குற்றம் சாட்டப்பட்ட CSI
பிஷப்மார்களுக்கும் - ஆயர்களுக்கும்
சட்டத்தில் தண்டனை உண்டு
CSI பிஷப்- ஆயர்கள் எந்தெந்த காரணங்களுக்காக தண்டிக்கப்படமுடியும்.
CSI சட்டம் (CONSTITUITION) கூறுவது என்ன?
APPENDIX- I : BY - LAWS - பின்னிணைப்பு - I BY - LAWS
CHAPTER XI - அத்தியாயம் - XI
DESCIPLINE OF THE CHURCH
சபை ஒழுங்கு

DEFINITION OF OFFENCES
தண்டிக்கப்பட வேண்டிய குற்றங்களின் பட்டியல்:

தென் இந்திய திருச்சபை ஒழுங்கின்படி, கீழ்கண்ட குற்றகோட்பாடுகள் அபிஷேகம் பெற்ற அல்லது பெறப்படாத ஊழியர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு உள்ளடக்கம்:

1).  தென்னிந்திய திருச்சபையின் போதனை, பிரசங்கம் மற்றும் உபதேச கோட்பாடுகளுக்கு மாறுப்பட்ட அணுமுறைகள்,

2).  சபைகளுக்குள் உரிய அனுமதியின்றி கோஷ்டி உருவாக்குதல், சபை ஐக்கியத்திலிருந்து பிளவுப்படுத்துதல், முன் அனுமதி இன்றி வேறு திருச்சபையில் சேருதல், தென்னிந்திய திருச்சபைக்கு உட்படாத பிற சபைகளில் அங்கம் வகித்தல், கிறிஸ்தவ விசுவாசத்திற்கு மாறுப்பட்ட ஆராதனைகளில் ஈடுப்படுத்திக்கொள்ளுதல்,

3).  குற்ற சம்பந்தப்பட்ட, நேர்மையற்ற, ஒழுக்கமற்ற, ஒழுங்கற்ற செயல்கள், பழக்க வழக்கங்கள், தீய நடத்தைகள்

4).  தென்னிந்திய திருச்சபையின் சட்ட திட்டங்களுக்கு விரோதமான அத்துமீறல்கள்

5).  திருச்சபையின் மற்றும் அதன் நிறுவனங்களுக்கு சொந்தமான நிதி, மற்றும் சொத்துக்களை தவறாக பயன்படுத்தவோ அல்லது கையாடவோ செய்தல்,

6).  திருச்சபைக்கு சொந்தமான ஆவணங்கள் மற்றும் சொத்துக்களை கேட்கப்படும் போது கொடுக்க மறுத்தல்,

7).  அதிகார துஷ்பிரயோகம், அறிந்தும் கீழ்ப்படியாமை மற்றும் நடத்தை சீர்கேடுகள்

8).  மேலே குறிப்பிட்ட குற்றங்கள் அல்லது எதாவது குறிப்பிடாத குற்றங்கள் ஆகியவைகள் கண்டுபிடிக்கப்பட்டால், மேலே குறிக்கப்பட்ட குற்றங்களில் ஒருவர் பிடிக்கப்பட்டால், தென்னிந்திய திருச்சபை, திருமண்டலம் மற்றும் அதற்குட்பட்ட சட்டதிட்டங்களுக்கு விரோதமான எந்த செயல்களுக்கும் குற்றவாளிகள்மேல் உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.


அபிஷேகம் பண்ணப்பட்ட போதகர்கள் மற்றும் பேராயர்களின் குறிப்பிட்ட தண்டனைக்குரிய குற்றங்களின் பட்டியல்:

1).  நடத்தை, பழக்கவழக்கம், உண்மையற்ற வாழ்க்கை முறைகள் இவைகளால் திருச்சபையின் நற்பெயருக்கு குந்தகம் விளைவித்தல்,

2).  தொடர் ஒழுங்கீனம் அல்லது சபை கடமைகளை நிறைவேற்றுவதில் உதாசீனம்,

3).  CSI ஊழியத்திற்கு அப்பாற்ப்பட்ட எவ்விதமான தொழில் அல்லது (வேறு ஸ்தாபன) அலுவல்களில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளுதல்,

4).  பேராயர் தாமாக தலையிட்டு முடிவெடுக்கவேண்டிய விஷயங்களில் மூப்பர்கள் மற்றும் போதகர்கள் தலையிட்டு அவமரியாதையுடனும், கீழ்படியாமையுடனும் நடந்துக்கொள்ளுதல்.


தண்டனைகள்:

CSI சபையின் நீதிமன்றங்களால் விதிக்கப்படும் தண்டனைகள்:

1. எச்சரிக்கை

2. குற்றம் சாட்டி கண்டித்தல்

3. அபராதம் கட்டுதல்

4. இழப்பீடு வழங்குதல்

5. ஊழியம் செய்ய தடைவிதித்தல்

6. சபை சலுகைகளிலிருந்து விலக்குதல்

7. சபை அலுவல்களில் கட்டுபாடு

8. பேராயர்களின் அதிகாரங்களை குறிப்பிட்ட காலத்திற்கு திரும்ப எடுத்தல்

9. குறிப்பிட்ட காலத்திற்கு அலுவலக பொறுப்பு வகிக்க தடை

10. வழங்கப்பட்ட சலுகைகள் பறிப்பு

11. பதவி பறிப்பு

12. பரிசுத்த நற்கருணையிலிருந்து குறுகிய காலத்திற்கு தடை

13. சபையிலிருந்து விலக்கிவைத்தல்

14. இனி குற்றம் செய்வதில்லை என்று வாக்குறுதி அளித்தல்.


Top
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM