாட்டீர்கள். முன்பு ஒன்றும் கொடுக்காத வீட்டிற்குச் சென்று உங்களால் முடிந்த உதவிகளைச் செய்து அவர்களை பிசாசின் கையில் இருந்து காப்பாற்றினீர்கள். இப்பொழுது அவர்களை பார்க்கப்போகிறது கிடையாது. கேட்டால் நான் டாக்டர் என்னைத் தேடித்தான் வரவேண்டும். டாக்டர் அவர்களைத் தேடி செல்லக்கூடாது என்பீர்கள். அந்த டாக்டர் பணக்கார வீட்டிற்கு மட்டும் தேடிச் செல்வீர்கள். ஏனென்றால் அவர்கள் 1000 ரூபாய் கொடுப்பார்கள்.

மந்தையிலுள்ள ஆடுகளை கவனிக்காமல் உங்கள் இஷ்டத்திற்கு மற்ற இடங்களுக்குச் சென்று செய்தி கொடுக்கச் செல்வீர்கள். அப்படி செல்லவில்லை என்றால் தங்க கட்டிலில் படுத்துக்கொண்டு தப்பு பண்ணுவீர்கள் (ஆமோஸ் 6:4). ஏழை விசுவாசி வீட்டிற்கு வந்தால் பாஸ்டர் இல்லை என்று சொல்லி அனுப்பிவிடுவீர்கள். உண்மையுள்ள ஏழை ஊழியர்கள் வந்தாலும் யாரையும் பார்க்கிறது கிடையாது என்று சொல்லி அனுப்பிவிடுவீர்கள். பணக்கார விசுவாசிகள் வந்தால் உடனே அவர்களைப் பார்த்து பெருமையாகப் பேசி அவர்களுக்கு விசேஷித்த சாப்பாடு கொடுப்பீர்கள். அப்பொழுதுதான் அதிகமாக தசமபாகம் காணிக்கையாக கொடுப்பார்கள். அவர்களிடம் உள்ள பணத்தை நீங்கள் பறிக்கும்வரை அவர்களை விடமாட்டீர்கள். கறி, மீன், நண்டு, பிரியாணி என்று விசேஷமாக கவனிப்பீர்கள். நீங்கள் அவர்களை மொட்டை அடித்து அவர்களிடம் உள்ள சொத்தையும் எழுதி வாங்கிவிடுவீர்கள். எனக்கா எழுதிக் கொடுத்தீர்கள்? கர்த்தருக்குதான் கொடுத்தீர்கள் என்று சொல்வீர்கள். அவர்கள் கஷ்டப்படும்போது அவர்களை யார் நீங்கள்? என்று கேட்பீர்கள். உங்களையே மேய்த்துக்கொண்டு கஷ்டப்படுகிறவர்களுக்கு ஆறுதலாக இல்லாமல் ஈட்டி எடுத்து குத்துவீர்கள். உங்களுக்கு தேவை பணம் (எசே 34:4-6). அந்த ஆடுகள் உங்களை விட்டுப் பிரிந்து சென்றுவிடும். அதை காயப்படுத்தி அனுப்பிவிடுவீர்கள். யாரும் கேட்டால் அது பாவம் செய்து தரித்திரமானது என்று சொல்வீர்கள்.

உங்களுக்கு பணம் வந்தவுடன் இச்சையான வார்த்தைகள் உண்டாகும். அந்த வார்த்தையில் உண்மையான ஊழியத்தைவிட்டு பொய்யான ஊழியத்தைச் செய்வீர்கள். மற்ற ஆடுகளை, விசுவாசிகளை கால்களால் மிதிக்கவும் உங்கள் கால்களால் குழப்பிவிடவும் இருப்பீர்கள் (எசேக் 34:19). ஏப்பை சாப்பையாக இருக்கும் விசுவாசிகளை உங்களுக்கு கீழே மிதித்து அவர்களை உங்களுக்கு ஜால்ரா அடிக்கவும், உங்களுக்கு கை தட்டவும் வைத்திருப்பீர்கள். ஏனென்றால் அவர்கள் உங்களுக்கு பாக்கி தரவேண்டும். இல்லையென்றால் அவர்கள் செய்த பாவத்தை வெளியே சொல்லி கேவலப்படுத்துவேன் என்று மிரட்டுவது, அவர் ஏதாவது தெரியாமல் பாவம் செய்து இருந்தால் அதை படம் எடுத்து, இல்லை என்றால் செல்போனில் பதிந்து வைத்துக்கொண்டு மிரட்டுகிறது. அவர்கள் உங்களுக்கு பயந்து, நீங்கள்தான் கடவுள், நீங்கள்தான் தெய்வம் என்று உங்களை அவர்கள் செய்கிற தப்புகளை மறைத்துவிட்டு அவர்களை பெருமைப்படுத்துவீர்கள். அவர்கள் செய்த பாவம், அது பாவம் இல்லை என்று பிரசங்கம் பண்ணுவீர்கள். மற்ற ஊழியர்களை குறை சொல்வீர்கள். அவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல, அவர்கள் செய்கிறது எல்லாம் தவறானது. அவர்கள் கிறிஸ்துவின் பகைஞர்கள் (எதிரிகள்) என்று குழப்பிவிடுவீர்கள்.


தற்பெருமை

இயேசுவின் அன்பையும், இரட்சிப்பையும் எடுத்துச் சொல்லாமல், உங்கள் இருதயத்தில் பிரசங்கம் பண்ணும்போது, உங்கள் கட்டுக்கதையையும், உங்களுடைய பெருமையையும், உங்களுடைய தந்திரத்தையும், வீரத்தையும் மற்றொருவனுடைய பாவத்தையும் சொல்லி பிரசங்கம் பண்ணுவீர்கள். அவர்கள் குழம்பி, நீங்கள் செய்கிறதுதான் சரியென்று நினைத்துக்கொண்டு, நீங்கள்தான் தெய்வம் என்று உங்கள் கால்களை பிடித்துவிடுவார்கள். அந்த பிடியில் நீங்கள் அவர்களுக்கு இணங்கிபோவீர்கள். அந்த காரியத்தினால் உங்கள் ஊழியத்தில் மூன்றாவது முறையாக உங்களுக்குள் புகுந்து காமத்தை தூண்டிவிடுவான். நீங்கள் சமயம் கிடைக்காதவரை நீங்கள் பரிசுத்தவான். இப்பொழுது சமயம் கிடைத்தது. அதினால் நீங்கள் பாவம் செய்ய தூண்டிவிடுவான் பிசாசு.

தாவீது யுத்தத்திற்கு செல்லாததினால் பாவம் செய்தான். நீங்கள் ஊழியத்தை செய்யாமல் இருந்து ஜொள்ளு வடித்துக் கொண்டிருப்பதினால் பாவம் செய்வீர்கள். யோசேப்புக்கு சமயம் கிடைத்தது. அவன் பாவம் செய்யவில்லை. கர்த்தருக்கு பிரியமாக இருந்தான். இந்த பாவங்களை மறைக்க வெளியூர்களுக்கு சென்று பிரசங்கம் பண்ணப்போவீர்கள். அவர்கள் கூப்பிடாவிட்டாலும் அவர்களுக்கு பணத்தைக் கொடுத்து நோட்டீஸ் அடித்தும், போஸ்டர் அடித்துக்கொடுத்தும், சாப்பாடு போட்டும், துணிமணிகள் எடுத்துக்கொடுத்தும் ஊழியம் செய்வீர்கள். அதற்கான பணம் சபையில் வருகிற தசமபாகம் காணிக்கைதான். நீங்கள் வேலை செய்யாமல் கர்த்தருடைய பணத்தை எடுத்து உங்கள் பெருமைக்காக ஊழியம் செய்தீர்கள். உங்களுடைய செய்கையை அவர்கள் பார்த்து உங்களை பெருமைப்படுத்துவார்கள். அந்த இடத்தில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தாழ்த்தப்படுவார், நீங்கள் உயர்த்தப்படுவீர்கள் (நீதி 27:23-27). உங்களுக்காக கொடுக்கும் பணம் எல்லாம் சபைக்குரியது. அதற்கு என்ன தேவை என்று உணராமல் உங்கள் பெருமையில் உங்களை நீங்களே உயர்த்திக் கொள்வீர்கள். (நீதி 28:10).


வெளிநாட்டு ஊழியம்

உத்தமர்களை ஏமாற்றி ஊர் சுற்றி வருகிறதும், உங்களுடைய ஆடுகளை மேய்க்காமல் அதை சிதறடிக்கச் செய்துவிட்டு மற்ற சபையில் உள்ள ஆடுகளை மேய்ப்பீர்கள். நீங்கள் செய்த பாவம் அவைகளுக்குத் தெரியாது. பின்பு வெளிநாடு சென்றுவிடுவீர்கள். நீங்கள் சென்றவுடன் சபையை துணை பாஸ்டர் பார்த்துக்கொள்வார். ஆடுகள் அவருடைய சத்தத்திற்கு செவிகொடுக்கும். ஒரு சிலர் தங்கள் பாவத்தை கழுவ காசிக்கு செல்வர். அங்கே நாம் செத்தால் மோட்சம் கிடைக்கும் என்று செல்கிறார்கள். அவர்கள் இயேசுகிறிஸ்துவை அறியவில்லை. சிலர் வெளிநாடு செல்வார்கள். அங்கு ஊழியம் செய்வார்கள். பணத்திற்கும், பெருமைக்கும் வெளிநாட்டு ஊழியத்தை செய்யமாட்டார்கள். அவர்களுடைய ஊழியத்தை கர்த்தர் ஆசீர்வதிப்பார். அந்த ஊழியத்தில் மரணம் வந்தாலும் பரவாயில்லை என்று நினைத்துக்கொண்டு இருப்பார்கள். நீங்கள் அப்படியல்ல. உங்கள் பாவத்தை மறைக்க பணத்தை செலவிடுவீர்கள். பணம் காலியானவுடன் ஊருக்கு திரும்பி வந்து சபையில் உள்ள பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என்று நினைப்பீர்கள் (எரே 23:10). அங்கு பணம் இல்லை என்று தெரிந்தவுடன் உதவி பாஸ்டர் திருடிவிட்டார் என்று கொலைசெய்ய நினைப்பீர்கள். தசமபாகம், காணிக்கையை திருடிவிட்டார் (எரேமி 23:11) தேவனுடைய சபையில் பரிசுத்தவானை குற்றப்படுத்துவது, யோவான் தலையை எடுத்த மாதிரி, ஆராதனை நேரத்தில் பரிசுத்த ஆராதனை நடத்துகிற மாதிரி நடிப்பீர்கள். ஜனங்கள் உங்களை தெய்வம் மாதிரி நினைத்து ஒரு மாதம் கழித்து வந்திருக்கிறார் என்று நினைத்து அபிஷேகத்தில் ஆடுவார்கள். அந்த அபிஷேக ஆட்டம் எல்லாம் அந்நிய அக்கினிகள், பரிசுத்த அக்கினியிருந்த வாயிலிருந்து கள்ள தீர்க்கதரிசனம் வரும். என்னுடைய பணத்தை திருடிவிட்டாய். இந்த சபையைவிட்டு ஓடிவிடு இல்லை என்றால் உன்னை சபைக்கு முன்பாக அவமானப்படுவாய். கர்த்தர் எச்சரிக்கிறார். இப்பொழுது ஓடிவிடு, என் மந்தையை மேய்க்கச் சொன்னால் பணத்தையும், ஆட்டையும் திருடிவிட்டாய் என்று கள்ள தீர்க்கதரிசனம் சொல்வீர்கள்.


கள்ள தீர்க்கதரிசனம்

ஜனங்கள் எல்லாம் அந்த பரிசுத்தவானை தவறாகப் பார்ப்பார்கள். அவர் அந்த சபையைவிட்டு வெட்கப்பட்டு அழுதுகொண்டு சென்றுவிடுவார். ஆனால் மற்றவர்கள் எல்லாம் அவர் திருடன் என்று நினைத்து, பாஸ்டரை தீர்க்கதரிசி என்று நினைத்து [பாஸ்டரை தெய்வம் என்கிற (விக்கிரகம்)] எண்ணத்தில் புகழ்வார்கள் (எரே 23:14-17). கொலைசெய்ய கள்ளதீர்க்கதரிசனம் சொல்வீர்கள். நான் சொப்பனம் கண்டேன் என்று சொல்வீர்கள். ஒரு பரிசுத்தவானை கொலை செய்ய எத்தனை பொய் சொல்கிறீர்கள்.

கர்த்தருடைய ஆடுகளை மேய்ப்பதற்கு உங்களை கர்த்தர் ஏற்படுத்தினால் உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்திற்காகவும், பாவம் செய்கிறதற்கும், கொலை செய்வதற்காகத்தான் கர்த்தர் ஆடுகளை உங்கள் கையில் கொடுத்தாரோ? இயேசுகிறிஸ்து நானே நல்ல மேய்ப்பன் என்று சொல்லியிருக்கிறாரே (யோ 10:1-10).

அவருடைய ஆடுகளை திருடிவிட்டு என் ஆடுகள் என் வார்த்தையைத்தான் கேட்கும் என்று நினைத்து அதற்கு சாராயத்தை குடிக்கக் கொடுத்த மாதிரி தேவனுடைய ஆட்டுக்கு பெருமை, காமவிகாரம், பணம், பொய் சொல்ல, திருட்டு, கொலை செய்ய இன்னும் பல வார்த்தைகளை குடிக்கக் கொடுத்து ஒவ்வொரு ஆடும்போதையில்தான் இருக்கும். சாராயம் விற்கிறவன் இடத்தில் சாராயம் குடிக்க வருகிறவர்கள் மறைந்திருந்து பணம் கொடுத்து வாங்கி சாப்பிடுவார்கள். அதுபோல அவர்கள் பரிசுத்தவான்களை பார்த்தால் அவர்களுடைய முகத்தை பார்க்கமுடியாமல் தலையை குனிந்துக் கொண்டு பேசமுடியாமல் இருப்பார்கள். அவர்கள் எல்லாம் தொட்டால் சிணுங்கி இலை மாதிரி அவர்களை பார்த்தவுடன் முகம் சுருங்கிவிடும்.

நீங்கள் அவர்களை மயக்கி, இயேசுகிறிஸ்துவின் அன்பையும், பரிசுத்தத்தையும் சொல்லிக் கொடுத்தும் இருப்பீர்கள். இயேசுகிறிஸ்து அப்படிப்பட்டவர் அல்ல. அவருடைய வழியில் நடந்து செல்லும் ஆடுகள் எப்பொழுதும் தைரியமாக இருக்கும். இயேசுகிறிஸ்துவிடம் சொல்லாமல் எங்கும் செல்லமாட்டார்கள். அவர்களுடைய ஊழியத்தில் எந்தவிதமான வீழ்ச்சியும் கிடையாது. பட்டினியாயிருந்தாலும், உண்மையாக இருப்பார்கள் (ஏசா 11:3-6). மேய்ப்பன் ஆடுகளை மேய்க்கிறதற்கு எந்த மாதிரி நடந்துக்கொள்ள வேண்டும். ஆடுகளின் நிலைமையைக்குறித்து கவனமாக இருக்கவேண்டும். அந்த ஆடுகள் உங்கள் ஆடுகள் அல்ல. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மந்தையில் இருக்கும் ஆடுகள். அந்த ஆடுகளுக்கு உங்களை கர்த்தர் காவலாக வைத்திருக்கிறார். அதற்கு என் ஆடு, நான் பெற்றேன் என்று பெருமைப்படக்கூடாது. நீங்கள் சரியில்லை என்றால் உண்மையாக யார் மேய்ப்பனாக இருப்பாரோ அவர்களிடம் அந்த ஆடுகளை அனுப்பிவிட்டு அதை காப்பாற்றுவார் (எசே 34:23-26). கர்த்தர் உங்களிடம் கொடுத்த ஆடுகளை உண்மையாக மேய்த்து வழிநடத்துங்கள். எனவே பிசாசுக்கு இடங்கொடாமல் ஆடுகளை காப்பாற்றுங்கள், மந்தையில் புதிய ஆடுகளை சேருங்கள். கர்த்தருடைய வார்த்தைகளில் பரிசுத்தமாயிருங்கள். மந்தையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். பாவம் செய்யாதீர்கள்! எச்சரிக்கை! எச்சரிக்கை!! எசேக்கியல் 3:21.


Top
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM