மாடரேட்டர் & பிஷப்
சொத்து விவரம் சமர்ப்பிக்கவேண்டும்

புதியதாக தேர்ந்தெடுக்கப்படும் மாடரேட்டர் அல்லது பிஷப் தங்களது சொத்து விவரங்களையும், அசையும், அசையா சொத்துகளின் விவரங்களையும் அவரவர் டையோசிஸ் பத்திரிக்கைகளில் வெளிப்படையாக சமர்பிக்கவேண்டும். அப்படியே மொத்தம் எத்தனை பேங்க்-களில் பிஷப்மாருக்கு கணக்குகள் உண்டோ அதன் விவரமும், அந்த தேதியில் உள்ள மொத்த பண விவரமும் சமர்பிப்பது நல்லது. சபை மக்களும், டையோசிஸ் மக்களும் அதை அறியவேண்டும்.

இந்த விவரங்களை சினாடுக்கு அல்லது கமிட்டிக்குமட்டும் அறிவித்தால் போதாது, வெளியரங்கமாக அந்தந்த திருமண்டலத்திலுள்ள எல்லா சபை மக்களும் அறியும் வண்ணம் பகிரங்கமாக திருமண்டல அதிகாரபூர்வ பத்திரிக்கையில் வெளியிடவேண்டும்.

Rt.Rev.DORAI

இது புதிதாக பதவி ஏற்கும்போதுமட்டும் பிஷப் அல்லது மாடரேட்டர் சொத்து கணக்கு வெளியிடுவதுமட்டும் போதாது, இரண்டு வருடத்துக்கு ஒருமுறை பிஷப், மாடரேட்டர் அவர்களின் அப்போதைய சொத்து விவரம் சபை மக்கள் அறியும் வகையில் வெளியிடுவது தாங்கள் பண ஆசையில் விழாமல் இருக்க அவர்களுக்கு உதவும்.

  கோயமுத்தூர் திருமண்டல முன்னாள் பிஷப் Rt.Rev.துரை அவர்கள் பிஷப்பாக பதவி ஏற்கும்முன்வரை தான் வாங்கிய சிட்டி & லோன் பணம் அதை அடைக்கமுடியாமல் போனதால் ஜப்தி நோட்டீஸ் அவருக்கு கொடுக்கப்பட்டதாக எல்லாராலும் கூறப்பட்டதையும் தினசரி பத்திரிக்கையில் வெளியானதையும் நாம் அனைவரும் அறிவோம்.

அதன்பின் பிஷப்.துரை அவர்கள் பெயரில் 3 பேங்க்-களிலுள்ள அவர் கணக்கில் கோடிக்கணக்கான பணம் எப்படி சேர்ந்தது? மிக விலை உயர்ந்த கார்களும், பல இடங்களில் தன் மனைவி பெயரிலும், பினாமி பெயரிலும் வாங்கி உள்ளதாக கூறப்படும் கோடிக்கணக்கான மதிப்புள்ள அசையா சொத்துக்கள் எப்படி சேர்ந்தது? பிஷப்.துரை அவர்கள் பாஸ்டராக இருக்கும்போது அவரின் சம்பளம் என்ன? பிஷப்பானவுடன் அவர் சம்பளம் என்ன? ஆஸ்ட்ரோலியாவுக்கு பலமுறை மகளோடு சென்றுவர ஆன செலவு பல லட்சங்கள் எங்கிருந்து வந்தது? இவரது மகன் டாக்டர் படிப்பு படிக்க ஆன செலவு பல லட்சங்கள், மகளின் மிக ஆடம்பரமான திருமண செலவுக்கு பல லட்சங்கள் எங்கிருந்து வந்தது? இவை எல்லாம் எப்படி வந்தது? இப்படிப்பட்ட கேள்விகள் எழுப்பப்பட்டபோதுதானே, வரவுக்கு மீறின சொத்துக்கள் காரணமாகவும், வேறு பல குற்றச்சாட்டுகள் காரணமாகவும் ஜெயில் வரை போய் வரவேண்டியதானது. இப்போதும் வழக்கு நடந்துகொண்டிருக்கிறது.

Most Rev.S.VASANTHAKUMAR

  இப்போதுள்ள CSI மாடரேட்டர் Most Rev.வசந்தகுமார் அவர்கள் கதையும் அதுதானே! தன் பெயரிலும், தன் மனைவி பெயரிலும் பேங்கில் கணக்கு தொடங்கி திருமண்டலத்திற்கு சேரவேண்டிய பலவித பணவரவுகள் தன் கணக்கில் கோடிக்கணக்கில் சேர்க்க ஏற்பாடு செய்ததால்தானே இப்போது போலீஸ் வளையத்துக்குள் அகப்பட்டு ஒவ்வொரு முறையும் கைது செய்ய கோர்ட் கட்டளையிட்டபோது, பலமுறை ஜாமீன் வாங்கி உலாவிக் கொண்டிருக்கிறார்.

Most Rev.SUGANTHAR

இப்படி CSI தலைமையில் உள்ளவர்களே பண ஆசை பிடித்தவர்களாகவும் உள்ளார்கள்.

  அதேபோல் முன்னாள் மாடரேட்டர் Most Rev..சுகந்தர் அவர்களும் இதே பண விஷயத்தில் அகப்பட்டு தன்னுடைய வரவுக்கு மீறின சொத்துக்கள், கோடிக்கணக்கில் பணம் சேமிப்பு, இவைகளுக்கு காரணம் காட்டமுடியாமல் உள்ளார். இப்படி ஏராளமான வழக்கில் அகப்பட்டுள்ளார் என்று செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது. இப்படிப்பட்ட மாடரேட்டர்கள், பிஷப்புகள் ஆடிட்டர்கள் காலிலும், பிரபல வக்கீல்களின் காலிலும் விழுந்து கிடக்கிறார்கள். என்ன பரிதாபம்!


சுனாமி பண மோசடி
Dr.பாலின்

  பழைய CSI சினாட் செயலர் Dr.பாலின் அவர்கள் சுனாமி பணம் மோசடி செய்த விவரம் உலகமே அறியும். இவர் தன் மகளை பினாமியாக்கி அவர் பெயரில் ஒரே நாளில் பல கோடிகள் கணக்கில் வரவு வந்ததற்கு காரணம் கூற முடியாமல் குடும்பமே ஜெயில் சென்று வந்ததை அறிவோமே! அந்த வழக்கு இப்போதும் நீதிமன்றத்தில் நடந்துக் கொண்டிருக்கிறதே! எவ்வளவு துணிகரம் பாருங்கள்.

  உலக உதவி ஸ்தாபனங்கள் பல CSI திருமண்டல முன்னேற்றத்துக்காகவும், சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் உதவ டாலராக - கோடிக்கணக்கில் பண உதவி செய்கிறது. இதுமட்டுமல்லாமல், இன்ஜினிரிங் கல்லூரி, பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை, ஆசிரியர்கள், ஆசிரியைகள், லெக்சரர் சேர்க்கை, பாலிடெக்னிக் ஆசிரியர், ஆசிரியை பயிற்சி பள்ளி, நர்சிங் பயிற்சி கல்லூரி ஆகிய இவைகள் எல்லாம் பிஷப்மார்களுக்கு அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம்போல் இவர்களுக்கு நிரந்தர வருமானமும் கொடுக்கிறது. இதை தவறாக பயன்படுத்துபவர்கள்தான் வருமானத்துக்கும், தங்கள் சம்பளத்துக்கும் மீறின சொத்துக்களை சேர்ப்பவர்களாவர். ஆகவே இரண்டு வருடத்துக்கு ஒருமுறை பிஷப்மார்களின் சொத்து கணக்கை பகிரங்கமாக சமர்பித்தால் பலன் உண்டாகும். இவர்கள் கர்த்தருக்கு முன்பாகவும் குற்ற உணர்ச்சியில்லாமல் நிற்கலாம். பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது. 1 தீமோ 6:10.

  சில பிஷப் அல்லது மாடரேட்டரால் கடந்த காலத்தில் முழு CSIக்கும் ஏற்பட்ட களங்கம், அவமானம் இனி உண்டாகாமல் இருக்க சொத்து விவரம் சமர்பிப்பதை CSIயிலும் & லூத்தரன் சபையிலும் நடைமுறைப்படுத்துவது மிக முக்கியம், மிக அவசரமும் ஆகும்.

CSI மீது அக்கறை கொண்ட CSI பாதுகாப்பு சங்கங்கள், CSI LAITY சங்கங்கள், CSI நல விரும்பிகள், பிஷப் - மாடரேட்டர்களுக்கு வருமானத்துக்கு மீறிய சொத்துக்கள் சேர்த்து அதனால் CSI & லூத்தரன் சபைகளுக்கு கெட்ட பெயர் உண்டாகாதிருக்க, இரண்டு வருடத்துக்கு ஒருமுறை அவரவர்களின் சொத்து விவரம் சமர்பிக்க சட்டம் இயற்ற வற்புறுத்த வேண்டிக்கொள்கிறேன். சமர்பித்த சொத்துக் கணக்கு விவரம் அனைத்து சபை மக்களும் அறியவேண்டும்.

  வேதவசனம் கூறுவதுபோல திருட்டுத் தண்ணீர் தித்திக்கும், அந்தரங்கத்தில் புசிக்கும் அப்பம் இன்பமாயிருக்கும். நீதி 9:17.

  அநியாயமாய் வந்த அதிக வருமானத்திலும், நியாயமாய் வந்த கொஞ்ச வருமானமே உத்தமம். நீதி 16:8

  தவறான விதத்தில் சொத்து, பணம் சேர்ப்பவர்களுக்கு மேலே குறிப்பிட்ட வசனத்தின்படி தன் தவறான செயல்களைக்குறித்து பயம் இருக்காது, இருதயம் கடினப்பட்டு அவர்கள் செய்யும் தவறுகள் எல்லாம் அவர்களுக்கு சரி என்றுதான் தோன்றும். அது அவர்களுக்கு இன்பத்தை கொடுக்கும் . . . முடிவோ . . . . ? மிகப் பரிதாபம்.


Top
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM