டாக்டர்.புஷ்பராஜ் ஆகிய எனக்கு எல்லா சபைகளிலும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் உண்டு என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆகவேதான் பல சபைகளில் நடக்கும் பிரச்சனைக்குறித்து அந்தந்த சபைகளிலுள்ள என் வாசகர்கள் எனக்கு எழுதி ஆலோசனை கேட்கிறார்கள். அந்த வகையில் இம்முறை பெந்தேகோஸ்தே சபைகளைக் குறித்தும், குறிப்பாக
அசம்பளீஸ் ஆப் காட்
(AOG) சபைகளில் நடந்துக்கொண்டிருக்கும் பயங்கர பிரச்சனைகளையும், பண ஊழல்களைக் குறித்தும் எழுதவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன்.
CSI
& லூத்தரன் சபைகளில் உள்ள டையோசிஸ்களில்
CSIயின் தலைமையான சினாட்டில் நடந்த கோடிக்கணக்கான பணக்கொள்ளைக்குறித்து சில மாதமாக ஜாமக்காரனில் நான் எழுதிக்கொண்டிருந்ததை வாசித்து சலித்துப்போயிருப்பீர்கள். இப்போது இதேமாதிரி பணக்கொள்ளை பெந்தேகோஸ்தே சபைகளிலும் ஆரம்பித்துவிட்டது.
TPM சபைகளுக்கு அடுத்ததாக நான் மதிக்கும் பெந்தேகோஸ்தே சபையான
அசம்பளீஸ் ஆப் காட்
(AOG) சபைகளில் சில வருடங்களாக புகைந்துக் கொண்டிருந்த பண ஊழல்கள் இப்போது உலகம் அறிய தொடங்கிவிட்டன. இப்படிப்பட்ட புகார்களைக் குறித்து கேள்வி கேட்டபோது எங்கள் சபையில் குறிப்பிட்ட சிலர் தங்களுக்கு பதவி கிடைக்காததாலும், பணம் கிடைக்காததாலும் பொறாமை காரணமாக சில
AOG பாஸ்டர்கள் இப்படி பேசி கொண்டு திரிகிறார்கள் என்று அன்று தலைமை பாஸ்டர்கள் கூறிக்கொண்டு இருந்தார்கள். யுழுபு சபை ஜனங்களும் அதை நம்பினார்கள். ஆனால் இப்போது
AOG சபைகளின் பொதுக்குழு கமிட்டியில் ஜனநாயகம், கிறிஸ்தவ அன்பு செத்துப்போயிற்று என்றும், யாரும் தங்கள் எண்ணங்களை, கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ள அங்கு சுதந்திரம் இல்லை என்றும் வெளிப்படையாகவே கூறத்தொடங்கினார்கள். மேலும் பிரபலமில்லாத அல்லது தலைமைக்கு பணிந்து நடக்காத சில
AOG பாஸ்டர்கள் பழி வாங்கப்படுகிறதாகவும் அறிகிறோம். அவர்களுக்கு அங்கு ஒரு மதிப்பும் இல்லை. சாதாரண பாஸ்டர்கள் மிக மட்டமாக நடத்தப்படுகிறார்கள். அதுவும் குறைந்த படிப்புள்ள
AOG பாஸ்டர்கள் என்றால்
AOG தலைமைக்கு தீண்டதகாதவர்கள்போல் அவர்கள் ஒதுக்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுதான்
AOG சபையின் பல பாஸ்டர்களின் ஆதங்கமாக எனக்கு அறிவிக்கப்பட்டது.
அசம்பளீஸ் ஆப் காட் (AOG)
சபை உலகளவில் சட்டத்திட்டங்களுடன் கூடிய நல்ல அமைப்பு
(Structure) கொண்ட சபையாகும்.
AOG சபை
Trust என்ற அமைப்பில் அல்லாமல்,
Society என்ற சரியான அமைப்பில்தான் நல்லமுறையில் இந்தியாவில் செயல்பட்டு கொண்டிருந்தது. தலைவர்கள் மாற்றமும் -
பிரச்சனையும் உருவானது.
AOG சபை தமிழ்நாட்டில் செங்கோட்டை பாஸ்டர்.ஜெயராஜ் அவர் உறவினரான
பாஸ்டர்.ஆதம் துரை அவர்கள், கேரளாவில் பாஸ்டர்.பி.டி.ஜான்சன் போன்றவர்களால் தொடங்கப்பட்டது. சங்க சட்டங்களின்கீழ்
சொசைட்டியாக இந்தியாவில் 1952ல் முறைப்படி பதிவு செய்யப்பட்டது. பதிவு எண்: 2701-1951,52. இப்படி அனைத்து இந்தியா
AOG என்று செயல்பட தொடங்கியபின் 1997ம் வருடம் அசம்பளீஸ் ஆப் காட் இந்தியா என்ற பெயரில் தமிழ்நாட்டில் முன்பு குறிப்பிட்ட பாஸ்டர்களாலும், வேறு சிலராலும்
மறு அரசாங்க பதிவு (559-1997) செய்யப்பட்டது.
பாஸ்டர்.ஜெயராஜ் அவர்கள் தலைவராக பொறுப்பேற்ற ஆரம்ப காலத்தில் சட்டப்படி நன்றாக இயங்கிக்கொண்டிருந்தது. காலங்கள் மாறமாற பாஸ்டர்.ஜெயராஜ் அவர்கள் காலத்திலேயே சபை விவரங்களையும், கணக்குகளையும் அரசாங்கத்துக்கு ஒழுங்காக தெரிவிக்கப்படாது, கவலையீனமாக அரசாங்க நடபடிகள் விட்டுப்போனது என்று கூறப்படுகிறது. அவருக்குபின் வந்த
AOG தலைவர்களும்,
AOG கணக்குகளையும், மற்ற விவரங்களையும் அரசாங்கத்துக்கு சமர்ப்பிக்காமல் விட்டுவிட்ட காரணத்தால் இப்போது
AOG சபை சொசைட்டி என்ற அரசாங்க பதிவு அந்தஸ்த்தை இழந்துவிட்டதாக
அரசாங்கமே அறிவித்துவிட்டது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான ஒரு இந்து அமைப்பு
SIAG பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்ட சபைகளின் சொத்துக்களை,
SIAG என்ற பதிவு பெயர் தங்களுடையது என்று அதன் சொத்துக்களையும் சேர்த்து உரிமை கோரியதாக தெரிகிறது.
AOG சபை செய்ய தவறிய விஷயம் என்னவென்றால்
Societies என்ற அரசாங்க பதிவு அந்தஸ்தை காலாகாலங்களில்
AOG சபைகளின் காணிக்கை வரவு கணக்குகளை சமர்பித்து புதுப்பித்திருக்கவேண்டும். பதிவை புதுபிக்காத காரணத்தால் பதிவு எண்ணை அறிந்தவர்கள் அரசாங்கத்திடம் விண்ணப்பித்து அந்த பதிவு
Register Number தங்களுக்குவேண்டும் என்று அவர்கள் எழுதி விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள வழி உண்டாக்கிவிட்டது. இத்தனை பெரிய இமாலய தவறு
AOG தலைவர்களின் கவலையீனத்தாலும், பண விஷயத்தில் எங்கோ, யாரோ தவறாக கையாண்டதாலோ! சரியான கணக்கு வைக்கப்படாததாலோ என்னவோ!
AOG பொறுப்பாளர்கள் உண்மையான பணவரவை அரசாங்கத்துக்கு சமர்பிக்க தயங்குகிறார்கள் என்று கூறப்படுகிறது.
AOG சபைகள் சுதந்திரமாக, தனித்தனியாக இயங்கினாலும், வெளிநாட்டு பணவரவின் பொது கணக்கை சரியானப்படி
வரவு-செலவு கணக்கு வைக்காமல், செலவு கணக்கு காட்டாமல் போனதுதான் இப்போதைய பிரச்சனை ஆகும் என்று கூறப்படுகிறது.
பொதுவாக
(Independent Pentecostal) சுதந்திர பெந்தேகோஸ்தே சபைகள் என்று வீதிக்கு இரண்டு சபைகள் எல்லா இடத்திலும், எல்லா ஊர்களிலும் காணப்படுமே. இப்படிப்பட்ட சபைகளில்,
ஜனங்கள் போடும் காணிக்கை அல்லது தசமபாகம் விவரங்களை யாரிடமும் காட்டுவதில்லை. சபையில்
இதுவரை எவ்வளவு காணிக்கை சேர்ந்துள்ளது என்ற விவரம் சபையில் உள்ள யாருக்குமே தெரியாது! யோக்கியர்கள்போல் சபையில் காணிக்கை எண்ணுவதற்கு ஒருவர் அல்லது இருவர் இருப்பார். அவர் காணிக்கைகளை எண்ணி அப்படியே பாஸ்டரிடம் கொடுத்துவிடுவார். அவர் அதை எப்படி செலவு செய்கிறார்! எண்ணத்துக்கு செலவழிக்கிறார் என்பது பெரிய இரகசியம். இவர்களின் அந்த விஷயம் இப்போது
இவர்கள் பேசும் அந்நியபாஷை போன்று இடியாப்ப சிக்கலாகவும், விளங்காததுமாகவே காணப்படுகிறது. அதேசமயம் வாரம் தவறாமல்
தசமபாக பிரசங்கம் சபையில் உண்டு. மேலும் தசமபாகம் கொடுக்காமல் போனால் சாபம் என்று சபை மக்களை பயமுறுத்தி, பயமுறுத்தியே சில பாஸ்டர்கள் காலம் தள்ளுகிறார்கள்.
ஆனால்
TMP, IPC போன்ற சபைகள் அப்படியல்ல, அவர்களுக்கு சில ஒழுங்குகள் உண்டு. கணக்குகள் எழுதும் ஒழுக்கமும் உண்டு. ஆனால் இப்போது
AOG சபையில் பணக்கணக்கு விஷயத்தில் பெரிய ஊழல் ஏற்பட்டு கொண்டிருக்கும் விஷயம் பகிரங்கமாக வெளிவர ஆரம்பித்துவிட்டது.
சபை சொசைட்டி சட்டப்படி ஒவ்வொருவருடமும் அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒரு முறையோ சொசைட்டி தலைவர், பொறுப்பாளர்கள் ஆகியவர்களின் கமிட்டி கூடி, கணக்குகள் சமர்பித்து
ஒரு ஆடிட்டர் மூலமாக சரிப்பார்க்கப்பட்டு அவருடைய சர்டிபிக்கேட்டுடன் கணக்கு விவரங்களை
பதிவாளர் மூலமாக சமர்பித்தாகவேண்டும். அதில் நிர்வாகிகளின் பட்டியல், நிர்வாகிகளின் பெயர், விலாசம் ஆகியவை அடங்கிய பட்டியல் காணப்படவேண்டும். மேலும் கமிட்டி கூடியதின் பதிவு புத்தகம்
(Minute Book) அதில் கமிட்டி கூடிய தேதி சர்ச்சை செய்யப்பட்ட விஷயம் யாவும் அதில் பதிவு செய்யபடவேண்டும். இதையெல்லாம் செய்யாததால்தான்
அரசாங்க அங்கீகாரத்தை
AOG சபை இழந்து நிற்கிறது. இந்த பெரிய நஷ்டத்துக்கான காரணத்தை தலைவர்கள் விவரித்து கூறவேண்டும் என்று விவரம் அறிந்த
AOG சபை பாஸ்டர்கள் கேட்கிறார்கள்.
AOG சபை தோன்றிய நாளிலிருந்து சபை தலைமை குறிப்பிட்ட 3 பேர்கள் கையில் அகப்பட்டுள்ளது என்றும்,
AOG சபைகள் உறவினர்களால் நடத்தப்படும் குடும்ப சபையைப்போல செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டுகள் சில வருடங்களாகவே
AOG சபையில் எழும்பிக்கொண்டிருக்கிறது.
குறிப்பிட்ட சில பாஸ்டர்களுக்குள்ள
பிரசங்க தாலந்து காரணமாக அவர்களுக்கு அடிக்கடி வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் வெளிநாடு செல்ல வாய்ப்பு இல்லாத பாஸ்டர்களின் பொறாமையும் இதில் கலந்து இப்போது பிரச்சனை பெரிதாகிவிட்டது.
குறிப்பிட்ட ஒரு சில பாஸ்டர்களின் கையில்மட்டும் பணம்
கோடிகளாக புரளுவது,
AOG சபையில் சில ஏழை பாஸ்டர்களின் உள்ளத்தில் உண்டான ஏக்கம் ஆகியவைகள் அவர்கள் நேரில் என்னிடம் பேசும்போது வெளிப்பட்டது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், முன்பைவிட அதிகமாக வெளிநாட்டு பணம்
கோடிகளாக
AOG சபையின் பெயரில் கொட்ட ஆரம்பித்தது. இப்போதுதான் பிசாசு
பணம் பெற்றவர்களையும், பணம் பெறாதவர்களையும் பிரிக்க திட்டமிட்டான். அவன் போட்ட திட்டத்துக்கு இணங்கி கொடுத்தவர்கள் மூலமாக சபையின் சாட்சியையும் கெடுக்க ஆரம்பித்தான்.
25,000 சபைகள் உருவாக்கும்
கவர்ச்சி திட்டம்
AOG சபையில் கொண்டுவரப்பட்டது. அதற்கு கோடிகள் அல்ல,
மில்லியன் கணக்கில் அமெரிக்காவிலிருந்து பணத்தை
AOG பெயரில் அனுப்பப்பட்டது. திட்டம் அருமையான திட்டம்தான், ஆனால் அந்த பணம் எந்த பெயரில் பெறப்பட்டது, எதற்கெல்லாம் அதிலிருந்து பணம் எடுக்கப்பட்டது, யாருக்கெல்லாம் கொடுக்கப்பட்டது இதையெல்லாம் கமிட்டியில் கேள்வி கேட்கப்பட்டது, அப்போதுதான் பிரச்சனைகள் வெடிக்க ஆரம்பித்தது.
இந்தியாவில் பம்பாய், அந்தேரி, குஜராத் போன்ற மாநிலங்களில் பல்வேறு
சமூகப்பணி திட்டங்கள் சபைகள் உருவாக்கும் திட்டங்களோடு செயல்படுத்தப்பட்டன. ஆனால் தமிழ்நாட்டு கணக்கில் வரவு வந்த அந்த பணம், தமிழ்நாட்டிலுள்ள
கட்டிடம் இல்லாத சபைகளுக்கு, கட்டிடம் கட்ட பணம் இல்லாமல், பல ஆத்துமாக்கள் நிறைந்த, புதிய சபைக்கு நிலம் வாங்க பணம் இல்லாமல், எத்தனையோ இடங்களிலுள்ள
AOG சபைமக்கள், பாஸ்டர்கள் தவித்துக்கொண்டிருக்க தமிழ்நாட்டிலுள்ள இவர்களின் தேவைகள் எதையும் பூர்த்தி செய்யாமல்
வட இந்தியாவில் மட்டும் அமெரிக்கா அனுப்பிய பணத்தை அதுவும் குறிப்பிட்ட சில நபர்களுக்குமட்டும் கொடுத்து செலவழிப்பது என்ன நியாயம்? என்று கேள்வி கேட்ட 6 பாஸ்டர்கள் சஸ்பெண்ட் (தற்காலிக பணிநீக்கம்) செய்யப்பட்டுள்ளார்கள்.
|
Pastor.ARUL |
சொசைட்டிப்பற்றியும், பணத்தைப்பற்றியும் அமெரிக்காவில் யாரிடமிருந்து அந்த பணத்தை பெற்றீர்கள்? எவ்வளவு பெற்றீர்கள்?. இப்படி பல கேள்விகள் கேட்ட
திருச்சி பாஸ்டர்.அருள் அவர்கள் ஆரம்பத்திலேயே சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவரின் சஸ்பெண்ட் காலம் முடிவு பெறப்போகிறது. இப்போது மறுபடியும் 3 வருடத்துக்கு தொடர்ந்து அவரை சஸ்பெண்ட் செய்து
AOGயிலிருந்து ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கேள்விப்படுகிறோம்.
ஒருவரை இரண்டாம்முறை சஸ்பெண்ட் செய்யவேண்டுமானால் சட்டப்படி முதலில் செய்யப்பட்ட சஸ்பெண்ட் ஆர்டரை ரிவோக் செய்யாமல், அதன்பின் நடத்தப்பட வேண்டிய
விசாரணை என்ற ஒழுங்கையும் கடைப்பிடிக்காமல், தொடர்ந்தார்போல் 3 வருடம் ஒருவரை சஸ்பெண்ட் செய்ய சட்டத்தில் இடமில்லை. கோர்ட்டுக்கு போனால் அவரை சஸ்பெண்ட் செய்தது செல்லாது என்றுதான் தீர்ப்பு வரும். ஆனால் பாஸ்டர்.அருள் அவர்கள் கோர்ட்டுக்கு போகவில்லை. பாஸ்டர்.அருள் அவர்கள் ஏற்கனவே வெளிநாட்டு பணத்தை வேறுவேறு ஸ்தாபனங்களின் மூலம் ஏராளமாக பெற்று வருகிறார் என்பது வேறு விஷயம். இவரைப்போல பல பாஸ்டர்கள் வெளிநாட்டு ஸ்தாபனங்களில் உதவி பெறுகிறார்கள்.
|
Pastor.RAJAMONI |
இப்போது சஸ்பெண்ட் செய்யப்பட்ட வேறு ஒரு
AOG பாஸ்டர் கோர்ட்டுக்கு விவரங்களை கொண்டுபோகப்போவதாக பேசப்படுகிறது. அப்படி அவர் கோர்ட்டுக்கு போனால் பிரபல கன்வென்ஷன் பிரசங்கியாரும்,
AOG சபை பிஷப்பாகவும் இருந்த பாஸ்டர்.ராஜாமணி அவர்கள் கோர்ட்டில் நிற்க வேண்டிவரும். காரணம், அரசு அங்கீகாரம் நீக்கப்பட்ட நிலையில், காலாவதியான
பழைய அரசாங்க அங்கீகார சர்டிபிக்கேட்டைக் காட்டி பாஸ்டர்.ராஜாமணி அவர்கள் காலத்தில் செய்யப்பட்ட பல ஏற்பாடுகள், பல திட்டங்கள் அத்தனைக்கும்
Pr.ராஜாமணி அவர்கள் பதில் கூறியாகவேண்டும். அப்படி நடந்தால்
கள்ள சர்டிபிக்கேட் சமர்பிக்கப்பட்டு, அரசாங்கத்தை ஏமாற்றிய குற்றச்சாட்டு பாஸ்டர்.ராஜாமணி அவர்கள்மேல் வரும். அவர் மட்டுமல்ல,
பாஸ்டர்.டி.மோகன் அவர்களும் இதில் அகப்படுவார். தன் மகளின் ஆடம்பர திருமணம், மாப்பிள்ளைக்கு கொடுத்த கோடிக்களுக்கான பணத்தின் கணக்கு ஆகியவைகள் விசாரணைக்கு வந்தால்
ஊழல்களின் பட்டியல் அனகோண்டா பாம்பைப்போல நீண்டுக்கொண்டு வெளிவருவது நிச்சயம் என்கின்றனர். அதனால் அது முழு
AOG சபைகளுக்கும் பெருத்த அவமானத்தை கொண்டுவரும் என்பது உறுதி. |