Faith Assembly Church பாஸ்டர் கைது

இந்தியாவில் சென்னையில் அயனாவரம் என்ற இடத்தில் ஃபெயித் அசம்பளி சர்ச் என்ற பெயரில் உள்ள பெந்தேகோஸ்தே சபையின் பாஸ்டர்.செல்வராஜ் அவர்கள் மேல் சிலகாலமாக பாலியல் (sex) குற்றச்சாட்டு கூறப்பட்டு வந்தது. சபைக்கு வரும் அப்பாவி பெண்களை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்வதாக போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. சபை கட்டியதில் பல லட்சம் கடன் உண்டு என்று கூறி சபை மக்களை ஜெபிக்க சொல்லி ஏமாற்றி லட்சக்கணக்கில் காணிக்கை மோசடி செய்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இந்த பாஸ்டர் தன் சபை அலுவலகத்தில் வேலைப் பார்த்த பெண்ணை கடந்த 6 வருடமாக தன்னுடைய இரண்டாவது மனைவியாக செக்ஸ் உறவு வைத்தாக அந்த பெண்ணே போலீஸில் புகார் செய்துள்ளார். தன்னுடைய நகைகளையும் தன்னுடைய சேமிப்பு பணம் 3 லட்சத்தையும் பாஸ்டர்.செல்வராஜ் அபகரித்துக்கொண்டார் என்று புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதே சபைக்கு வந்த மற்றொரு பெண் விவாகம் செய்து 2 குழந்தைக்கு தாயானவள். தன் புருஷனைவிட்டு பிரிந்து வாழ்கிறாள். அவளையும் ஏமாற்றிவிட்டார். அவளோடு பாஸ்டர்.செல்வராஜ் கூறியதாவது, என் மனைவி என்னைவிட்டு போய்விட்டாள், உன்னை உன் புருஷன் கைவிட்டுவிட்டான். ஆகவே கர்த்தர் என்னோடு பேசினார், உன்னை என் மனைவியாகவும், நீ பெற்ற பிள்ளைகளுக்கு என்னை தகப்பனாகவும் பொறுப்பெடுக்கும்படி கர்த்தர் என்னோடு பேசினார் என்று கூற அந்த பெண் அதை நம்பி பாஸ்டர் அவர்களோடு குடும்பம் நடத்த தொடங்கினாள். இந்த நிலையில் இந்த பாஸ்டர் ஜெபிக்க வந்த மற்றொரு பெண்ணோடும் இரகசிய தொடர்பு வைப்பதை கண்டுபிடித்த அந்த பாஸ்டரின் பழைய இரண்டு வைப்பாட்டிகளும் வெறுப்புற்று பாஸ்டரின் இந்த பரிசுத்த குலைச்சலை தாங்கமுடியாமல் போலீஸில் புகார் கொடுத்ததாக தகவல் பத்திரிக்கைகளில் வெளிவந்து புறமதஸ்தர்முன் கிறிஸ்தவம் சாட்சி இழந்து நிற்கிறது. இதைப்பற்றிய விவரம் 26.7.2010 தினசரி செய்திதாள்களில் வெளிவந்துள்ளது. இப்போது போலீஸ் இந்த பாஸ்டரை கைது செய்துள்ளார்கள்.

  இந்த குறிப்பிட்ட பெந்தேகோஸ்தே சபையின் மக்கள் பாஸ்டர் அந்நியபாஷையில் பேச சொல்லும்போது அந்நியபாஷையில் பேசினார்கள். பாஸ்டரும் அந்நியபாஷையில் சரளமாக பேசினார். இதில் கவனிக்கவேண்டியது போலீஸில் பாஸ்டரைப்பற்றி புகார் கொடுத்த சபைவிசுவாசிகள் என்று அழைக்கப்படும் அந்த 2 பெண்களும் சுமார் 6 வருடங்கள் இந்த போலி பெந்தேகோஸ்தே சபை பாஸ்டரோடு குடும்பம் நடத்தியவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு பெண்களும் தாங்களே இணைங்கியதால்தானே பாஸ்டரும் பாவம் செய்தார். தாங்கள் கூறின குற்றச்சாட்டை நியாயப்படுத்த கர்த்தர் சொன்னார் என்று அந்த பாஸ்டர் தீர்க்கதரிசனமாக கூறியதால்தான் ஏமார்ந்து போனோம் என்று புகாரில் கூறியுள்ளார்கள். இது பொய்.

  இவர்கள் எல்லாரும் பரிசுத்தாவியானவரின் பெயரை கூறிக்கொண்டு இதே சபையில் அந்நியபாஷை பேசியவர்களாகும். இந்த இரண்டு வைப்பாட்டி பெண்களும் பேசிய அந்நியபாஷையைப் பற்றி கொஞ்சம் யோசியுங்கள். இவர்கள் அனைவரும் சபைமக்கள் அனைவரையும் மிக மோசமாக ஏமாற்றி உள்ளார்கள். இவர்களைப்போலவே பெண் விஷயத்தில் மலேசியாவில் அந்நியபாஷை பேசும் பாஸ்டர்.மேனான்மனாசா என்பவரும் போலீஸ்சில் அகப்பட்டார். இப்படிப்பட்ட செய்திகளை தொடர்ந்து வாசிக்கும் நீங்கள் இன்னுமா அந்நியபாஷையையும் அதை பேசும் பாஸ்டர்களையும், அற்புத ஊழியர்களையும் நம்புகிறீர்கள். தயவுசெய்து இப்படிப்பட்ட ஊழியர்களிடம் ஏமார்ந்துபோகாதீர்கள். பரிசுத்த ஆவியானவர் நம்மை பரிசுத்தமாக வாழவைக்க அருளப்பட்டவர் என்பதை மறக்கவேண்டாம். நம் தேவன் நம்மிடம் முக்கியமாக எதிர்பார்ப்தே பரிசுத்தத்தைத்தான். அதனால்தான் நான் பரிசுத்தமாக இருப்பதைப்போல நீங்களும் பரிசுத்தமாயிருங்கள் என்றார்.

  இதே ஜாமக்காரனில் கர்த்தர் சொன்னார், கர்த்தர் காட்டினார் என்று கூறிக்கொண்டு டிவி பிரசங்கம் நடத்தும் சிலரைப்பற்றி வாசித்துள்ளீர்கள். இனியாவது கர்த்தர் சொன்னார், கர்த்தர் காட்டினார் என்று கூறும் எந்த ஊழியரையும் நம்பிவிடாதீர்கள். எச்சரிக்கை.


Top
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM