(இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் 226வது ஷரத்தின் கீழ் மனுதாரரின் விண்ணப்பம் மாண்புமிகு சென்னை உயர்நீதி மன்றத்தில் பேராணை மனு எண்:
W.P.13895/10ஐ தாக்கல் செய்துள்ளார்கள். அதில் கம்பெனி பதிவாளரிடம் தான் கொடுத்த மனுமீது உரிய விசாரணை செய்து மனுவை முடிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டி உள்ளார். அதன்படி இருபக்க வாதங்களையும் கேட்ட
நீதியரசர் மனுதாரர், 1ம் எதிர்மனுதாரரான கம்பெனி பதிவாளரிடம் கொடுத்த மனுமீது இறுதி முடிவு எடுக்கவேண்டும். மேலும் எதாவது சந்தர்ப்பத்தில் இரண்டாம் எதிர் மனுதாரரான
தென்னிந்திய திருச்சபையானது (CSI) கம்பெனி சட்டப்படி பதிவு செய்யப்பட்ட
கம்பெனி அல்ல என்று முடிவு செய்யப்பட்டால் மனுதாரர் தாக்கல் செய்துள்ள மனுவை ஒன்றாம் எதிர் மனுதாரர் சட்டப்படியான அதற்கு உரிய மன்றத்தில் பரிகாரம் தேடுமாறு கூறி மனுவை அவரிடம் ஒப்படைக்க வேண்டுமென்ற வழிகாட்டுதலுடன் இப்பேராணை மனு முடிக்கப்பட்டுள்ளது).
|