கேள்வி: தமிழ்நாட்டில் உள்ள நாகப்பட்டிணம்
CSI சபை உதவிகுருவானவர் ஆராதனை முடிவில் ஆசீர்வாதம் கூறும்போது
தாய்-தந்தை-சுதன்-தூயஆவி என்று நான்கு பெயரால் ஆசீர்வாதம் கூறுகிறார். சபை மக்கள் அப்படி கூறி ஆசீர்வாதம் செய்யவேண்டாம் என்று எவ்வளவு கூறியும் அதை அவர் நிறுத்தவில்லை?. இதற்கு ஒரு ஆலோசனை கொடுங்கள்.
பதில்: நீங்கள் எழுதியபடி
மதுரை அரசரடி வேதாகம கல்லூரிக்குள் இருந்த ஒரு சிலரின் மூளையிலிருந்து வந்த குப்பைத்தான் அது. உங்கள் சபையின் தலைமை குருவானவரின் அனுமதியில்லாமல் இது வெளிவராது. இது பல வருடங்களுக்கு முன்பே இந்த தவறான உபதேசம் தமிழ்நாட்டில் தலைதூக்க தொடங்கியது.
கடவுளை நாம் ஏன் தாயாக அழைக்கக்கூடாது? கடவுள்
ஆணா - பெண்ணா? இந்த சர்ச்சை பலவருடங்களுக்கு முன்பே அரசரடியிலும், பெங்களுர்
UTC வேதாகம கல்லூரியிலும்
ஆயர் படிப்புக்காக படிக்கும் மாணவர்களுக்குள்ளே எழும்பியது. அதை ஒரு துண்டு பிரசுரமாகவே வெளியிட்டார்கள்.
நான் கேரளா மாநிலத்தில்
மணர்காடு என்ற ஊரில் பிரசங்கம் செய்யும்போது (அங்கு வாழும் பெரும்பான்மை மக்கள் இஸ்லாமியர்களாவர்)
இஸ்லாமியர் என் முதல் பிரசங்கத்தை கேட்டு மறுநாள் சில கேள்விகளுடன் கூடிய துண்டு பிரசுரங்களை விநியோகித்து, துண்டுபிரதியில் நாங்கள் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு டாக்டர் பதில் கூறிவிட்டு பிரசங்கிக்க சொல்லுங்கள் என்றார்கள். என் கைக்கு துண்டுபிரதி கிடைத்தது. அது மலையாளத்தில் எழுதப்பட்டதால் எனக்கு வாசிக்க தெரியவில்லை. அருகில் உள்ளவரிடம் வாசிக்க சொல்லி கேள்விகளை குறித்துக்கொண்டு அத்தனைக்கும் மேடையிலேயே பதில் கூறினேன். இஸ்லாமியர் என் கூட்டத்தில் பிரச்சனை உண்டாக்குவார்கள் என்று எதிர்ப்பார்த்தோ என்னவோ சில போலீஸ்காரர்கள் மைதானத்தில்
ஓரங்களில் நின்றிருந்தார்கள். அவர்கள் கேட்ட கேள்விகளில், முதலாவதாக எழுதப்பட்டது கிறிஸ்தவர்களாகி (நஸ்ரானிகள்) நீங்கள்
பிதா தன்னுடைய ஒரே மகனை பலியாக சாவதற்கு இந்த உலகத்தில் அனுப்பினார் என்கிறீர்கள் -
பிதாவுக்கு மகன் இயேசுவானால் தாய் எங்கே? இது அவர்களின் முதல் கேள்வி?
யோவான் 3:6ல் தன்
ஒரே பேரானாகிய குமாரனை இவ்வுலகுக்கு அனுப்பி இவ்வளவாய் உலகத்தை அன்பு கூர்ந்தார் என்ற வசனத்திலும்
தந்தை-மகன் என்ற உறவு எப்படி வந்தது? அந்த உறவு உண்மையானால்
தாய் எங்கே? தாயில்லை என்றால், தாயில்லாமல் மகன் எப்படி வந்தார்? இப்படி பல கேள்விகள் கேட்டிருந்தார்கள். எல்லா கேள்விக்கும் பதில் கூறிவிட்டுத்தான் அன்றைய பிரசங்கம் செய்தேன். அதன்பிறகு நடந்த இரண்டு நாள் கூட்டத்திலும் முகமதியர் யாரும் கேள்விகளே கேட்காமல் அமைதியாக சாலையில் நின்று எந்த தொல்லையும் கொடுக்காமல் என் செய்தியை கவனித்தார்கள்.
இஸ்லாமியர் கேட்கும் கேள்வியும் சந்தேகமும் இன்று கிறிஸ்தவர்களுக்கும் உண்டு.
பிதாவின் பாசத்தை- பிதா பெயரிலும்
மகனின் உறவை - இயேசுவின் பெயரிலும் காட்டப்படுகிறது.
பொதுவாக உறவினர் அல்லது நண்பர் ஒரு வீட்டில் தங்கினால் அந்த வீட்டாரின் பையனை அழைக்கும்போது
மகனே எழுதுவதற்கு பேப்பர் கொண்டுவா? என்றார். பெண் பிள்ளையானால்
மகளே குடிக்க கொஞ்சம் தண்ணீர் கொண்டுவா இப்படியெல்லாம் அழைப்பது மகன், மகள் என்ற அன்பின் உரிமை பாராட்டும் வார்த்தைதான் அது. அவர்கள் தான் பெற்ற
பிள்ளை அல்லாதிருந்தாலும் மகள் அல்லாதிருந்தாலும் தான் பெற்ற
மகனுக்கு கொடுக்கும் மகளுக்கு கொடுக்கும் அன்பை அல்லது மகன்முறை அந்தஸ்தை நாம் அங்கு மாற்றார் பிள்ளைகளுக்கு கொடுக்கிறோம். அதுபோலவே
பெற்ற தகப்பன் ஒருவன் தன் ஒரே பிள்ளையை (ஒரே பேரான குமாரனை)
சாவதற்க்கென்று திட்டமிட்டு அனுப்ப (எந்த தகப்பனுக்காவது) மனம் வருமா? ஆனால் என் மக்களை பாவத்திலிருந்து கழுவி எடுக்க இது அல்லாது வேறு வழியில்லை என்று கண்ட கர்த்தர்
தகப்பன்-மகன் பாசத்தின் மூலமாகதான் உலகை எத்தனையாய் நேசிக்கிறார் என்ற உண்மையை உணர்த்த கர்த்தரால் உபயோகிக்கப்பட்ட வார்த்தைதான் ஏக
சுதன், ஏக மகன், ஒரே பேரானாகிய குமாரன், பிதா (அப்பா) என்ற வார்த்தையெல்லாம் உபயோகிக்கப்படுகிறது. மற்றப்படி
பிதாவுக்கு மனைவியுமில்லை - மகனுமில்லை. தாயுமில்லை, தகப்பனுமில்லை! ஆதியும் அந்தமும் அவரே - அல்பேவாவும், ஓமேகாவும் அவரே! என்பதை நாம் அறியவேண்டும். ஆனால் அதேசமயம் கடவுளை
தாயாகவும், மூத்த அண்ணனாகவும், தந்தையாகவும் நினைத்து உரிமை அல்லது உறவு கொண்டாடலாம்.
நம்
கீர்த்தனை பாடலில் சத்தாய் நிஷ்களமாய் என்ற முதல் கீர்த்தனையிலேயே
அம்மா! உன்னையல்லால் எனக்கார்துணை, யாருறவே! என்று கிறிஸ்தவ கவிஞர் மனமுருக பாடினார். சூழ்நிலையில் சந்தர்ப்பத்தில் உணர்ச்சி பொங்க
ஏசு அப்பா என்றும் அம்மா என்றும் பாச உறவோடு, நம்பிக்கையோடு அப்படி உருவகப்படுத்தி நம் தனிப்பட்ட ஜெபத்தில் (பொது இடத்தில் கூடாது) (ஆராதனையிலும் கூடாது) அழைத்துக்கொள்ளலாம்.
சமீபத்தில் வந்த ஒரு பாடலில்
"உம்மை அப்பானு கூப்பிடத்தான் ஆசை.. உம்மை அப்பானு கூப்பிடவா? உம்மை
அம்மான்னு கூப்பிடத்தான் ஆசை ... உம்மை அம்மானு கூப்பிடுவேன்? உம்மை
அப்பானு கூப்பிடுவேன்" என்ற பாட்டில் அடுத்த வரிகள் அப்படி உரிமை கொள்வதின் காரணத்தை அருமையாக பாடல் வடிவில் அமைத்துள்ளார். என்னை
தாயைப்போல சுமந்ததை பார்த்தால், கருவில் என்னை சுமந்து காப்பாற்றியதை பார்த்தால்,
ஏந்தி என்னை வழி நடத்தியதையெல்லாம் உணர்ந்தால், உம்மை அம்மானும், அப்பானும் கூப்பிடலாம் என்கிறார். ஆக இப்படி பாச உணர்வுகளில் கடவுளை மனதில் உணர்ந்து பாட்டால் புகழ்ந்து பாடலாம். அது கவிஞர்களின் உருவக நயம். ஆனால் அதை
உபதேசம் ஆக்கிவிடகூடாது. அதை சபையில் அல்லது அவிசுவாசிகள் மத்தியில் பாடிவிடக்கூடாது! பேசக்கூடாது. காரணம் அவர்களுக்கும் முகமதியர்களுக்கும் வந்த சந்தேகம் போலவே, நம் தேவனைக்குறித்து சந்தேகம் கிறிஸ்தவர்களுக்கே எழுப்பி குழம்பிவிடுவார்கள். ஒருவேளை அப்படிப்பாட நேர்ந்தால் அதற்கான விளக்கம் கூறவேண்டும்.
ஆனால் உங்கள் நாகப்பட்டினம்
CSI ஆயர் மிகவும் மோசம். வேத புத்தகத்தில் குறிப்பிட்ட தெய்வத்தன்மையை
திரியோகம் என்பதை மாற்றி தெய்வத்தை நான்கு பேராக துண்டு துண்டாக்கி அறிவித்தது
தெய்வ தூஷணமாகும். உங்கள் சபை கமிட்டியில் நம்பிக்கையில்லா தீர்மானம் போட்டு அவரை நீக்குங்கள். இது கிறிஸ்தவ அடிப்படை உபதேசத்துக்கே மிக கேடு உண்டாக்கும்.
இது மற்ற சபைக்கும் பரவினால் ஆபத்து. ஆரம்பத்திலேயே அதை நிறுத்துங்கள்.
தாய் தான் பெற்றப்பிள்ளையை மறப்பாளோ! அப்படி மறந்தாலும் நான் உங்களை மறக்க மாட்டேன் என்று கூறிய நம் ஆண்டவர்,
பிள்ளையை மறக்கும் தாயாக அல்லது வேறு எந்தவித
தாய் ஸ்தானத்திலும் தன்னை அழைக்க விரும்பமாட்டார்.
பழைய ஏற்பாட்டில்
பிதாவுக்கு அர்த்தமுள்ள பல நாமங்கள் உண்டு. அதில் எங்கேயும் தாய் அல்லது
பெண்ணாக கர்த்தரை சித்தரிக்கவில்லை - நீங்கள் கூறிய இந்த சம்பவம் உண்மையாக இருந்தால் நாகப்பட்டினம் சபை மக்கள் சீக்கிரம் நடவடிக்கை எடுங்கள்.
நீங்கள் புறப்பட்டுபோய்
பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுங்கள் என்று இயேசு கற்பித்தார். உங்கள் ஆயர் இந்த முக்கிய உபதேசத்துக்கு எதிரியாகும்.
அதையே பவுல் நிருபத்தின் கடைசி வரியாக கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையும் பிதாவாகிய தேவனின்
அன்பும், பரிசுத்தாவியினுடைய ஐக்கியமும் உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக ஆமென். 2 கொரி 13:14 என்று ஆசீர்வாதம் கூறி முடிக்கிறார். இதை ஆதாரமாக வைத்துதான் எல்லாவித
கிறிஸ்தவ சபைகளும் இதே ஆசீர்வாதத்தை சபைமுடிவில் அறிவிக்கிறார்கள். அந்த அறிவிப்பு நிச்சயம் நமக்கு ஆசீர்வாதமாகவே அமையும். அதனால்தான் சபையில் ஒரு சிலர் பிரசங்கம் முடிவில் ஆசீர்வாதத்துக்கு தலையை காட்டிவிட்டுபோகும் தவறான கொள்கை உடையவராகவும் இருக்கிறார்கள். அப்பப்பா! என்னென்ன புது உபதேசங்கள் பிசாசு சபையில் கொண்டுவருகிறான்! உடனே இதை நிறுத்த சபை நடவடிக்கை எடுங்கள்.
|