கேரளா A.G சபை பாஸ்டரின்
நவீன உபதேச வாழ்த்து அட்டை

  AG சபை பாஸ்டர்.பாபு ஜார்ஜ் என்பவர் கேரளாவில் பத்தினந்திட்டா (PTA.Dt) மாவட்ட AG சபைகளின் டிஸ்ட்ரிக்ட் செயலாளராவார். இவர் கேரளாவில் ராந்நி (Ranny) என்ற ஊரில் உள்ள AOG சபையின் தலைமை பாஸ்டராகவும் இருக்கிறார். இவர் வருடாவருடம் புறமதஸ்தருக்கு அனுப்புகிற வாழ்த்து அட்டைகள்தான் நீங்கள் இங்கு காண்பது,


  மஹாவீராவை தெய்வமாக வணங்குகிறவர்களுக்கு வருடாவருடம் இந்த AG சபை பாஸ்டர் அனுப்பும் வாழ்த்து அட்டை ஆகும். இதில் எழுதப்பட்ட வார்த்தை கடவுளாகிய மகாவீர் உங்கள் யாவரையும் இவ்வருட முழுவதும் ஆசீர்வதித்து காப்பராக.

  கர்நாடகா - ஆந்திரா மாநிலங்களில் வாழும் கொங்கனி பாஷை பேசும் மக்கள் கொண்டாடும் புது வருட பண்டிகை உகாதி ஆகும். அவர்களை ஆசீர்வதித்து அவர்களுக்கு ஒரு வாழ்த்து அட்டை அனுப்புகிறார்.

  கேரளா இந்து மலையாளிகள் கொண்டாடும் வருடபிறப்பு பண்டிகை விஷு ஆகும். இவர்களுக்காக தயாரிக்கப்பட்ட வாழ்த்து அட்டைகளில் உகாதி-விஷு கொண்டாடும் உங்களை உங்கள் தெய்வம் இந்த புது வருட முழுவதும் ஆசீர்வதித்து காப்பாராக.

  பெந்தேகோஸ்தே சபைகள் CSI & லூத்தரன் சபைகளாக மாறிகொண்டுவருகிறது என்று அன்றே எழுதினேன். பல ஆண்டுகளுக்குமுன் இதேமாதிரி புறமதஸ்தரின் பண்டிகைகளை கிறிஸ்வர்களும் தங்கள் சபைகளில் கொண்டாடலாம் என்று ஒரு பிஷப் கட்டளையிட்ட விவரம் எழுதினேன். CSI சினாட் கூட்டத்தில் எல்லா இந்து தெய்வங்களையும் இயேசுவோடு ஒப்பிட்டு புகழ்த்தி ஆராதனை நடத்தியதை ஆட்சேபித்து ஜாமக்காரனில் அதை வெளியிட்டதையும் அதை வாசித்த அனைத்து CSI சபைகளும் தங்கள் சபை கமிட்டியில் தீர்மானம் எடுத்து CSI சினாட் அறிமுகப்படுத்திய இந்த உபதேசத்தை நாங்கள் எதிர்க்கிறோம் என்று எழுதி CSI சினாடுக்கு ஆயிரக்கணக்கில் கடிதங்கள் அனுப்பி அறிவித்ததையும் இங்கு ஞாபகப்படுத்துகிறேன்.

  தமிழ்நாட்டில் சில கிறிஸ்தவ ஊழியர்கள்கூட தீபாவளி - பொங்கல் வாழ்த்து அட்டைகள் அச்சடித்து புறமதஸ்தர்களுக்கு அனுப்புவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். இந்த குறிப்பிட்ட AG சபை பாஸ்டர் பலவருடங்களாக இப்படி வாழ்த்து அட்டைகளை அச்சடித்து புறமதஸ்தருக்கு அனுப்புவதை AG சபைகள் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறது. இது தவறு என்று யாரும் சுட்டிக்காட்டவில்லையே! CSI சபைகளிலுள்ள பெரும்பான்மையோர் ஜாமக்காரனில் குறிப்பிட்ட இந்த நவீன உபதேச விவரம் வெளியிட்டவுடனே, அவர்கள் அனைவரும் தங்கள் எதிர்ப்பை காட்டிய அந்த ஆவிக்குரிய வைராக்கியம் கேரளாவில் ராந்நி ஊரிலுள்ள AG சபை மக்களுக்கும், கேரளா AG சபைகளுக்கும் அந்த வைராக்கியம் இல்லாமல் போனதேன்? AG சபை எம்மதமும் சம்மதம் என்ற உபதேசங்களை சம்மதிக்கிறதா? இவர்களுக்காகவும் இனி ஜெபிப்போம்.


Top
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM